Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை வீழ்ச்சி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை வீழ்ச்சி
உலக சந்தையில் தொடரும் எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவின் வரவு செலவுத் திட்ட துண்டுவிழும் தொகை 98 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
மன்னர் சல்மானின் கீழ் முன்வைக்கப்பட்டிருக்கும் முதலாவது வரவு செலவு திட்டத்தில் நாட்டின் மொத்த வருமானம் 608 பில்லியன் ரியால்களாகும். அது எதிர்பார்க்கப்பட்டதை விடவும் 15 வீதம் குறைவாகும். ஆண்டின் செலவுகள் 975 பில்லியன் ரியால்களாகும். அது கணிக்கப்பட்டதை விடவும் 13 வீதம் அதிகம்.
இந்த பற்றாக்குறை காரணமாக எரிசக்திக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் குறைக்கப்படும் என்று சவூதி நிதி அமைச்சு திங்களன்று அறிவித்தது.
இதனால் சவூதி அரேபியாவில் பெட்ரோலின் விலை 50 வீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சர்வதேச நிலையில் இருந்து நாட்டில் குறைவான விலையிலேயே எண்ணெய் பேணப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.
இதன்படி டீசல், மின்சாரம் மற்றும் தண்ணீர் விலையும் உயரவுள்ளது.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள தருணத்திலும், பொருளாதார மற்றும் பிராந்திய, சர்வதேச சவால்களுக்கு மத்தியிலுமே இந்த வரவு செலவு திட்டம் முன்வைக்கப்படுவதாக மன்னர் சல்மான் குறிப்பிட்டார். சர்வதேச பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் அண்டை நாடுகளில் போதிய ஸ்திரத்தன்மை இல்லை என்றும் மன்னர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சவூதி அரேபியாவிடம் 700 பில்லியன் டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு நாணய இருப்பு காணப்படுகிறது. எனவே வரவு செலவுத் திட்ட நிதி இடைவெளியை பூர்த்தி செய்ய முடியுமாக உள்ளது.
கடந்த 2012 மார்ச் மாதத்தில் பீப்பாய் ஒன்று 125 டொலர்களில் இருந்த எண்ணெய் விலை தற்போது வெறுமனே 37.18 டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு சவூதியின் மொத்த வருவாயில் எண்ணெய் 77 வீதத்தை பூர்த்தி செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது 23 வீத வீழ்ச்சியாகும்.
எவ்வாறாயினும் சவூதி தனது எண்ணெய் உற்பத்தியை தொடர்ந்து அதே அளவில் பேணி வருகிறது. இதில் எண்ணெய் விலை குறைவதற்கு காரணமாக கருதப்படும் அமெரிக்க எண்ணெய் உற்பத்தியை விடவும் தம்மால் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும் என்று சவூதி கருதுகிறது.
2015 ஆம் ஆண்டு சவூதியின் இராணுவ மற்றும் பாதுகாப்பு செலவுகள் 20 பில்லியன் டொலர்களாக அதிகரித்ததாக குறிப்பிட்டுள்ளது. சவூதி அண்டை நாடான யெமனில் இராணுவ தலையீட்டில் ஈடுபட்டது மற்றும் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் காரணமாக இவ்வாறு பாதுகாப்பு செலவுகள் அதிகரித்துள்ளன.
சிவில் மற்றும் இராணுவ பணியாளர்களுக்கு சம்பளம் அதிகரிப்பதற்காகவே சவூதி அதிக தொகையை செலவிட்டுள்ளது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
» யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி
» உணவு பொருட்களின் விலை உயர்வு தொடரும்
» வெங்காயம் விலை வீழ்ச்சி
» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
» யாழ். வர்த்தகர் வருகையால் புறக்கோட்டை சந்தையில் காய்கறி விலை வீழ்ச்சி
» உணவு பொருட்களின் விலை உயர்வு தொடரும்
» வெங்காயம் விலை வீழ்ச்சி
» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|