சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Khan11

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

2 posters

Go down

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Empty மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

Post by சே.குமார் Mon 18 Jan 2016 - 18:10

மிழகத்தின் பெரும்பாலான இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா இடத்திலும் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. நம் பாரம்பரியம் சில அந்நியநாட்டு அடிமைகளால் தடுக்கப்படும் போது கட்டவிழ்ந்த காளைகள் போல் மக்கள் சீறிப்பாய்ந்ததைப் பார்க்கும் போது அரசுக்கு எதிரான சங்கு ஊத ஆரம்பித்துவிட்டது என்பதை அறிய முடிகிறது. காரைக்குடியில் 'எங்க ஊரு... எங்க கிராமம் நான் அப்படித்தான் அவிழ்த்துவிடுவேன்... நீ என்னய்யா பண்ணுவே...' என்று அம்மாவின் ஆணைக்கிணங்க வந்த போலீசிடம் சண்டை போடும் ஒருவரிடம் தெரிந்தது தமிழனின் பாரம்பரிய வீரம். இதைக்கூட ஜல்லிக்கட்டு எதிர்ப்பாளர்கள் வீரமா என்று நக்கல் அடிக்கலாம்... எங்களைப் பொறுத்தவரை இது வீரம்தான்... வேலு நாச்சியார் பிறந்த மண்ணின் வீரம் இது. எங்கள் காளைகள் துள்ளிக்குதித்து ஓடி மகிழ்ந்தன என்பதைக் கேட்கும் போது மிகுந்த சந்தோஷம் மனசுக்குள் பொங்கியது என்பதே உண்மை.

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Large_154374


ல்லிக்கட்டை எதிர்த்து மாட்டைக் காக்கக் துடிக்கும் பெடா அமைப்பினர் தமிழனிடம் மட்டுமே மாட்டை காப்பாற்ற வேண்டும்... துன்பப்படுகிறது என்று கத்துகிறார்கள். எல்லாமே அவர்களின் வளர்ச்சிக்கான உள்நோக்கமே. இன்று காலை முகநூலில் ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது, என்ன கொடூரம்.. கிரிக்கெட் மைதானம் போல் ஒன்றில் ஒரு மாடு ஆக்ரோஷமாய் ஓடுகிறது. அதற்குள் நீளக்கயிறு கொண்டு கட்டப்பட்ட குதிரையின் மீது அமர்ந்து மாட்டை விரட்டி பிடிக்க முயலும் வீரன். ஒரு கட்டத்தில் மாடு ஆக்ரோஷமாக குதிரையைப் பாய, வீரன் விழுந்தடித்து ஓடிவிடுகிறான்... ஆனால் மாடு கோபத்தோடு கட்டப்பட்டிருக்கும் குதிரையை குத்தி வயிற்றைக் கிழிக்க குடல் மொத்தமும் வெளியே வந்து விட,  அத்துடன் குதிரை ஓட... அதன் குடல் முழுவதும் கீழே விழுகிறது... உயிர்ப் பயத்தில் குடலில்லாமல் ஓடி விழுந்து குதிரை இறக்கிறது. இதற்கு மேல் என்னால் பார்க்க மனது பதறியது. அதனால் இத்தோடு நான் பார்க்கவில்லை... இது குறித்த ஒரு பகிர்வையும் அப்போதே படிக்கவும் நேர்ந்தது. அதில் குதிரை இறந்ததும் ஓடிய வீரன் இன்னும் சில வீரருடன் வந்து அந்த மாட்டை அடித்துக் கொள்கிறானாம். பின்னர் மாட்டை குதிரைகளை வைத்து மைதானத்தை சுற்றி இழுத்துச் செல்கிறார்களாம். இதை பகிர்வாய் எழுதியவர் குதிரைகளுக்கு இதயம் இல்லை ஆனால் மைதானத்தில் அமர்ந்து ஆர்ப்பரித்த மனிதர்களுக்கு இதயம் இருக்கத்தான் செய்தது என்பதாய் எழுதியிருந்தார்... என்ன வலி... எப்படிப்பட்ட மரண வேதனை... இதுவும் விளையாட்டு... இதற்கு பெடா கத்தாது... ஏன்னா நடத்துபவன் வெளிநாட்டுக்காரன்... குறிப்பாக தமிழன் இல்லை. எல்லாரும் அறிய வேண்டும் என்பதற்காக பகிர்வையும் வீடியோவையும் நானும் பகிர்ந்தேன். 

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் 17-1453029918-perarivalan-600-jpg


ஞ்சய்தத் நல்லொழுக்கம்(?) அடிப்படையில் தண்டனைக் காலத்துக்கு முன்னரே விடுதலையாகிறார் என்பது எல்லாருக்கும் தெரியும். இதை மத்திய அரசோ மாநில அரசோ செய்யவில்லை... முழுக்க முழுக்க சிறைத்துறை அதிகாரியின் முடிவே என்று சொல்வதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் எப்படி விடுதலை ஆகிறார் என்றும் எந்தச் சட்டத்தில் ஆகிறார் என்றும் அதற்கான தகவலின் நகல் தனக்கு வேண்டும் என்றும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெரறிவாளன் மனு ஒன்றை அளித்து 48 மணி நேரத்திற்குள் விவரம் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். தானும் அப்படியானதொரு சட்டத்தின் வாயிலாக முன்கூட்டியே விடுதலை ஆக மனு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் எனவும் அதற்கான செலவு தொகையை தந்து விடுவதாகவும் சொல்லியிருக்கிறார். கிடைக்குமா என்பதைவிட தமிழன் என்ற அடையாளம் இருக்கும் வரை இதிலெல்லாம் இவர் விடுதலை ஆக முடியாது என்பதே உண்மை. மேலும் சட்டம் பணம் இருந்தால் மட்டுமே வளைந்து கொடுக்கும். கொலை பண்ணினால் கூட அதுக்கு சாட்சி இல்லைன்னு சொல்லி சல்யூட் அடித்து அனுப்பும். பாவம் பேரறிவாளன்... இவர் கேட்டதும் விட்டுவிடுவார்களா என்ன...

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Keerthi-1


சிவகார்த்திகேயன் - சூரி கூட்டணியின் வந்திருக்கும் ரஜினி முருகன் முழுக்க முழுக்க நகைச்சுவைத் தோரணம்தான். கதையும் இல்லை ஒன்றும் இல்லை... வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகம் போல்தான்... வேலை வெட்டியில்லாமல் சுற்றுவதும், விரட்டிக் காதலிப்பதும், அப்பாவை ரொம்ப மரியாதையாக அழைப்பதும். மாமாவுடன் மோதுவதும் என முந்தைய படத்தின் சாயலில்தான் இருக்கிறது. சமுத்திரக்கனி அதிரடியாக அறிமுகமாகி இறுதிக்காட்சியில் 'வவாச' சத்தியராஜைவிட கேவலமான காமெடியன் ஆக்கப்பட்டுள்ளார்... சிரிக்கச் சிரிக்க இரண்டு மணி நேரத்துக்கு மேல போயாச்சு எப்படி படத்தை முடிப்பது என்று தெரியாமலே பஞ்சாயத்தில் இன்னொரு குடும்பம், பேரன் என்றெல்லாம் கதையை சுற்றி நம்மையும் சுற்ற வைத்து முடித்திருக்கிறார்கள். ஸ்ரீதிவ்யா இருந்திருந்தால் இன்னும் நல்லாயிருந்திருக்கும் என தமிழ்வாசி போன்ற நண்பர்கள் வருத்தப்பட்டிருந்தார்கள். கீர்த்தி சுரேஷூம் குறை வைக்கவில்லை... அருமையாக நடித்திருக்கிறார்... அந்த சிரிப்புத்தான் அழகு போங்க... சூரி தனியாக காமெடி பண்ணும் போது நமக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் சிவாவுடன் இணையும் போது ரசிகர்களுக்கு டபுள் தமாக்காதான்... அதிலும் வாழைப்பழ காமெடி ரொம்பநாள் பேசப்படும். கதை வேண்டாம்... கருத்து மண்ணாங்கட்டியும் வேண்டாம்... அழுகை வேண்டாம்... என்று நினைப்பவர்கள் நம்பி ரஜினி முருகன் போகலாம்... இறுதிவரை சிரித்துவிட்டு வரலாம். பாடல்களும் நல்லாயிருக்கு.

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் 1-IMG_8494


ன்று விஷாலின் பிறந்தநாள்... அவனை வாழ்த்திய உறவுகள், நண்பர்கள், முகநூல் உறவுகள், சேனை நட்புக்கள், மனசு நட்புக்கள் என எல்லாருக்கும் விஷாலின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Jalli

ஜல்லிக்கட்டு தொடர்பான எனது பதிவுக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்... எனது நண்பர்கள் தவிர நிறையப்பேர் அதை பகிர்ந்து இருந்தார்கள். நான் பகிர்ந்து கொள்ளவா என்று கேட்டும் பகிர்ந்தார்கள். நல்லாத்தான் எழுதுறோமோ என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. அது என்ன மறைந்ததுன்னு நீங்க எண்ணலாம். நாம எழுதுறது நமக்குத் தெரியாதா... முக்கி முக்கி தள்ளினாலும் 250 பேர் படிக்கிறதே பெரிய விஷயம்...அதானால் எழுத்து நல்லாயிருக்குன்னு எல்லாம் இல்லை ஒரு பரபரப்பான விசயத்தை எடுத்துப் பேசும்போது அதற்கான மதிப்பு கூடும் என்பதை அறிய முடிந்தது.

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் 10489850_750982544960735_3145043565041313794_n
னசில் அடுத்து ஒரு வாழ்க்கையையும் காதலையும் பேசும் கதை எழுதலாம் என்று ஒரு எண்ணம் ரெண்டு நாளா அப்பப்ப துளிர்விடுது. முக்கோணக் காதல்கதை சற்றே வித்தியாசமாய் எழுத நினைத்து அதன் சாரம்சம் ஒத்துவருமா என்பதில் எனக்கும் ஒரு அண்ணுக்குமான பேச்சில் அதைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு சும்மா எப்பவும் போல கிறுக்குவோம். தொடரெல்லாம் வேண்டாமென இருந்தவனை இரண்டு நாளா இப்படி எழுதலாம்.... இப்படி ஒரு வாழ்க்கையை, ஏறத்தாழ வேரும் விழுதுகளும் மாதிரி ஒரு மனிதரின் வாழ்க்கையோடு காதல், அதன் பின்னான நிகழ்வுகளாய் பயணிக்கலாம் என்று தோன்ற இன்று முதல் பகுதிக்கான காட்சிகள் சில மனசுக்குள் வேலை நேரத்தில் வந்து வந்து போயிற்று. சரி எழுதிடலாம்ன்னு வந்தா அறையில் சில வேலைகள்.. மூடு மாறியாச்சு... இனி கதை வருமா... வராதா தெரியலை... ஏன்னா என்னைப் பொறுத்தவரை அழகா முகம் திருத்தி பொட்டு வைத்து பூ வைத்து எழுத நினைத்தால் முடிவதில்லை. உக்கார்ந்து முகமும் கழுவாது பொட்டும் வைக்காது ஆரம்பித்தால் கடகடவென எழுதிவிடுவேன். அப்படித்தான் 'அவ' சிறுகதை... ஆரம்பித்தேன் முடித்தேன் பகிர்ந்தேன்... என்னமோ தெரியலை காட்சிப்படுத்தினால் என்னால் எழுத முடியாமல் தள்ளிப் போய் காணாமல் போய் விடுகிறது. இப்படித்தான் இந்த மாதத்தில் யோசித்த மூன்று சிறுகதைகள் போயே போச்...

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் 16-1452931123-thara-thappattai567

து எதுக்குன்னு பாக்குறீங்களா... பாலா படம்... கரகாட்டக் கலைஞர்களின் வாழ்க்கை பேசும் படம்... இந்த வாரத்துக்குள் பார்க்க வேண்டும்.

வெள்ளியன்று வரவேண்டிய மனசின் பக்கம் பொங்கல் கொண்டாட்டத்தால் இன்று மலர்கிறது.

-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Empty Re: மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

Post by Nisha Thu 21 Jan 2016 - 8:20

நான் இதுக்கு போட்ட கருத்து எங்கே? எந்தக்காக்கா தூக்கிச்சு? 

இன்றைய வழக்கு விசாரனை இதுதான்!
 நடுவராய் பானுவும்... வாதி பிரதி வாதிகளாய் நிஷாவும்  தும்பியும் ! 

பார்வையாளர் குமாரூஊஊஊஊஊஊஊஉ!

ஜல்லிகட்டு வேண்டும்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வேண்டாமா? 

அடபோங்கப்பூ! எனக்கு ஒன்னுமே தெரியாது. எனக்கு மீனும் பாவம், மீயும் பாவம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Empty Re: மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

Post by Nisha Thu 21 Jan 2016 - 8:22

இதான் சாக்குக்கு கடைசியா கவர்ச்சிப்படம் போட்டு பச்சைப்புள்ள என் தும்பி கண்ணில இந்த மாதிரி படம்லாம் படும் படி செய்ததுக்கு எதிராக  நம்பி தம்பி மனசு குமாருக்கு எதிராக.....உண்ணும் விரதம்... நிஷா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Empty Re: மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

Post by சே.குமார் Thu 21 Jan 2016 - 18:08

Nisha wrote:இதான் சாக்குக்கு கடைசியா கவர்ச்சிப்படம் போட்டு பச்சைப்புள்ள என் தும்பி கண்ணில இந்த மாதிரி படம்லாம் படும் படி செய்ததுக்கு எதிராக  நம்பி தம்பி மனசு குமாருக்கு எதிராக.....உண்ணும் விரதம்... நிஷா!
படம் பார்க்கணுமின்னு போட்ட படம் இது.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Empty Re: மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

Post by Nisha Thu 21 Jan 2016 - 21:18

ஓஹோ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும் Empty Re: மனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum