சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Khan11

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி

2 posters

Go down

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Empty சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி

Post by rammalar Wed 2 Mar 2016 - 2:26

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி XxVZQyF3QcomuvEccB3l+46
-
செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகே தேங்கி நீச்சல் குளம்போல் காட்சியளிக்கும் இடத்தில் குளிக்க விடுமுறை நாள்களில் ஏராளமானோர் வருவதால், அப்பகுதி சுற்றுலாத் தலமாக மாறி வருகிறது.

சென்னையைப் பொருத்தவரையில் மழை வெள்ளப் பாதிப்பு என்பது எப்போதோ ஒருமுறைதான் ஏற்படுகிறது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. தற்போது கோடைக் காலம் தொடங்கும் முன்பாகவே சென்னை மக்களை வெயில் வாட்டத் தொடங்கிவிட்டது.

ரயில், பேருந்தில் பயணிக்கும் மக்கள், வேலை நிமித்தமாக வெளியே சென்று வரும் மக்கள் எல்லோரும், “வெயில் இப்பவே இப்படி மண்டையைப் பிளக்குதே… இன்னும் கத்திரி தொடங்கினால் எப்படி இருக்குமோ?’ என்று முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. அந்த அளவுக்கு வெயிலின் உக்கிரம் பிப்ரவரி மாதத்திலேயே தொடங்கிவிட்டது.

வெயிலின் தாக்கத்தைச் சமாளிக்க மக்கள் தர்பூசணி, இளநீர், மோர், குளிர் பானங்கள் ஆகியவற்றைப் அருந்த ஆரம்பித்துவிட்டனர்.

பலர் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர் நிலைகளைத் தேடிச் செல்கின்றனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் தனியார் நீச்சல் குளங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் குளிக்க சில மணி நேரங்களுக்கே அதிக பணம் செலவழிக்க வேண்டும்.

மெரீனா கடற்கரை போன்ற இடங்களில் உள்ள பொதுக் குளங்களில் குளித்து மகிழ மக்கள் கூட்டம், குறிப்பாக பள்ளி மாணவர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு விடுமுறை நாள்களில் சென்று குளித்து மகிழ்வதென்பது முடியாத காரியம்.
இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு அருகில் குளம்போல் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளித்து மகிழ உள்ளூர், வெளியூர் மக்கள் விடுமுறை நாள்களில் ஆர்வமுடன் வருகின்றனர்.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள், சிறுவர்களுடன் பெற்றோர் படையெடுத்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிப் பகுதி விடுமுறை தினங்களில் சுற்றுலாத் தலமாக காட்சியளிக்கிறது.

பலர் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகு பகுதிக்கு வந்து சுட்டெரிக்கும் வெயிலில் குளித்து விட்டு, ஏரியையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

இங்குள்ள மதகு வழியே கசியும் நீர், இப்பகுதியில் குளம்போல தேங்கி அதன் பின்பே வெளியேறுகிறது. இதனால் இங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் எப்போதும் சுத்தமாகவே இருக்கிறது.

அதுமட்டுமல்ல, ஏரியிலிருந்து உயிருடன் பிடிக்கப்படும் மீன்கள், அப்பகுதியிலேயே உடனுக்குடன் வறுத்துத் தரப்படுகின்றன.
இதனால் மீன்களை உண்பதற்காகவும், மீன்களை வீட்டுக்கு வாங்கிச் செல்வதற்கு ஏராளமானோர் வருவதால் மீன் வியாபாரமும் களைகட்டுகிறது. இங்கே குளிக்க வரும் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் மதகின் மேல்புறம் இருந்து தாவிக் குதிப்பது போன்ற செயலில் ஈடுபடுவது உயிரிழப்பை ஏற்படுத்தும்.

இதுபோன்ற வேண்டாத சம்பவங்களைத் தவிர்த்து, மற்றபடி பொதுமக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப விடுமுறையை மகிழ்ச்சியாக கொண்டாடும் இடமாக செம்பரம்பாக்கம் ஏரி திகழ்கிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24130
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி Empty Re: சுற்றுலாத் தலமாக மாறிய செம்பரம்பாக்கம் ஏரி

Post by Muthumohamed Sun 6 Mar 2016 - 18:04

மக்களுக்கு அரசியல் வியாதிகளால் நிறைய இழப்புகளை தந்த இந்த ஏரி இப்போது மகளுக்கு மகிழ்ச்சி தருகிறதே அதே பெரிய விஷயம் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum