சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும் Khan11

ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும்

Go down

ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும் Empty ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும்

Post by Nisha Sun 22 May 2016 - 12:14

இலங்கைக்கான வேண்டுதல்களை செவி கொடுத்து கேட்க இறைவனுக்கும் மனமில்லை போலும்! அழிவுகளும் அழிப்புக்களும் தொடர்ந்து கொண்டெ இருக்கின்றது. அம்மக்களும் சாம்பலிலிருந்து மீளும் பீனிக்ஸ்களாய்தம்மை தாமேகட்டி எழுப்பினாலும் மீண்டும்மீண்டும் அழிவுக்குள் இரையாவதுமாய் தான் இருக்கின்றார்கள்!

சின்னஞ்சிறிய தேசம், யுத்தம், சுனாமி, யுத்தம், வெள்ளம், புயல், என எத்தனை தான் தாங்கும்? கடந்த சில வாரங்கள் இயற்கையின் கால் மாற்றத்தினால் கடும் வெயில், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் புற்றுக்களின் குடியிருக்கும் சகல ஜீவராசிகளும் குடியிருப்புக்கல் நோக்கி குடிபுகுந்து மக்கள் தூக்கத்தினையும் நிம்மதியையும் பறித்தார்கள். முக்கியமாக பாம்பினங்கள்!

இலங்கையின் கிழக்குப்பகுதியின் இருக்கும் எங்கள் வீட்டுக்குளேயே தினம் நான்கைந்து பாம்புகள் வந்தும் அடித்துகொல்வதுமாய் பதட்டமான சூழலில்இருந்தார்களாம்! நீர்நிலைகளில் நீர் வற்றிப்போக குடிநீர் தட்டுப்பாட்டுடன் வெயில்க்கொடுமையில் மக்கள் மயங்கி விழுவதும் மரணமடைவதும் செய்திகளாகின!வெயிலின் அகோரத்தினால் வீட்டினுள் நிறுத்தியிருந்த மோட்டார் வண்டி வெடித்து வீடொன்று எரிந்த சம்பவமும் இலங்கை வடக்குப்பகுதியில் நடந்தது!

இவ்வாரமோ காற்றழுத்த வேகம் புயலையும் மழையையும் உருவாக்க நள்ளிரவின் வீட்டின் கூரைகள் பறந்தோட, வீதியெங்கும் மரங்கள் ஒடிந்து விழ போக்குவரத்துப்பாதிக்கப்பட்டு , மின் தடைகள் தொடர இலங்கையின் பிரதான நதியான களனி ஆறும் இதர நீர் நிலைகளிலும் நீர் மட்டம் உயர்ந்து கொழும்பும் அதை அண்டிய மத்திய பிரதேசங்களும் வெள்ளத்தினுள் மூழ்கியது.

மழையினால் நீர் மட்டம் உயர நீர்வாழ் உயிரினங்களும் விடுகள் தேடி வரதோடங்கி எங்கும் எதற்கும் வித்தியாசமில்லாத சூழலில் மின் தடையும் சேர்ந்து இலங்கையே அழுகின்றது! வெள்ளம் எனில் சாதாரண வெள்ளம் இல்லாமல் மூன்று இலட்சம் மக்களை இடம் பெயர வைத்து கோடிக்கணக்கான சொத்துக்களை அழித்துச்சென்று கொண்டிருந்தாலும் இன்ஞும் அதன் அகோரம் தொடர்கின்றது.இதற்கிடையில் தொடர் மழையினால் மலையக கிராமங்களில் மண் சரிவுகள் ஏறட்ட கிராமமே மண்ணுக்குள் புதைந்து போனாலும் இதுவரையான் இழப்பின் எண்ணீக்கை தெளிவில்லாத நிலையில் தொடர்கின்றது!

மக்கள் இழப்புக்களை சந்திக்க இன்னும் சிலரோ அன்று எங்கள் மேல் குண்டு போட்டதால் இன்று இயற்கை உங்களை கொல்கின்றதென பேச பாதிக்கப்பட்ட

மலையகதமிழர்கள் ஏழைகளும் தமிழர்களுமாயிருப்பதால் அரசின் நிவாரணமும் மந்தகதியில் செயல்பட மக்கள் உயிருடன் உணர்வுடன் பரிதவிக்கின்றார்கள்!வெள்ளத்துக்கு தெரியுமா? தமிழன், சிங்களவன், முஸ்லிம் எனும் இனமத வேற்றுமை? அது நிறம், மணம், குணம் பார்த்தா தேடித்தேடி அழிக்கின்றது?

இனியும் நிலஅதிர்வுகளும் மண் சரிவுகளும் கடல் கொந்தளிப்புக்களும் தொடரும் என வானிலைமையம் எச்சரித்திருக்கின்றது! அங்கே எம் உறவுகளும் உயிரோடும் உணர்வோடும் வாழ்கின்றார்கள் என்பதையும் அவர்கள்ளையும் இவை அனைத்தும் பாதிக்கும் என்பதையும் நாம் ஏன் உணராமல் போனோம்?

என்ன செய்வோம்? ஏது செய்வோம்? எங்கே தான் செல்வோம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும் Empty Re: ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும்

Post by Nisha Sun 22 May 2016 - 12:15

ஆல்ப்ஸ்தென்றலில்! இலங்கை தேசத்திற்காய் இறைவா! நீர் வர வேண்டும் 06%2BKILI

இலங்கை தேசத்திற்காய்
இறைவா! நீர் வர வேண்டும்
என் தேச மக்களுக்கே
விடுதலை தரவேண்டும்
அழிவில் வாழும் மக்கள்
அமைதி வழி வாழ
அருள் நீர் தர வேண்டும்
இருளையெல்லாம் அகற்றி
பெரு வெளிச்சம் காண
இறைவா! நீர் வர வேண்டும்

கண்ணீர்கள்,கவலைகள்,கஷ்டங்கள் போக்க
கருணை நீர் காட்ட வேண்டும்
காணாமல் போகும் உறவுகளை
மீண்டும் கண்டு மனம் குளிர
இறைவா!நீர் வர வேண்டும்

நாதியற்று தவிக்கும் என் தேச மக்களுக்கு
நாடொன்று அமைத்து தர
இறைவா!நீர் வர வேண்டும்
நாளெல்லாம்கேட்கும்
கதறலின் சத்தம் காணாமல் போக
இறைவா!நீர் வர வேண்டும்

நோய் நொடிகள் அகற்றி
கடலலைகள் காத்த என்னருமை உறவுகள்
காலனோடு போராடி,காலத்தை வென்று
பல வருஷம் வாழ
இறைவா!நீர் வர வேண்டும்

இறைவா!நீர் வர வேண்டும்
அழிவிலிருந்து காத்து அமைதி தர
இறைவா!சீக்கிரம் நீர் வர வேண்டும்!

****************************************
2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழீழப்போரின் இறுதி நேரம் மனம் கதறி வேண்டியது!  இன்றும் பொருந்தும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Back to top

- Similar topics
» என் மன வானில்! விடை யறியா தேடலிது
» இலங்கை உறுப்பினர்களை இன்முகத்துடன் வரவேற்க வேண்டும் : இந்திய சபாநாயகர்
» இலங்கை மீது பொருளாதாரத் தடை வேண்டும்: ஜெயலலிதா மீண்டும் வலியுறுத்தல்.
» இலங்கை அரசாங்கத்திற்கெதிராக முழுமையான பொருளாரத்தடையை அமுல்படுத்த வேண்டும் – ஸ்ரீபன் வூட்வோர்த்
» இந்தியாவிற்கு வழங்கிய உறுதி மொழியை இலங்கை நிறைவேற்றியேயாக வேண்டும்: மனோ கணேசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum