சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Khan11

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Go down

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Empty ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Post by rammalar Sun 24 Sep 2017 - 5:09

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  DRS33fvQjanvzEqOyhzP+Tamil_News_large_1861476_318_219

நவ எனும் சொல், மிக சிறப்பு வாய்ந்தது. இதற்கான பொருள்
இரண்டுமே, பொருத்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு.

ஒன்று, ஒன்பது; மற்றொன்று புதியது. ஆக, இந்த நவராத்திரியை,
ஒன்பது ராத்திரிகள் என்று பொருள் கொள்வதைவிட, புதிய
ராத்திரிகள் என்று பொருள் கொண்டு பார்க்க வேண்டும்.

சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் என்ற வரிசைப்படி பார்த்தால்,
முதலில் பிரம்மா, பின், விஷ்ணு, முடிவில், சிவன் இம்மூவரின்
துணைவியர் முறையே சரஸ்வதி,லட்சுமி, துர்க்கை என்று தான்
வர வேண்டும்

ஆனால், நவராத்திரியின்போது, இந்த வரிசை மாற்றமடைந்து,
துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி என்றானது. மலைமகளான துர்க்கையே,
முதல் மகளாக இருப்பதால், நவராத்திரியின் முதல் மூன்று
நாட்களும், துர்க்கை இடம் பெற்று நம் துயர் துடைக்கிறாள்.

ஆன்மாவை, இறைவன்பால் வழிப்படுத்த, திருவருள் தான் துணை
நிற்கிறது. இந்த திருவருட்சக்தி தான் சித்சக்தி, பராசக்தி,
ஆதிபராசக்தி எனப்படுகிறது. இதில், ஆதிபராசக்தி தான்
துர்க்கையாகும்.

முதல் மூன்று ராத்திரிகளிலும் அந்த துர்க்கையை வழிபட்டு
மங்கலத்தையும், அருளையும், ஞானத்தையும் பெற்ற நாம்,
நான்காம் நாளான இன்று முதல், மூன்று நாட்களுக்கு
மஹாலட்சுமியை வழிபட, ஆயத்தமாகிறோம்.

-
---------------------------
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Empty Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Post by rammalar Sun 24 Sep 2017 - 5:09

வழிபாடு முறை

அம்பாள்:
வைஷ்ணவி
வாகனம்:
கருடன்
நைவேத்யம்:
புளியோதரை, பானகம்
மலர்கள்:
செந்தாமரை,ரோஜா
பூஜை நேரம்:
காலை: 8:00 - 9:00
மாலை: 6:00 7:00
பால் பாயாசம்,
அவல் பாயாசம், கேசரி வினியோகிக்க வேண்டும்.
தாம்பூலம்:
9 அல்லது 11 வகை
கொடுக்கப்பட வேண்டும்.
ராகம்: காம்போதி
வணங்கவேண்டியவர்கள்:
பூசம், அனுஷம், உத்திரட்டாதி
திசை புத்தி நடப்பவர்கள்:
செவ்வாய் திசை அல்லது புத்தி
சிறப்பு: மங்கள காரியங்கள்
நம் வீட்டில் எந்தவிதமான தடங்கலும் இன்றி நடைபெற, நான்காம் நாளான இன்று
விரதம் இருத்தல் நலம்.

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Empty Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Post by rammalar Sun 24 Sep 2017 - 5:10

பாடல்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே
அம்மா மீனாட்சி ஆடுகவே
நவராத்திரி ஊஞ்சல் உன் ஊஞ்சல்
நலந்தரும் ஊஞ்சல் பொன் ஊஞ்சல்
ஆழிப்படுக்கை கொண்டவனின்
அருமைத் தங்கை ஆடுகவே
உத்தமி பைரவி ஆடுகவே
வழிபடும் எங்கள் வாழ்வினிலே வழித்துணையாய் வந்து ஆடுகவே!

நான்காம் நாளான இன்று, அட்சதையினால் படிகட்டு வடிவ கோலமிட சிறப்பு பெறும். பிரசாதமாக, காலையில் சர்க்கரைப் பொங்கலும், மாலையில் பட்டாணி சுண்டலும் வைக்க வேண்டும்.'எந்த தேவி எல்லா உயிர்களிடத்தும், அனைத்து செல்வங்களின் வடிவாக இருக்கிறாளோ... அந்த தேவியை வணங்குகிறேன், வணங்குகிறேன்' என, இந்த வார்த்தைகளை மந்திரமாய் சொன்னால் போதும். எல்லா நன்மைகளும் வந்து சேரும்.


பெட்டிச்செய்தி

நவராத்திரியில் அம்பிகைக்கு உகந்த ஸ்ரீசண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:
ஏழ்மை வராது; அன்பு கிடைக்கும்; எதிரிகள் மற்றும் இயற்கையால் ஆபத்து உண்டாகாது.
சுவாசினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும். விவசாயிகள்
நற்பலன் கிட்டும். கல்வி, ஞானம் பெருகும். உத்யோக உயர்வு கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கும், விரைவில் நல்ல இல்லறம் அமையும். மன அமைதி, தேக ஆரோக்கியம் கிடைக்கும்.

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Empty Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Post by rammalar Sun 24 Sep 2017 - 5:10

நான்காம் நாள்

சக்தித் தாயை இன்று, வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பாள்; தீயவற்றை சம்ஹரிப்பவள்; இவளது வாகனம் கருடன்; குஷ்மந்தா வடிவத்தை எடுப்பார்; புராணங்களின்படி, தன் ஏளன சிரிப்பின் மூலம் இந்த ஒட்டுமொத்த அண்டத்தையும், குஷ்மந்தா உருவாக்கினாள் என்று கூறப்படுகிறது.
அம்பிகையின் வெற்றித் திருக்கோலம். அதனால், அண்டத்தை உருவாக்கியவராக, அவர் வழிபடப் படுகிறார். 16 வயதுள்ள சுமங்கலி - ஷாடசாக் ஷரீ எனப் போற்றப்படுகிறாள்.


அலங்காரம்

மதுரை மீனாட்சி அம்மன் ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிப்பாள். மஹாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். பரந்தாமனின் பாதத்தை தொழுதபடி இருக்கும் மஹாலட்சுமி கொடுக்க ஆரம்பித்தால் குறையேதும் இருக்காது. அன்னையின் கருணைக் கடாட்சத்தை மட்டும் தான் நாம் பெற முடியும்.


அலங்காரத்தின் காரணம்

அருளாளரான குமரகுருபரர், மீனாட்சி அம்மன் சன்னதியில், 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' எனும் நுாலை அரங்கேற்றம் செய்தார். இதில், அம்பிகையின் குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒன்பது வயது வரையுள்ள பால பருவ விளையாட்டு பாடல்கள் உள்ளன. அக்காலத்தில், ஐந்து வயதுப் பெண் குழந்தைகளை பெற்றோர், ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டி மகிழ்வர். இதனை ஊஞ்சல் பருவம் என்பர்.

அதுபோல, நவராத்திரியின் நான்காம் நாளான இன்று, மீனாட்சியை ஊஞ்சலில் வைத்து ஆட்டுகின்றனர். நம்மைப் பெற்ற தாயான அம்பிகை, சேயாக மாறி, ஊஞ்சலில் ஆடுவதை காண, கண் கோடி வேண்டும். அந்த செல்வத்திற்கு அதிபதியான மஹாலட்சுமியை நான்காவது நாளில் பூஜிக்க வேண்டும். பாசக்காரியான மஹாலட்சுமி, 'என்னை பூஜிப்பவர்களை கைவிட மாட்டேன்' என்று சொல்வதாய் புராணங்கள் கூறுகிறது. நியமத்தோடு இருந்து நவராத்திரி பூஜை செய்ய முடியாதவர்கள், அஷ்டமி அன்று மட்டுமாவது பூஜை செய்ய வேண்டும்.

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!  Empty Re: ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum