சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:10

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19

வீனஸ் கிரகம் Khan11

வீனஸ் கிரகம்

3 posters

Go down

வீனஸ் கிரகம் Empty வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:01

நமது சூரிய குடும்பத்தில், சூரியனிலிருந்து இரண்டாவதாகவும், ஏறத்தாழ பூமியை ஒத்த அளவிலும் காணப்படும் வீனஸ் என்று அழைக்கப்படும் கிரகம் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இரவில் வானில் தெரியும் பிரகாசமான விடயங்களில், நமது சந்திரனுக்கு அடுத்த படியாக வீனஸ் கிரகமே இருக்கிறது. சூரிய உதயத்தின் போதும், மறைவின் போதும் மிகவும் பிரகாசமாகத் தோன்றுவதனால் வீனஸ் கிரகம் காலை நேர நட்சத்திரம் அல்லது மாலை நேர நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பூமியைப் போன்ற அளவும், அதே போன்று நமது பூமியில் காணப்படுவது போன்றே ஈர்ப்பு விசை திணிவு, மற்றும் உள்ளக அமைப்பு போன்ற விடயங்களிலும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் காணப்படுவதால் வீனஸ் கிரகமும், பூமியும் இரட்டைக் கிரகங்கள் என்று அழைக்கப்படுவதும் உண்டு.

இவ்வாறு பல் வகை ஒற்றுமையும்,வேற்றுமையும் கொண்ட வீனஸ் கிரகத்தைப் பற்றிய மேலதிக விபரங்களைத் தொகுப்பதற்காக இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன், இதன் போது தேவைப்படும் ஆய்வு,மற்றும் தகவல்களில் உங்கள் பங்களிப்பினையும் இணைத்துக்கொள்ளுங்கள்.

முதலில் நமது சூரிய குடும்பத்தில் வீனஸ் எங்கே காணப்படுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
வீனஸ் கிரகம் Solarsystem


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:01

பூமியிலிருந்து சுமார் 23.7 மில்லியன் மைல்களுக்கு அப்பால் காணப்படும் வீனஸ் கிரகமானது வானின் மேற்குப் பக்கத்தில், மாலை நேரத்தில் அவதானிக்கக்கூடிய முதலாவது நட்சத்திரமாகவும், கிழக்குப் புறத்தில், காலையில் அவதானிக்கக்கூடிய கடைசி நட்சத்திரமாகவும் அல்லது கிரகமாகவும் காணப்படுவதோடு சில காலங்களில், அதாவது அதன் ஒளித்தெறிப்பு முழுமையாக இடம்பெறும் கால கட்டங்களில் பகல் வேளைகளிலும் அவதானிக்கப்படக்கூடிய ஒரு நட்சத்திரமாக இருப்பதாக நாசா குறிப்புகள் தெரிவிக்கின்றன.

பழைய வானியல் அவதானிகள் காலை நேரத்தில் தென்படும் போது இதை Phosphorus என்றும் மாலை நேரத்தில் தெரியும் போது Hesperus என்றும் அழைத்து வந்தாலும், இரு நேரங்களிலும் காணப்படுவது ஒரே கிரகம்தான் என்பதை ஏற்றுக்கொண்ட போது அதற்கு வீனஸ் எனும் பெயரை ( அன்புக்கும் அழகுக்குமான ரோமன் கடவுள் ) சூட்டினர்.

குறிப்பு: Phosphorus என்று ஒரு தாதுப்பொருளும் அழைக்கப்படுகிறது, Hesperus என்றால் கிரேக்க மொழியில் மாலை நேர நட்சத்திரம் என்பது பொளாகும்.

சூரியனிலிருந்து சுமார் 67 மில்லியன் மைல்கள் தூரத்தில் (அன்னளவாக) வீனஸ் கிரகம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது, நமது பூமிக்கும் சூரியனுக்குமிடையிலான தூரம் சுமார் 93 மில்லியன் மைல்களாகவும், மெர்க்குரியின் தூரம் சுமார் 36 மில்லியன் மைல்களாகவும் கணிப்பிடப்பட்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

சூரிய குடும்பத்தில் காணப்படும் ஏனைய கிரகங்கள் முட்டை வடிவில் (Oval) சூரியனைச் சுற்றி வந்தாலும், வீனஸின் பாதை வட்ட வடிவில் அமைந்திருப்பதாகக் கணிக்கப்படுகிறது, இதனடிப்படையில் சூரியனுக்கு மிக அண்மையாக 66.8 மில்லியன் மைல்கள் தூரத்தில் பயணிக்கும் வீனஸ் கிரகம், சூரியனைச் சுற்றி வர சுமார் 225 புவி நாட்களை எடுத்துக்கொள்கிறது.

இதனடிப்படையில் நமது பூமியின், இரவு பகல் முறையில் கணிக்கப்படும் நாட்களோடு ஒப்பிட்டுக் பார்க்கையில் வீனஸின் ஒரு வருடம் என்பது 24 மணி நேரமுடைய 225 நாட்களாக அமையப் போகிறது.

எனினும் சுற்றுவட்டப்பாதையில் பயணிக்கும் வீனஸ் கிரகத்தின் வடிவம் ஒவ்வொரு கட்டத்திலும் வேறு படுகிறது. இது நமது பூமியிலிருந்து பார்க்கும் போது தெரியும் சந்திரனின் வடிவம் போன்றதாகும். சூரிய ஒளி பட்டுத் தெறிக்கும் வெவ்வேறு கால - நேரங்களில் இதன் வடிவம் வெவ்வேறாக நமக்குத் தோன்றுகிறது.

பூமியும்,வீனசும் சூரியனைச் சுற்றிப் பயணிக்கும் பாதையின் வேகம் வேறுபடுவதால் ஒவ்வொரு 584 நாட்களுக்கு ஒரு தடவை இரு கிரகங்களும் நேரெதிர் முனையில் பயணிக்கிறது. இதனடிப்படையில் சூரியனைச் சுற்றிக்கொண்டும் பூமியை நோக்கியும் முன்னேறும் வீனஸ் கிரகம் குறிப்பிட்ட காலப்பகுதியில் (சுமார் 221 நாட்கள்) அளவில் பெரியதாக நமக்குத் தோன்றவும், அடுத்து வரும் 71 நாட்களில் பூமியின் பாதைக்கு நேர் நிலையில் இருக்கும் போது, அதில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி பூமியிலிருந்து பார்க்கும் போது குறைவாகக் காணப்படுவதால் அது வளர் பிறை வடிவத்திலும் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:08

நமது சூரிய குடும்பத்தில், தனக்கென துணைக்கோள்கள் எதுவும் இல்லாத (பூமிக்கு சந்திரன் போல) இரண்டு கோள்கள் மெர்க்குரியும்,வீனசுமாகும்.

முதலாவது பதிவில் வீனஸ் தொடர்பில் குறிப்பிட்டிருக்கும் பல விடயங்கள் ஏற்கனவே அறியப்பட்டனவாகவும், பரவலாகக் காணக்கிடைக்கும் விடயங்களாகவும் இருக்கின்றன,எனவே வீனஸ் குறித்து சற்று ஆழமாகப் பார்ப்போம்.

உயிரினங்களின் வாழ்க்கைக்குத் தகுந்த மாற்றிடத்தையும் அல்லது வேறு கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா போன்ற அடிப்படைகளிலும் முக்கியத்துவம் பெறும் நிலையில் வீனஸ் கிரகம் பார்க்கப்படாமையால் அதன் முக்கியம் வான் வெளி ஆராய்வில் சற்றுக் குறைந்தே காணப்படுகிறது.

எனினும், பூமியை விட சூரியனை நெருங்கிய நிலையில் காணப்படுவதால் அதன் தரை அமைப்பு மற்றும் கால மாறுபாடு போன்ற விடயங்களை அறிவதில் விஞ்ஞானம் பல முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. முன்னைய தொழிநுட்பத்தில் "ஊடறுத்துப் பார்க்க முடியாத" நிலையில் அறியப்பட்ட வீனஸ் கிரகத்தின் உட்புற நிலை தொடர்பான பல தகவல்களும் நமக்கு தற்போது கிடைக்கக் கூடியதாகவே இருக்கிறது.

ஆரம்பத்தில் காலை நட்சத்திரம், மாலை நட்சத்திரம் என்று அறியப்பட்ட வீனஸ் கிரகம் ஒரே நட்சத்திரம் எனும் முடிவு கி.மு. 6ம் நூற்றாண்டளவிலேயே பைத்தகரஸ் எனும் இத்தாலிய தத்துவ ஞானியினால் முன் வைக்கப்பட்டதாக வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.

எனினும், 17ம் நூற்றாண்டின் கலிலியோ கலிலி அவர்களின் ஆய்வுப்படி, பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வடிவத்தில் காணப்படுவது கண்டறியப்பட்டதன் மூலம் அதற்கு முன்னர் இருந்து வந்த, வீனஸ் கிரகமானது நமது சந்திரன் போன்றே பூமியை வலம் வருகிறது என்ற நம்பிக்கை முறியடிக்கப்பட்டது.

பல நூற்றாண்டுகளின் வானியல் ஆய்வுப் படிமுறை வளர்ச்சியில் வீனஸ் கிரகம் பற்றிய பல் வேறு கருத்துக்கள் நிலவி வந்திருக்கின்றன. அந்த வகையில் Copernicus Nicolaus (1473-1543)எனும் போலந்து வானவியல் ஆராய்ச்சியாளரின் சூரியனை மையப்படுத்தியே கோள்களின் சுற்று வட்டம் அமைகின்றன எனும், Aristarcus அவர்களின் கி.மு. 3ம் நூற்றாண்டளவான கோட்பாட்டின் விரிவாக்கத்திற்கு கலிலியோவின் கண்டு பிடிப்பு பெரிதும் உதவியது.

ஆரம்பத்தில் காலையிலும்,மாலையிலும் தோன்றும் நட்சத்திரமாகவும் பின்னர் சூரியனை விட பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் வீனஸ் என்றும் அதன் பின்னர், சில வேளைகளில் சூரியனுக்குக் கீழாக இது பயணிக்கிறது என்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளின் தொடர்ச்சியில் அன்றைய வானியல் நிபுணர்களின் கருத்துக்கள் வேறுபட்டு வந்தன. இதன் போது அப்போது பலமாக நிறுவப்பட்டிருந்த, வான் வெளியில் காணப்படும் அனைத்து விடயங்களும் பூமியைச் சுற்றியே வருகின்றன எனும் Claudius Ptolemaeus (87-150) அவர்களின் கோட்பாட்டை விஞ்ஞானம் முறையாக மீறவில்லை என்பதனால் வெவ்வேறு கால கட்டத்தில் நிலவிய பல்வேறு கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணானதாகத் தோன்றலாம்.

கலிலியோவின் கருத்துக்களே பின் நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும், 1030ம் ஆண்டளவிலேயே வீனஸ் கிரகம் ஒரு சுற்று வட்டப் பாதையில் பயணிக்கிறது எனும் கருத்தை பாரசீக வானியல் மற்றும் தத்துவ நிபுணர் Avicenna அவர்கள் அறிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நவீன கால வானியல் ஆய்வினைப் பொறுத்தவரை 1962ம் ஆண்டே முதன் முதலாக வீனஸ் கிரகத்தினை விண்கலம் மூலம் ஆராயப்பட்டிருப்பினும் 1761ம் ஆண்டளவிலேயே வீனசின் அமைப்பு மற்றும் விடயங்கள் தொடர்பான வானியல் ஆராய்ச்சி நிபுணர்களின் துல்லியமான கணிப்புகளும் வெளியிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:09

வீனஸ் கிரகம், ஏறத்தாழ நமது பூமியைப் போன்ற அமைப்பைக் கொண்டதாகும். நிலம் சார்ந்த அமைப்பைக் கொண்ட நான்கு கிரகங்கள் நமது சூரிய குடும்பத்தில் உள்ளன. மெர்க்குரி,வீனஸ்,புவி,செவ்வாய் ஆகியவையே நிலம் சார்ந்த அமைப்பைத் தன்னகத்தே கொண்ட கிரகங்களாகும்.

பூமியை விட சுமார் 600-650 கி.மீற்றர்களே விட்டத்தில் குறைந்ததாகவும், பூமியோடு ஒப்பிடும் போது 80 வீதத்திற்குக் குறையாத திணிவையும் வீனஸ் கொண்டிருக்கிறது. எனினும் பூமியைப் போன்றல்லாது அதன் அடர்த்தியின் 95 வீதம் carbon dioxide (கார்பன் டியக்சைட்) கொண்டதாகவும், மீதமிருப்பதில் 3.5 வீதம் அளவு நைட்ரஜன் கொண்டதாகவும் இருக்கிறது. இதேவேளை அதன் அமுக்க நிலையை பூமியோடு ஒப்பிடும் போது நமது சமுத்திரங்களில் சுமார் 1 கி.மீ ஆழத்தில் காணப்படுவது போன்ற அமுக்க நிலை காணப்படும் அதே வேளை, பல கி.மீற்றர்கள் தடிப்பமான மேகங்கள் எப்போது வீனசின் மேற்பரப்பை சூழ்ந்துகொண்டிருப்பதனால், சூரிய ஒளிக்கதிர்கள் உள்வாங்கப்பட்டாலும், உள்ளிருந்து வெளியாகும் வெப்பம் மட்டுப்படுத்தப்படுகிறது (இதையே Green House Effect என்றும் அறிகிறோம்).

எனவே, வீனசின் வெப்ப நிலை சூரியனுக்கு அருகில் இருக்கும் மெர்க்குரியை விடவும் அதிகமாகக் காணப்படுகிறது.

வீனசின் தரையமைப்பைப் பொறுத்தவரை, பெரும்பாலும் அவை எரிமலைகளினால் உருவான நில அமைப்பாகவே கணிக்கப்படுகிறது. வீனசின் மேற்பரப்பினைப் பற்றிய தகவல் திரட்டலில் ஈடுபட்ட Magellan ஆய்வுத்திட்டத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் கணணி மூலம் உருவாக்கப்பட்ட படத்தினையே இங்கே காண்கிறீர்கள் (படம் 3)
வீனஸ் கிரகம் Venus-surface

வீனசின் அடர்த்தியான மேற்பரப்பை ஊடறுத்து மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் மூலம் பல வியக்கத்தக்க தகவல்களை நாம் இது வரை பெற்றுள்ளோம். உதாரணாமக வீனசில் ஏற்படும் இடி மின்னல் பற்றிய விபரங்களைக் குறிப்பிடலாம்.

பூமியில் சாதாரணமாக, இடி மின்னலுடன் மழையும் தொடர்பு பட்டிருந்தாலும், வீனசின் மேற்பரப்பில் மழை பெய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சல்புரிக் அமில மழை வீனசில் காணப்படுகின்றது எனும் கருத்து நிலவினாலும், தரைப்பகுதியிலிருந்து சுமார் 25 கி.மீ உயரத்திலேயே அது மீண்டும் ஆவியாகி விடுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும், எரிமலைகளின் சாம்பல் வெளியேற்றத்தினால் மின்னல் உருவாக்கம் இடம்பெறுகிறது எனும் பொதுவான அபிப்பிராயமும் நிலவுகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:10

உயிரினங்கள் வாழும் பூமி, சூரியனை ஓரளவுக்கு நெருங்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதற்கு சிறந்த விஞ்ஞான உதாரணமான வீனஸ் பார்க்கப்படுகிறது. வீனசின் மேற்பரப்பை ஆராய்ந்து பெற்ற தகவல்களின் அடிப்படையில் பெரும்பாலான தரைப்பகுதி வேறு எவ்விதமான செயற்பாடுகளுமற்ற நிலையில் காணப்பட்டாலும், ஒரு சில பகுதிகளில் மாத்திரம் எரிமலைகளின் செயற்பாடுகள் காணப்படுவதாக அறிய முடிகிறது.

பல மில்லியன் நூற்றாண்டுகளுக்கு முன்னர் பூமியைப் போன்று வீனசிலும் தண்ணீர் காணப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடும் ஆய்வாளர்களும் உண்டு.

எவ்வாறாயினும், வீனசில் காணப்படும் அதீத வெப்ப நிலை மற்றும் எரிமலைகளின் பாதிப்பில் உருவாகியிருக்கும் தரைப் பகுதி போன்றவை பூமியின் பூகோளவியலைக் கற்பதற்கு சிறந்த உதாரணங்களாகும்.எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர பெரும்பாலான பகுதிகள் எவ்வித செயற்பாடுகளுமற்று, அமைதியாகவே காணப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வீனஸ் பற்றிய ஆய்வுகளில் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் பெரிதும் ஆர்வமாக இருந்தமையின் பலனால் 1960 களின் முற்பகுதியிலேயே இவை தொடர்பான பல விடயங்களை அறியக்கூடியதாக இருந்திருக்கிறது.

வீனஸ் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட விண்கலங்களில் திருப்திகரமான செயற்பாட்டை முழுமையாக வழங்கிய முதலாவது விண்கலமாக அமெரிக்காவின் Mariner 2 (1962) கணிக்கப்படுகிறது. எனினும் 1961ம் ஆண்டே சோவியத் யூனியனின் Venera ஆய்வுத்திட்டம் மூலம் Venera 1 வீனசை நெருங்கியிருந்தது, எனினும் சுமார் ஏழு நாட்களின் பின் கட்டுப்பாட்டையிழந்ததனால் Venera 1 மூலமான ஆய்வுத் திட்டம் தோல்வியைத் தழுவியிருந்தது.

இதே போன்று, அமெரிக்காவின் Mariner 1 திட்டமும் விண்ணில் செலுத்த முன்பதாகவே செயலிழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Mariner 2 ன் ஆய்வின் அடிப்படை வீனசின் மேற்பரப்பைப் பற்றி அறிந்து கொள்வதாக இருந்தாலும், அங்கே உயிரினங்கள் வாழ்கின்றனவா அல்லது வாழக்கூடிய சாத்தியம் இருக்கிறதா என்பதை அறிவதில் விஞ்ஞானம் பெரிதும் ஆவலாக இருந்தது. 1962 டிசம்பர் மாதமளவில் Mariner 2 இலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் அடிப்படையில், வீனசின் கால நிலை அதீத வெப்பத்துடன் காணப்படுவதை ( சுமார் 420 °செ) அறிய முடிந்ததன் பின்னர், அங்கே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனும் முடிவு எட்டப்பட்டது.

1962 ம் ஆண்டின் Mariner 2 விண்கலமே, பூமியிலிருந்து வேற்றுக் கிரகத்திற்குப் புறப்பட்டு வெற்றிகரமாக இயங்கிய முதலாவது ஆய்வுத் திட்டமாகவும் கணிக்கப்படுகிறது.
வீனஸ் கிரகம் Mariner2

வீனசின் மேற்பரப்பிலிருந்து சுமார் 34,000 கி.மீ தொலைவில் பறந்து சென்ற Mariner 2 விண்கலமே வீனசின் அடர்த்தி,இயக்க வேகம் மற்றும் மாற்றங்கள் போன்ற தொகுப்புகளை முதன் முதலில் பெற்றுத்தந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பல் வேறு ஆய்வுகள் மூலம் வீனஸ் பற்றிய பெரும்பாலான கேள்விகளுக்கும், ஊகங்களுக்கும் விடை கிடைத்திருந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:11

நமது தட்ப,வெட்ப சூழ்நிலையில் வாழும் உயிரினங்கள் தான் அங்கு வாழ முடியாது என்பது விஞ்ஞானத் தீர்மானம், நாளடைவில் அங்கிருக்கும் சூழ்நிலையில் வாழக்கூடிய உயிரினங்கள் அங்கோ அல்லது வேற்றுக் கிரகங்களிலோ வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டால்,தற்போதைய நம்பிக்கை முறியடிக்கப்படலாம்.

வீனஸ் ஆய்வுகள்

Mariner 2 விண்கலத்தினைத் தொடர்ந்து ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட ஆய்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் சோவியத் விண்கலங்களான Venera 3 மற்றும் Venera 7 ஆய்வுத்திட்டங்கள் இங்கு குறிப்பிடத்தக்கன. 1966ம் ஆண்டு வீனசில் தரையிறங்கிய Venera 3 விபத்துக்குள்ளாகியிருந்த காரணத்தினால் அதன் மூலம் வீனஸ் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருந்தாலும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட Venera ஆய்வுகள் மூலம் பல தகவல்கள் வெற்றிகரமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டன.

விபத்துக்குள்ளாகியிருந்தாலும் கூட Venera 3 விண்கலமே, வேற்றுக்கிரகம் ஒன்றின் தரையைத் தொட்ட முதலாவது விண்கலமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட Venera 4 ன் தரையிறக்கம் வெற்றிகரமானதும், வீனசின் தரை மேற்பரப்பு தொடர்பான பல அறிந்திராத தகவல்களையும் பெற்றுத் தந்திருந்தது. அதன் அடிப்படையில் Mariner 2 ஆய்வில் அனுமானிக்கப்பட்டிருந்த வீனசின் வெப்ப நிலை, அதையும் விட அதிகமாக (சுமார் 500 °செ) என அறியப்பட்டது. இதேவேளை வீனசின் அடர்த்தியும் முன்னர் அனுமானிக்கப்பட்டிருந்ததை விட அதிகமாகக் காணப்பட்டதனால் Venera 4 அதன் தரையிறக்கத்தின் போது அதிக சக்தியைப் பயன்படுத்தும் தேவை ஏற்பட்டது. எனவே, எதிர்பார்த்த கால அளவை விட குறைவான நேரமே Venera 4 வினால் செயற்பட முடிந்தது. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையிலேயே வீனசின் வளிமண்டலம் 90 முதல் 95 % Carbon Dioxide செறிவுடன் காணப்படுவதும் அறியப்பட்டது.

தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் போது, முதன் முதலாக வீனசின் தரையமைப்பைப் படம் பிடித்து அனுப்பிய பெருமையினை Venera 9 பெற்றுக்கொள்கிறது. இரு வேறு நிலப்பகுதிகளின் தரையிறங்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்த Venera 9 மற்றும் Venera 10 விண்கலங்கள் பெற்றுத்தந்த படங்கள் மூலமாக வீனசின் தரை மேற்பரப்பு தொடர்பான பல் வேறு புதிய தகவல்களை விஞ்ஞானிகள் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மெர்க்குரி பற்றிய ஆய்வுக்காக செல்லும் வழியில், வீனஸ் மேற்பரப்பிலிருந்து சுமார் 5700 கி.மீ தொலைவில் பறந்து சென்ற Mariner 10 (அமெரிக்க) விண்கலம் மூலமாக மேலும் பல புகைப்படங்களை ஆய்வாளர்கள் பெற்றுக்கொண்டார்கள்.

விண்வெளி மற்றும் வேற்றுக்கிரக ஆராய்வில் முக்கிய பங்கு வகித்த Mariner 10 பற்றி அடுத்து பார்ப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sat 5 Mar 2011 - 21:11

1973, நவம்பர் மாதம் 3ம் திகதியளவில் விண்ணுக்கு ஏவப்பட்ட நாசாவின் Mariner 10 தானியங்கி விண் கலம் மரைனர் குடுமபத்தின் இறுதியானதும், விண்வெளி ஆய்வில் முக்கிய பங்கினையும் வகிக்கும் ஒரு திட்மாகவும் காணப்படுகிறது.

மெர்க்குரியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட முதலாவது விண்கலமாகவும், அதே நேரம் இரு வேறு கிரகங்களை ஒரே தடவையில் ஆராய்ந்த முதலாவது விண்கலமாகவும் மரைனர் 10 திகழ்கின்றது. இவை தவிரவும், முதன் முதலில் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி தனது பயணப் பாதையை மாற்றும் திறன் கொண்ட முதலாவது விண்கலமாகவும், தனக்கு வடிவமைக்கப்பட்ட முதற்கட்ட செயற்பாட்டினை பூர்த்தி செய்து மீண்டும் தனது இலக்கை வந்தடைந்த முதலாவது விண்கலம் மற்றும், ஒரே கிரகத்தைச் சுற்றிய பல்வேறு பயணங்களை மேற்கொண்ட முதலாவது விண்கலம் போன்ற பல்வேறு விண்வெளி ஆய்வின் முதற்கட்ட சோதனைகளில் வெற்றி பெற்ற ஆய்வுத்திட்டமாகவும் Mariner 10 திகழ்கின்றது.

புறப்பட்ட சிறு காலத்திற்குள்ளேயே பல்வேறு இடைஞ்சல்களை வெற்றி கண்ட Mariner 10, 1973 நவம்பர் மாதம் 13ம் திகதியும், 1974 ஜனவரி 21ம் திகதியும் இடையில் வைத்தே செய்யப்பட்ட பல் வேறு திருத்தங்களின் பின்னர், 1974ம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 5ம் திகதியளவில் சுமார் 4,165 வீனஸ் தொடர்பான புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வீனசின் தரை மட்டத்திலிருந்து சுமார் 5,768 கி.மீ உயரத்தில் பறந்த Mariner 10, அதன் பின் மெர்க்குரியை நோக்கிய தனது பயணத்தின் போது, மீண்டும் சில திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்னர் (1974, மார்ச், 16) மெர்க்குரி நோக்கிய தனது பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன் போது, 1974 மார்ச், 29ம் திகதயளவில் மெர்க்குரிக்கு மிக நெருக்கமாக சுமார் 703 கி.மீ தொலைவில் Mariner 10 பறந்ததாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் பின்னர் மேலும் இரு தடவைகள், 21 செப்டம்பர் 1974 மற்றும் 16 மார்ச் 1975 ஆகிய தினங்களில் மெர்க்குரியின் பரப்பில் சுமார் 327 கி.மீ உயர அளவு வரை நெருங்கிச் சென்று ஆய்வினை மேற்கொண்ட Mariner 10, பின்னர் 1975 மார்ச், 24ம் திகதியளவில் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டது.
வீனஸ் கிரகம் Mariner10


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by ஹம்னா Sun 6 Mar 2011 - 10:20

:!+:


வீனஸ் கிரகம் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 6 Mar 2011 - 10:27

://:-:


வீனஸ் கிரகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by *சம்ஸ் Sun 6 Mar 2011 - 19:54

உறவுகளின் மறுமொழிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வீனஸ் கிரகம் Empty Re: வீனஸ் கிரகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum