சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி! Khan11

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

Go down

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி! Empty வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி!

Post by rammalar Mon 12 Feb 2024 - 13:53

வெளியானது வேட்பாளர் பட்டியல்... பாஜக மூத்த தலைவர்கள் அதிர்ச்சி! 3c27a9011a374df62900193c1bc4a0cc3d475b547e60b6f1582fa7e4169a5dc6

--
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் 
14 பேரின் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ள நிலையில் அதில் 
தங்களின் பெயர்கள் இல்லாததால் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி 
அடைந்துள்ளனர்.


நாட்டில் 15 மாநிலங்களில் உள்ள 56 உறுப்பினர்களின் பதவிக்காலம் 
இந்த மாதம் காலியாவதை முன்னிட்டு அதற்கான தேர்தல் வரும் 
27-ம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 
இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய 15-ம் தேதி கடைசிநாளாகும்.


இந்நிலையில் இதில் போட்டியிடக்கூடிய 14 வேட்பாளர்களின் பெயர்கள் 
அடங்கிய முதற்கட்ட பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இதில் 
கர்நாடகத்தில் இருந்து தேர்வான மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 
உத்தராகண்டில் இருந்து தேர்வான பாஜக தலைமை செய்தித் 
தொடர்பாளர் அனில் பலுனி ஆகியோரின் எம்.பி. பதவிக்காலம் 
நிறைவடையும் நிலையில், அவர்களுக்கு மீண்டும் 
வாய்ப்பளிக்கப்படவில்லை. 


பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சுஷீல் குமார் மோடியின் 
பெயரும் பட்டியலில் இடம்பெறவில்லை.


இதனால் அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் 
மக்களவைத் தேர்தலில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக உத்தரவாதம் 
அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வேட்பாளர் பட்டியலில் 
உத்தராகண்ட் மாநில பாஜக தலைவர் சுதான்ஷு திரிவேதிக்கு மட்டுமே 
மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 


மீதமுள்ள 13 பேருமே புதுமுகங்கள் தான். காங்கிரஸில் இருந்து பாஜகவில் 
இணைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆா்.பி.என்.சிங்குக்கு 
வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.


மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, புருஷோத்தம் ரூபாலா, 
தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோரின் பதவிக் காலமும் 
நிறைவடைகிறது. குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரத்தில் அடங்கிய 
இந்த இடங்களுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது. 
அதில் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.


 நாடாளுமன்றம்
அதேபோல பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் மாநிலங்களவை 
உறுப்பினர் பதவிக் காலமும் நிறைவடையவுள்ளது. இவர் ஹிமாசலப் 
பிரதேசத்தில் இருந்து தேர்வானவர். இப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் 
இம்மாநிலத்தில் பாஜகவிடம் போதிய எம்எல்ஏக்கள் பலம் இல்லை. 


எனவே, ஜெ.பி.நட்டா வேறொரு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 
தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.


பீகாரில் 6 மாநிலங்களவை எம்.பி. இடங்கள் காலியாகும் நிலையில், 
எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்-
பாஜக கூட்டணிக்கு 3 இடங்களும், எதிர்க்கட்சி கூட்டணிக்கு 3 இடங்களும் 
கிடைக்கும். 


இதில் பாஜக சார்பில் தர்மசீலா குப்தா, பீம் சிங் ஆகிய இரண்டு வேட்பாளர்களின் 
பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா 
தளத்துக்கு ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்துக்கு ஐக்கிய ஜனதா 
தளம் வேட்பாளரை அறிவிக்கும் எனவும் கூறப்படுகிறது.
-
Dailyhunt - காமதேனு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24169
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum