சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59

» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56

» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56

» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53

» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50

» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09

» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20

» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39

» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46

» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30

நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  Khan11

நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?

2 posters

Go down

நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  Empty நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 10:47

நடிகை சுஜாதாவின் மறைவு தென்னிந்திய திரைப்படத் துறைக்குப் பேரிழப்பாகும் என்பதைத் திரைப்பட ரசிகர்கள் கட்டாயம் ஏற்றுக் கொள்வார்கள். திரைப்படத் துறையில் எனக்கு உள்ள ஈடுபாடுகாரணமாக இக்கட்டுரையை வரையவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

எனவேதான் சுஜாதாவைப் பற்றிய கட்டுரை ஒன்றுடன் துயர் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 58 வயதான நடிகை சுஜாதா சில மாதங்களாகச் சென்னையில் நோய் வாய்ப்பட்டடிருந்தார்.

அவருக்கு மேற்கொண்ட சிகிட்சை தகுந்த பலன் தராததால் சென்ற புதன் கிழமை (06-04-2011) இவர் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

நடிகை சுஜாதா எங்கே பிறந்தார் என்பதில் உள்ள கேள்விக்கு இதுவரை சரியான பதில் கிடைக்கவில்லை. 1952ம் ஆண்டு மார்கழிமாதம் 10ம் திகதி நடிகை சுஜாதா இலங்கையில் பிறந்தார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் எந்த இடத்தில் பிறந்தார் என்பதற்கான சரியான விவரம் கிடைக்கவில்லை. 1950 களில் கேரளாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்து கல்வி கற்பித்த பல மலையாள ஆசிரியர்களில் அவரது தந்தையும் ஒருவர்.

இவரது தந்தையாரான ஆசிரியர் மேனன் அவர்கள் சிறந்த விலங்கியல் ஆசிரியராகத் திகழ்ந்தார். இவர் 1956ம் ஆண்டுவரை யாழ்ப்பாணக் குடாநாட்டிலே உள்ள தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியில் (Mahajana College) கல்வி கற்பித்தாக முன்னாள் மகாஜனாக் கல்லூரி அதிபர் பொ. கனகசபாபதி அவர்கள் உறுதி செய்திருந்தார்.

மேனன் தனது குடும்பத்தோடு தெல்லிப்பழையில் தங்கியிருந்தாகவும் தெரியவருகின்றது.

எனவே 1952ம் ஆண்டு மார்கழி மாதம் 10ம் திகதி பிறந்த நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்திருக்கலாம் என்று ஊகிக்கமுடிகிறது. ஆசிரியர் திரு.மேனனின் வெற்றிடத்தை நிரப்பவே 1957ம் ஆண்டு திரு. பொ. கனகசபாபதி அவர்கள் விலங்கியல் ஆசிரியராக மகாஜனாக் கல்லூரிக்குச் சென்றதாகத் தெரிவித்தார். பின் அவர் மகாஜனாக் கல்லூரியின் அதிபராகவும் பணியாற்றினார்.

கனடாவில் உள்ள சில மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர்களும் தாங்கள் 1954,1955களில் திரு. மேனனிடம் விலங்கியல் கற்றதாகத் தெரிவித்தனர். நடிகை சுஜாதா இலங்கையின் தென்பகுதியில் உள்ள காலி என்ற இடத்தில் பிறந்ததாகவும் சிலர் குறிப்பிடுவர்.

ஆனால் மகாஜனாக் கல்லூரியில் இருந்து மாற்றலாகி 1956ம் ஆண்டுதான் ஆசிரியர் மேனன் அவர்கள் காலிக்குச் சென்றதற்கான குறிப்புகள் இருக்கின்றன.

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  Empty Re: நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Apr 2011 - 10:48

அச்சமயத்தில் நான்கே வயதான சுஜாதா பள்ளிக்குச் சென்றிருக்க வாய்ப்பில்லை. எனவே தந்தையாரின் காலிக்கான இடமாற்றத்தின் பின்புதான், சுஜாதா காலியில் உள்ள றிப்பொன் பெண்கள் பாடசாலையில் (Rippon Girls School) ஆரம்ப கல்வியைக் கற்றார். எனவேதான் நடிகை சுஜாதா பிறந்த இடம் காலி என்று சிலர் நம்புகின்றனர்.

தென்னிலங்கையில் கல்வி கற்றதால் தமிழைவிட சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அவர் புலமை பெற்றிருந்தார். புதின்ம வயதுவரை இலங்கையில் வாழ்ந்த சுஜாதா, அவரது 14வது வயதில் பெற்றோருடன் கேரளாவிற்குத் திரும்பிச் சென்று அங்கே தனது கல்வியைத் தொடர்ந்ததாகத் தெரிய வருகின்றது. நடிகை சுஜாதாவின் தாய் மொழி மலையாளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை சுஜாதாவை ஜோசி பிரகாஷ் என்பவர்தான் முதன் முதலாக மேடை நாடகமான பொலீஸ் ஸ்டேசனில் நடிக்க வைத்தது மட்டுமல்ல, திரையுலகத்திற்கும் அறிமுகப் படுத்தினார். இவரது கணவரின் பெயர் ஜெயகர். சஜீத் என்ற ஆண் மகனுக்கும், திவ்யா என்ற பெண்ணுக்கும் இவர் தாயாவார். டூ கல்யாண் (1968) என்ற இந்திப் படத்திலும், தபாஸ்வினி என்ற மலையாளப் படத்திலும் இவர் முதலில் தோன்றினாலும் ஏர்ணாம்குளம் ஜங்ஷன் என்ற மலையாளப்படத்தில் நடித்த போதுதான் கே. பாலச்சந்தரின் கண்களில் பட்டார். 1974ல் பிரபல இயக்குனரான கே. பாலச்சந்தர் எடுத்த அவள் ஒரு தொடர் கதை என்ற படம் தான் சுஜாதாவைச் சிறந்த ஒரு நடிகையாகத் தமிழ் திரையுலகில் இனம் காட்டியது.

எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் வெளிவந்த இந்தப்படத்தில் சுஜாதாவுடன் கமலஹாசன், ஸ்ரீபிரியா, விஜயகுமார் ஆகியோர் நடித்திருந்தனர். 1976ல் வெளிவந்த இளையராஜாவின் பாடல் மூலம் பிரபல்யமான அன்னக்கிளியில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மேலும் இவரது புகழ் ஓங்கியது. மீண்டும் இவர் 1977ல் கே. பாலச்சந்தரின் ‘அவர்கள்’ படத்தில் ரஜினிகாந், கமலஹாசன் ஆகியோரோடு அனு என்ற பாத்திரமேற்று நடித்துப் புகழ் பெற்றார்.

அன்றைய பிரபல தமிழ்த் திரைப்படத்துறை நடிகர்களான சிவாஜிகணேசன், கமலஹாசன், ரஜனிகாந் ஆகியோரோடு கதாநாயகியாக நடித்த பெருமை இவருக்கு உரியது. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்திப் படங்களிலும் நடித்திருக்கிறார். அக்னி நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்னா, மோகன்பாபு, சிரஞ்சீவி போன்றவர்களோடும் வேற்று மொழிப் படங்களில் நடித்திருக்கின்றார்.

அமரர் நடிகை சுஜாதா அவர்கள் சுமார் 150 படங்கள் வரை நடித்திருப்பதாகத் தெரியவருகின்றது. இதில் சுமார் 50 மேற்பட்ட தமிழ்ப்படங்களும் அடங்கும். இவர் கதாநாயகியாக மட்டுமல்ல 1980 களின்பின் தாயாரின் பாத்திரம் ஏற்றுத் திறமையாக நடித்துப் பலரின் பாராட்டையும் பெற்றுக்கொண்டார். இவர் நடித்த கடல் மீன், அந்தமான் காதலி, விதி, கோயில்காளை, புனர்ஜென்மம், உன்னை நான் சந்தித்தேன் போன்ற படங்கள் பலராலும் பாராட்டப் பெற்றன. இவர் நடித்த கடைசிப்படம் தெலுங்கில் வெளிவந்த நாகர்யுனாவின் படமான ஸ்ரீ ராமதாசு (2006) என்பதாகும். ரஜனிகாந்தின் பாபா படத்தில் (2002) ரஜனிகாந்தின் தாயாகவும் இவர் நடித்தார். இவரது கடைசித் தமிழ் படமான வரலாறு படத்தில் (2004) அசினின் தாயாராக நடித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். இவர் தனது சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் கலைமாமணி, மற்றும் நந்தி விருது போன்றவற்றைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  Empty Re: நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?

Post by ஹம்னா Fri 29 Apr 2011 - 17:58

சுஜாதா பற்றிய கட்டுரைக்கு நன்றி சிகரம். ##*


நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?  Empty Re: நடிகை சுஜாதா அவர்கள் தெல்லிப்பழையில் பிறந்தாரா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum