சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்! Khan11

மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்!

Go down

மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்! Empty மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்!

Post by veel Wed 25 May 2011 - 23:40

மாணவர்களை சீரழிக்கும் இராணுவத்தின் புதிய வலைத்திட்டம்!

காலம் காலமாக நாம் பேணிவரும் தமிழர்களுக்குரிய அடையாளங்களும் சிங்களத்தால்திட்டமிட்ட முறையில் சிதைக்கப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்டு இறுதியில் முற்றாக சூறையாடப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகப்பகுதி எங்கும் சிங்களத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. தாயகத்தில் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் சூறையாடப்படுவதாக கடந்து சென்ற இப்பகுதிகள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளோம். கல்விச் செயற்பாடுகளில் முன்னிலையில் இருந்துவரும் யாழ்குடாநாட்டில் இன்று எழுத்தறிவு குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துவருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலைமைக்கு கணனிப் பாவனை, தொலைக்காட்சிப் பாவனை மற்றும் செல்பேசிப்பாவனை போன்றவற்றில் கல்விசாராத நடவடிக்கைகளின் ஈர்ப்புமாணவர்களிடையே அதிகரித்துள்ளமையே காரணம் என யாழ்குடாநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைக் கவனத்தில் எடுக்காது இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சியடைந்து விடும் என யாழ். வலய தமிழ்மொழிப் பாட உதவிக்கல்விப் பணிப்பாளர் திருமதி மீரா அருள்நேசன்குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பப் பாடசாலைகளில் இருந்து இடைநிலைப் பாடசாலைகளுக்கு தரம் 6 வகுப்புக்கு அனுமதி பெறவரும் மாணவர்கள் எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஐந்து வருடங்கள் ஆரம்பப் பாடசாலையில் கற்கும் ஒரு பிள்ளையை எழுதவாசிக்கத்தக்கவர்களாக உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கு உண்டு. ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் தமக்குரிய பணியைத் தட்டிக் கழித்து அலட்சிய மனப்பாங்குடன் செயற்படுவார்களானால் இடைநிலைப் பாடசாலைகள் ஆரம்ப பாடசாலைகளில் இருந்து வரும் எழுத வாசிக்கத் தெரியாத பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும் என அவர்குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குடாநாட்டில் இராணுவத்தினர் தமது முகாம்களுக்கு அருகில் ‘இணையவலைமையம்’ (இன்ரநெற் கபே) எனும் பெயரில் மாணவர்களை சீரழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு இராணுவ முகாம்களுக்கு அண்மையில் இணையவலை மையம் அமைத்து வருகின்ற இராணுவத்தினர் தாம் தொழில்நுட்ப அறிவு ஊட்டப்போவதாக மாணவர்களை அழைத்து சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் மூலம் மாணவர்களுக்கு வேண்டப்படாத இணைப்புக்களையும் வரையறை இன்றி வழங்குவதன் ஊடாக அவர்களை சமூகத்தில் சீரழிக்க சிங்கள அரசும் அதன் இராணுவமும் திட்டமிட்டு முயன்று வருகின்றனர்.

வன்னியிலும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதற்கட்டமாக கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரால் இந்த இணையவலைமையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்து முல்லைத்தீவிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மாணவர்களுக்கு இலவச இணையத்தள வசதி என்ற பெயரில் இராணுவ முகாம்களுக்கு அண்மையில் உருவாக்கப்படும் இத்தைகைய திட்டங்கள் தொடர்பில் பெற்றோர்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்களப்படைகள் மாணவர்களுக்கு கணனித் தொழில்நுட்ப ரீதியில் உதவவேண்டுமாயின், அதனை பாடசாலைகளுக்கு வழங்குவதன் மூலம் ஏன் செய்து கொடுக்க முடியாது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வாறுதான் ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க படைகள் இலவச இணையவலை மையம் என தமது முகாம்களுக்கு அருகில் செய்துகொடுத்து ஆயிரக்கணக்கான இளம் மாணவ மாணவியர்களைத் தம் வலையில் வீழ்த்தி பாலியல் துன்புறுத்தல்களை செய்தது மட்டுமன்றி அவற்றை ஒளிப்படமாக எடுத்து அமெரிக்கா முழுக்க விற்பனை செய்தும் வந்தனர் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.குடாநாட்டில் கல்விச்செயற்பாடுகளின் பின்னடைவிற்கும் இவ்வாறான நடவடிக்கைகளே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மாணவர்கள் கணினியிலும் செல்பேசியிலும் தகவல் பரிமாற்றத்திற்கு தமிழ்மொழியை ஆங்கிலத்தில் எழுதும் முறையைப் பின்பற்றிவருவதும் தமிழ் எழுத்தறிவு குறைவடைந்து செல்வதற்குக்காரணமாக அமைகின்றது. இராணுவத்தினர் மாணவர்களை இவ்வாறு சீரழிப்பதன்மூலம் தமிழ் மக்களிடையே கல்விமான்கள் உருவாகுவதை குறைப்பதுடன், எமது இளம் சமுதாயத்தை தமிழர் தேசியம் என்ற உணர்வுகளை மறந்து ஆடம்பரம், கேளிக்கை என்ற புதிய மாயைகளுக்குள் வீழ்த்துவதையே எதிர்பார்த்து நிற்கின்றனர். இந்நிலையில், திருகோணமலை மாவட்டத்தின் நான்கு தமிழ் பாடசாலைகள், சிங்கள நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலை, முதலைக்குளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நான்கு தமிழ்பாடசாலைகள், கடந்த மார்ச் மாத இறுதி வரையில் திருகோணமலை கல்வி வலயத்தின்கீழ் இருந்தன. எனினும் இந்த மாதம் புதிய சிங்கள கல்வி வலயம் உருவாக்கப்பட்டதில் இருந்து, குறித்த பாடசாலைகள் நான்கும் சிங்கள நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த தமிழ் பாடசாலைகளின் ஆசிரியர்கள், சிங்கள மொழியில் ஆவணங்களைத் தயாரிக்க வலியுறுத்தப்படுவதாகவும், அவர்களுக்கான பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள் என்பன சிங்கள மொழியிலேயே மேற்கொள்ளப்படுவதாகவும் அதனால் அவர்கள் சிரமத்துக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தாவிடின் தாயகப் பகுதியெங்கும் சிங்கள கல்வி வலயங்கள் தமிழ் பாடசாலைகளை சூறையாடுவதைத் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விடும். தமிழ் மக்களே விழிப்படையுங்கள். குட்டக்குட்ட குனிபவனும் மடையன், குனியக் குனியக்குட்டுபவனும் மடையன். இது சிந்திக்கும் நேரமல்ல செயற்படும் நேரம்.
(சூறையாடல்கள் தொடரும்)

veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum