Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காதல் செய்ததால் எனக்கு நானே கொடுத்து கொள்ளும் தண்டனை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

செஞ்சி அருகே, காதல் திருமணம் செய்து கொண்ட பெண், திருமணம் முடிந்த ஐந்தாவது நாளில்,
கணவர் வீட்டு முன் தீக்குளித்து இறந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், புகார் கொடுக்க சென்ற போது போலீசார் தன்னை திட்டியதாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா நெகனூர் காலனியைச் சேர்ந்த காண்டீபன் மகள் மகேஸ்வரி, 21; பி.காம்., பட்டதாரி. இவர், சென்னை திருவொற்றியூரில் தன் சகோதரியுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.நெகனூர் காலனியில் இருந்து, சென்னை ஐய்யப்பன்தாங்கலில் தங்கி, டிரைவர் வேலை செய்து வந்த ராமதாஸ் மகன் துரைமுருகன் என்பவருடன், இவருக்கு காதல் ஏற்பட்டது.கடந்த 20ம் தேதி, கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்ட இவர்கள், 23ம் தேதி, நெகனூர் கிராமத்திற்கு வந்தனர். தன் பெற்றோரிடம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதை சொல்லும் படி, மகேஸ்வரியை மட்டும் அனுப்பினார். இதை கேட்டு ஆத்திரமடைந்த துரைமுருகன் குடும்பத்தினர், மகேஸ்வரியை திட்டி, அடித்து விரட்டினர்.மகேஸ்வரி, நடந்த சம்பவத்தை துரைமுருகனிடம் மொபைல் போனில் கூறினார். அவர் சரியான பதில் சொல்லாமல், சென்னை சென்றுவிட்டார். மகேஸ்வரி குடும்பத்தினர், ஊராட்சித் தலைவரிடம் தெரிவித்தனர். அவர் சமாதானம் பேச அழைத்ததற்கு, துரைமுருகன் குடும்பத்தினர் வர மறுத்து விட்டனர்.
துரைமுருகனிடம் போனில் பேசியபோது, தன் தந்தை சொல்வது தான் இறுதி முடிவு என கூறியுள்ளார். இதையடுத்து, போலீசில் புகார் செய்யும் படி ஊராட்சித் தலைவர் கூறினார்.வளத்தி போலீசில் புகார் கொடுத்த போது, அங்கிருந்த போலீசார், "திருமணம் நடந்ததற்கு ஆதாரம் ஏதும் இல்லை; எங்கு திருமணம் நடந்ததோ அங்கேயே போய் புகார் செய்யுங்கள்' என அனுப்பினர்.இதையடுத்து, நெகனூர் கிராமத்திற்கு வந்த மகேஸ்வரி, முற்பகல் 11 மணியளவில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீவைத்துக் கொண்டு துரைமுருகன் வீட்டு வாசலில் வந்து விழுந்தார்.
உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு போராடிய அவரை, செஞ்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் இறந்தார்.மகேஸ்வரி தீக்குளிப்பதற்கு முன், தன் தந்தைக்கும், ஊராட்சித் தலைவருக்கும் தனித்தனியாக கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில், "என் சாவுக்கு துரைமுருகன் தான் காரணம். போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் என்னை திட்டினர். இது எனக்கு நானே கொடுத்து கொள்ளும் தண்டனை' என எழுதியுள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum