Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
வாகை மரமே வாகை மரமே....
+2
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
6 posters
Page 1 of 1
வாகை மரமே வாகை மரமே....
ஈராண்டுகள் பிரிந்து எமக்கிட்ட பணி முடித்து
போராடி நான் பெற்ற விடுப்பைக் கொண்டாட
ஊர் வந்து சேர்ந்தேன் உள்ளமெலாம் மகிழ்ந்தேன்
உற்றாரும் பெற்றாரும் ஊராரும் என்னருகில்
எனக்கென்று தனியாக யாருக்கும் தெரியாமல்
மனக்குறைகள் இறக்கிவைக்கும் சுமைதாங்கிக் கல் போல
கிழட்டு மரம் ஒன்றுண்டு கிணத்தங்கரை யருகே
வாட்டத்தோடு நீற்க்கும் எனை வாவென்று அழைத்தது அது .
வாஞ்சையோடு நிற்க்கும் இந்த வாகை மரத்தடியில்
வாழ்க்கையில் நான் பட்ட வலிமிக்க காயங்களை
வஞ்சனை துரோகங்களை வறுமையின் தழும்புகளை
வாய் உரக்கச் சொல்லி கண்ணீர் விட்டேன் ஓர் காலம்
நண்பர்கள் சேர்ந்து ஒன்றாய் கூடிக்களித்ததுண்டு
நட்பு மட்டும் மிஞ்சி விட நண்பர்கள் போனதெங்கே
சொல்லாத காதல் சுவற்றில் காய்ந்த மழைத்துளி போல்
பொல்லாத வறுமையால் பிழைக்கச் சென்றேன் அக்கறைக்கு
காசுக்கு ஆசைப்பட்டு கடனெல்லாம் அடைக்க வேண்டி
கடலுக்கு அப்பாலும் கை கட்டி சேவை செய்தேன்
காலங்கள் உருண்டோட கைப்பட்ட காசு எல்லாம்
காரியங்கள் பல செய்ய கை கொடுத்து நின்றதுவே
ஐந்து ருபாய் காசு வாப்பாவின் சட்டைப் பையில்
மாயமாய் போனதற்க்கு அடிபட்டு மிதிபட்டேன்
தந்தையின் கண்ணில் கண்ட கண்ணீரின் வடுக்கள்
பிந்தி ஓர் நாளில் என்னை நிரபராதி என்றே சொன்னார்
சின்னஞ்ச்சிறு வயதில் நானும் கண்ணுற்ற எந்தன் தந்தை
இன்னமும் எங்கள் வீட்டில் வசிக்கின்றார் எங்களோடு
கதி இனி பிள்ளை என்றே கண்களை இடுக்கிப் பார்ப்பார்
அதிகாரம் விட்டுவிட்டார் அலட்டலும் மாறிப் போச்சு
எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்
வாகை மரத்தூரில் நின்று வாசத்தை முகர்ந்து பார்த்தேன்
வாஞ்சையாய் கைகள் கொண்டு வருடி முகம் தன்னில் தேய்த்தேன்
இன்னும் சில நாட்களிலே உனை விட்டுப் பிரிந்து போவேன்
என்னை நீ மறந்திடாமல் என் வரவுக்காய் காத்திரு ............
Re: வாகை மரமே வாகை மரமே....
கண்கள் குளமாகிறது சகோ எனது கடந்தகாலத்தோடு ஒத்ததாக உங்கள் வரிகள் அமைந்திருக்கிறது சிறுதவறுக்கும் என்னை அடித்துதைத்த என் தந்ததை முகம் என் கண்முன்னே காட்சிதருகிறது நான் சிறுவயதில் துவிச்சக்கர வாகனத்தில் சென்றபோது டெக்டர் வாகனத்தில் மோதுண்டதில் துவிச்சக்கர வாகனம் நொறுங்கியதற்காக நான் அடிபட்டிருக்கிறேன்
இவைகள் தவறென்று என்தந்தை பிற்காலத்தில் உணரந்து என்மீது பாசமழையாக பொழிவதுண்டு
எனக்கென்னமோ குழந்தைகளுக்கு ஈக்கில் கொண்டு அடித்தாலும் நான் பொறுப்பதில்லை
அத்தனை நிகள்வுகளை உங்கள் கவிதைவாயிலாக என் கண்முன்னே நிறுத்திவிட்டது மிக்க நன்றி
அருமையான கவிதை
சிறப்புக் கவிஞர் பெருந்தகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
சேனையோடு பகிர்ந்து நில்லுங்கள் உங்கள் அற்புத வரிகளை
இவைகள் தவறென்று என்தந்தை பிற்காலத்தில் உணரந்து என்மீது பாசமழையாக பொழிவதுண்டு
எனக்கென்னமோ குழந்தைகளுக்கு ஈக்கில் கொண்டு அடித்தாலும் நான் பொறுப்பதில்லை
அத்தனை நிகள்வுகளை உங்கள் கவிதைவாயிலாக என் கண்முன்னே நிறுத்திவிட்டது மிக்க நன்றி
அருமையான கவிதை
சிறப்புக் கவிஞர் பெருந்தகைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
சேனையோடு பகிர்ந்து நில்லுங்கள் உங்கள் அற்புத வரிகளை
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: வாகை மரமே வாகை மரமே....
எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்
இது தானே நிலை .
மனிதனின் விடை .
அருமை தோழரே அருமை .தொடருங்கள் .
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்
இது தானே நிலை .
மனிதனின் விடை .
அருமை தோழரே அருமை .தொடருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வாகை மரமே வாகை மரமே....
@. @. @.kalainilaa wrote:எனக்கொரு மகனும் உண்டு எல்லாமும் அவனுக்குண்டு
தனக்கொரு தேவையென்றால் தாயிடம் பேசுகின்றான்
தந்தையின் பணியைச் செய்ய நானில்லை அவனருகில்
கதி இனி அவன்தான் என்றே எதிர்பார்த்து வாழுகின்றேன்
இது தானே நிலை .
மனிதனின் விடை .
அருமை தோழரே அருமை .தொடருங்கள் .
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: வாகை மரமே வாகை மரமே....
அருமையான வரிகள் அத்தனையும் சிறப்பாய் வடித்த கவி சிந்திக்கவைக்கிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வாகை சூட வா - திரைப்பட விமர்சனம் ( அருமை )
» வீரமே வாகை சூடும்! – சினிமா
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» வாகை மரத்தழை வாயு போக்கும்- பொ.அ.தகவல்
» வீரமே வாகை சூடும்! – சினிமா
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு வாகை சூட வா தேர்வு
» வாகை மரத்தழை வாயு போக்கும்- பொ.அ.தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|