சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Khan11

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

+3
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Thu 30 Jun 2011 - 11:45

நான் மிகமிக ரசிக்கும் புலவர்களில் அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்.

இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம்.

அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.

இத்திரியில் மொத்தம் 5 சிலேடைப் பாடல்கள் உள்ளன)
பாம்பும் எள்ளும்
தேங்காயும் நாயும்
வைக்கோலும் யானையும்
குதிரையும் ஆடும்!
விநாயகரும் முருகனும் சிவபெருமானும்

இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:

பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!

பிரித்துப் படிக்க:

ஆடிக் குடத்தை அடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது!

விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.

எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.

இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்.

Last edited by யாதுமானவள் on Mon 18 Jul 2011 - 12:51; edited 5 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 30 Jun 2011 - 12:05

மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி

நல்ல பகிர்வு

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 1:30

சாதிக் wrote:மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி

நல்ல பகிர்வு

நன்றி சாதிக். காளமேகக் கவியின் அபாரமான கவிதைகளில் நான் ரசித்தவற்றை இங்கு பதிகிறேன்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by *சம்ஸ் Fri 1 Jul 2011 - 1:35

யாதுமானவள் wrote:

கண்டிப்பாக தொடருங்கள் அக்கா உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by kalainilaa Fri 1 Jul 2011 - 1:38

அரிய தகவலுக்கு நன்றி தோழியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 1:40

kalainilaa wrote:அரிய தகவலுக்கு நன்றி தோழியே .

அரிய தகவல் நாம் அறியவேண்டிய கவிதைகள்.

நன்றி !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by kalainilaa Fri 1 Jul 2011 - 1:47

யாதுமானவள் wrote:
kalainilaa wrote:அரிய தகவலுக்கு நன்றி தோழியே .

அரிய தகவல் நாம் அறியவேண்டிய கவிதைகள்.

நன்றி !

அறிய தந்தமைக்கு நன்றி .

இது போல தங்களில் தான்,அனைத்தும் அறிய முடியும்.

காளமேகப் புலவர் பற்றி அறிந்து இருந்தாலும் ,அவரின் கவிதையை
உங்களால் படிக்க முடிந்தது .நன்றி தோழியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by ஹாசிம் Fri 1 Jul 2011 - 1:48

உங்கள் தயவில் கற்றுக்கொள்ள முடிகிறது தொடருங்கள் கவியே
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 10:15

சாதிக் wrote:மிகவும் அருமையான தகவல் பெருங்கவி காளமேகப்புலவர் பற்றி அறிந்திட இந்தப்பகிர்வு போதாது என்று நினைக்கிறேன் மேலும் மேலும் தொடருங்கள் அக்கா கவித்துறையில் ஆர்முடனிருக்கும் எமது சேனை உறவுகளுக்காக ஒரு பாடமெடுங்களேன் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது தொடருங்கள் நன்றி

நல்ல பகிர்வு
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 11:18

ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. அடுத்த ஒரு அழகான சிலேடைப் பாடலைப் பார்ப்போம்...

தேங்காயும் நாயும்

ஓடு மிருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது - சேடியே
தீங்காய தில்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயு நாயுமிணைச் செப்பு.

(பிரித்துப் படிக்க :

ஓடும் இருக்கும் அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடும் குலை தனக்கு நாணாது - சேடியே
தீங்கு ஆயது இல்லாத் திருமலைராயன் வரையில்
தேங்காயும் நாயும் இணைச் செப்பு)

விளக்கம்: தோழி! (சேடி- தோழி) , தீமை இல்லாத திருமலைராயன் வாழும் மலைப்பகுதியிலே தேங்காயையும் நாயையும் ஒப்பாகக் கூறு... எப்படியெனில்..

தேங்காயிடம் ஓடும் இருக்கும் .(ஓடு ஒன்றை கொண்டதாய் இருக்கும்) அந்த ஓட்டின் உட்புறம் வெளுத்திருக்கும். வெண்மையான தேங்காய் அதன் உள்ளிருக்கும். அனைவரும் நாடும் (விரும்பும்) தேங்காயானது குலையாகத் தொங்குவதால் அது வளைவதில்லை(நாணாது). கோணுவதில்லை . காய்களைத் தாங்க முடியுமா என அஞ்சுவது இல்லை

அதே போல்...

நாய் ... சில நேரம் ஓடும். சில நேரம் ஒரே இடத்தில் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கும் (ஓடும் இருக்கும்)
அதன் உள்வாய் வெளுத்து இருக்கும். எப்போதும் குறைத்துக் கொண்டிருப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. புதியவர்கள் யாரும் வருவதை (நாடும்) உற்றுப் பார்க்கும் , பிறகு குலைக்கும் . குலைப்பதர்க்குச் சிறிதும் வெட்கப்படாது ...யாரைக் கண்டும் அஞ்சவும் அஞ்சாது.

அதனால் நாயும் தேங்காயும் ஒன்று !

இப்படி நாயும் தேங்காயும் ஒன்று என்று கவி காளமேகம் அழகாக எடுத்துரைக்கிறார் .
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 11:31

இரு முறை படித்த பிறகுதான் எனக்கு சரியாக விளங்கியது அக்கா
எவ்வளவு விளக்கம் உள்ளது
தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அக்கா

முதலில் என்னால் நம்ப முடிய வில்லை
விரிவாக படித்த பிறகு தெளிவடைந்தேன்
சம்மதிக்கிறேன்
நன்றி அக்கா
தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Jul 2011 - 11:40

நல்லதொரு ஒப்பீடு நாயும் தேங்காயும் இதுவரை ஒப்பிட்டு பார்த்திருக்கவில்லை அருமையான பாடல்

மிக முக்கியமாக விளக்கவுரை பாடலை திரும்பிப்படித்திட ஊக்கமாக அமைகிறது மிக்க நன்றி அக்கா
தொடருங்கள்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 14:41

நண்பன் wrote:இரு முறை படித்த பிறகுதான் எனக்கு சரியாக விளங்கியது அக்கா
எவ்வளவு விளக்கம் உள்ளது
தெளிவாக விளக்கியுள்ளீர்கள் அக்கா

முதலில் என்னால் நம்ப முடிய வில்லை
விரிவாக படித்த பிறகு தெளிவடைந்தேன்

சம்மதிக்கிறேன்

நன்றி அக்கா
தொடருங்கள்

தங்கள் ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் நன்றி நண்பன் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 14:43

சாதிக் wrote:நல்லதொரு ஒப்பீடு நாயும் தேங்காயும் இதுவரை ஒப்பிட்டு பார்த்திருக்கவில்லை அருமையான பாடல்

மிக முக்கியமாக விளக்கவுரை பாடலை திரும்பிப்படித்திட ஊக்கமாக அமைகிறது மிக்க நன்றி அக்கா
தொடருங்கள்

தங்கள் ஈடுபாட்டிற்கும் ஊக்கத்திற்கும் நன்றி சாதிக் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by *சம்ஸ் Fri 1 Jul 2011 - 14:44

எங்களின் கருத்தையும் ஏற்று தொடர்ந்து பகிந்தமைக்கு நன்றி அக்கா :”@:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Fri 1 Jul 2011 - 15:03

*சம்ஸ் wrote:எங்களின் கருத்தையும் ஏற்று தொடர்ந்து பகிந்தமைக்கு நன்றி அக்கா :”@:
சம்ஸ்... இது நீங்கள் அனைவரும் கொடுத்த வாய்ப்பு. நான் தான் சேனை குழுமத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

Last edited by யாதுமானவள் on Fri 1 Jul 2011 - 15:31; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by *சம்ஸ் Fri 1 Jul 2011 - 15:09

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:எங்களின் கருத்தையும் ஏற்று தொடர்ந்து பகிந்தமைக்கு நன்றி அக்கா :”@:
சம்ஸ்... இது நீங்கள் அனைவரும் கொடுத்த வாய்ப்பு. நான் தான் சேனை குழுமத்திற்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

தங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

சீனா தேசம் சென்றாயினும் சீர் கல்வியை கற்றுக்கொள்" (நபி மொழி).

நல்லதை கற்றுக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன்...அக்கா சேனை உறவுகளாய்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Sat 2 Jul 2011 - 1:01

அடுத்த ஒரு அழகான பாடல் வைக்கோலும் யானையும் ஒன்றெனக் கூறுகிறார்.

வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.

விளக்கம்

சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.

எப்படியெனில் -

வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்படும். பெரிய பெரிய வைக்கோற் போர்களாக வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.

அதே போல் -

யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீசி அடித்துக் கொல்லும்.. இப்படி பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்

இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.

Last edited by யாதுமானவள் on Sat 2 Jul 2011 - 8:53; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 2 Jul 2011 - 8:49

இதுவும் அழகான பாடல் சிறந்த ஒப்பீடு யாரும் கற்பனை பண்ண முடியாத இருவிடயம்
நல்ல விளக்கம் அக்கா பகிர்வுக்கு நன்றி

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 7:43

kalainilaa wrote:அரிய தகவலுக்கு நன்றி தோழியே .

நன்றி கலை நிலா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 7:44

சாதிக் wrote:இதுவும் அழகான பாடல் சிறந்த ஒப்பீடு யாரும் கற்பனை பண்ண முடியாத இருவிடயம்
நல்ல விளக்கம் அக்கா பகிர்வுக்கு நன்றி

நன்றி சாதிக்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 8:17

அனைவருக்கும் நன்றி !

இதோ அடுத்த ஒரு மிக மிக அழகான சிலேடைப் பாடல் ..

குதிரையும் ஆடும்!
கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால்
அம்புவுயி னன்னடைய தாதலால் - உம்பர்களும்
தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில்
ஆடுங் குதிரையுநே ராம்.

பிரித்துப் படிக்க:
கொம்பு இலையே தீனி தின்னும் கொண்டு அதன் மேல் வெட்டுதலால்
அம்புவியின் நன் நடை உடையது ஆதலால் - உம்பர்களும்
தேடும் நற் சோலைத் திருமலை ராயன் வரையில்
ஆடும் குதிரையும் நேராம்.

விளக்கம் : தேவர்களெல்லாம் தேடிவந்து மகிழ்ந்து இருக்கக்கூடிய அழகிய சோலைகள் நிறைந்த திருமலைராயனின் மலைச்சாரலில் ஆடும் குதிரையும் சமம் என்று கூறுகிறார்!

எப்படியெனில்.. .

குதிரைக்குக் கொம்பு இல்லை. அது தனக்கு வைக்கப்பட்ட உணவையே தின்னும். போர்க்காலத்தில் போர்வீரர்கள் அதன் மேல் ஏறிச் சென்று பகைவர்களை வெட்டிக் கொல்வார்கள். இந்த உலகிலேயே குதிரைகளின் நடை தான் அழகானதாக எடுப்பானதாக இருக்கும் என்கிறார் கவி காளமேகம்.

சிறப்புக் குறிப்பு : குதிரையின் நடையில் ஐந்து விதம் உண்டு.
மல்ல, மயூர, வானர, வியாக்ர, சார நடை போடுமென்று குதிரையின் நடையழகை வர்ணிப்பர்.

அடுத்து,

ஆடு, நுனிக்கொம்பில் உள்ள இலையையே (கொம்பு இலை) தின்னும். அவ்வாறு உணவை உட்கொண்டபின் அதே தீனியை மேலும் வெட்டி அசைபோடும். அதுமட்டுமல்ல, இந்த அழகிய உலகில்... ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று நடந்து செல்லும் இயல்பினை உடையது என்கிறார்.

இன்னும் வேறுவிதமான அர்த்தமும் கொள்ளலாம்:

கொண்டதன் மேல் வெட்டுதலால்: ஆட்டை இடையரிடத்திலிருந்து விலை கொடுத்து வாங்கியபின் அதை வெட்டுதலால் என்றும் பொருள் கொள்ளலாம்

அதே போல்: அம்புவியில் நல் நடையுடையது :
"நடை" என்பதற்கு செல்வம் என்றும் பொருள் உண்டு. அப்படி பொருள் கொள்ளும் போது....ஆட்டிற்கு எப்ப்போதும் நல்ல விலை உண்டு. (ஆடுகள் வைத்திருப்பவனைச் செல்வந்தனாகவே கருதுவர்)

இப்படி ஒப்புமைப் படுத்தி கவி காளமேகம் குதிரையும் ஆடும் ஒன்று என்று கூடுகிறார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by Atchaya Tue 5 Jul 2011 - 11:25

கவி காளமேகப் புலவர் வருணனை துதித்து பாடினால் மழையே வருமளவிற்கு சொல்லாற்றல் கொண்டவர். அவரின் பாடல்கள், விளக்க உரையுடன்.. நம் தமிழ் சேனையில்...உள்ளம் நெகிழவைக்கும் அற்புதத்தை தொடராக தாருங்கள் சகோதரி....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் Tue 5 Jul 2011 - 11:34

mravi wrote:கவி காளமேகப் புலவர் வருணனை துதித்து பாடினால் மழையே வருமளவிற்கு சொல்லாற்றல் கொண்டவர். அவரின் பாடல்கள், விளக்க உரையுடன்.. நம் தமிழ் சேனையில்...உள்ளம் நெகிழவைக்கும் அற்புதத்தை தொடராக தாருங்கள் சகோதரி....

நன்றி ரவி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 13:23

அனைத்தையும் பொறுமையாக படித்து வருகிறேன் அக்கா இந்த விடயங்களை நாம் படிக்கிறோம் இது பற்றி இணையத்தில் தேடுவோருக்கும் மிகவும் பயனுள்ளதாகவும் அமையும் மிக்க நன்றி அக்கா தொடருங்கள்
உங்கள் சேவையை
என்றும் நன்றியுடன்
நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) Empty Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum