சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Yesterday at 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) - Page 2 Khan11

காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் on Thu 30 Jun 2011 - 11:45

First topic message reminder :

நான் மிகமிக ரசிக்கும் புலவர்களில் அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்.

இம் என்றால் நூறு கவிதை இச்சென்றால் நூறுகவிதை யாக்கும் திறமைமிக்ககவி காளமேகம்.

அதேபோல் கவிகளுக்கே உரிய கர்வம் மிக அதிக அளவில் கொண்டவர். யாருக்கும் எப்போதும் பயப்படாமல் தனது கருத்துக்களை வெட்டென கூறுபவர்.

இத்திரியில் மொத்தம் 5 சிலேடைப் பாடல்கள் உள்ளன)
பாம்பும் எள்ளும்
தேங்காயும் நாயும்
வைக்கோலும் யானையும்
குதிரையும் ஆடும்!
விநாயகரும் முருகனும் சிவபெருமானும்


இவரது கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தல் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:

பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-

ஆடிக் குடத்தடையும் ஆடும்போ தேயிரையும்
மூடித் திறக்கின் முகங்காட்டும் - ஓடிமண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது!


பிரித்துப் படிக்க:

ஆடிக் குடத்தை அடையும் ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது!


விளக்க உரை: பாம்பானது படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.

எள், செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.

இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்.


Last edited by யாதுமானவள் on Mon 18 Jul 2011 - 12:51; edited 5 times in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down


Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by kalainilaa on Tue 5 Jul 2011 - 13:44

கவி காளமேகப்புலவர். பாடிய பாடல்களை ,அர்த்தத்தோடு
சொன்னவிதம் அழகிய பாங்கு .தோழியே . :”@: :”@: ##* ##* :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நண்பன் on Tue 5 Jul 2011 - 13:49

kalainilaa wrote:கவி காளமேகப்புலவர். பாடிய பாடல்களை ,அர்த்தத்தோடு
சொன்னவிதம் அழகிய பாங்கு .தோழியே . :”@: :”@: ##* ##* :”@:
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 20:27

அற்புதமான இன்னொரு சிலேடைப் பாடல்:

இது முப்பொருள் உள்ளடக்கிய சிலேடைப் பாடல்...

என்ன வியப்பாக உள்ளதா?... படித்துப் பாருங்களேன்...

கீழ்வரும் பாடலில் விநாயகரும் முருகனும் சிவபெருமானும் ஒன்றெனக் கூறுகிறார் கவி..

சென்னிமுக மாறுளதால் சேர்கரமுன் னாலுகையால்
இன்னிலத்தில் கோடொன் றிருக்கையால் - மன்னுகுளக்
கண்ணுறுத லானுங் கணபதியும் செவ்வேளும்
எண்ணரனு நேரா வரே .

பிரித்துப் படிக்க:

சென்னி முகம் ஆறு உளதால் சேர் கரம் முன் நாலு கையால்
இந்நிலத்தில் கோடு ஒன்று இருக்கையால் - மன்னு குளக்
கண் உறுதலானும் கணபதியும் செவ்வேளும்
எண் அரனும் நேர் ஆவரே !

(சென்னி - தலை , கோடு - கொம்பு,மலை; மன்னு - நிலை பெற்ற , குளம் - நெற்றி , உறுதல் - இருத்தல், பொருந்துதல், அரன்- சிவன் )

எப்படி இவர்கள் மூவரும் ஒன்றாவார்கள் என்றால்...

விநாயகரின் தலையும் முகமும் வழக்கத்திலிருந்து மாறுபட்டடவை. உடல் அமைப்பிற்கு முரணாக அமைந்தவை. (யானைத் தலை, மனித உடல்) முகத்தில் அமைந்த துதிக்கையானது முன்புறம் தொங்குகிறது. இந்த உலகத்தில் ஒற்றைக் கொம்புடையவராக உள்ளார். மண்ணெடுத்து அதில் பிள்ளையாரைப் பிடித்து வைத்தாலும் அதிலும் பிள்ளையாரின் பிரசன்னம் இருக்கும் என்கிறார்.

சரி, அடுத்து முருகன் எப்படி இருப்பாரென்று கூறுகிறார் என்றால் ....

இவர் தலையும் முகமும் ஆறு(6 ) உடையவர் . இவர் உடலில் 12 கைகள் சேர்ந்திருக்கிறது (சேர்கரம் முன் நாலு 3x4 =12) மலையில் வசிப்பவர்(திருச்செங்கோட்டில் வசிப்பவர்). சரவணப் பொய்கையில் அவதரித்தவர் (மன்னுகுளம்)

அடுத்து பரமசிவனையும் இவர்களோடு ஒப்பிடுகிறார்:

சிவனின் தலையில் கங்கை ஆறு உள்ளது , முன்புறம் நான்கு கைகளை உடையவர்(உடலுடன் சேர்ந்து நான்கு கைகள் முன்னால் உள்ளது) , இப்புவியின் சிறந்த கைலாச மலையில் வீற்றிருப்பவர் , நெற்றிக்கண் அமையப் பெற்றவர்.

இப்படி ஒரே பாடலில் மூன்று கடவுளர்களையும் அற்புதமாக ஒப்பிடுகிறார்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by kalainilaa on Wed 6 Jul 2011 - 20:39

அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .

அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 20:46

kalainilaa wrote:அரிய ,படல்களை அறியத் தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .

அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .

நன்றி கலைநிலா !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 6 Jul 2011 - 21:08

தமிழ் பண்பாட்டில் முப்பெரும் கடவுளையே ஒப்பிடுமளவு சிந்தித்திருக்கும் புலமை அபாரமானது அழகிய பாடல் விளக்கமும் தெளிவாக உள்ளது நன்றி அக்கா
தொடரட்டும் பணி


காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:10

kalainilaa wrote:அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .

அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .

இவைகளை நான் படிப்பேனா என்று கனவிலும் நினைத்தது இல்லை காரணம் இதை கேட்டு இருக்கிறேன் (காளமேகப் புலவர்)பாடல்கள் என்று அதை நான் இங்கு காண்பதும் படிப்பதும் அளவில்லா ஆனந்தம்

உங்களின் பணி தொடரட்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 21:11

சாதிக் wrote:தமிழ் பண்பாட்டில் முப்பெரும் கடவுளையே ஒப்பிடுமளவு சிந்தித்திருக்கும் புலமை அபாரமானது அழகிய பாடல் விளக்கமும் தெளிவாக உள்ளது நன்றி அக்கா
தொடரட்டும் பணி

நன்றி சாதிக்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 21:18

*சம்ஸ் wrote:
kalainilaa wrote:அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .

அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .

இவைகளை நான் படிப்பேனா என்று கனவிலும் நினைத்தது இல்லை காரணம் இதை கேட்டு இருக்கிறேன் (காளமேகப் புலவர்)பாடல்கள் என்று அதை நான் இங்கு காண்பதும் படிப்பதும் அளவில்லா ஆனந்தம்

உங்களின் பணி தொடரட்டும்.

நான் மட்டும் என்ன.. நானே படித்து நானே சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன் இத்தனை நாட்களும்... இப்படி இத்தனை பேர் ரசித்துப் படிக்க நானும் இங்கு எழுதுவேனென்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை (என் வலைத்தளத்தில் மட்டும் எழுதுவேன் என்றுதான் நினைத்திருந்தேன்) இந்த வாய்ப்பு குறித்து மிக்க மகிழ்கிறேன்.

அன்புடன்,

யாதுமானவள்


Last edited by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 21:23; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 6 Jul 2011 - 21:22

யாதுமானவள் wrote:
*சம்ஸ் wrote:
kalainilaa wrote:அரியா ,படல்களை அரிய தந்த புரட்சிக் கவிக்கு நன்றி .

அர்த்தமும்,தமிழில் அருமையும் ,காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்களை,உங்களுக்கே உண்டான தெளிவு நடையில் சொன்னது அருமை .தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு .

இவைகளை நான் படிப்பேனா என்று கனவிலும் நினைத்தது இல்லை காரணம் இதை கேட்டு இருக்கிறேன் (காளமேகப் புலவர்)பாடல்கள் என்று அதை நான் இங்கு காண்பதும் படிப்பதும் அளவில்லா ஆனந்தம்

உங்களின் பணி தொடரட்டும்.

நான் மட்டும் என்ன.. நானே படித்து நானே சந்தோஷப்பட்டுக்கொண்டிருந்தேன் இத்தனை நாட்களும்... இப்படி இத்தனை பேர் ரசித்துப் படிக்க நானும் இங்கு எழுதுவேனென்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை (என் வலைத்தளத்தில் மட்டும் எழுதுவேநேன்ருதான் நினைத்திருந்தேன்) இந்த வாய்ப்பு குறித்து மிக்க மகிழ்கிறேன்.

அன்புடன்,

யாதுமானவள்

உண்மையிலும் உண்மை நானும் கற்ற காலத்தில் கணக்கியல்தான் கற்றிருந்தேன்
தமிழ் இலக்கியம் கற்றது குறைவு ஆனால் ஆர்வமதிகமாக இருந்தது சேனையின் வாயிலாக மிகப்பெரும் பொக்கிசமாக உங்களை அடைந்து தமிழ் இலக்கியம் கற்றிட வாய்ப்பாக அமைந்ததை இட்டு பெருமையடைகிறேன் என்றும் குருவாக நினைத்திருக்கிறேன்
என்றும் இதே பாசறை தொடரட்டும் :];: :];: :];:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காளமேகப் புலவர் - சிலேடைப் பாடல்கள்(1 To 5)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum