சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Today at 3:14 pm

» கவிதை கஃபே
by rammalar Today at 2:55 pm

» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Yesterday at 3:56 pm

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Yesterday at 2:34 pm

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Yesterday at 2:34 pm

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 2:32 pm

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 2:31 pm

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 2:30 pm

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 2:30 pm

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Yesterday at 2:28 pm

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue Oct 27, 2020 10:15 am

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue Oct 27, 2020 10:07 am

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue Oct 27, 2020 10:00 am

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue Oct 27, 2020 9:56 am

» விரல்களின் கவிதை
by rammalar Mon Oct 26, 2020 9:22 pm

» கைலி எங்கே?
by rammalar Mon Oct 26, 2020 8:55 pm

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon Oct 26, 2020 8:47 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon Oct 26, 2020 8:22 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon Oct 26, 2020 3:46 pm

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon Oct 26, 2020 11:30 am

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon Oct 26, 2020 7:37 am

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon Oct 26, 2020 7:36 am

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon Oct 26, 2020 7:36 am

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon Oct 26, 2020 7:35 am

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun Oct 25, 2020 11:53 am

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat Oct 24, 2020 11:55 pm

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat Oct 24, 2020 11:32 pm

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat Oct 24, 2020 11:17 pm

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri Oct 23, 2020 3:47 pm

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed Oct 21, 2020 8:26 pm

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue Oct 20, 2020 6:30 pm

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat Oct 17, 2020 5:09 pm

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri Oct 16, 2020 9:38 pm

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri Oct 16, 2020 9:37 pm

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri Oct 16, 2020 9:34 pm

இராவண  காவியம் - தமிழகக் காண்டம்(1) Khan11

இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Go down

Sticky இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by யாதுமானவள் on Fri Jul 08, 2011 7:32 pm

தமிழகக் காண்டம்

இக்காண்டத்திற்குள் செல்லுமுன்,நம் பண்டைய தமிழகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளவேண்டும் அல்லவா?

மிக மிகப் பழங்காலத்தே தமிழ்நாடானது இன்றுள்ளது போல் குறுகிய எல்லைக்கு உட்பட்டு இருக்கவில்லை. வடக்கில் பனிமலை (இமயம் ) வரை பரவியிருந்தது. அதற்குப் பின் அயல்நாட்டார் குடிஎற்றத்தால் பின்னர் விந்தமலை வரை ஆனது. விந்த மலையே நம் நாட்டின் வடக்கு எல்லையாகக் கருதப் பட்டது.

அதே போல தென்கடல் அப்போது நிலமாகத்தான் இருந்தது. அது குமரி முனைக்குத் தெற்கில் ஆயிரம் கல்லுக்கும் அகன்று பரந்திருந்தது. இப்புறத்தில் குமரிமலை, பன்மலை முதலிய ஓங்கி உயர்ந்த மலைகள் இருந்தன. குமரி மலையில் குமரி ஆறும், பன்மலையில் பஃறுளி ஆறும் தோன்றி அங்கிருந்த நிலப்பரப்பை மிக்க செழிப்பாக வளம்பெறச் செய்திருந்தது.

கிழக்குப் புறமோ.. வங்கக் கடலும் சாவகம் முதலிய தீவுகளும் ஒரே நிலப்பரப்பாகத்தான் இருந்தது.

இங்குள்ள படத்தினைப் பாருங்கள் : இன்னும் தெளிவாக விளங்கும்.

இராவண  காவியம் - தமிழகக் காண்டம்(1) Image006ss

குமரி ஆற்றுக்கும் பஃறுளி ஆற்றுக்கும் இடையில் பெருவள நாடு இருந்தது
பஃறுளிக்கும் தென்கடலுக்கும் இடைப்பட்ட நாடு தென்பாலி நாடு.

இந்த இரு நாடுகளுக்கும் தலைநகரமாக இருந்தது தான் மதுரை (இப்போதுள்ள மதுரை அல்ல)
இப்படி, தெற்குப் புறம் குமரிக்கும் வடக்குப் புறம் விந்தத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் "திராவிட நாடு "

திராவிடத்தின் மேற்குப் புறம் சேரநாடு இருந்தது
திராவிடத்தின் கிழக்கில் சோழ நாடு இருந்தது.

இப்படியான தமிழகத்தில் , மலையும், காடும், நிலமும் , கடலுமாக நானிலமும் கூடிய வளம்பொருந்திய
தமிழகத்தில் நானில மக்களும் தங்களுக்குள் ஒரு தலைவனை தேர்வு செய்து அவனுடைய ஆட்சிக்கு உட்பட்டு வாழ்ந்து வந்தார்கள். இன்னாநிலத் தலைவர்களுக்கும் தலைவனாக முழுத் தமிழகத்துக்கும் ஒரு பேரரசனாக ஒரு மாபெரும் பேரரசனை மக்கள் கொண்டிருந்தனர். அப்பேரரசன், தமிழகத்தின் நடுவில், இப்போதுள்ள இலங்கையின் தென்னகரில் இருந்து தமிழகத்தை ஆண்டு வந்தான்.

அப்பண்டையோர் மரபில் வந்தவர்களே பாண்டியர்கள் :

தமிழகம் அளவில் மிகப் பெரியதாய் இருந்ததால்....இந்தப் பாண்டிய மரபில் வந்த மன்னன் ஒருவன் தன் மகனைத் தென்னாட்டிற்குத் தலைவனாகவும், இன்னும் இரண்டு தமிழ்ப் பெருமக்களை சேர சோழ நாட்டிற்கும் தலைவனாக்கி சிறப்பாக ஆண்டு வந்தான்.

இவர்களின் வழி வந்தவர்கள்தான் சேர சோழ பாண்டியர்கள் .

தி,.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்னர் தென்கடல் பொங்கி (சுனாமி ) தென்பாலியையும், கிழக்கு நாட்டின் பெரும்பகுதியையும் விழுங்கிற்று.

பிறகு, தி. மு. 2500 இல் மற்றொருமுறை கடல் பொங்கி (சுனாமி) பெருவளத்தின் பெரும்பகுதியையும் கிழக்கு நாட்டையும் விழுங்கியது.

பிறகு தி.மு. 700 இல் மீண்டும் பொங்கிய கடலானது திராவிடத்தின் ஒரு பகுதியை உண்டு ஏப்பம் விட்டது.

இரண்டாவது கடல் கோளிற்குப் பின்தான் (கடல் கோள் - சுனாமி ) இலங்கை உண்டானது. இலங்கை நாட்டின் நடுவில் முக்கூடல் மலைமீதுதான் இலங்கை நகர் இருந்தது.

இந்த இலங்கையிலிருந்து தமிழகத்தை ஆண்டுவந்த பேரரசர்களின் வழிவந்த ஒரு பேரரசன் வச்சிர வாயு. அப்பேரரசனுக்கும் அவன் மனைவி கேகசிக்கும் பிறந்தவர்கள் தான் இராவணன் , கும்பகன்னன்., பீடணன் மற்றும் காமவல்லி (இவளைத்தான் சூர்பனகை என்று இராமாயணத்தில் குறிப்பிட்டிருக்கும்,) இவர்களை வைத்தே இராமாயணம் என்ற கதை பின்னப்பட்டது.

சரி, இதுவரை இராவண காவியம் ஏன் தோன்றியது என்பதைக் கண்டோம். இனி, கிழக்கு, மேற்கு தெற்கு ஆகிய முத்திசைகளையும் அலைகள் காவல் காக்க வளமை மிக்க விந்த மலை வடக்கில் வேலியாக அமைய சிறப்புடன் பண்டைக் காலத்தில் நம் முன்னோர்க்கள் வாழ்ந்திருந்த தமிழகம் பற்றிக் காணப்போகிறோம்.

நனிமிகு பண்டுநந் நற்றமிழ்ச் செல்வி
பனிமலை காரும் பகை சிறிதின்றி
இனிதுயர் வெண்குடை நீழலிருந்து
தனியர சோச்சித் தமிழகம் காத்தாள்

மிக மிகப் பழங்காலத்தே நம் நற்றமிழ்ச் செல்வியானவள் வடக்கே பனி சூழ்ந்த இமயமலைவரை பகை என்பதே இல்லாமல் தனியாக அரசாட்சி செய்து தமிழகத்தைக் காத்து வந்தாள். ஆரியர்கள் என்னும் அயலார்களின் பெயர் அறியும் முன்பே விந்தமலைக்கு வடக்கு வரை மிகச்சிறப்பாக வாழ்ந்து வந்த நம் தமிழ் மக்களின் நாகரிகச் சிறப்பினை பல அகழ்வாராய்வு முடிவுகள் நம்மை மகிழ்ச்சியோடு பெருமிதம் கொள்ளத்தக்க வகையில் வெளிப்படுத்தியுள்ளதை கீழ்கண்டவாறு கூறுகிறார் புலவர் குழந்தை அவர்கள்:

விந்த வடக்கு விளங்கி இருந்த
நந்தமிழ் மக்கணன் நாகரி கத்தைச்
சிந்து வெளிப்புறந் தேறி யறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே...

(பிரித்துப் படிக்க :
விந்த வடக்கு விளங்கி இருந்த
நம் தமிழ் மக்கள் நன் நாகரிகத்தைச்
சிந்து வெளிப்புறம் தேறி அறிந்தார்
சிந்தை மகிழ்ந்து செருக்குற நாமே.

சிந்துவெளியில் மட்டுமா வாழ்ந்திருந்தனர் நம் மக்கள்? மேற்கே வளம் கொழித்த யவன நாடு உள்ளிட்ட பகுதிவரையல்லவா நம் மக்கள் வாழ்ந்திருந்தனர் என்பதையும் கூறி நமக்குப் புலப்படுத்துகிறார்.

அப்படி பெருமை வாய்ந்திருந்த தமிழகத்தில் முக்கியமான பகுதிகளைப் பார்ப்போம் .

பெருவள நாடு:

தன்கடன் குன்றித் தமிழகங் கொண்ட
தென்கடல் முன்பு செழுந்தமிழ் நாடா
நான்கட னாடு நனிவளந் தேங்கிப்
பொன்கட னாடப் பொலிந்தது காணும்.

தமிழகத்தைக் காக்கவேண்டிய கடமையிலிருந்து தவறி தன்னிடம் கொண்டு சென்ற தென்கடலானது, முன்பு, செழுந்தமிழகமாக இருந்தக் காலத்தில், கடலும் விரும்பும்படியாக அவ்வளவு செழுமை மிக்கதாகவும், பிற நாடுகள் செல்வத்தை இங்கிருந்து கொடுக்கும்படி கடன் கேட்குமளவிற்குச் செழிப்புற்றிருந்ததாம் பெருவள நாடு. அயல் நாட்டவர் பொறாமை கொள்ளும்படியும் இங்கிருந்து செல்வம் நமக்கு கிடைக்காதா எனப் பேராசை கொள்ளுமளவுக்கு பெரிய பொருள் சேர்த்துவைக்கும் இடம் போல் இருந்ததாம் பெருவள நாடு.

அந்த பெருவளனாட்டினச் சூரியன் கடந்து செல்ல நடுக்கம் கொள்ளுமளவிற்கு மிக உயர்ந்து மாணிக்கத்தூன் போல செல்வம் மிக்கதாகக் கொண்ட குமரி மலை இருந்ததாம். இந்தக் குமரி மலையைக் கடந்து செல்ல சூரியன் நடுக்கம் கொண்டது என்று என்ன ஒரு அற்புதமாகக் கவி குறிப்பிடுகிறார் பாருங்கள்...

ஆயநன் னாட்டி னணியுறுப் பாக
ஞாயிறு செல்ல நடுக்குற வோங்கிச்
சேயுயர் வானின் திகழ்மணித் தூணின்
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.

பிரித்துப் படிக்க

ஆய நன்னாட்டின் அணியுறுப் பாக
ஞாயிறு செல்ல நடுக்குற ஓங்கிச்
சேயுயர் வானின் திகழ் மணித் தூணின்
மீயுயர் செல்வக் குமரி விளங்கும்.

இப்படி உயர்ந்து சூரியக்கதிர்களே நாட்டிற்குள் நுழைய நடுங்குமளவிற்கு இருந்த மலையானது பகைவரிடமிருந்து காக்கும் பெரிய அரணாக இருந்ததாக நயம்படக் கூறுகிறார்.

அப்படிப்பட்ட குமரிமலையில் தோன்றிய ஆறுதான் குமரியாறு என்ற பெயருடன், அந்நிலத்திற்குத் தேவையான நீர்வளத்தைக் கொடுத்துச் செழுமையாக்கியதோடல்லாமல் அந்நாட்டிற்கும் அழகு சேர்க்கும்படி அமைந்திருந்ததாம் குமரி ஆறு.
இராவண  காவியம் - தமிழகக் காண்டம்(1) Image005no

நாட்டு புகழ்த்தமிழ் நாட்டி னதுதென்
கோட்டிலின் றுள்ள குமரி முனைக்கு
நோட்ட மிகுமிரு நூறுகற் றெர்கில்
ஊட்டுங் குமரியா றோடின காணும்!

அதாவது,
இப்போதிருக்கும் தமிழ்நாட்டின் குமரிமுனையிலிருந்து தெற்குப் பக்கமாகப் பார்த்தால் 200 கல் தொலைவில் குமரி ஆறு இருந்ததாம். இந்தத் தொன்மையான குமரிமளைக்குத் தெற்கே முகில் தோயும் பல மலைகள் ஒன்று சேர்ந்து பன்மலைத் தொடராக உருவாகி அழகுற அமைந்திருந்ததாம் அந்தப் பன்மலைத்தொடர்.

அடுத்ததாகக் கூறுகிறார் பக்ருளியின் தோற்றமும் அதன் உயர்வையும்... தனக்கே உரிய அருமையான கற்பனைத்திறத்தால்...

அத்தொடர்க் குன்றத் தருமக வாகி
முத்தமி ழாளர் முதுநெறி போலப்
பத்தி யறாதுசெல் பஃருளி யாறு
புத்துண வாகிப் புதுவிருந் தாற்றும்

ஆஹா.... என்னே கற்பனை... என்ன ஒரு அருமையான பாடல்...
அந்தப் பன்மலைத் தொடரின் குழந்தையாக பஃறுளி ஆறு பிறந்து, (அதிலிருந்து பிறந்ததால்) முத்தமிழ் அறிஞர்கள் எப்படி ஒழுக்கம் தவறாமல் அறநெறியோடு தன் கடமையைச் செய்கிறார்களோ அதுபோல் பஃறுளி ஆறும் தன்னுடைய நீர் வளத்தால் உணவுப் பொருட்களை விளைவித்து புதுவிருந்து படைக்கிறதாம் அந்நாட்டு மக்களுக்கு. :)

இப்படி இன்னும் பலப்பல குன்றுகளும் அதிலிருந்து தோன்றிய பல ஆறுகளும் குறைவில்லாது ஓடி பல வளங்களைப் பெறுமாறு செல்வச்செருக்கு மிக்க பெருமித உணர்வு கொள்ளுமாறு பெயருக்கேற்ற படி பெருவளங்களை அளித்து பெருவளனாட்டைப் பொலிவோடு விளங்கச்செய்தது .

இந்தப் பெருவளநாட்டில் மொத்தம் நாற்பத்து ஒன்பது நாடுகள் இருந்ததாகக் கூறுகிறார் புலவர்.

குணக்கரை குன்றங் குறும்பனை யோடு
மணமிகு தெங்க மதுரைமுன் பாலை
இணருபின் பாலையோ டேழ்தலை மேய
உணவமல் நாற்பதோ டொன்பது நாடே..

அவை , ஏழ் குணகரை நாடு, ஏழ் குன்றநாடு, ஏழ் குறும்பனை நாடு,
மணமிகும் - ஏழ் தெங்க நாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு,
அதனை ஒட்டிய - ஏழ் பின்பாலை நாடு

என ஏழு என்ற எண்ணினை முதலில் கொண்ட உணவு வளம் மிக்க நாற்பத்தேழு நாடுகளைக்கொண்டதாக இருந்ததாம் பெருவள நாடு.


இதுமட்டுமல்லாமல்

கொல்லம், குமரி முதலான வளம் மிக்க பல வள நாடுகளையும் கொண்டு இயல்பான பெருமையினையும் வளமும் பொருந்தியதாகத் திகழ்ந்ததாம் அப்பெருவள நாடு என்பதை ...

கொல்லம தோடு குமரி முதலா
மல்லன் மிகும்பன் மலை வள நாடும்
எல்லியல் பாகவே ழெழோடு குன்றா
நல்லியல் பாகவந் நாடு பொலிந்த.

என்று கூறுகிறார் புலவர் குழந்தை அவர்கள் .


அடுத்து தென்பாலி நாட்டைப் பற்றி --- தொடரும்


Last edited by யாதுமானவள் on Sat Jul 09, 2011 1:49 am; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by Atchaya on Fri Jul 08, 2011 9:56 pm

அற்புதம்....தொடருங்கள்.... ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by kalainilaa on Fri Jul 08, 2011 10:05 pm

பழைய வரலாறுகளும்,அதன் விளக்கமும் .புலவரின் வரிகளும்,
உங்கள் தெளிந்த நடையும்,எங்களுக்கு தமிழையும்,திவிராடத்தையும் ,சொல்லித்தருகிறது.
நன்றி தொடருங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by *சம்ஸ் on Fri Jul 08, 2011 10:17 pm

அரிதான விடையம் ஒன்றை அருமையாக தட்டச்சி செய்து அற்புதமாக பகிர்ந்த அக்காவிற்க்கு நன்றி .

இந்த விடையத்தை நானும் படிப்பேன் என்று நினைத்திருக்க வில்லை உங்களின் சேவையில் இன்று அதை படிக்கிறேன் சிரமம் பாராது எங்களுக்கு தமிழை தாறமாக தரும் உங்களின் சேவை கண்டு உள்ளம் பூர்த்து போகிறது .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by யாதுமானவள் on Sat Jul 09, 2011 1:38 am

mravi wrote:அற்புதம்....தொடருங்கள்.... ://:-:

நன்றி ரவி !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by யாதுமானவள் on Sat Jul 09, 2011 1:39 am

kalainilaa wrote:பழைய வரலாறுகளும்,அதன் விளக்கமும் .புலவரின் வரிகளும்,
உங்கள் தெளிந்த நடையும்,எங்களுக்கு தமிழையும்,திவிராடத்தையும் ,சொல்லித்தருகிறது.
நன்றி தொடருங்கள் .


நன்றி கலை நிலா !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by யாதுமானவள் on Sat Jul 09, 2011 1:39 am

*சம்ஸ் wrote:அரிதான விடையம் ஒன்றை அருமையாக தட்டச்சி செய்து அற்புதமாக பகிர்ந்த அக்காவிற்க்கு நன்றி .

இந்த விடையத்தை நானும் படிப்பேன் என்று நினைத்திருக்க வில்லை உங்களின் சேவையில் இன்று அதை படிக்கிறேன் சிரமம் பாராது எங்களுக்கு தமிழை தாறமாக தரும் உங்களின் சேவை கண்டு உள்ளம் பூர்த்து போகிறது .


நன்றி சம்ஸ் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by நேசமுடன் ஹாசிம் on Sat Jul 09, 2011 2:12 am

என்றும் அறிந்திருந்திடாத அற்புதமான சரித்திரங்களை உள்ளடக்கிய காவியமாக ஆரம்பித்துவிட்டது சுனாமி என்று இன்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பல்லாயிரம் பருடங்களாக இந்த கடல் கொந்தெளிப்பில் நிலங்களும் நாடுகளும் உள்வாங்கப்பட்டிருப்பதை காவியம் நன்றாக தெளிவு படுத்துகிறதே

தமிழக மண்ணின் பெருமையினையும் செல்வச்சிறப்பையும் அழகிய படல்களாக வடித்து அதற்கான விளக்கவுரையும் சிறப்பாக அமைந்திருப்பது இச்சரித்திரத்துக்கு இன்னும் மெருகேற்றுகிறது

சரித்திரம் தொடராதா என்ற ஏக்கத்தை தொடராக்கிவிட்டது ஈற்றில்

மனதாற பாராட்டக்கடமைப்பட்டிருக்கிறோம் அக்கா உங்களின் அபார முயற்சி தொடரட்டும் கற்பித்து கற்றுக்கொள்ளும் உங்களின் திறமை சிறப்பாக பாராட்டத்தக்கது
நன்றிகள்


இராவண  காவியம் - தமிழகக் காண்டம்(1) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by யாதுமானவள் on Sat Jul 09, 2011 2:21 pm

சாதிக் wrote:என்றும் அறிந்திருந்திடாத அற்புதமான சரித்திரங்களை உள்ளடக்கிய காவியமாக ஆரம்பித்துவிட்டது சுனாமி என்று இன்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பல்லாயிரம் பருடங்களாக இந்த கடல் கொந்தெளிப்பில் நிலங்களும் நாடுகளும் உள்வாங்கப்பட்டிருப்பதை காவியம் நன்றாக தெளிவு படுத்துகிறதே

தமிழக மண்ணின் பெருமையினையும் செல்வச்சிறப்பையும் அழகிய படல்களாக வடித்து அதற்கான விளக்கவுரையும் சிறப்பாக அமைந்திருப்பது இச்சரித்திரத்துக்கு இன்னும் மெருகேற்றுகிறது

சரித்திரம் தொடராதா என்ற ஏக்கத்தை தொடராக்கிவிட்டது ஈற்றில்

மனதாற பாராட்டக்கடமைப்பட்டிருக்கிறோம் அக்கா உங்களின் அபார முயற்சி தொடரட்டும் கற்பித்து கற்றுக்கொள்ளும் உங்களின் திறமை சிறப்பாக பாராட்டத்தக்கது
நன்றிகள்

மிக்க நன்றி சாதிக்!

தொடர்ந்து படியுங்கள்.... இதைவிட அபாரமான கருத்துக்கள் இராவண காவியத்தில் உண்டு! அழகான கவிநடை...சுவைமிக்க தமிழுடன் புலவர் குழந்தை அவர்கள் விளையாடி உள்ளார்....

பலர் பயன் பெற ... தொடர்வோம்... !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by நேசமுடன் ஹாசிம் on Sat Jul 09, 2011 2:26 pm

யாதுமானவள் wrote:
சாதிக் wrote:என்றும் அறிந்திருந்திடாத அற்புதமான சரித்திரங்களை உள்ளடக்கிய காவியமாக ஆரம்பித்துவிட்டது சுனாமி என்று இன்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் பல்லாயிரம் பருடங்களாக இந்த கடல் கொந்தெளிப்பில் நிலங்களும் நாடுகளும் உள்வாங்கப்பட்டிருப்பதை காவியம் நன்றாக தெளிவு படுத்துகிறதே

தமிழக மண்ணின் பெருமையினையும் செல்வச்சிறப்பையும் அழகிய படல்களாக வடித்து அதற்கான விளக்கவுரையும் சிறப்பாக அமைந்திருப்பது இச்சரித்திரத்துக்கு இன்னும் மெருகேற்றுகிறது

சரித்திரம் தொடராதா என்ற ஏக்கத்தை தொடராக்கிவிட்டது ஈற்றில்

மனதாற பாராட்டக்கடமைப்பட்டிருக்கிறோம் அக்கா உங்களின் அபார முயற்சி தொடரட்டும் கற்பித்து கற்றுக்கொள்ளும் உங்களின் திறமை சிறப்பாக பாராட்டத்தக்கது
நன்றிகள்

மிக்க நன்றி சாதிக்!

தொடர்ந்து படியுங்கள்.... இதைவிட அபாரமான கருத்துக்கள் இராவண காவியத்தில் உண்டு! அழகான கவிநடை...சுவைமிக்க தமிழுடன் புலவர் குழந்தை அவர்கள் விளையாடி உள்ளார்....

பலர் பயன் பெற ... தொடர்வோம்... !

கண்டிப்பாக தொடர்வேன் தொடர்வோம் எதிர்காலம் நன்மையடையட்டும் நன்றி அக்கா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by நண்பன் on Sat Jul 09, 2011 2:32 pm

வலை தள உலாவில் தாகத்தோடு தேடுவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் தொடருங்கள் அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by யாதுமானவள் on Sat Jul 09, 2011 2:39 pm

நண்பன் wrote:வலை தள உலாவில் தாகத்தோடு தேடுவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் தொடருங்கள் அக்கா

நன்றி நண்பன் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by மீனு on Thu Aug 25, 2011 5:18 am

நண்பன் wrote:வலை தள உலாவில் தாகத்தோடு தேடுவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் தொடருங்கள் அக்கா
மிகவும் சரியாக சொன்னீர்கள் நண்பன் தேடுவோருக்கு விருந்து படைக்கப்பட்டுருக்கிறது வாழ்த்துக்கள் அக்கா :];: :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by நேயன் on Thu Dec 27, 2012 9:27 am

தமிழின் அருமை பேசும் அற்புத பக்கம்

நன்றி

உங்கள் சேவை வளர ஆண்டவனை வேண்டுகிறேன்

நேயன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by மீனு on Thu Dec 27, 2012 2:46 pm

நேயன் wrote:தமிழின் அருமை பேசும் அற்புத பக்கம்

நன்றி

உங்கள் சேவை வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
@. @.
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by *சம்ஸ் on Thu Dec 27, 2012 11:58 pm

நேயன் wrote:தமிழின் அருமை பேசும் அற்புத பக்கம்

நன்றி

உங்கள் சேவை வளர ஆண்டவனை வேண்டுகிறேன்
வாருங்கள் என்றும் இணைந்திருங்கள் நேயன் உங்கள் வரவில் மகிழ்ச்சி )((


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by ராகவா on Tue Sep 03, 2013 3:38 am

இங்கு அழுத்துக.....
இராவண காவியம்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம்(1)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum