சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Wed 30 Sep 2020 - 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  Khan11

இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Go down

Sticky இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Tue 12 Jul 2011 - 23:04

தொடர்ந்து தென்பாலி நாட்டைப்பற்றி பார்ப்போம்,

தென்பாலி நாடு எங்கு எப்படி அமைந்திருந்தது என்று புலவர் குழந்தை அவர்கள் அவருக்கே உரிய அழகிய நடையில் பெருமையோடு கூறுகிறார் பாருங்கள்..

அப்பெரும் பக்றுளி யாற்றின் தெற்கில்
திப்பிய தென்கடல் தெற்கின தாகக்
கப்பிய பல்வளங் காமுற யாரும்
நப்புகழ் மேயதென் பாலி நளியும்

(திப்பிய : தூய , சிறந்த ; கப்பிய : கவிழ்ந்து மூடியபடி )
பக்றுளி ஆற்றின் தெற்குப் பகுதியில், தென்கடலுக்குத் தெற்குப்பக்கம் நிலவளங்கள் பலவகையாக
நிறைந்து அந்த நாட்டையே மூடி இருக்குமாறு இருப்பதை அந்நகரைக் காண்பவர்கள் அதன் அழகில் காமுறுமாறு சிறந்து விளங்கியதாம் தென்பாண்டி நாடு.

இடைநில மைந்து நூறேன்னறு கல்லிற்
படவொளி மேய பவளமு முத்தும்
கொகுட நாட்டுக் கொழும்பொரு ளோடு
கடல் வழங்கக்கண்டு கழித்ததந் நாடே

அந்தத் தென்பாலினாடானது ஐந்நூறு தொலை கல் பரப்பளவில் பெரிய கடலைக் கொண்டிருந்தது... கடலென்றால் சாதாரணக் கடலல்ல... ஒளிபொருந்திய பவழங்கள் முத்துக்கள் மற்றுமுள்ள கடற் பொருட்களோடு வளம் மிகக் கொண்டதாக இருந்ததாம் தென்பாலி நாடு.

இப்படியாக மூன்று பெரு நாடுகள் (பெருவலநாடு , குமரி நாடு , தென்பாலி நாடு )ஆகிய மூன்றும் தனித்தனியாகத் தோன்றுவதற்கு முன்பு ,,, இந்த பெரிய நிலப்பரப்பானது குமரிக் கண்டம் என்று சொள்ளத்தக்கவாறு பரந்து விரிந்திருந்ததாம்.

இப்போது ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டுகிறேன்...
இப்போதுதான் அறிவியல் ஆராய்ச்சியில் கூறுகிறார்கள் பழங்காலத்தில் இமையமலையானது கடலுக்குள் இருந்ததென்று... ஆனால் ... நம் முன்னோர்கள் அதை அப்போதே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

இதோ.. புலவர் குழந்தையின் தெளிவான பாடல் அதை நமக்கு உணர்த்துகிறது....

அன்று வான மளாவு பனிமலை
ஒன்று மாழியா நின்றது வாரியுட்
சென்று மூழ்கிடு தோறுமத் தென்னிலம்
இன்று போலாங் கெழுந்ததத் தொன்மலை.

பிரித்துப் படிக்க:
அன்று, வானம் அளாவும் பனிமலை
ஒன்று ஆழியாய் நின்றது வாரியுள்
சென்று மூழ்கிடும் தோறும் அத் தென்னிலம்
இன்றுபோல் ஆங்கு எழுந்தது தொன்மலை

அதாவது, வானளாவி இப்போது உயர்ந்து நிற்கும் இந்தப் பனிமலை (இமயமலை)யானது பழங்காலத்தில் கடலோடு ஒன்றி மூழ்கிக் கிடந்ததது.

அப்போதெல்லாம் தென்பகுதி நிலமானது அடிக்கடி கடல் சீற்றத்தினால் (சுனாமி) மூழ்கப்படும். அப்படி தென் பகுதி தாழ்ந்திருந்ததால் அடிக்கடி மூழ்கி வடபகுதியில் இருந்த மலை வெளியே தெரியத் தோன்றியது என்று கூறுகிறார்....

எப்படி ? ஆச்சரியமாக உள்ளதல்லவா படிக்கும்போது...?

இன்னும் படியுங்கள்... இன்னும் இன்னும் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போவோம் அப்படி ஒரு அமைவு நம் பண்டைய தமிழக வரலாற்றில் உள்ளது...

இலைப்ப ரப்பெனில் என்னவே யப்பெறு
நிலப்பரப்பு நிலநடுக் கோட்டினில்
அலைப்பரப்பி னமைந்தங் கிருந்தது
தொலைப் பரப்பெனச் சொற்றிடு மாறரோ

(பிரித்துப் படிக்க:
இலைப் பரப்பெனில் என்னவே அப்பெறு
நிலப்பரப்பு நிலநடுக் கோட்டினில்
அலைப்பரப்பின் அமைந்து அங்கு இருந்தது
தொலைப் பரப்பெனச் சொல்லிடு மாறு அரோ!

அதாவது, என்னைவிட பெரிய நிலப் பகுதி இல்லை என்று சொல்லும்படி இந்த தெற்கு நிலப்பரப்பாகிய பெருங்கண்டமானது கடல் பரப்பிற்கு நடுவில் உள்ள நிலநடுக்கோட்டைச் சார்ந்து இருந்ததாக இப்போதைய ஆய்வுகளும் தெரியப்படுத்துகின்றன.

இதுமட்டுமல்ல.... நாம் அனைவரும் அறிந்தது , கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்பது... அதை ஆதார பூர்வமாக நிரூபிக்கிறார் பாருங்கள் புலவர் குழந்தை அவர்கள்..

நன்றொ ளிப்பிழம் பாகிய ஞாயிறு
தன்ற னிற்சுழல் தன்னிற் சிதறிய
சென்ற தான திவலையே இன்னுயிர்
ஒன்று மிவ்வுல கென்றுமே யோதுவர்

பிரித்துப் படிக்க:
நன்று ஒளிப்பிழம்பாகிய ஞாயிறு
தன் தனில் சுழல் தன்னில் சிதறிய
சென்றதான திவலையே இன்னுயிர்
ஒன்றும் இவ்வுலகு என்றுமே ஓதுவர்!

அதிக வெப்பமுடைய ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் தன்னைத் தானே சுழல்வதால் அதனிலிருந்து சிதறிய சிறு துளியாகிய துண்டம் தான் உயிரினம் தோன்றி வாழும்படி நாளடைவில் உருவாகின உலகமாகும் என்று கூறுகிறார். (இதையும் இப்போதைய அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது)

அப்படிச் சிதறித் தெறித்த தீப்பிழம்பின் சிறு பொறியானது(பூமி) தன்னைத்தானே சுழன்று கொள்வதால் குளிர்ச்சியடைந்து இறுகி, உயிரினஙள் தோன்றுவதற்குரிய சூழ்னிலையை நாளடைவில் அடைந்து விடுகிறது.

ஆடு பம்பரத் தாடுனாப் பண்விரைந்
தாடு மிவுல கன்னவா றேயுயிர்
கூடு தன்மை குயின்ற நிலநடுக்
கோடி ருந்ததா லப்பெருங் கோநிலம்

பிரித்துப் படிக்க:

ஆடும் பம்பரத்து ஆடும் நாப்பன் விரைந்து
ஆடும் இவ்வுலகம் அன்னவாறே உயிர்
கூடும் தன்மைக்கு உயின்ற நிலநடுக்
கொடு இருந்ததால் அப் பெருங் கோ நிலம்.

பம்பரம் ஆடிக்கொண்டிருக்கும்போது எப்படி அதனுடைய நடுப்பகுதி வேகமாகச்சுழலுமோ அது போலவே தமிழகமானது நிலநடுக்கோட்டைச் சார்ந்து இருந்ததால் உயிர் உருவாகும் முதல் நிலமாகத் தமிழகமே இருந்தது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார்.

அதனால்... அந்த முதல் நிலமாகிய தமிழகம் உயிர் உருவாகும் தகுதியுடைய புகழ் பெற்றதனால் உலகில் முதல் மக்கள் தமிழர்களாகவும் முதல் நிலம் தமிழகமாகவும் விளங்கி
எல்லாவற்றிலுமே முதன்மையானவர்கள் தமிழர்கள் என்பதை அறிவியலார் உரைப்பதாகக் கூறுகிறார் பாருங்கள் :

ஆத லான்முத லவ்வயி னேயுயிர்
போத நின்ற புகழின தாதலான்
மாத மிழக மக்களே மா நிலம்
மீது போந்த முதலென விள்ளுவர்

பிரித்துப் படிக்க:
ஆதலான் முதல் அவ் வயினே உயிர்
போத நின்ற புகழ் இனம் ஆதலான்
மா தமிழக மக்களே மா நிலம்
மீது போந்த முதல் என விள்ளுவர். (வயினே: இடம்)

இப்படி உலகின் முதன்மை நாடு உயர்வான தமிழ் நாடே. உலகின் முதன் மக்கள் புகழ் வாய்ந்த தமிழர்களே/ உலகின் முதன் மொழி புகழ் வாய்ந்த தமிழ் மொழியே ஆகும். என்று கூறிவிட்டு.. இத்தனை தகுதிகள் இருன்தும் உலகம் இவற்றை இன்னும் சரியாக அறிந்துகொள்ளமுடியாத நிலையுள்ளதே என்றும் வருத்தப் படுகிறார்.

அதை பின்வரும் செய்யுளில் கூறுகிறார்:

உலக முன்னா டுயர்தமிழ் நாடதே
உலக முன்மக்க ளொண்டமிழ் மக்களே
உலக முன்மொழி யொண்டமி ழேயிதை
உலக மின்றறி யா நிலை யுள்ளதே

இப்படியான உலக முதற்குடிமக்கள் அதாவது பண்டைய தமிழர்கள் இந்தக்காலத்திலும் விரும்பி ஏற்றுக்கொள்ளும்படியான மிக உயர்ந்த நாகரீகத்தோடு நீங்காத வளத்தோடு வாழ்ந்து வந்தனர்.அப்படிப்பட்ட நாகரிகம் தான் பின்னர் சிந்துவெளியில் மலர்ச்சிபெற்று, பின் மேலை நாடுகளில் எல்லாம் சென்று, உலகம் முழுவதும் சிறப்புடன் மணம் வீசிப் பரவி நின்றது.

ஆங்க ரும்பிய அந்நாக ரிகமே
வீங்கு சிந்து வெளியில் மலர்ந்துபின்
ஊங்கு சென்றிவ் வுலக முழுவதும்
பாங்கு டன்மணம் வீசிப் பரந்ததே.

இந்தப் பழந்தமிழ்க் குடிமக்கள்தான் மிகத் தொண்மையான காலத்தே உலகமெங்கிலும் ஆங்காங்கே பரவி வாழ்ந்தனர். பிரது தட்ப வெப்ப நிலை மாறுபாட்டிற்கு ஏற்ப இவ்வுலகில் வெவ்வேறு மனித இனங்களும் மொழிகளும் தோன்றின.

இனி மனிதக் கருவாக உலகின் முதல் மாந்தர்களாய்த் தமிழக மக்கள் வாழ்ந்த அந்தத் தொன்மை நிலப்பகுதியின் நிலையானது கடற்கோளுக்கு முன்னர் எப்படி இருந்தது என்பதை இனி காணலாம் என தனது அழகிய செய்யுள் மூலமாகவே கூறுகிறார்

கருவி லேயுல கம்முதன் மக்களாய்
வருத மிழ்மக்கள் வாழ்ந்தவத் தொன்னிலம்
பொருவி லாத பொருகடல் பூந்துமுன்
பருகி லாத பகுதியைக் காணுவாம்.

இனி திராவிட நாட்டின் இயல்பு காண தொடர்வோம்....


Last edited by யாதுமானவள் on Wed 13 Jul 2011 - 16:24; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 13 Jul 2011 - 13:43

நண்பர்களின் பார்வைக்கு

நான் பின்னர் நன்றாக ஆழப்படித்து கருத்திடுவேன் இப்போதுள்ள நேரம் போதவில்லை :,;:


இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by kalainilaa on Wed 13 Jul 2011 - 20:53

இப்போது ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டுகிறேன்...
இப்போதுதான் அறிவியல் ஆராய்ச்சியில் கூறுகிறார்கள் பழங்காலத்தில் இமையமலையானது கடலுக்குள் இருந்ததென்று... ஆனால் ... நம் முன்னோர்கள் அதை அப்போதே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.


கேட்க்கும் போதே வியப்பாகவும்,அதே சமயம் ,அந்த காலத்தில்,
தமிழர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ,முன்னோடிகாளாய் இருந்தது கண்டு ,பெருமையாக உள்ளது .

இன்னும் அரிய செய்திகளை ,அறிய தாருங்கள் தோழியே .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by rinos on Wed 13 Jul 2011 - 22:13

சாதிக் wrote:நண்பர்களின் பார்வைக்கு

நான் பின்னர் நன்றாக ஆழப்படித்து கருத்திடுவேன் இப்போதுள்ள நேரம் போதவில்லை :,;:
மெதுவாக படித்து கருத்திடுங்கள் சாதிக்
தொடருங்கள் அக்கா சிறந்த பதிவு
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Wed 13 Jul 2011 - 23:43

rinos wrote:
சாதிக் wrote:நண்பர்களின் பார்வைக்கு

நான் பின்னர் நன்றாக ஆழப்படித்து கருத்திடுவேன் இப்போதுள்ள நேரம் போதவில்லை :,;:
மெதுவாக படித்து கருத்திடுங்கள் சாதிக்
தொடருங்கள் அக்கா சிறந்த பதிவு

nanri rinos
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Thu 14 Jul 2011 - 15:35

kalainilaa wrote:இப்போது ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்க வேண்டுகிறேன்...
இப்போதுதான் அறிவியல் ஆராய்ச்சியில் கூறுகிறார்கள் பழங்காலத்தில் இமையமலையானது கடலுக்குள் இருந்ததென்று... ஆனால் ... நம் முன்னோர்கள் அதை அப்போதே எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.


கேட்க்கும் போதே வியப்பாகவும்,அதே சமயம் ,அந்த காலத்தில்,
தமிழர்கள் அறிவியல் ஆராய்ச்சியில் ,முன்னோடிகாளாய் இருந்தது கண்டு ,பெருமையாக உள்ளது .

இன்னும் அரிய செய்திகளை ,அறிய தாருங்கள் தோழியே .

நன்றி கலை நிலா
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 14 Jul 2011 - 17:30

தமிழகம் முதன்மையான தோற்றம்பெற்ற நாடு தமிழ் முதன்மை மொழி என்பதை வலியுறுத்தும் பகுதியாகவும் அழகிய இயற்கை வளத்தினை கண்முன்னே கட்சிப்படுத்தும் பாடல்களாகவும் இப்பகுதியினை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது

தொடருங்கள் பகிருங்கள் தொடர்வதில் மகிழ்ச்சி :];:


இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Thu 14 Jul 2011 - 17:36

சாதிக் wrote:தமிழகம் முதன்மையான தோற்றம்பெற்ற நாடு தமிழ் முதன்மை மொழி என்பதை வலியுறுத்தும் பகுதியாகவும் அழகிய இயற்கை வளத்தினை கண்முன்னே கட்சிப்படுத்தும் பாடல்களாகவும் இப்பகுதியினை படிக்கும் போது மிகவும் அருமையாக இருந்தது

தொடருங்கள் பகிருங்கள் தொடர்வதில் மகிழ்ச்சி :];:

நன்றி சாதிக்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by முனாஸ் சுலைமான் on Thu 14 Jul 2011 - 17:50

அதிக வெப்பமுடைய ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் தன்னைத் தானே சுழல்வதால் அதனிலிருந்து சிதறிய சிறு துளியாகிய துண்டம் தான் உயிரினம் தோன்றி வாழும்படி நாளடைவில் உருவாகின உலகமாகும் என்று கூறுகிறார். (இதையும் இப்போதைய அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது)

இது எந்த அளவில் உண்மை என்பது தெரியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது பதிவுக்கு நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Thu 14 Jul 2011 - 19:01

முனாஸ் சுலைமான் wrote:அதிக வெப்பமுடைய ஒளிப்பிழம்பாக இருந்த சூரியன் தன்னைத் தானே சுழல்வதால் அதனிலிருந்து சிதறிய சிறு துளியாகிய துண்டம் தான் உயிரினம் தோன்றி வாழும்படி நாளடைவில் உருவாகின உலகமாகும் என்று கூறுகிறார். (இதையும் இப்போதைய அறிவியல் ஆராய்ச்சி நிரூபித்துள்ளது)

இது எந்த அளவில் உண்மை என்பது தெரியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது பதிவுக்கு நன்றி.

முனாஸ், மிக்க மகிழ்ச்சியாயுள்ளது தங்கள் கருத்தினைக் கண்டு.

முதலில் ஒன்று கூற விழைகிறேன்... கருத்து வாதம் இது என்பதை மட்டுமே மனதில் கொள்ளவேண்டும்.

நம் அத்தனை மதங்களிலும் உலகம் கடவுளால் படைக்கப்பட்டது என்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால் உலகம் படைக்கப்பட்டதல்ல உருவானது என்பதை அறிவியல் ஆராய்சிகள் தெளிவு படுத்துகின்றன..

உலகம் உருவானதைப் பற்றி பலவிதமான ஆராய்ச்சிகள் பலவிதமான முடிவுகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனையாக ....சூரியனின் சுழற்சியில் வெடித்துச் சிதறிய சிறு துண்டம் பூமியாக உருவானது எனும் பிக்பாங் தியரி பற்றி நாம் அனைவரும் அறிவோம்.

3 லட்சத்து 80 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை ஆராய்ந்து நிரூபித்து சூரியனிலிருந்து உடைந்து சிதறிச் சுற்றிச் சுழன்று குளிர்ந்து உருவாகியது உலக உருண்டை எனும் பெரு வெடிக் கொள்கை (BIG BANG தியரி) அமெரிக்க நாசா நிலையம் உறுதிப் படுத்தியுள்ளதல்லவா?

இதைத்தான் நம் தமிழ் அறிவியலறிஞர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளனர்.

எனக்குத் தெரிந்தவரை பதிலளித்துள்ளேன்.. இன்னும் தங்கள் கருத்து ஏதேனும் இருப்பின் தெரியப்படுத்துக!

தங்கள் கருத்துக்கு நன்றி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by jasmin on Wed 24 Aug 2011 - 12:19

யாதுவுக்கு இலக்கியத்தில் இவ்வளவு தேர்ச்சியா ,,,ஆச்சர்யம் ஆச்சரயம் வாழ்த்துக்கள் தோழி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by மீனு on Thu 25 Aug 2011 - 1:16

jasmin wrote:யாதுவுக்கு இலக்கியத்தில் இவ்வளவு தேர்ச்சியா ,,,ஆச்சர்யம் ஆச்சரயம் வாழ்த்துக்கள் தோழி
இதில் ஆச்சர்யம் இல்லை ஜாஸ்மின் அக்கா ஒரு கல்விக்கூடம் அக்காவின் மெமொரி டொப் :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Sun 4 Sep 2011 - 21:38

jasmin wrote:யாதுவுக்கு இலக்கியத்தில் இவ்வளவு தேர்ச்சியா ,,,ஆச்சர்யம் ஆச்சரயம் வாழ்த்துக்கள் தோழி

நன்றி ஜாஸ்மின் ... அதிக ஆர்வமும் கொஞ்சம் அறிவும்... நிறைந்த ஈடுபாடும் உள்ளவள்... முயன்றிருக்கிறேன்... முடியுமென்ற நம்பிக்கையில்.

தங்கள் வாழ்த்திற்கு நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by யாதுமானவள் on Sun 4 Sep 2011 - 21:39

மீனு wrote:
jasmin wrote:யாதுவுக்கு இலக்கியத்தில் இவ்வளவு தேர்ச்சியா ,,,ஆச்சர்யம் ஆச்சரயம் வாழ்த்துக்கள் தோழி
இதில் ஆச்சர்யம் இல்லை ஜாஸ்மின் அக்கா ஒரு கல்விக்கூடம் அக்காவின் மெமொரி டொப் இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  930799

இருந்தாலும் நீ கொஞ்சம் ஓவராவே புகழரே மீனுக்குட்டி (எங்கே மீனு? இன்னும் காணோம்?)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by எந்திரன் on Sun 4 Sep 2011 - 22:46

யாதுமானவள் wrote:
மீனு wrote:
jasmin wrote:யாதுவுக்கு இலக்கியத்தில் இவ்வளவு தேர்ச்சியா ,,,ஆச்சர்யம் ஆச்சரயம் வாழ்த்துக்கள் தோழி
இதில் ஆச்சர்யம் இல்லை ஜாஸ்மின் அக்கா ஒரு கல்விக்கூடம் அக்காவின் மெமொரி டொப் இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  930799

இருந்தாலும் நீ கொஞ்சம் ஓவராவே புகழரே மீனுக்குட்டி (எங்கே மீனு? இன்னும் காணோம்?)
இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  111433 இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  111433ஆமாம் மீனு எங்கே விடை பெற்ற மடல் படித்தேன் இனி வர மாட்டாங்களா மீனு :pale:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by *சம்ஸ் on Mon 5 Sep 2011 - 6:44

காலம் கடந்து படிக்கிறேன் அதற்க்கு முதல் மன்னிக்கவும் அக்கா.
உங்களின் இலக்கிய மழையில் நாங்கள் நலைய ஆசையாக இருக்கிறோம்.

அருமையான தமிழ் அற்புதமான கவிதை என்று அனைத்தும் வரவேற்க்கதற்க விடையங்கள் பகிர்விற்க்கு நன்றி அக்கா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 Sep 2011 - 6:55

அடுத்த பகுதி படித்திட ஆசை தொடருங்கள் அக்கா


இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இராவண காவியம் - தமிழகக் காண்டம் 2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum