சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 'அடியே' திரைப்பட விமர்சனம்!
by rammalar Today at 14:29

» புரட்டாசி மாதம் - கவிதை
by rammalar Today at 14:20

» மழை - கவிதை
by rammalar Today at 14:18

» வாய் உள்ள பிள்ளை பிழைச்சுக்கும்...
by rammalar Today at 14:13

» முதிய தம்பதிகளின் சகிப்புத் தன்மை! - கவிதை
by rammalar Today at 14:11

» மாற்றியவர் யாரோ- ஒரு பக்க கதை
by rammalar Today at 14:10

» கண்மூடித்தனம் - ஒரு பக்க கதை
by rammalar Today at 13:57

» மீண்டும் திரும்பாத பள்ளிப்பருவ காலம்! - கவிதை
by rammalar Today at 13:56

» படத்திற்கு கவிதை...
by rammalar Today at 13:53

» பள்ளிப் பருவம் - கவிதை
by rammalar Today at 13:52

» இருண்ட வாழ்வின் ஒளியாக வந்தவள்! - கவிதை
by rammalar Today at 13:51

» பேல்பூரி - (பல சரக்கு-இணையத்தில் ரசித்தவை)
by rammalar Today at 0:39

» கறுப்பாக இருந்தால் மட்டுமே அழகு - விடுகதைகள்
by rammalar Yesterday at 13:51

» திருமண ஆசை வந்துடுச்சி..!
by rammalar Yesterday at 9:01

» கொழுப்பு இல்லை தாயி, சுகர்தான் 350 இருக்கு!
by rammalar Yesterday at 8:55

» அரிசி தரும் பயன்கள்
by rammalar Yesterday at 8:34

» கொலு- டிப்ஸ்
by rammalar Yesterday at 8:32

» இணையத்தில் ரசித்த பல்சுவை தகவல்கள்
by rammalar Thu 28 Sep 2023 - 16:25

» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
by rammalar Thu 28 Sep 2023 - 15:24

» அகங்காரத் தீ - நீதி போதனை
by rammalar Thu 28 Sep 2023 - 15:11

» பல சரக்கு
by rammalar Tue 26 Sep 2023 - 20:42

» கல்யாணமா... எனக்கா..? - விழிகள் விரிக்கும் த்ரிஷா
by rammalar Tue 26 Sep 2023 - 20:28

» கவிமாடம் - கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 16:26

» வாழ்க்கையில் பக்குவம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல!
by rammalar Tue 26 Sep 2023 - 11:25

» கோள்களை வெல்வோம் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:19

» மரங்கள் - கவிதை
by rammalar Tue 26 Sep 2023 - 11:08

» நடிகை நிமிஷா விஜயன்
by rammalar Tue 26 Sep 2023 - 2:52

» விக்ரமாதித்யன் கவிதைகள்
by rammalar Tue 26 Sep 2023 - 2:37

» உங்க உடலில் இருக்கும் அளவில்லாத நச்சுக்களை வெளியே தள்ள - டிப்ஸ்
by rammalar Tue 26 Sep 2023 - 2:18

» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
by rammalar Tue 26 Sep 2023 - 2:08

» உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்
by rammalar Mon 25 Sep 2023 - 19:23

» வரும் ஆனா வராது தம்பி! -வலைவீச்சில் ரசித்தவை
by rammalar Mon 25 Sep 2023 - 19:00

» அனுபவிக்கத் தெரிந்தவனுக்கு... எங்கும் சொர்க்கம்தான்!
by rammalar Mon 25 Sep 2023 - 18:47

» போனுக்கு வெளியேயும் ஒரு உலகம் இருக்கு!!
by rammalar Mon 25 Sep 2023 - 16:23

» குழந்தைப் பருவம்
by rammalar Mon 25 Sep 2023 - 16:07

வயிறு குறைய..!  Khan11

வயிறு குறைய..!

Go down

வயிறு குறைய..!  Empty வயிறு குறைய..!

Post by ஹம்னா Thu 21 Jul 2011 - 12:48

என் வயது 34. சென்ற வருடம் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். ஒரு மாதம் படுக்கையில் ஓய்வு எடுத்து, பத்திய சாப்பாடாக இட்லி, ரசம் சாதம் மட்டுமே சாப்பிட்டேன். வயிறு முழுவதும் நன்றாகக் குறைந்து தொப்பை மறைந்துவிட்டது. ஆனால் இப்போது எது சாப்பிட்டாலும் வயிறு உப்பி விடுகிறது. சிலர் என்னை 3 மாதமா, 4 மாதமா எனக் கிண்டல் செய்கின்றனர். என்ன பிரச்னை இது?

சிறுகுடல் மற்றும் பெருங்குடல் பகுதியில் அசைந்து வேலை செய்து கொண்டிருக்கும் ஸமான-அபான வாயுக்களின் சீற்றத்தினால் நீங்கள் துன்பப்படுகிறீர்களா? அல்லது வயிற்றின் தசைப் பகுதிகள் பெருத்திருக்கின்றனவா? போன்ற சந்தேகங்கள் எழுகின்றன. எதுவாக இருந்தாலும் நீங்கள் கொள்ளு மாவை, புளித்த மோருடன் கலந்து சூடாக்கி, காலையில் குளிப்பதற்கு முன்பாக, சுமார் 15 - 20 நிமிடங்கள் கீழிருந்து மேலாகவும், வயிற்றின் வலப்புற அடிப்பகுதியிலிருந்து மேலாகவும், தொப்புளுக்கு மேலாகவும், இடப்புறம் மேலிருந்து கீழாகவும் சூடு பறக்கத் தேய்த்து ஊற வைத்து, வெதுவெதுப்பான தண்ணீரில் குளிக்கவும். தேய்த்துக் கொள்ளும்போது வயிறு காலியாக இருக்க வேண்டும். இதனால் ஏற்படும் இரு பெரும் நன்மைகள், வயிற்றின் தோல் பகுதியின் அடியிலுள்ள கொழுப்பும், தேவையற்ற சதையும் குறையும். இரண்டாவது, வாயுவின் சீற்றம் குறைந்து தசைகள் வலுப்பெறும்.

இட்லியும் ரசமும் சாப்பிடுவதால் உங்கள் தொப்பை குறைந்து விட்டது என்பது சற்று ஆச்சரியமான விஷயந்தான். ஏனென்றால் ஆயுர்வேதத்தில் அப்படி ஒரு குறிப்பு எங்கும் காணப்படவில்லை. உங்களுடைய உடற்கூறு வேண்டுமானால் அப்படி ஒரு விசேஷ அமைப்பைப் பெற்றிருக்கலாம். பொதுவாகவே காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை கொண்ட உணவு வகைகளால் மட்டுமே ஊளைச் சதையைக் கரைக்க இயலும் என்றும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகளால் உடல் தாட்டியாவதாகவும் ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது. இட்லி, ரசம் போன்றவை இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை கொண்டவை. அதனால்தான் குழப்பம்.


நீங்கள் ஒரு ஸ்பூன் தேனை அரை கிளாஸ் சாதாரண அதாவது சூடு இல்லாத தண்ணீரில் கரைத்து காலை இரவு உணவிற்குப் பிறகு சாப்பிட, வயிறு குறைந்து விடும். பகல் தூக்கம் தவிர்க்கவும்.

சில உடற்பயிற்சிகள் உங்களுக்கு உதவிடலாம். பச்சிமோத்தாஸனம் எனும் பயிற்சி இது. கீழே உட்கார்ந்து கொண்டு கால்களை நீட்டிக் கொள்ளவும். பிறகு ஆள்காட்டி விரலினால் கால்கட்டை விரல்களைப் பிடித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சிறிது சிறிதாகத் தலையை முழங்கால்களின் நடுவே வரும் வரையில் முயற்சி செய்ய வேண்டும். முழங்கால்களை மேலே தூக்கக் கூடாது. இந்நிலையில் 2-3 நிமிடங்கள் இருக்கலாம். இதை 5-6 தடவைகள் செய்யலாம். இதைச் செய்வதால் தொடையிலிருக்கும் தசைகள் வலிவடைகின்றன. இடுப்புக்கு மேலிருக்கும் தசைகளும் வலிவடைகின்றன. முதுகெலும்பு வளைக்கப்படுவதால் அது தளர்ந்து கெட்டியாகாமலிருக்கிறது.

வயிற்றிலிருக்கின்ற கல்லீரல், மண்ணீரல் முதலிய உறுப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு நன்றாக வேலை செய்கின்றன. வயிற்றின் மேல்புற- கீழ்ப்புறத்திலிருக்கின்ற கொழுப்பு கரைந்து வயிறு குறைந்துவிடுகிறது. இதில் நிமிரும் நிலையில் மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். குனிகின்ற நிலையில் மூச்சை வெளியே விட வேண்டும்.

யோகமுத்ரா- பத்மாசனத்திலிருந்து கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு, மெதுவாகத் தலையைக் கீழே கொண்டு வந்து நெற்றியைப் பூமியில் பதிய வைக்க வேண்டும். 1- 2 நிமிடங்கள் வைத்திருந்து நிமிரவும். 5-6 தடவைகள் செய்யலாம். கழுத்து - முதுகுப் பகுதியிலுள்ள தசை நார்கள் வலுவடையும். அடி வயிற்றுக் கொழுப்புக் கரையும். சிறுநீர்ப்பையும் அதைச் சுற்றியுள்ள கிரந்திகளும் வலிவடைகின்றன.

வாயுவையும் அடிவயிற்றுச் சதையையும் கரைக்க ஆயுர்வேத மருந்தாகிய வரணாதி கஷாயத்தைக் காலை மாலை வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து சுமார் 48 நாட்கள் சாப்பிடவும்.


வயிறு குறைய..!  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum