சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  Khan11

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'

2 posters

Go down

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  Empty இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'

Post by ஹம்னா Thu 21 Jul 2011 - 13:26

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  E_1308409685


இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், "டிரைகைடு' என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. "மைட்ரல்' என்ற ஈரிதழ் வால்வு வழியாக, இடது கீழறை வந்து, மகாதமனி வழியாக, உடல் உறுப்புகளுக்கு, சுத்த ரத்தமாக எடுத்து செல்லப்படுகிறது. இப்படி ஒவ்வொரு துடிப்பு மூலம், 70 சிசி ரத்தம், இதயத்திலிருந்து மகா தமனிக்கு சென்று, உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. ஒரு நிமிடத்திற்கு, 5 லிட்டர் ரத்தம் வெளியேற்றப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு, இதயம், 72 தடவை துடிக்கிறது.

இந்த இதயத் துடிப்பை உண்டாக்குவது, "பேஸ் மேக்கர்' என்ற இயற்கையான இதய துடிப்பு. தனி சிறப்பு வாய்ந்த நரம்பு திசுக்களாலான இதை, "எஸ்.ஏ.நோடு' என்கிறோம். இரண்டு மேலறையும், கீழறையும் கூடும் சந்திப்பில், "ஏ.வி.நோடு' என்ற நரம்பு திசு உள்ளது. இது, "எஸ்.ஏ.நோடு'டன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, "ஹிஸ்பண்டில்' என்ற திசு இருக்கிறது. இது, "ஏ.வி.நோடு'டன் இணைந்து இருக்கும். இடது கீழறையில், "லெப்ட் பண்டில்' வலது கீழறையில், "ரைட் பண்டில்' உள்ளது.

இவை அனைத்தும், சிறு நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. எஸ்.ஏ.நோடு என்ற இயற்கை பேஸ் மேக்கரிலிருந்து, மின்சார அலைகள், ஏ.வி.நோடுக்கு சென்று, "ஹிஸ்பண்டில்' மூலமாக, இடது, "ரைட் பண்டிலை' அடைந்து, இரண்டு அறைகள் ஒரே நேரத்தில் இயங்குகின்றன. இந்த பேஸ்மேக்கர் சரியாக இயங்க, போதுமான அளவு ரத்தம் தேவை. இது குறைந்தால் தான் பிரச்னை. இதயத்தின் துடிப்பு, நிமிடத்திற்கு 60க்கு கீழ் போகக் கூடாது. துடிப்பு குறைந்தால், அது, "பிராடி கார்டியா' எனப்படுகிறது. நிமிடத்திற்கு 60 துடிப்பு வரை இருந்தால், எந்த அறிகுறியும், சிக்கலும் வராது; நோயாளியும், ஒரு குறையும் கூற மாட்டார்கள். துடிப்பு, 40க்கு கீழ் வந்தால், அது, குறைந்த இதய துடிப்பு எனப்படும்.


மேலறை துடிப்பு அதிகமாக, கீழறை துடிப்பு குறைவாக, அதாவது, மேலறை துடிப்பு, நிமிடத்திற்கு 100க்கு மேலும், கீழறை துடிப்பு, நிமிடத்திற்கு 50க்கு கீழ் இருக்கும் போது, மேலறை துடிப்பு, கீழறைக்கு செல்லாமல் தடுக்கப்படுகிறது என அர்த்தம். இதைத் தான், "ஹார்ட் பிளாக்' என்கிறோம். ஹார்ட் பிளாக் ஏற்பட காரணங்கள் பல. பிறவிலேயே வரும் ஹார்ட் பிளாக், சாதாரணமாக வரும் ஹார்ட் பிளாக். இதயம் மாரடைப்பால் பழுதடைந்தாலோ, நெஞ்சு வலி வந்தாலோ, இதயம் தாக்கப்பட்டாலோ, ஹார்ட் பிளாக் வரும். இதை, "கரோனரி இதய நோய்' என்கிறோம்.

கரோனரி இதய நோய்க்கு காரணம், கரோனரி ரத்தக் குழாய் தமனி அடைப்பு, இதய தசைகள் நோயான மையோ கார்டைட்டிஸ், ஹார்ட் பெய்லியர், ரூமாட்டிக் காய்ச்சல், கார்டியோமயோபதி என்ற தசைகள் நோய், சார்காய்டோசிஸ், லெவிஸ், லெனெ கிரேடு ஆகிய நோய்கள். சில மருந்துகள் கூட, ஹார்ட் பிளாக்கை ஏற்படுத்தும். அவை, டிஜிட்டாலிஸ், பீட்டா பிளாக்கர்ஸ், கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ். சில இதய அறுவைச் சிகிச்சைகள், மரபு அணுக்கள் குறைபாடுகள், வேகஸ் என்ற நரம்பு கோளாறுகள் ஆகியவை, துடிப்பை குறைக்கும். இதய நோயாளிகள், இதய நிபுணர் ஆலோசனையில் இருக்க வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, இ.சி.ஜி., எடுத்து பார்க்க வேண்டும்.


இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  Empty Re: இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'

Post by ஹம்னா Thu 21 Jul 2011 - 13:26

ஹார்ட் பிளாக் அறிகுறிகள் (இரண் டாவது, மூன்றாவது டிகிரி பிளாக்குகள்): மயக்கம், தலை சுற்றல், தலைகனம், லேசாக தலை ஆடுவது, அசதி, பலமின்மை, மூச்சிறைப்பு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, வலிப்பு ஆகிய அறிகுறிகள், முதன்முறையாக வந்தாலோ, அடிக்கடி வந்தாலோ, நிபுணரை அணுக வேண்டும்.

கண்டுபிடிப்பு: இது, இதய நிபுணருடைய வேலை. மேற்கூறிய அறிகுறிகள் மற்றும் இதனால் சிக்கல் ஏற்பட்டால், உடனடியாக நிபுணரை சந்திக்க வேண்டும். இ.சி.ஜி., மிகவும் முக்கியம். இதில் 90 சதவீதம், ஹார்ட் பிளாக்கை கண்டுபிடித்து விடலாம். நாடித் துடிப்பு பார்க்கும் போது, துடிப்பு குறைவாக உள்ளது என அறிந்தவுடன், நிபுணரை பார்த்து ஆலோசனை பெற வேண்டும். ஹார்ட் பெய்லியர் உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும்.

பரிசோதனைகள்: இ.சி.ஜி., என்ற மின்னலை வரைப்படம், 24 மணி நேர இ.சி.ஜி., எடுக்கும் ஹால்ட்டர் பரிசோதனை, எலக்டேரோ பிசியாலஜி என்ற இ.பி., மற்றும் ஆஞ்சியோகிராம்.

ஹார்ட் பிளாக் சிக்கல்கள்: "ஸ்ட்ரோக் ஆடம்' என்ற மயக்கம் வந்தால், வலிப்பு உருவாக, மரணம் ஏற்படும். ரத்த கொதிப்பு குறைந்து, அதன் விளைவாக, ஹார்ட் பெய்லியர், மயக்கம், டார்சி டீ பான்ஸ் என்ற வேகமான துடிப்பு ஏற்பட்டு, இதயம் நின்று விடுதல்.


இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  Empty Re: இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'

Post by *சம்ஸ் Thu 21 Jul 2011 - 13:32

ஹார்ட் பிளாக் அறிகுறிகள் (இரண் டாவது, மூன்றாவது டிகிரி பிளாக்குகள்): மயக்கம், தலை சுற்றல், தலைகனம், லேசாக தலை ஆடுவது, அசதி, பலமின்மை, மூச்சிறைப்பு, மூச்சு வாங்குதல், நெஞ்சு வலி, வலிப்பு ஆகிய அறிகுறிகள், முதன்முறையாக வந்தாலோ, அடிக்கடி வந்தாலோ, நிபுணரை அணுக வேண்டும்.

சிறந்த பகிர்விற்க்கு நன்றி ஹம்னா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'  Empty Re: இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை "பேஸ் மேக்கர்!'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum