Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நீதி, நேர்மையான தேர்தலுக்கு அரச அதிபர்கள் உத்தரவாதம்
Page 1 of 1

வாக்குப் பெட்டிகள் நண்பகலே வந்து சேர்ந்தன
யாழ்: 3 இலட்சத்து 74,000 வாக்காளர்கள்
முல்லை: ஐயாயிரத்து 227 பேர் வாக்களிக்க தகுதி
கிளி.: 61 ஆயிரத்து 217 வாக்காளர்கள்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று நடைபெறவுள்ள 20 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நீதியாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்திசெய்யப் பட்டிருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.
நேற்று நண்பகலுக்கு முன்னர் அனைத்து வாக்களிப்பு நிலையங்க ளுக்கும் வாக்குப்பெட்டிகள் பாது காப்பாக அனுப்பிவைக்கப்பட்ட துடன், எந்தவிதமான அசம்பா விதங்களுமின்றி வாக்குப் பெட்டிகள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற டைந்திருப்பதை தெரிவத்தாட்சி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
30 ஆண்டு காலம் நிலவிவந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிடையில் கடும்போட்டி நிலவுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 3 நகரசபைகள் 13 பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இம்மாவட்டத்தில் 201 உறுப்பினர்க ளைத் தேர்வுசெய்வதற்கு 3 இலட்சத்து 74 ஆயிரத்து 340 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வல்வெட்டித்துறை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய நகரசபைகளுக்கும், காரைநகர், ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை, வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தென்மேற்கு, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் ஆகிய பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
யாழ் மாவட்ட செயலகத்தில் 51 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இவற்றில் 35 சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களும், 16 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 ஆயிரத்து 538 அதிகாரிகள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றையதினம் நடைபெறும் 65 உள்ளூராட்சி சபைகளில் யாழ் மாவட்டத்திலேயே அதிகமான உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதுடன், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தினகரனுக்குத் தெரிவித்தார்.
அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தில் கரச்சி, பச்சிலைபள்ளி மற்றும் பூநகரி ஆகிய பிரதேச சபைளுக்கு 38 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் 61 ஆயிரத்து 217 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இங்கு 95 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருப்பதுடன், மாவட்ட செயலகத்தில் 9 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2 தபால்மூல வாக்கெண்ணும் நிலையங்களும், 6 சாதாரண வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் 70 பஸ்களும், 80 தனியார் பஸ்களும் தேர்தல் போக்குவரத்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் பிரதேச சபைக்கு 9 உறுப்பினர்களைத் தேர்வுசெய்வதற்கு 5 ஆயிரத்து 227 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தபால்மூல வாக்கெண்ணும் நிலையமொன்றும், சாதாரண வாக்கெண்ணும் நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தலை நீதியாகவும், சுதந்திரமாகவும் குழப்பமின்றி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.பத்திநாதன், நேற்றுமுன்தினம் கட்சிகளின் முகவர்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரைச் சந்தித்து தேர்தலை அமைதியான முறையில் நடத்துவது பற்றிக் கலந்துரையாடியிரு ந்ததாகவும் கூறினார்.

Similar topics
» நேர்மையான மனைவி
» இத்தாலிய மரண தண்டனை சட்டத்தின்படி இந்தியா உத்தரவாதம் பெறவேண்டும்: இத்தாலி
» தேர்தலுக்கு முன்பு விலைவாசியை உயர்த்தியிருக்க வேண்டும்
» உள்ளாட்சித் தேர்தலுக்கு அசாம் பழங்குடியினர் எதிர்ப்பு
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum