சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ் Khan11

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்

3 posters

Go down

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ் Empty ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 11:36

அன்னா ஹசாரேயின் உண்ணாவிரதம் இந்தியாவில்
மட்டுமின்றி உலகம் முழுக்க வாழும் இந்தியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி
இருப்பது, காங்கிரஸ்காரர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.


ஊழலுக்கு
எதிரான போராட்டத்தை எப்படி சீர்குலைப்பது என்று திணறிய அவர்கள், கடந்த சில
தினங்களாக அன்னா ஹாசாரேயை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து வந்தனர்.
ஹசாரே மீது குற்றச்சாட்டுக்களைக் கூறினார்கள். ஆனால் ஒரு குற்றச்சாட்டை கூட
காங்கிரஸ்காரர்களால் நிரூபிக்க முடியவில்லை.மேலும் காங்கிரஸ்காரர்கள்
சொன்னதை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளவும் இல்லை.

இதனால்
சோர்வடைந்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தற்போது ஹசாரே விஷயத்தில்
தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளனர். இனி ஹசாரேயை தனிப்பட்ட முறையில்
கடுமையாக விமர்சிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர். அவரை குறை
கூறினால், அரசு மீது மக்களுக்கு மேலும் வெறுப்பு வந்து விடும் என்று
காங்கிரசார் பயப்படுகிறார்கள்.

உண்ணாவிரதம் இருப்பது
ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நேற்று வரை சொல்லிய சில தலைவர்கள் மவுனமாகி
விட்டனர். அன்னாஹசாரேயின் போராட்ட பாதை தவறானது என்று பிரதமர்
மன்மோகன்சிங் கூறினார். ஆனால் ஹசாரே காட்டும் பாதை தான் சரியான பாதை என்று
உணர்த்தும் அளவுக்கு நாடு முழுவதும் மக்கள் திரண்டெழுந்து கூட்டங்கள்,
ஊர்வலங்கள் நடத்தி வருகிறார்கள்.

இதை பயன்படுத்தி
எதிர்க்கட்சிகள் தங்களை பலப்படுத்தி ஓரணியில் திரண்டு விடக்கூடாதே என்ற
பயமும் காங்கிரஸ், தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி யோசனையின்
பேரில் தான் காங்கிரஸ் தலைவர்களிடம் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக
கூறப்படுகிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டத்தை
எதிர்கொள்ளும் விஷயத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கருத்துவேறுபாடு
ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை அடக்க வேண்டும் என்று சில தலைவர்கள்
கூறுகிறார்கள். ஆனால் போராட்டத்தை அப்படியே விட்டு விடலாம். அவர்கள்
தாமாகவே களைப்படைந்து வலுவிழுந்து விடுவார்கள் என்று மற்றொரு சாரார்
கூறுகிறார்கள்.

தற்போது லோக்பால் மசோதா பாராளுமன்ற
நிலைக்குழுவின் ஆய்வில் உள்ளது. அன்னா ஹசாரே குழுவினரை சமரசம் செய்வதற்காக
மேலும் ஒரு குழுவை மத்திய அரசு ஏற்படுத்தலாம் என்று காங்கிரஸ் மூத்த
தலைவர்கள் ஒருவர் யோசனை கூறியுள்ளார்.

அன்னா ஹசாரே
குழுவினர் நாடு முழுவதும் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டங்களில்
ஊழலுக்கு எதிரான கோஷமே முக்கிய அங்கம் வகிக்கிறது. ஊழலை இந்த நாட்டை விட்டே
விரட்ட வேண்டும் என்ற ஆவேசம் மக்களிடம் காணப்படுவதைத் தான் இதை
காட்டுகிறது.

பல நகரங்களில் தேசப்பக்தி பாடல்களை
காந்திய வாதிகள் பாடி இந்த உண்ணாவிரதத்துக்கு வலுசேர்த்துள்ளனர். ஆனால்
உண்ணாவிரதக் கூட்டங்களில் ஊழலுக்கு எதிராக கோஷமிடும் போது, கூடவே மத்திய
அரசை எதிர்த்தும் கோஷங்கள் எழுப்புகின்றன. இது காங்கிரஸ் அரசுக்கு கடும்
நெருக்கடியை கொடுத்துள்ளது.

போராட்டம் வலுக்கும்
பட்சத்தில் ஊழலுக்கு எதிரான கோஷங்கள் மேலும் வலுவடையும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதாவுக்கும்,
அன்னா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள மக்கள் லோக்பால் சட்ட முன்
வடிவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

குறிப்பாக
இரு லோக்பாலுக்கும் 10 முக்கிய வித்தியாசங்கள் உள்ளன. இவற்றில் சமரசம்
காண்பது என்பது மிக, மிக சவாலானது என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.

லோக்பால்
சட்டத்தை அமல்படுத்தும் பிரிவில் 8 உறுப்பினர்கள் இருந்தால் போதும் என்று
அரசு சொல்கிறது. ஆனால் 10 உறுப்பினர்கள் வேண்டும் என்று ஹசாரே குழுவினர்
சொல்கிறார்கள்.

லோக்பால் தலைவர், உறுப்பினர்கள்
அனைவரும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும் என்று ஹசாரே குழு
விரும்புகிறது. ஆனால் அரசியல் வாதிகள் இருக்க வேண்டும் என்று அரசு
சொல்கிறது.

இது போல ஊழலில் ஈடுபடுபவர்களிடம் நடத்தப்படும் விசாரணை, எடுக்கப்படும் நடவடிக்கைகளில் இரு தரப்பிலும் பெரிய வேறுபாடுகள் உள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ் Empty Re: ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்

Post by jasmin Sat 20 Aug 2011 - 11:42

இவனை நாயை அடிப்பதுபோல் முதலிலேயே அடித்து துறத்தி இருக்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ் Empty Re: ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்

Post by யாதுமானவள் Sat 20 Aug 2011 - 11:48

விமர்சிப்பதை நிறுத்க்தி வைத்து... சைலென்டா வேறு ஏதோ ப்ளான் பண்ணுவாங்க..
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ் Empty Re: ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்

Post by நண்பன் Sat 20 Aug 2011 - 13:19

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ் Empty Re: ஹசாரேயை விமர்சிப்பதை கைவிட்ட காங்கிரஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum