சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Khan11

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

5 posters

Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 19:50

டெல்லி: உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட மத்திய அரசுக்கு 3 நிபந்தனைகளை விதித்துள்ளார் அன்னா ஹசாரே.

கீழ்மட்ட அரசு அதிகாரிகளை லோக்பால் விசாரணையின் வரம்புக்குள் கொண்டு வர வேண்டும், ஊழல் செய்யும் அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்-அவர்களது சொத்துக்களை அரசு கையகப்படுத்த வேண்டும், அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா விசாரணை அமைப்பை உருவாக்க வேண்டும்-அதற்கு லோக்பாலுக்கு உரிய அதே அதிகாரத்தைத் தர வேண்டும்.

இந்த 3 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, நாளையே நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும். மத்திய அரசு இதைச் செய்தால், நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை நாளையே முடித்துக் கொள்ளத் தயார் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

அதே போல ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றித் தருவதாக பிரதமர் மன்மோகன் சிங் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி் அளிக்க வேண்டும் என்றும் ஹசாரே கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹசாரேவின் கோரிக்கைகளை ஏற்பது தொடர்பாகவும், உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று அன்னா தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந் நிலையில் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கோரிக்கை விடுத்தனர்.

சிறைகளை நிரப்புங்கள்-அன்னா அழைப்பு

முன்னதாக லோக்பால் மசோதா குறித்த நேற்றிரவு நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. மாறாக, அன்னா ஹஸாரே தனது போராட்டத்தை முதலில் திரும்பப் பெற வேண்டும் என்று மட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டமும், மத்திய அரசும் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு அன்னா ஹஸாரே அழைப்பு விடுத்தார்.

நேற்று முன்தினம் அரசுத் தரப்பில் கொடுக்கப்பட்டிருந்த சில உத்தரவாதங்கள், உறுதிமொழிகள் நேற்று அரசுத் தரப்பிலிருந்து வாபஸ் பெறப்பட்டு விட்டன. இதனால் அன்னா குழுவினர் கடும் அதிர்ச்சியும், பெரும் ஏமாற்றமும் அடைந்தனர். அரசின் இந்த திடீர் ஜகாவால், இரு தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட உறை நிலைக்குப் போய் விட்டது.

மேலும் அன்னாவின் உடல் நிலை குறித்து அரசு அக்கறையுடன் இல்லை என்றும் அவர்கள் ஆவேசத்துடன் கூறுகின்றனர். அதே நேரத்தில் அன்னா குழுவினரின் கோரிக்கையை ஏற்று அவசரம் அவசரமாக லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்றும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து தற்போது ராம்தேவை வலுக்கட்டாயமாக ராம்லீலா மைதானத்தை விட்டு வெளியேற்றது போல அன்னா ஹஸாரேவையும் வலுக்கட்டாயமாக அங்கிருந்து அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பது குறித்த வாய்ப்புகளை அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் ராம்லீலா மைதானத்தில் போலீஸாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எந்த காரணத்தைக் கொண்டும் அன்னாவின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது, வன்முறையில் இறங்கக் கூடாது, அமைதி காக்க வேண்டும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே நேற்று இரவு 11.30 மணியளவில் அன்னா ஹஸாரே பேசினார். அப்போது, அனைவரும் அமைதியுடன் இருக்க வேண்டும். யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. என்னை அரசு கைது செய்ய விரும்பினால் தாராளமாக செய்யட்டும். அதை நான் தடுக்க மாட்டேன். ஆனால் அதற்காக யாரும் வன்முறையில் ஈடுபடக் கூடாது. அது நமது இயக்கத்தின் நோக்கத்தை சீர்குலைத்து விடும். மாறாக அனைவரும் கைதாகி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துங்கள். அமைதியான முறையில் போராட்டம் நடத்துங்கள். அரசுத் தலைவர்கள், எம்.பிக்கள் வீடுகளை முற்றுகையிட்டு கைதாகி சிறைகளை நிரப்புங்கள் என்றார்.

முன்னதாக அன்னா குழுவினர் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, சல்மான் குர்ஷித் ஆகியோரை சந்தித்துப் பேசினர். பின்னர் வெளியே வந்த அன்னாவின் குழுவினர் கூறுகையில், எங்கு கிளம்பினோமோ அங்கேயே மறுபடியும் வந்து நிற்கிறோம். எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது அன்னாவின் நிலை மோசமாகி வருகிறது. அவருக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அரசுதான் பொறுப்பு என்றனர்.

ஆனால் அன்னாவின் உடல் நிலை குறித்து அரசு கவலைப்பட முடியாது என்றும், அதுகுறித்து அன்னா குழுவினர்தான் கவலைப்பட வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது எதில் பிரச்சினை?

கீழ்மட்ட அரசு அதிகாரிகள்

லோக்பால் வரம்புக்குள் கீழ்மட்ட அரசு அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்பது அன்னா ஹஸாரே குழுவின் முக்கிய கோரிக்கையாகும். கீழ் மட்ட அதிகாரிகள்தான் மக்களுடன் தினசரி நேரடித் தொடர்பில் இருப்பவர்கள். எனவே அவர்களை கட்டுப்படுத்த வேண்டியது, கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பது அன்னா குழுவின் வாதமாகும். ஆனால் கிட்டத்தட்ட 40 லட்சம் ஊழியர்களை கண்காணிப்பது என்பது மிகவும் கடினம் என்கிறது அரசு.

மக்கள் சேவை

புதிய ரேஷன் கார்டுகளை 3 நாட்களில் தர வேண்டும், பாஸ்போர்ட்களை 15 நாட்களில் தர வேண்டும் என்பது உள்ளிட்ட மக்களின் முக்கிய சேவைப் பிரிவுகளை லோக்பால் வரம்புக்குள் கொண்டு வர அன்னா குழு கூறுகிறது. ஆனால் அரசு அதற்கு மறுக்கிறது.

இந் நிலையில் தான் இன்று மத்திய அரசுக்கு 3 நிபந்தனைகளை விதித்துள்ளார் அன்னா. அதே போல செப்டம்பர் 3ம் தேதிக்குப் பிறகும் உண்ணாவிரதத்தைத் தொடர போலீசார் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ள அன்னா, ஜன் லோக்பால் விஷயத்தில் பாஜகவின் அமைதியையும் இன்று கண்டித்துப் பேசினார்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 21:53

3 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, நாளையே நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும். மத்திய அரசு இதைச் செய்தால், நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை நாளையே முடித்துக் கொள்ளத் தயார் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

இப்படி ரகசிய (உண்ணும்) உண்ணாவிரதம் இந்தியாவில் வாரத்துக்கு ஒன்று நடக்கும் இது அரசியல் இதல்லாம் கண்டுக்கப்படாது அக்கா.....
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by மீனு Thu 25 Aug 2011 - 21:56

முனாஸ் சுலைமான் wrote: 3 கோரிக்கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, நாளையே நாடாளுமன்றத்தில் ஜன் லோக்பால் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும். மத்திய அரசு இதைச் செய்தால், நான் எனது உண்ணாவிரதப் போராட்டத்தை நாளையே முடித்துக் கொள்ளத் தயார் என்று அன்னா ஹசாரே அறிவித்துள்ளார்.

இப்படி ரகசிய (உண்ணும்) உண்ணாவிரதம் இந்தியாவில் வாரத்துக்கு ஒன்று நடக்கும் இது அரசியல் இதல்லாம் கண்டுக்கப்படாது அக்கா.....
நீங்கள் சிம்ப்ளா சொல்லிட்டீங்கள் அண்ணா இது இப்போது பெரிதாகி விட்டது அன்னா பெரிய ஹீரோவாகி விட்டார் தெரியுமா?
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 22:00

மீனு wrote:

ஹீரோ வாகனும்னா ஏதேனும் இப்படி எல்லாம் செய்யனும் குறிப்பா இந்தியாவில் தமிழ் நாட்டில் சிலர் இலங்கைப்பிரச்சனையை வைத்தே பேர் வாங்கி இருக்காங்க அவங்க யார் என்று சொல்றன் பிறகு.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by மீனு Thu 25 Aug 2011 - 22:02

இந்தாளு ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியுள்ளார் அண்ணா பார்ப்தற்கு காந்தி தாத்தா மாதிரியே தெரிகிறார் போற போக்கப்பார்த்தால் நானும் போய் அங்கே உட்கார்திடுவன் போல் உள்ளதுஉண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 88646
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by முனாஸ் சுலைமான் Thu 25 Aug 2011 - 22:04

மீனு wrote:இந்தாளு ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியுள்ளார் அண்ணா பார்ப்தற்கு காந்தி தாத்தா மாதிரியே தெரிகிறார் போற போக்கப்பார்த்தால் நானும் போய் அங்கே உட்கார்திடுவன் போல் உள்ளதுஉண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 88646
மீனுவும் ஹீரோ ஆகனும்னா பக்கத்தில் போய் உற்காந்தால் சரி நான் போட்டொ எடுக்க வாறன் சொல்லிப்போங்க
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by மீனு Thu 25 Aug 2011 - 22:16

முனாஸ் சுலைமான் wrote:
மீனு wrote:இந்தாளு ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியுள்ளார் அண்ணா பார்ப்தற்கு காந்தி தாத்தா மாதிரியே தெரிகிறார் போற போக்கப்பார்த்தால் நானும் போய் அங்கே உட்கார்திடுவன் போல் உள்ளதுஉண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 88646
மீனுவும் ஹீரோ ஆகனும்னா பக்கத்தில் போய் உற்காந்தால் சரி நான் போட்டொ எடுக்க வாறன் சொல்லிப்போங்க
நான் வெறும் காமெடி பீசு அண்ணா
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 22:19

மீனு wrote:
முனாஸ் சுலைமான் wrote:
மீனு wrote:இந்தாளு ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியுள்ளார் அண்ணா பார்ப்தற்கு காந்தி தாத்தா மாதிரியே தெரிகிறார் போற போக்கப்பார்த்தால் நானும் போய் அங்கே உட்கார்திடுவன் போல் உள்ளதுஉண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 88646
மீனுவும் ஹீரோ ஆகனும்னா பக்கத்தில் போய் உற்காந்தால் சரி நான் போட்டொ எடுக்க வாறன் சொல்லிப்போங்க
நான் வெறும் காமெடி பீசு அண்ணா

என் கூட சேர்ந்து சாப்பிடவா ? {அதான் ஆண்டால சமைச்சு தராங்கலாமே )
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by மீனு Thu 25 Aug 2011 - 22:22

யாதுமானவள் wrote:

பெரிய அண்டாவாம் நானும் செய்தி கேட்டேன்உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 688909
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by யாதுமானவள் Thu 25 Aug 2011 - 22:36

மீனு wrote:
யாதுமானவள் wrote:
மீனு wrote:
முனாஸ் சுலைமான் wrote:
மீனு wrote:இந்தாளு ஒரு மார்க்கமாத்தான் கிளம்பியுள்ளார் அண்ணா பார்ப்தற்கு காந்தி தாத்தா மாதிரியே தெரிகிறார் போற போக்கப்பார்த்தால் நானும் போய் அங்கே உட்கார்திடுவன் போல் உள்ளதுஉண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 88646
மீனுவும் ஹீரோ ஆகனும்னா பக்கத்தில் போய் உற்காந்தால் சரி நான் போட்டொ எடுக்க வாறன் சொல்லிப்போங்க
நான் வெறும் காமெடி பீசு அண்ணா

என் கூட சேர்ந்து சாப்பிடவா ? {அதான் ஆண்டால சமைச்சு தராங்கலாமே )
பெரிய அண்டாவாம் நானும் செய்தி கேட்டேன்உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! 688909

ஒரு அண்டா எக்ஸ்ட்ரா செய்யச்சொல்வோம். சேனை சார்பா நாமெல்லாம் போய் அண்ணா ஹசாரே முன்னாடிவுக்கர்ந்து சாப்பிட்டு வருவோம்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by kalainilaa Thu 25 Aug 2011 - 23:53

உண்ணா விருதமிருக்கும் இவர்கள்தானே பொறுப்பு ?எப்படி அரசு பொறுப்பாக்கும் .இது பொறுப்பேற்ற பேச்சு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Aug 2011 - 0:01

என்னமோ நடக்குது ஆசைகள் நிறைவுற்றால் சரிதான்

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்! Empty Re: உண்ணாவிரதத்தைக் கைவிட அரசுக்கு அன்னா ஹசாரே 3 நிபந்தனைகள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum