சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Khan11

உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி!

Go down

Sticky உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி!

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 Sep 2011 - 8:06

உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Surajini-jpg-1090
புதிய துறைகளில், புதிய உயரங்களை எட்டி வருகிறது இன்றைய 'இளைய பாரதம்'. அதற்கு உதாரணம், திருச்சியைச் சேர்ந்த குயின் சுராஜினி.

உலக பருவநிலை மாற்றத்தை ஆராய்வதில் ஆர்வம் கொண்ட சுராஜினி, விரைவில் சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபடவிருக்கிறார். சமீபத்தில் திருச்சி பொறியாளர் கழகத்தில் பேசிய சுராஜினி நமக்கு அளித்த பேட்டி...

உங்களின் பள்ளி நாட்கள் பற்றிக் கூறுங்கள்...

எனது பள்ளிப் பருவம் முழுவதும் திருச்சியிலேயே கழிந்தது. இங்குள்ள சாவித்திரி வித்யா சாலா இந்து மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை படித்தேன். பள்ளிக்குப் பின், சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குள்ள சிவில் டிபார்ட்மெண்ட் 'இன்ஸ்டிட்யூட் ஆப் ரிமோட் சென்சிங்'தான் என்னை ஒரு நல்ல 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் என்ஜினீயராக' (புவி தகவலியல் பொறியாளர்) உருவாக்கியது.

எந்த வகையில் என்று கூற முடியுமா?

பருவநிலை மாற்றம் தொடர்பாக மேலும் நான் படிக்க, ஆய்வு செய்யத் தூண்டியது கிண்டி பொறியியல் கல்லூரிதான். அங்கு நடைபெற்ற பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகள் எனக்குள் அதற்கான ஆர்வத் தீயை மூட்டிக்கொண்டே இருந்தன. பல்கலைக்கழக வளாகத்திலும், டெல்லி, ஐதராபாத் போன்ற வெளியூர்களிலும் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்குகள், மாநாடுகளில் நான் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தேன். அதற்கு, எனது பேராசிரியர்கள் ஊக்குவித்து, உதவியாக இருந்தார்கள். கிண்டி பொறியியல் கல்லூரியில் உள்ள 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் சொசைட்டி'யில் நான் மகளிர் இணைச் செயலாளராக இருந்தேன். 'ஸ்டூடண்ட் குவாலிட்டி கிளப்', 'ஒய்ஆர்சி' போன்ற அமைப்புகளிலும் இணைந்து செயல்பட்டேன். இவற்றின் மூலமாகத் தலைமை, ஒருங்கிணைப்புப் பண்புகளையும், மென்திறன்களையும் வளர்த்துக்கொண்டேன்.

'ஜி.பி.எஸ்', 'ஜி.ஐ.எஸ்' பற்றி விளக்க முடியுமா?

'ஜி.பி.எஸ்.' என்பது 'குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்' ஆகும். பூமியில் ஒரு பொருள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்தத் தொழில்நுட்பம் பயன்படுகிறது. 'ஜி.ஐ.எஸ்.' என்பது 'ஜியாகிராபிக் இன்பர்மேஷன் சிஸ்டம்'. புவியியல் குவித்த தகவல்களை சேமித்து வைத்துக்கொள்ளும் அமைப்பாகும் இது. பருவநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் ஜி.பி.எஸ்.சும், ஜி.ஐ.எஸ்.சும் முக்கியமானவை.

பொறியியல் படிப்பை முடித்ததும் அடுத்து என்ன செய்ய நினைத்தீர்கள்?

கல்வி, அது சார்ந்த சிறப்பான செயல்பாடுகள் காரணமாக எனக்கு வளாகத் தேர்வு மூலமே டி.சி.எஸ். நிறுவனத்தில் 'ஜியோ இன்பர்மேட்டிக்ஸ் சாப்ட்வேர் என்ஜினீயர்' பணிவாய்ப்பு வந்தது. ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்திலும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலும் படிக்கும் வாய்ப்புகளும் வந்தன. நான் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தைத் தேர்வு செய்திருக்கிறேன்.

ஏன் அந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்வு செய்தீர்கள்?

ஆசியாவின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுள் ஒன்று அது. அம்மாதிரி ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை. பி.இ. முடித்ததும், முதுநிலைப் பட்டம் பெறாமலே அங்கு ஆய்வுப் படிப்பில் ஈடுபட வாய்ப்புக் கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. தவிர, எனக்கு மாதாந்திர கல்வி உதவித்தொகையாக ரூ. 70 ஆயிரமும், ரூ. 5 லட்சம் கல்விக் கட்டண விலக்கும் அளிக்க அப்பல்கலைக்கழகம் முன்வந்திருக்கிறது. இதை குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதுகிறேன். அடுத்து, பொதுவாக ஆய்வுப் பட்டப் படிப்பில் ஈடுபட விரும்பும் மாணவர்கள் தாங்கள்தான் ஒரு குறிப்பிட்ட பேராசிரியரை அணுகி 'கைடாக' இருக்கும்படி கேட்டுக்கொள்வார்கள். ஆனால் நான்யாங் பல்கலைக்கழக சிவில் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் சியுங் சாய் ஹுங் என்னைப் பற்றி அறிந்து, தனது ஆய்வில் இணைந்துகொள்ள முடியுமா என்று என்னைத் தொடர்புகொண்டு கேட்டார். அதையும் எனக்குக் கிடைத்த பெருமையாகக் கருதுகிறேன்.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் நீங்கள் எது குறித்து ஆய்வு செய்யவிருக்கிறீர்கள்?

மழையின் அளவு மற்றும் காலநிலை பற்றி ஆய்வு செய்ய இருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் மழையின் அளவு மாறுபடுகிறது. இதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, ஆய்வறிக்கையைச் சமர்ப்பிப்பேன்.

ஒரு பருவநிலை மாற்ற விஞ்ஞானியாக, இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிகவும் அபாயகரமான சுற்றுச் சூழல் பிரச்சினையாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்?

உலகின் நீர்வள ஆதாரம் சுருங்கியும், மாசுபட்டும் வருவதும், காடுகளின் பரப்பு குறைந்து வருவதும் இன்றைய உலகம் எதிர்கொள்ளும் மிக மோசமான சுற்றுச்சூழல் அபாயங்கள். நீரை வீணாக்கும், மாசுபடுத்தும் செயல்களை நாம் தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் இளைய சமுதாயத்தினருக்கு நிறையவே பொறுப்பு இருக்கிறது.

இந்திய மாணவர்கள் பலரும் இங்கு படிப்பை முடித்ததும் வெளிநாடு சென்று விடுகிறார்களே... அது பற்றி?

ஆய்வுகளை மேற்கொள்ளவும், கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் வெளிநாடுகளில் வசதி வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பலர் அங்கு செல்கிறார்கள். ஆடம்பர வாழ்க்கையை விரும்பி வெளிநாடு செல்வோரும் இருக்கிறார்கள். ஆனால் நான் சிங்கப்பூரில் ஆய்வுப் படிப்பை முடித்ததும் இந்தியா திரும்பி இங்குதான் பணியாற்றுவேன்.

சுற்றுச்சூழல் தவிர உங்கள் பிற கல்வி ஆர்வங்கள்?

ஆங்கில மொழிப்புலமையை வளர்த்துக்கொள்வதில் நான் மிகவும் ஆவலாயிருக்கிறேன். ஜி.ஆர்.ஈ., டோபல் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். ஜப்பானிய மொழியும் அறிவேன். ஓவியம் தீட்டும் திறமை இருக்கிறது.

உங்களின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?

பருவநிலை பற்றிப் படிப்பதுதான் இளவயது முதலே எனது ஆசையாக இருந்திருக்கிறது. இத்துறையில் ஆய்வுப் பட்டம் பெறுவதை முக்கியமானதாகக் கருதுகிறேன். சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, உலகைக் காப்பதில் எனது பங்கைச் செலுத்த விரும்புகிறேன்.

உங்களுக்குப் பின்புலமாக இருப்பவர்கள் யார்? யார்?

எனது பெற்றோர் (வக்கீல் ராஜேந்திரன்- பேராசிரியை சுகந்தி), திருச்சி என்.ஐ.டி. பேராசிரியர் டாக்டர் எஸ். ராகவன் ஆகியோர் எனக்கு ஊக்கம், உறுதுணையாக உள்ளனர்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் அளவுக்கு எது உங்களை உயர்த்தியதாக நினைக்கிறீர்கள்?

சுய ஒழுங்கும், திட்டமிட்ட செயல்பாடும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருப்பதாக நினைக்கிறேன். உண்மையான முயற்சி, அறிவை வளர்த்துக்கொள்வது, மாறாத ஆர்வம், தளராத தன்னம்பிக்கை ஆகியவை எவரையும் எந்த உயரத்துக்கும் இட்டுச் செல்லும். கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள். என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்கள் இறுதியாண்டு தேர்வு முடிந்தவுடன் ஜி.ஆர்.இ., டோபல் போன்ற தேர்வுகளை எழுதலாம் என்று நினைக்கக் கூடாது. மூன்றாம் ஆண்டிலேயே இத்தேர்வுகளை எழுதித் தயார் நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக அடுத்த இலக்குக்குச் செல்ல முடியும்.

பொதுவாக, எதையும் தள்ளிப்போடாமல் இன்றே, இப்போதே செய்யுங்கள். வெற்றி உங்களை வெகு நாளைக்குத் தள்ளிவைக்காது!

சாதிப்பவர் சொல்கிறார், சாதிக்க நினைப்போர் பின்பற்றலாம்!


உலகைக் காக்கத் துடிக்கும் சுராஜினி! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum