Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
வட்டியின் தீமைகள் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
வட்டியின் தீமைகள் !
இன்று நம் சமுதாய மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில், தீமைகளில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், ‘நாங்கள் செய்த எங்களுடைய முதலீட்டுக்குக் கிடைக்கும் லாபத்தைத் தான் சாப்பிடுகின்றோம்’ என்று கூறி வட்டியையும், வியாபாரத்தையும் ஒன்றாக ஆக்குகின்றனர்.
வட்டி வாங்குவது பெரும் பாவம் என்றால் இவ்வாறு அவர்கள் கூறியது அதைவிட மிகப்பெரும் பாவமாகும். வியாபாரம் வட்டியைப் போன்றதே என்று கூறுபவர்களை அல்லாஹ் கடுமையாக குர்ஆனிலே எச்சரிக்கின்றான்.
“யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்;
அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான் ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது;
ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்” (அல் குஆன் 2:275)
மறுமையில் சித்தம் கலங்கிய நிலையில் எழுப்ப வைக்கும் அளவிற்கு மிகக் கொடிய பாவமாகிய வட்டியை வாங்கி அதையே தம் வருமானமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள் கூறுவது என்னவென்றால், நாங்கள் செய்த முதலீடு, வட்டியின் மூலம் பெறுகிக் கொண்டே செல்கின்றது, அதனால் எங்களுக்கு தொடர்ந்து இலாபம் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்கின்றனர்.
அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.
“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.” (அல்குஆன் 2:276)
அல்லாஹ்வினால் பரக்கத் கிடைக்காத மலையளவு பொற்குவியலே இருந்தும் என்ன பயன்? வட்டியின் மூலம் பார்ப்பதற்கு (செல்வங்கள்) அதிகரிப்பது போலத் தோன்றினாலும் முடிவில் மிகக்குறைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் பரக்கத்தையுடைய செல்வம் சிறிதளவு இருந்தாலும் அதன் மூலம் அபிவிருத்தியும், நிறைய பலன்களும் கிடைக்கும் அல்லவா? மேலும்
வட்டி வாங்குவதை வருமானமாக, தொழிலாகக் கொண்டிருப்பவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் என்றும், அவர்களுடைய அமல்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான் என்றும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய அறிவிப்பின் மூலமாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
“வட்டியினால் திரட்டப்படும் பொருளையும், அவ்வாறு பொருள் திரட்டுபவனையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். எனவே அப்பொருளின் அபிவிருத்தியைத் தடுத்து அதனை அழித்து விடுகிறான். அவ்வாறே அத்தொழில் புரிவோரின் தர்மத்தையும், ஹஜ்ஜையும், இதர நன்மைகளையும் அவன் ஏற்பதில்லை” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நபி (ஸல்) அவர்கள் வட்டியில் சம்பத்தப்பட்ட அத்தனை பேர்களையும் கடுமையாக எச்சரித்திருக்கிறார்கள்: -
“வட்டி வாங்கிப் புசிப்பவன், அதனைப் புசிக்க வைப்பவன், அதற்காக (கணக்கு) எழுதுபவன், அதற்கு சாட்சியம் கூறும் இருவர் ஆகியேரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் சபித்துவிட்டு, அத்தனை பெரும் (குற்றத்தில்) சமமானவர்” அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்.
வட்டி வாங்குவதை ஏழு பெரும் பாவங்களில் ஒன்றாக கூறிய நபி (ஸல்) அவர்கள் வட்டியின் தீமைகளைப் பற்றி விளக்கிக் கூறும்போது,
“வட்டியின் மூலம் கிடைத்த ஒரு திர்ஹம் முப்பத்தி ஆறு விபச்சாரத்தை விட அல்லாஹ்விடம் மிகக் கொடுமையானது என்றும், ஒருவனுடைய மாமிசம், (அல்லாஹ்வால்) தடுக்கப்பட்ட ஒன்றின் (வட்டியின்) மூலம் வளர்ச்சியடைந்தால் அதற்கு நரகமே மிக ஏற்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம் : தப்ரானி
இரட்டிப்பாகும் என்று நினைத்து வட்டி வாங்காதீர்கள்:-
அல்லாஹ் கூறுகிறான்:-
“ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்” (அல்குஆன் 3:130)
மற்றவர்களின் முதலீடுகளுடன் சேர்த்து வட்டிக்கு விடாதீர்கள்:-
“(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்” (அல்குஆன் 30:39)
எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டுவிடுங்கள்:-
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்” அல்குஆன் 2:278)
இறைவனின் வட்டியைப் பற்றிய தெளிவான “யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள்” என்ற இறைவனின் வசனத்தை (2:275) பற்றி நாம் அனைவரும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளோம்.
அல்லாஹ் முஸ்லிமான நம்மனைவரின் ஈமானையும் உறதிபடுத்தி, இத்தகைய கொடுமையான பாவத்திலிருந்து மீளச்செய்து மீண்டும் வட்டியின் திமைகளில் சிக்காமல் காப்பாற்ற வேண்டும் என பிராத்திப்போம். வல்ல நாயனான அல்லாஹ் அருள் புரிய போதுமானவன்.
நன்றி : சுவனத்தென்றல்

Similar topics
» வட்டியின் தீமைகள் குறித்து
» வட்டியின் தீமை பற்றி இஸ்லாம்.
» மதுவினால் ஏற்படும் தீமைகள்
» எடுப்பாக காட்டிக்கொள்வதால் வரும் தீமைகள்
» புறம் பேசுவதானால் கிடைக்கும் தீமைகள்.
» வட்டியின் தீமை பற்றி இஸ்லாம்.
» மதுவினால் ஏற்படும் தீமைகள்
» எடுப்பாக காட்டிக்கொள்வதால் வரும் தீமைகள்
» புறம் பேசுவதானால் கிடைக்கும் தீமைகள்.
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|