சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காலங்கள் மாறினாலும் டி.எம்.எஸ்; 'குரல் நிலைத்திருக்கும் Khan11

காலங்கள் மாறினாலும் டி.எம்.எஸ்; 'குரல் நிலைத்திருக்கும்

Go down

காலங்கள் மாறினாலும் டி.எம்.எஸ்; 'குரல் நிலைத்திருக்கும் Empty காலங்கள் மாறினாலும் டி.எம்.எஸ்; 'குரல் நிலைத்திருக்கும்

Post by நண்பன் Tue 6 Sep 2011 - 11:20

காலங்கள் மாறினாலும்
ரி.எம்.எஸ்; 'குரல் நிலைத்திருக்கும்






உலகம் பூராகவும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னைக் கொண்டாடுகிறார்கள்.
எனக்கு பாடக் கற்றுக் கொடுத்தது யார்? எல்லாம் இறைவனே. அந்த தெய்வீக சக்தி என்னை
நிறையவே பாட வைத்தது என்று மனம் நெகிழ்ந்து பேசியவர் வேறு யாருமல்ல. தமிழ் உலகில்
புகழ்பெற்ற பாடகர் டி.எம். செளந்தரராஜன் அவர்கள்தான்.

காலங்கள் மாறினாலும் டி.எம்.எஸ்; 'குரல் நிலைத்திருக்கும் Y1இற்றை வரைக்கும் நமது
வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் பிரதான இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்ற
திரைப்பட இசைக் கலைஞர் ரி.எம். செளந்தரராஜன் தான் என்றால் மறுப்பவர் யாருமில்லை.

தவிரவும் நமது நாட்டு இசை மேடைகளிலும், நமது இசைக் கலைஞர்கள் பெரும்பாலும் தமது
இசைத் திறனைக் காட்ட ரி.எம். செளந்தரராஜனின் அந்தக் கம்பீரமும் இனிமையும் நிறைந்த
பாடல்களைத் தான் பாடுகிறார்கள் என்பதைச் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லையே!
கடந்த அறுபது வருடங்களாக இசைத் துறையோடு, குறிப்பாக தமிழ்த் திரைப்பட இசைத்துறையோடு
ஒன்றிப்போன இப்பெரும் இசைக் கலைஞர் இன்று என்னதான் செய்துகொண்டு இருக்கின்றார்.
எப்படி இருக்கின்றார்? கவியரசர் கண்ணதாசனின் பாடல்களை நிறையவே பாடியிருக்கிறார்.
அவரைப் பற்றிச் சொல்லும்போது மகாபுத்திசாலி அவர். நல்லாய்ப் படிச்சவர். மக்களுக்காக
நல்ல கருத்துக்களை எழுதினார். அவர் பாடல்களைப் பாடியதால் எனக்கு பெருமை
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பெருமை அவருக்கும் பெருமை என்றார். டி. எம். எஸ். ஸின் இசைத்
துறை வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் எது என்று குறிப்பிடும்போது அதற்கு அவர்,
எல்லோருக்கும் ஆண்டவன் நல்ல குரலைக் கொடுத்திருக்கிறார்.
அவரவர் செய்த
புண்ணியத்துக்கு தகுந்த மாதிரி அடியேனுக்கும் இறைவன் நல்ல குரல் தந்திருக்கிறார்.
ஆனால் எனது குரல் தனியானது மற்ற நடிகர்களுக்காக நான் பாடும்போது அவர்கள் குரல்
போன்று என் குரல் மாறிவிடுகிறது.

வேறு யாருக்கும் இம்மாதிரி கிடைக்கேல்லை. மற்ற
நடிகர்களுக்காக பால சுப்பிரமணியம் பாடும்போது அவர் குரல்தான் கேட்கிறது. ஜேசுதாஸ்
பாடும்போது அவர் குரல்தான் கேட்கிறது. உலகம் பூரா ஒத்துக்கொண்ட உண்மை இது. பகவான்
தந்த இந்த அருட்கொடை என்னால் என்றும் மறக்க முடியாதது. இதை நான் பெருமையோடு
நினைக்கின்றேன் என்று குறிப்பிடுகிறார்.
62 வருடங்களாகப் பாடுகிறார். அவர் மேலும் குறிப்பிடுகிறார். நரசிம்ம பாரதியும்
நானும் ஒன்றாகவே திரைப்படத் துறைக்கு வந்தோம். நாங்கள் இருவரும் ஒரே நாளில்
பிறந்தவர்கள். நான் 10 மணிக்குப் பிறந்தேன். அவர் 12 மணிக்குப் பிறந்தார். ஜுபிட்டர்
பிச்சர்ஸ் கிருஷ்ண விஜயத்தில் அவர் நடித்தார்.

எம்.ஜி.ஆருடன் சேர்ந்து கிருஷ்ணராக
நடித்தார். அவருக்கு யோகம் வந்தது. ஆனால், ஆயுள் நீடிக்கவில்லை. என்ன காரணம்?
இருவரும் ஒரே நாளில் பிறந்தாலும், வேறு நட்சத்திரங்கள், நான் ரோகிணி. அவர்
மிருகசீரிடம். நட்சத்திரம் மாறும்போது எல்லாம் மாறிப் போகிறது எனக் குறிப்பிட்டார்.

இன்றைய திரைப்பட இசை பற்றி அவரது கருத்து. அவரது புகழ்பெற்ற பாடல்கள் சிலவற்றைக்
கூட aமிக்ஸ் செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு ரேஸ்ட் வருகிறது.
வாழ்க்கையின் ரேஸ்ட்டும் அந்தந்த வயது கால கட்டத்திற்கேற்ப மாறுபடுகிறது. என்
காலத்தில் தமிழுக்கு முக்கியத்துவம் இருந்தது. அதில் உயரோட்டம் இருந்தது. காலம் மாறி
பிரளயமே வந்தாலும் அதன் பின்னும் ரி.எம்.எஸ். ஸின் பாட்டு இருக்கும்.

இந்தக் குரல்
யார்? இவ்வளவு இனிமையான இக்குரல் காலத்துக்கு அப்பாற்பட்டும் இருக்கும். நிச்சயமாக
என் குரல் கம்பீரமாக உலகம் பூரா கேட்டது. அவரது பாடலைப் பாடினால் நமக்கும் பேர்
வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். அவர் மாதிரிப் பாடவேண்டும் என்றால் மிக நல்லா
பாடவேணும்.
புதிய பாடலைப் பாடவேண்டும். வேறோர் டியூன் போட்டு அவரிலும் பார்க்க சிறப்பாக
பாடவேண்டும். அதுதான் முறை எனக் குறிப்பிட்டார். அவரது பாடல்களில் அவருக்கு மிகவும்
பிடித்த பாடல் எது குறிப்பிடும்போது காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு நான் பாடிய
பாடல்கள் என்னை நான் உணர்ந்து பாடிய பாடல்கள் அதில் எந்தப் பாடலும் சிறப்பான
பாடலாகத்தான் இருக்கும். அதுமாதிரி இன்னொருவர் பாட முடியாது.

‘புல்லாங்குழல்
கொடுத்த மூங்கில்களே’ ‘உள்ளம் உருகுதையா’ இன்னொருவர் பாட முடியுமா? ‘எங்கே நிம்மதி?’
பாடமுடியுமா? ‘தேவனே என்னைப் பாருங்கள்’ எவ்வளவு சிறப்பான பாடல். என்னைப் போல பாட
முயற்சி பண்ணுகிறார்கள். தொட்டுப் பார்க்கிறார்கள் இது மாதிரிப் பாட முடியுமா என்று
பார்க்கிறார்கள் முழுமையாக வரவில்லை. ரி.எம். எஸ். ஒரு ஆலமரம். அதன் கிளைகளில் சுகம்
இருக்கிறது.

அதில் உட்கார்ந்து பாட ஆரம்பிக்கிறார்கள். நான் ஒரு ஆலமரம் என
நினைத்துக் கொள்கிறார்கள். அது எப்படி முடியும்? 87 வயதாகும் டி. எம். எஸ். தமது
வயோதிபத்தின் துன்பங்களை பற்றி குறிப்பிடும்போது. எல்லாம் இருந்தும் சாப்பிட
முடியாமல் கஷ்டப்படுகிறார். நன்றாகத்தான் தயாரித்து சாப்பாடு கொடுக்கிறார்கள். ஆனால்
அவருக்குத்தான் டேஸ்ட் இல்லாமல் இருக்கிறது. வாழ்க்கையில் டேஸ்ட் இல்லை. கண்பார்வை
குறைவு தடுமாற்றம் வந்துவிட்டது. கண்ணில் ஆபரேஷன் நடத்திருக்கிறது. முன்னர் அவரே
சமையல் செய்து சாப்பிடுவாரார்.

இப்போதும் போய்ச் செய்து சாப்பிடவேண்டும் என்று
ஆசைதான். ஆனால் முடியவில்லை என்று குறிப்பிடுகிறார். எது நடந்தாலும் நடக்கட்டும்.
இந்த எண்பத்தாறு வயது வரை இறைவன் என்னைப் புகழோடு பாட வைத்தான். இனம் புரியாத பய
உணர்வு வருகிறது. இனி நான் கவலைப்பட மாட்டேன். இறப்பை வரவேற்கிறேன்.

எந்தக் கஷ்டமும்
தராமல், தூக்கத்தில் மரணம் சம்பவிக்க வேண்டுமென்று நான் இறைவனைப்
பிரார்த்தித்துக்கொண்டு இருக்கின்றேன் என்கிறார். ஆனால் ஜோசியர் நீங்கள் 115 வயது
வரை இருப்பீர்கள் என்கிறார். வேதங்கள் மாதிரி உங்கள் பாடல்கள் இருக்கின்றன. நீங்கள்
ரிஷி முனிவர் போல் இருக்கிaர்கள்.

உங்கள் பாடல்கள் ஒரு மந்திரம் மாதிரி என்கிறார்கள்.
ஆழ்நிலை தியானத்தில் இரண்டு வகுப்புகளில் சேர்ந்து படித்திருக்கிறார். மூன்றாவது
வகுப்பு அடுத்த மாதம் இருக்கிறதாம். அதிலும் பங்குபற்றி கற்றேன் என்றால் சக்தி வரும்.
வேதனைகள், தொந்தரவுகள் என்னை ஒன்றும் செய்யாது. அதனால் நலம் வரும் என்னை ஆத்மசித்தர்
ஆக்கும். தியானத்தில் நினைக்கும் நல்லவை பலிக்கும். தீய சிந்தனை ஒன்றும் வராது என்று
தெய்வ நம்பிக்கையோடு சொல்கிறார் டி.எம். செளந்தரராஜன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum