சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Today at 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Today at 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?  Khan11

அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?

Go down

Sticky அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?

Post by nazimudeen on Sun 18 Sep 2011 - 19:03

அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?  ?ui=2&ik=d24cea8c84&view=att&th=132726a55b13a02c&attid=0


ஆத்திச் சூடி, கொன்றை வேந்தன் போன்ற பழமையான தமிழ்ப் பாடல்களை நீங்கள்
படித்திருக்கிறீர்கள் இல்லையா? அப்பாடல்களை எழுதியவர் அவ்வையார். அந்தப்
பாடல்களை மட்டும் இல்லாமல் மேலும் பல பாடல்களையும் நூல்களையும் பாடியவர்
தான் அவ்வையார். அவ்வையார் ஒருவரே அல்லர். பல காலங்களில், தமிழ் நாட்டின்
பல பகுதிகளில் சுமார் எட்டு அவ்வைகள் வாழ்ந்ததாக அறிஞர்கள் சொல்கிறார்கள்.

அவ்வை என்றால் அம்மை என்று பொருள். அம்மை என்றதும் ஒரு வகையான நோயின்
பெயர் என்று கூட, இக்காலத்தில் உள்ள சிலர் நினைத்துக் கொள்வார்கள். அம்மை
என்றால் அம்மா, அன்னை என்று பொருள். ஆனால் அவ்வை என்ற சொல் கிழவி என்ற
பொருளில் தான் இங்கு வழங்குகிறது. அது தவறு.
திருமணம் செய்து கொள்ளாமல், பல நூல்களை கற்று, அறிவு முதிர்ச்சிப் பெற்று
சமூகப் பணியோ, சமயப்பணியோ ஆற்றிய பெண்களை அக்காலத்தில் அவ்வை என்று அழைத்து
இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் சில பகுதிகளில் அவ்வை என்ற தெய்வம் கூட
இருக்கிறது. இது ஒரு சிறு தெய்வம்.


ஒளவ்வை என்று எழுதுவதும் தவறு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

"ஒள'
என்ற எழுத்தில் தொடங்கி எழுதுவதற்காக ஒரு சொல் வேண்டும் என்ற
நோக்கத்திலேயே ஒளவ்வை என எழுதப்படுகிறது. "அவ்வை' என்று எழுதுவதே சரி. பல
காலகட்டங்களில் இப்படி வாழ்ந்த அவ்வையார்களில் நான்கு அவ்வையார்களைப் பற்றி
ஓரளவிற்கு வரலாறுகள் இருக்கின்றன. ஆனால் அவை கூட சிறிய அளவில்தான்
இருக்கின்றன. அவர்கள் பின் வருமாறு :

1. சங்க கால அவ்வை
2. அங்கவை - சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை

1.
சங்ககால அவ்வை 59 பாடல்களைப் பாடி இருக்கிறார். இக்காலம் கி.மு.300 முதல்
கி.பி.250 வரையில் உள்ளது. சேரன் மாரி வெண்கோ, பாண்டியன் உக்கிரப்
பெருவழுதி, சோழன் பெரு நற்கிள்ளி ஆகிய மூவேந்தர்கள் பற்றியும் அதியமான்,
எழினி, தொண்டைமான், பாரி ஆகிய குறுநில மன்னர்கள் பற்றியும் இவர் பாடலில்
குறிப்புகள் உள்ளன. அதியமானிடம் நெல்லிக்கனி பெற்று உண்டது இவர்தான்.
"அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்'
என்று
திருக்குறளை சிறப்பித்து பாடியது இவர்தான். இவர் நெஞ்சுரம் கொண்டவர்,
மன்னர்களிடமும், மக்களிடமும் பெருமதிப்பும், அறிமுகமும் கொண்டவர் பெண்ணிய
சிந்தனை உடையவர் என்று கூறலாம்.

2. அங்கவை - சங்கவை கால அவ்வை வள்ளல் பாரி என்ற குறுநில மன்னன் போரிலே
இறந்த பிறகு அவனுடைய மகள்களான அங்கவை சங்கவை ஆகிய இருவருக்கும் இந்த அவ்வை
பாதுகாப்பு அளித்துள்ளார். அந்த இரு பெண்களும் தன் தந்தையின் நாட்டைப்
பற்றி ‘அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவின்' என்று பாடி இருக்கிறார்கள்.
இவர்களின் பெயர்கள் தான் 'சிவாஜி' எனும் ரஜினிகாந்த் நடித்த திரைப்படத்தில்
நகைச்சுவையாக இழிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்பெண்கள் அசிங்கமானவர்கள்
என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிறம் அசிங்கமானதும் இல்லை.

3.
சோழர் கால அவ்வை : இவரின் காலம் 12ஆம் நூற்றாண்டு ஆகும். கொன்றை வேந்தன்,
ஆத்திச்சூடி, மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களை எழுதியவர் இவர்தான். இந்த
அவ்வைகளோடு புராண கருத்துகளும், கதைகளும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
முருகனுக்கு அறிவுரை கூறியவர். அற்புதங்கள் செய்தவர் என்றெல்லாம் இவரைப்
பற்றி பல கற்பனைக் கதைகள் உள்ளன. இக்கால அவ்வை எழுதிய ஒரு பாடல் உழவுத்
தொழிலைப் போற்றுகிறது.

வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்

குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்

இந்தச் செய்யுள் தோன்றக் காரணமாக அமைந்த ஒரு சம்பவம் வருமாறு:
சோழ நாட்டு மன்னரின் அரச சபையிலே, புலவர்கள் எல்லோரும் சோழ மன்னரைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவ்வையாரின் முறை வந்தது அவர் "வரப்புயர" என்று
மட்டும் கூறி விட்டு அமர்ந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அதே
நேரம் தங்களது அறியாமையை மற்றவரின் முன் காட்டிக் கொள்ளவும் தயக்கம். ஆகவே
எல்லோரும் அமைதியாக சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். மன்னன் கேட்டார் "
அவ்வையே! அனைவரும் என்னையே புகழ்ந்து பாடினார்கள் தாங்கள் மட்டும் வரப்புயர
என்று சம்பந்தமில்லாமல் வாழ்த்தினீர்கள். இதன் அர்த்தம் என்ன என்று கூற
வேண்டும்.
அதற்குத் தான் அவ்வை மேற்கண்ட செய்யுளைப் பாடினார்.
வரப்பு எவ்வளவு
உயரமாகக் கட்டுகிறார்களோ, அவ்வளவு உயரத்திற்கேற்றவாறு நெற்கதிர்கள்
உயர்ந்து வளரும். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்தால் விவசாயிகளின் குடும்பங்கள்
வாழ்க்கைத் தரத்தில் உயரும். மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாட்டைத் தான்
செங்கோல் ஆட்சி நடக்கும் நாடு என்று கூறுவார்கள். ஆட்சி நன்றாக நடந்தால்,
அந்நாட்டு மன்னனும் நன்றாக வாழ்வான் என்பது தான் இப்பாடலுக்கான பொருள்.

4. பிற்கால அவ்வை : பல தனிப்பாடல்களை
பாடிய அவ்வை இவர். இவரோடும் புராணக் கதைகள் பிணைக்கப்பட்டுள்ளன. அவ்வையை
ஒரு பக்திப் பெண் எனவும், மந்திர மாயங்கள் செய்தவர் எனவும், இந்துக்
கடவுளர்களான சிவன், முருகன் போன்றோரிடம் அருள் பெற்றவர்,
அவர்களோடுவாழ்ந்தவர் எனவும் பல கற்பனைக் கதைகள் இருக்கின்றன. அவ்வையைப்
பற்றி இதைப் போன்ற கருத்துக்களை சொல்லி, திரைப்படங்களும் வந்துள்ளன. இந்த
கற்பனைகளை நீங்கள் தள்ளிவிடுங்கள்.

ஆனால் அவ்வை என்பது அழகிய
தமிழ்ச்சொல் என்பதையும், அக்காலத்தில் அறிவுடைய பெண்களை இப்படி அழைத்தனர்
என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். கல்வி பெற்று ஆண்களுக்கு இணையாக பொது
வாழ்வில் ஈடுபட்டிருந்த பெண் தான் அவ்வை என்பதை உணர வேண்டும்.
நன்றி: தமிழ் தாயகம்
அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

nazimudeen
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

Sticky Re: அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?

Post by நண்பன் on Sun 18 Sep 2011 - 19:25

ஔவை பற்றி அவ்வை பற்றிய அறிந்திடாத பல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நஜிமுதீன் தொடருங்கள்.

இப்போதுதான் இவைகளை நான் அறிந்தேன்
1. சங்க கால அவ்வை
2. அங்கவை - சங்கவை அவ்வை
3. சோழர் கால அவ்வை
4. பிற்கால அவ்வை
அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?  517195 அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?  517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?

Post by ஹம்னா on Sun 18 Sep 2011 - 19:44

அவ்வை பற்றி அறிந்திடாத செய்தி நன்றி தகவலுக்கு.


அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அற்புதத் தகவல்கள்.....அவ்வையார் யார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum