சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம் Khan11

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம்

3 posters

Go down

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம் Empty ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 17 Oct 2011 - 7:06

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளை கொண்ட, "பெண்டாவேலன்ட் வேக்சின்' குழந்தைகளுக்கான தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த, 5 மருந்துகளைக் கொண்ட தடுப்பூசி வரும் நவம்பர் முதல் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இந்த பெண்டா தடுப்பூசியில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, ஹெப்படைட்டீஸ் பி மஞ்சள் காமாலை மற்றும் "ஹிப்' (Haemophilus influenzea&)- மூளைக் காய்ச்சல், நிமோனியாவுக்கான தடுப்பு மருந்து) ஆகிய, 5 தொற்று நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அடங்கியிருக்கும்.



சிசு மற்றும் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக, தேசிய தடுப்பூசி திட்டம், 1985ல் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, காசநோய், தட்டம்மை ஆகிய நோய்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டது. பின், போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. போலியோவை முழுமையாக ஒழிப்பதற்காக, பல்ஸ் போலியோ வாய் வழி மருந்தாக அறிமுகப்படுத்தப்பட்டது. தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதால், தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம், 1,000க்கு 30ஆக குறைந்துள்ளது. மேலும், 11 லட்சம் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தீவிர போலியோ தடுப்பு திட்டத்தின் காரணமாக, தமிழகம் 2004ம் ஆண்டிலிருந்து போலியோ இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதுபோல், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி ஆகிய நோய்களும், தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரணஜன்னி முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட மாநிலமாக தமிழகத்திற்கு, உலக சுகாதார மையம், 2006ல் சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த மூன்று நோய்களுக்கு ஒரே தடுப்பூசியாக, டி.பி.டி., போடப்பட்டு வருகிறது.

இருப்பினும், வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, வெப்பமயமாதல், உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், புதுப் புது நோய்கள் அதிகரித்து வருகின்றன. இதனால், குழந்தைகளுக்கு போடப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.இந்த வரிசையில் ஹெப்படைட்டீஸ் பி தடுப்பூசி, தேசிய தடுப்பூசி அட்டவணையில் சேர்க்கப்பட்டு, குழந்தைகளுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதுபோன்று, மூளைக் காய்ச்சல் மற்றும் நிமோனியாவுக்கான "ஹிப்' தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போட, மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இத்தடுப்பூசி இப்போது, தனியார் மருத்துவமனையில் போடப்படுகிறது.
ஹீமொபிளஸ் இன்புளுயன்சா-பி ("ஹிப்'), வைரஸ் கிருமியால் ஆண்டு தோறும், 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 30 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, தேசிய இலவச தடுப்பூசி அட்டவணையில், "ஹிப்' தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது.தடுப்பு மருந்து பட்டியலில் ஏற்கனவே, டி.பி.டி., தட்டம்மை, போலியோ, ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ( குறிப்பிட்ட மாவட்டங்களில்) ஹெப்படைட்டீஸ் பி, என பட்டியல் நீண்டு கொண்டே போவதால், தடுப்பூசிகளால், குழந்தைகள் சிரமப்படுவதும் அதிகரித்து வருகிறது.இதைக்கருத்தில் கொண்டு, டி.பி.டி., முத்தடுப்பு (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி) ஊசியுடன் இப்போது ஹெப்படைட்டீஸ் பி, "ஹிப்' ஆகியவற்றையும் ஒரே ஊசியில் போடுவதற்கு மத்திய சுகாதாரத் துறை முடிவு செய்தது.தடுப்பூசி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் முதல் கட்டமாக, பெண்டாவேலன்ட் வேக்சின் நவம்பரில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

குழந்தைகளுக்கு சிரமம் குறையும்:பெண்டா வேக்சின் குறித்து, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ஜெயச்சந்திரன் கூறியதாவது: பெண்டா தடுப்பூசி குழந்தைகளுக்கு, 6, 10, 14 வாரங்களில் போடப்படும். பின்னர் பூஸ்டர் ஊசிகள், 15 மற்றும் 18வது மாதங்களில் போடப்படும். ஐந்து தடுப்பு மருந்துகளையும் தனித்தனி ஊசியாக போட்டால், குழந்தையை அதிக முறை, ஊசியால் குத்தி சிரமப்படுத்த வேண்டியதிருக்கும். ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகளையும் சேர்ப்பதால், ஊசியால் ஒரே ஒரு முறை குத்தினால் போதுமானது. மேலும், தடுப்பூசி போடும் போது, தற்காலிகமாக காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை தடுப்பூசி போடும் போதும் குழந்தைகள் இதுபோன்ற தொல்லைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. இதனால், குழந்தைகளின் சிரமத்தை குறைக்க, 5 தடுப்பு மருந்துகளை ஒரே ஊசியில் செலுத்துவதே பெண்டாவேலன்ட் வேக்சின் ஆகும். இவ்வாறு ஜெயச்சந்திரன் கூறினார்.
தமிழகம் எப்படி?
* போலியோ இல்லாத மாநிலம்* தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் 11 லட்சம்* தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதம் 1,000க்கு 30* ரணஜன்னி, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல் முற்றிலும் ஒழிப்பு.


ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம் Empty Re: ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம்

Post by Atchaya Mon 17 Oct 2011 - 8:10

நல்ல பதிவு .நல்ல தகவல்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம் Empty Re: ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம்

Post by நண்பன் Mon 17 Oct 2011 - 8:27

மகிழ்ச்சியான செய்தி நன்றி ஹாசிம் :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம் Empty Re: ஒரே ஊசியில், 5 தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு, தமிழகத்தில் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum