Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சிறையில் கஸ்தூரிபாய் மரணம்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
சிறையில் கஸ்தூரிபாய் மரணம்
ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டிருந்த காந்தி, சிறையில் 21 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். இது சம்பந்தமாக, அவருக்கும் வைஸ்ராய்க்கும் நடந்த கடிதப்போக்குவரத்து வெற்றி பெறவில்லை. இதனால் காந்தி திட்டமிட்டபடி 1943 பிப்ரவரி 10_ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார்.
அவர் உடல் நிலை நாளுக்கு நாள் நலிந்தது. பிப்ரவரி 16_ந்தேதி அவர் நிலை மோசமாகி விட்டதாக, 6 டாக்டர்கள் கொண்ட குழு அறிவித்தது. இந்தச் செய்தி நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. காந்தியை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு, பாராளுமன்றத்தில் பலர் வற்புறுத்தினர்.
ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் மறுத்துவிட்டது. அரசின் போக்கைக் கண்டித்து, வைஸ்ராயின் நிர்வாக சபையில் இருந்து சர்.எச்.பி. மோடி, சர்.என்.ஆர்.சர்க்கார், எம்.எஸ்.ஆனே ஆகிய மூவரும் ராஜினாமா செய்தனர். பிப்ரவரி 18_ந்தேதி பேசும் சக்தியை காந்தி இழந்துவிட்டார் என்று டாக்டர்கள் அறிவித்தனர்.
காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தி, டெல்லியில் பிப்ரவரி 19, 20 தேதிகளில் அனைத்திந்திய தலைவர்கள் மாநாடு நடந்தது. அதில் ராஜாஜி, தேஜ் பகதூர் சாப்ரூ, ஜெயகர், புலாபாய் தேசாய் உள்பட 20_க்கு மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மகாத்மாவை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி, மாநாட்டில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேறியது.
ஆனால் இந்த வேண்டுகோளை வைஸ்ராய் நிராகரித்தார். காந்தியை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். "காந்தியை கைதுசெய்தது மாபெரும் தவறு. அதற்காக பிரிட்டிஷ் அரசு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு, நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்" என்று இங்கிலாந்து நாட்டுப் பேரறிஞர் பெர்னாட்ஷா அறிக்கை விடுத்தார்.
ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. காந்தி தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். தமது மனோதிடத்தால், 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து மார்ச் 3_ந்தேதி வெற்றிகரமாக முடித்தார். தண்ணீர் கலந்த ஆரஞ்சு பழரசத்தை கஸ்தூரி பாய் கொடுக்க, அதை அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
காவலில் இருந்த கஸ்தூரிபாய்க்கு 1943 டிசம்பர் கடைசியில் இருதயக் கோளாறு ஏற்பட்டது. நாளுக்கு நாள் உடல் நலிந்து, படுத்த படுக்கையில் வீழ்ந்தார். அவரை விடுதலை செய்யும்படி, லண்டனில் உள்ள பிரபுக்கள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்க இந்திய விவகார மந்திரி அமெரி மறுத்துவிட்டார்.
கஸ்தூரிபாயின் உடல் நிலை மோசம் அடைந்தது. மனிதாபிமானத்தை மதித்து, அவரை விடுதலை செய்யுமாறு அனைத்துக்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்க பிரிட்டிஷார் மறுத்ததுடன், "கஸ்தூரிபாய் இப்போது இருக்கும் இடம் அவருக்குப் பாதுகாப்பானது" என்று கூறியது.
1944 பிப்ரவரி மாதத்தில், தன் முடிவு நெருங்கிவிட்டதை கஸ்தூரிபாய் உணர்ந்து கொண்டார். தன் பேரன், பேத்திகளைக் காண விரும்பினார். அவருடைய இறுதி விருப்பப்படி பேரன் _ பேத்திகள், நெருங்கிய உறவினர்கள் ஆகாகான் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 1944_ம் ஆண்டு பிப்ரவரி 22_ந்தேதி இரவு 7.35 மணிக்கு, கணவரின் மடியில் தலை வைத்துப்படுத்த வண்ணம் கஸ்தூரிபாய் காலமானார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சிறையில் கஸ்தூரிபாய் மரணம்
அப்போது அவருக்கு வயது 75. எதற்கும் கலங்காத காந்தி, மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் கண் கலங்கினார். 62 ஆண்டுக்காலம் தன் வாழ்விலும், தாழ்விலும் சிரித்த முகத்துடன் பங்கு கொண்டு, போராட்டங்களில் தன்னுடன் சிறை புகுந்து தன்னில் பாதியாகத் திகழ்ந்த கஸ்தூரிபாயின் பிரிவை அவரால் தாங்கமுடியவில்லை.
கஸ்தூரிபாயின் கடைசி விருப்பங்களில் ஒன்று _ தன் உடல் தகனம் செய்யப்படும்போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்கவேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூரிபாய்க்கு அணிவிக்கப்பட்டது. மகன் தேவதாஸ் காந்தி, இறுதிச்சடங்குகளை செய்தார்.
கஸ்தூரிபாய் மறைந்து 6 வாரங்களுக்குப்பின் ஏப்ரல் 6_ந்தேதி காந்திஜிக்கு மலேரியா காய்ச்சல் ஏற்பட்டது. ஏப்ரல் 28_ந்தேதி அவர் உடல் நிலை கவலையளிப்பதாக அரசாங்கம் அறிவித்தது. மே 6_ந்தேதி டெல்லியிலிருந்து மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. "காந்தியின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது" என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அதன்படி 1944 மே 8_ந்தேதி காந்தியடிகள் விடுதலை செய்யப்பட்டார். ஆகாகான் மாளிகையில் 1942 ஆகஸ்ட் 9_ந்தேதி சிறை வைக்கப்பட்ட அவர் ஒரு வருடம் 9 மாதம் சிறையில் இருந்திருக்கிறார். காந்தி அனுபவித்த கடைசி சிறைவாசம் இதுதான்.
அவர் இந்தியாவில் மொத்தம் 3,089 நாட்களும், தென்ஆப்பிரிக்காவில் 249 நாட்களும் சிறையில் கழித்திருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையான காந்தி மும்பைக்குச் சென்றார். அங்கு ஜகு பகுதியில் உள்ள சேவாக் கிராமத்தில் தங்கினார். ஓய்வு எடுக்க விரும்பி 2 வார காலம் மவுன விரதம் கடைப்பிடித்தார்.
மே 21_ந்தேதி "மாஸ்கோவுக்கு தூது" என்ற சினிமாப்படம், காந்தியடிகளுக்காக விசேஷமாகத் திரையிடப்பட்டது. காந்தி தன் வாழ்நாளில் முதன் முதலாகப் பார்த்த சினிமாப் படம் இதுதான். இதற்கிடையே, காந்தியும், ஜின்னாவும் சந்தித்துப் பேசுவதற்கான முயற்சிகளில் ராஜாஜி ஈடுபட்டார்.
இதுகுறித்து ஜின்னாவுக்கு காந்திஜி எழுதிய கடிதத்தில், "தாங்கள் விரும்புகிற சமயத்தில் சந்திப்போம். முஸ்லிம்களின் விரோதியாக என்னை நினைக்காதீர்கள். நான் தங்களுக்கு மட்டுமின்றி, உலகம் முழுவதற்கும் நண்பன்; ஊழியன்" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு ஜின்னா எழுதிய பதிலில் "பம்பாயில் உள்ள என் வீட்டில் தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு ஜின்னா அளித்த பேட்டியில், "மகாத்மா காந்தியும், நானும் வெகு விரைவில் சந்திக்கப் போகிறோம். நாங்கள் உடன்பாட்டுக்கு வர உங்கள் வாழ்த்துத் தேவை" என்றார். 1944 செப்டம்பர் 9_ந்தேதி, மும்பை மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜின்னாவின் மாளிகைக்கு தமது செயலாளர் பியாரி லாலுடன் காந்தி சென்றார்.
மலபார் ஹில்ஸ் பகுதி முழுவதும் பாதுகாப்புக்காக ராணுவத்தினரும், போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர். "நலமா?" என்று கேட்டபடி, காந்திஜியை கை குலுக்கி வரவேற்றார் ஜின்னா. அவரது தோளைக் கட்டிக்கொண்ட காந்தி, "நலமாக இருக்கிறேன்" என்று பதில் அளித்தார். புகைப் படக்காரர்களுக்காக சிறிது நேரம் தம்முடன் நிற்குமாறு, காந்தியை ஜின்னா கேட்டுக்கொண்டார்.
காந்தியும், ஜின்னாவும் 3 மணி நேரம் பேச்சு நடத்தினார்கள். பிறகு செப்டம்பர் 27_ந்தேதி வரை பலமுறை சந்தித்துப் பேசினார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கிடையே 24 கடிதங்களை பரிமாறிக்கொண்டார்கள். "பாகிஸ்தான் பிரிவினைக்கு குறைவான எதையும் ஏற்க நான் தயாராக இல்லை" என்று ஜின்னா திட்டவட்டமாக கூறிவிட்டதால், எவ்வித உடன்பாடும் இன்றி செப்டம்பர் 27_ந்தேதி பேச்சுவார்த்தை முறிந்தது.
உலகப்போரில் 1945_ம் ஆண்டு ஏப்ரல் 30_ந்தேதி ஜெர்மனி தோற்று ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து ஐரோப்பாவைப் பொறுத்த வரை உலகப்போர் முடிவடைந்தது. (ஜப்பான் சரண் அடைய மறுத்ததால் போர் நீடித்தது. ஆகஸ்ட் 6_ந்தேதியும், 9_ந்தேதியும் அணுகுண்டுகள் வீசப்பட்ட பிறகே ஜப்பான் சரண் அடைந்தது.
உலகப்போர் முடிவுக்கு வந்தது.) இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில், ஜுலை மாதம் இங்கிலாந்து நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. போர்க்காலப் பிரதமராக இருந்த சர்ச்சிலின் கன்சர்வேடிவ் (பழமையாளர்) கட்சி இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தோல்வி அடைந்தது.
தொழிற்கட்சி வெற்றி பெற்று அதன் தலைவர் ஆட்லி பிரதமரானார். ஆட்லி, இந்தியாவிடம் அன்பு கொண்டவர். இந்தியா சுதந்திரம் அடைவதை விரும்பியவர். அவர் பிரதமரானதும், இந்திய அரசியலில் மின்னல் வேக மாற்றங்கள் ஏற்பட்டன.

Similar topics
» விபத்தில் மரணம் வீர மரணம்
» பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
» திஹார் சிறையில் விளையாட்டுப்போட்டிகள் : ராசா, கனிமொழி பங்கேற்கிறார்கள்?
» சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா
» சிறையில் பயங்கரங்கள்.அந்தமான் சிறைபடுகொலைகள்
» பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டிருந்த எடியூரப்பாவுக்கு நெஞ்சுவலி
» திஹார் சிறையில் விளையாட்டுப்போட்டிகள் : ராசா, கனிமொழி பங்கேற்கிறார்கள்?
» சிறையில் தீபாவளி கொண்டாடும் எடியூரப்பா
» சிறையில் பயங்கரங்கள்.அந்தமான் சிறைபடுகொலைகள்
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum