சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Khan11

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:15

யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம் 'அமீருல் மூமினீன் அவர்களே! நீங்கள் உங்கள் வேதத்தில் ஓதிக் கொண்டிருக்கும் ஒரு வசனம் யூதர்களாகிய எங்களின் மீது இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் ஒரு பெருநாளாக்கிக் கொண்டிருப்போம்' என்றார். அதற்கு உமர்(ரலி) 'அது எந்த வசனம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர் கூறினார்.

"இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நினைவுபடுத்திவிட்டேன். உங்களின் மீது என்னுடைய அருள் கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி (யுடன் அங்கீகரித்துக்) கொண்டேன்" (திருக்குர்ஆன் 05:03) (இந்தத் திருவசனம்தான் அது). அதற்கு உமர்(ரலி) 'அவ்வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் வைத்து நபி(ஸல்) அவர்களின் மீது இறங்கியது என்பதை நாங்கள் அறிவோம். அரஃபாப் பெருவெளியில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டிருக்கும்போதுதான் (அவ்வசனம் அருளப்பட்டது) என்றார்கள்" என தாரிக் இப்னு ஷிஹாப்(ரலி) அறிவித்தார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:20

அபூ ஸாலிஹ் அறிவித்தார்.

எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தடுப்பு வைத்துக் கொண்டு அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) ஒரு வெள்ளிக்கிழமையன்று தொழுது கொண்டிருந்தார்கள். பனூ அபூ முயீத் என்ற கூட்டடத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் குறுக்கே செல்ல முயன்றார். உடனே அபூ ஸயீத்(ரலி) அவரின் நெஞ்சில் கையால் தள்ளினார்கள். வேறு வழியேதும் உள்ளதா என்று அந்த இளைஞர் கவனித்தபோது, அபூ ஸயீத்(ரலி)யின் குறுக்கே செல்வதைத் தவிர அவருக்கு வேறு வழிதென்படவில்லை. எனவே மீண்டும் அவர்களுக்குக் குறுக்கே செல்ல முயன்றார். முன்பை விடக் கடுமையாக அபூ ஸயீத்(ரலி) அவரைத் தள்ளினார்கள். அதனால் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவர் (அட்சித் தலைவராக இருந்த) மர்வானிடம் சென்று இது பற்றி முறையிட்டார். அவரைத் தொடர்ந்து அபூ ஸயீத்(ரலி) மர்வானிடம் சென்றார்கள். 'உமக்கும் உம் சகோதரர் மகனுக்குமிடையே என்ன பிரச்சினை?' என்று மர்வான் கேட்டார். 'உங்களில் எவரேனும் தமக்கு முன்னால் 'தடுப்பு' வைத்துத் தொழும்போது, எவரேனும் குறுக்கே செல்ல முயன்றால் அவரைத் தடுக்க வேண்டும்; அதை அவர் எதிர்த்தால் அவருடன் சண்டையிட வேண்டும். ஏனெனில் அவர் நிச்சயம் ஷைத்தானாவார்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன்' என அபூ ஸயீத்(ரலி) கூறினார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:22

ஸஹ்ல் இப்னு ஸஃது(ரலி) அறிவித்தார்.

எங்களில் ஒரு பெண்மணி இருந்தார். அவர் தம் விளை நிலத்தின் வாய்க்கால் ஓரத்தில் ஒரு வகை கீரைச் செடியைப் பயிரிடுவார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வேருடன் அச்செடியைப் பிடிங்கி வந்து அதை ஒரு பாத்திரத்தில் போடுவார். பிறகு அதன் மீது கோதுமையில் ஒரு கைப்பிடி அளவு போட்டு அரைப்பார் அந்தக் கீரைச் செடியின் தண்டுப் பகுதிதான் அந்த உணவுக்கே மாமிசம் போல் அமையும். நாங்கள் ஜும்ஆத் தொழுதுவிட்டுத் திரும்பி அவருக்கு ஸலாம் கூறுவோம். அவர் எங்களுக்கு உணவு படைப்பார். அதை நாங்கள் விழுங்குவோம். அவரின் இந்த உணவுக்காக நாங்கள் ஜும்ஆ நாளை விரும்புவோம்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:26

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தும்போது மக்கள் எழுந்து சப்தமிட்டனர். 'இறைத்தூதர் அவர்களே! மழை பொய்த்துவிட்டது. மரங்கள் சுரும்விட்டன. கால்நடைகள் அழிந்துவிட்டன. எனவே மழை பொழிச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! எங்களுக்கு மழை பொழியச் செய்' என்று இரண்டு முறை கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக, அப்போது வானத்தில் எந்த மேகத்தையும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் தோன்றி மழை பொழிந்தது. நபி(ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கித் தொழுகை நடத்தினார்கள். மழை அடுத்த ஜும்ஆ வரை நீடித்தது. ழூழூ(அடுத்த ஜும்ஆவில்) நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும்போது 'வீடுகள் இடிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'. என்று மக்கள் உரத்த குரலில் கூறினர். நபி(ஸல்) அவர்கள் புன்னகை செய்தார்கள். பின்னர் 'இறைவா! எங்கள் சுற்றுப்புறங்களுக்கு (இதைத் திருப்புவாயாக!) எங்களுக்கு எதிரானதாக இதை ஆக்கிவிடாதே" என்று பிரார்த்தித்தார்கள். உடனே மதீனாவைவிட்டு மழை விலகியது. அதன் சுற்றுப் புறங்களில் மழை பெய்யத் துவங்கியது.மதீனாவில் ஒரு துளியும் விழவில்லை. மதீனாவை நான் பார்த்தபோது அது ஒரு குன்றின் மீது அமைந்திருப்பதைப் போல் இருந்தது.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:27

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் அலிஃப் லாம் மீம் தன்ஸீல் என்ற ஸஜ்தா அத்தியாயத்தையும் ஹல்அத்தா அலல் இன்ஸான் என்ற அத்தியாயத்iயும் ஓதினார்கள்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:29

ரபீஆ இப்னு அப்தில்லா அறிவித்தார்.

உமர்(ரலி) ஒரு வெள்ளிக்கிழமை மிம்பரில் நின்று நஹ்ல் அத்தியாயத்தை ஓதினார்கள். (அதிலுள்ள) ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் இறங்கி ஸஜ்தாச் செய்தார்கள். மக்களும் ஸஜ்தாச் செய்தனர். அடுத்த ஜும்ஆ வந்தபோது அதே அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது ஸஜ்தா வசனத்தை அடைந்ததும் (மக்களை நோக்கி) 'மனிதர்களே! நாம் ஸஜ்தா வசனத்தை ஓதியிருக்கிறோம். ஸஜ்தாச் செய்கிறவர் நல்லதைச் செய்தவராவார். அவரின் மீது எந்தக் குற்றமுமில்லை' என்று கூறினார்கள். மேலும் அவர்கள் ஸஜ்தாச் செய்யவில்லை.

நாமாக விரும்பிச் செய்தால் தவிர ஸஜ்தாவை அல்லாஹ் நம்மீது கடமையாக்கவில்லை என்று இப்னு உமர்(ரலி) கூறினார் என நாபிஃஉ குறிப்பிட்டார்கள்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:31

என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

"உங்களில் எவரும் வெள்ளிக்கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்கவேண்டாம்!"

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:32

ஜுவைரிய்யா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா?' என்று கேட்டார்கள். நான் 'இல்லை!" என்றேன். 'நாளை நோன்பு நோற்க விரும்புகிறாயா?' என்று கேட்டார்கள். அதற்கும் 'இல்லை!" என்றேன். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் 'அப்படியானால் நோன்பை முறித்து விடு!" என்றார்கள்.

"நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி நான் நோன்பை முறித்து விட்டேன்" என்று ஜுவைரிய்யா(ரலி) கூறினார் என அபூ அய்யூப்(ரஹ்) அறிவித்தார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:34

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் தச்சுவேலை தெரிந்த ஒரு பணியாளர் இருக்கிறார்; நீங்கள் அமர்ந்து கொள்வதற்கேற்ப ஒன்றை நான் உங்களுக்குச் செய்து தரட்டுமா?' என்று கேட்டார். 'உன் விருப்பம்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற, அப்பெண்மணி நபி(ஸல்) அவர்களுக்காக மிம்பரைத் தயார் செய்தார். வெள்ளிக்கிழமை வந்ததும், அந்த மிம்பரில் நபி(ஸல்) அவர்கள் அமர்ந்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் முன்னர் நின்று உரை நிகழ்த்திய பேரீச்ச மரக்கட்டை இரண்டாகப் பிளந்து விடுமளவிற்குச் சப்தமிட்டது. நபி(ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி அதைத் தொட்டுத் தம்முடன் அணைத்தார்கள். அமைதிப்படுத்தப்படும் குழந்தை அழுவது போல் அது அழுது, அழுகையை நிறுத்தியது. அப்போது நபி(ஸல்) அவர்கள் 'போதனையைக் கேட்டதால்தான் அது அழுதது" என்றார்கள்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:35

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்.

நாங்கள் வெள்ளிக்கிழமையன்று மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்து வந்தோம். ஏனெனில், எங்களுடன் கிழவியொருத்தி நட்பாக இருந்தாள். அவள், நாங்கள் எங்கள் நீரோடைகளின் ஓரமாக நட்டு வந்த 'சில்க்' என்னும் கீரைத் தண்டுகளைப் பிடுங்கி, அவற்றைத் தன்னுடைய பாத்திரமொன்றில் போட்டு, அவற்றுடன் வாற்கோதுமை விதைகள் சிலவற்றையும் கலந்து (ஒரு வகை உணவைத் தயார் செய்து) தருவாள். நாங்கள் ஜும்ஆ தொழுகை தொழுதுவிட்டோமென்றால் அந்தக் கிழவியைச் சந்திப்போம். அவள் அந்த உணவை எங்களுக்குப் பிரியமாகத் தருவாள். இதன் காரணமாக நாங்கள் வெள்ளிக் கிழமையன்று மகிழ்ச்சியுடன் இருப்போம். ஜும்ஆ தொழுகைக்குப் பிறகுதான் நாங்கள் உண்போம்; மதிய ஓய்வு கொள்வோம்.

மூன்றாவது அறிவிப்பாளரான யஃகூப்(ரஹ்) கூறினார்:

இரண்டாம் அறிவிப்பாளர் அபூ ஹாஸிம்(ரஹ்), 'அந்த உணவு கெட்டியான கொழுப்போ திரவக் கொழுப்போ எதுவும் அற்றதாக இருந்தது" என்று கூறினார்கள் எனவே கருதுகிறேன்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:38

' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

இறைத்தூதர்களில் ஒருவர் புனிதப் போருக்குச் சென்றார். அப்போது அவர் தம் சமுதாயத்தாரிடம், 'ஒரு பெண்ணிடம் இல்லற உரிமையைப் பெற்றவன் அவளுடன் வீடு கூட விரும்பி இன்னும் கூடாமல் இருப்பானாயின் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். வீடு கட்டி முடித்து, அதன் முகட்டை (இன்னும்) உயர்த்தாமலிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வர வேண்டாம். ஆட்டையோ, பெண் ஒட்டகங்களையோ வாங்கிவிட்டு, அவை குட்டிகள் போடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனும் என்னைப் பின்பற்றி (போருக்கு) வரவேண்டாம்" என்று கூறிவிட்டுப் போருக்குச் சென்றார். ஓர் ஊரை (ஜெரிக்கோ நகரை வெள்ளிக்கிழமை) அஸர் தொழுகையின் நேரத்தில் அல்லது சற்றேறக் குறைய அந்த வேளையில் அவர் நெருங்கினார். (சற்று நேரத்தில் சூரியன் மறையத் தொடங்க, சனிக் கிழமை போரிடுவது அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்த காரணத்தால் தோற்றுப் போக நேரிடுமே என்றஞ்சி) சூரியனை நோக்கி, 'நீ இறைவனின் கட்டளைப்படி இயங்குகிறாய். நானும் இறை கட்டளைப்படி நடக்க வேண்டியவன் ஆவேன்" என்று கூறிவிட்டு, 'இறைவா! சூரியனை (உடனே மறைய விடாமல்) தடுத்து விடு" என்று பிரார்த்தித்தார். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை வழங்கும் வரை அது தடுத்து நிறுத்தப்பட்டது. (வெற்றி பெற்ற) பிறகு அந்த இறைத்தூதர் போரில் கிடைத்த பொருட்களை ஒன்றாகச் சேகரித்தார். அப்போது அதை (எரித்துக் கருக்கி) உண்பதற்கு (வானிலிருந்து) நெருப்பு வந்தது. ஆனால், அவற்றை அது உண்ணவில்லை. எனவே, அந்த இறைத்தூதர் 'உங்களிடையே (இந்தப் பொருட்களிலிருந்து) திருட்டுப் பொருள் ஏதோ ஒன்று உள்ளது. எனவே, ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒருவர் என்னிடம் உறுதி மொழி கொடுக்கட்டும்" என்று கூறினார். (உறுதி மொழி கொடுத்துக் கொண்டிருந்த போது) ஒரு மனிதனின் கை இறைத் தூதரின் கையோடு ஒட்டிக்கொண்டது. அப்போது இறைத்தூதர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது. எனவே, உன்னுடைய குலத்தார் என்னிடம் உறுதிமொழி கொடுக்கட்டும்" என்று கூறினார். (அவ்வாறே அவர்கள் கொடுக்க) இரண்டு மனிதர்களின் கை அல்லது மூவருடைய கை அவரின் கையுடன் ஒட்டிக் கொண்டது. அப்போது அவர், 'உங்களிடையே தான் திருடப்பட்ட பொருள் உள்ளது" என்றார். எனவே, அம்மக்கள் தங்கத்தாலான பசுமாட்டுத் தலை ஒன்றைக் கொண்டு வந்து அதை வைத்தனர். நெருப்பு வந்து அதைத் தின்றுவிட்டது. பிறகு அல்லாஹ், போரில் கிடைக்கும் பொருட்களை (எடுத்துக் கொண்டு பயன்படுத்த) நமக்கு அனுமதியளித்தான். நம்முடைய பலவீனத்தையும் இயலாமையையும் கண்டு அதை நமக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:40

' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

ஜும்ஆ நாள் (வெள்ளிக்கிழமை) வந்துவிட்டால் வானவர்கள் (ஜும்ஆ தொழுகை நடக்கும்) பள்ளிவாசலின் நுழைவாயில்களில் ஒவ்வொரு வசாலிலும் (இருந்த வண்ணம்) முதன் முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்களின் பெயர்களை) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம், உரை மேடையில் (உரையாற்றுவதற்காக) அமர்ந்துவிட்டால் (பதிவு செய்யும்) ஏடுகளைச் சுருட்டி வைத்துவிட்டு (அவரின் உபதேச) உரையைச் செவிமடுத்து வண்ணம் (உள்ளே) வருவார்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:40

' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"

(உலகில்) இறுதிச் சமுதாயமான நாம் தாம் மறுமையில் (தகுதியிலும், சிறப்பிலும்) முந்தியவர்கள் ஆவோம். ஆயினும், சமுதாயங்கள் அனைத்தும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டுவிட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப்பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபட்ட நாளாகும். எனவே, நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கும் அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்தவர்களுக்குரியதும் ஆகும்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:41

நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்

பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்(ரலி) வெள்ளிக்கிழமை நோய் வாய்ப்பட்டார்கள். எனவே (அவர்களைக் கவனித்துக் கொள்ள) பகல் பொழுது உயர்ந்த பின் 'ஜும்ஆ (தொழுகை)' நேரம் நெருங்கி விட்டிருந்த நிலையில், இப்னு உமர்(ரலி) ஸயீத்(ரலி) அவர்களிடம் புறப்பட்டுப் போனார்கள். மேலும் ஜும்ஆத் தொழுகையை இப்னு உமர் விட வேண்டியதாயிற்று.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:42

இயாஸ் இப்னு ஸலமா(ரஹ்) அறிவித்தார்

என் தந்தை (ஸலமா இப்னு அக்வஃ(ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் 'பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம் 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) 'ஜுமுஆ' தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குக் கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது" என்று கூறினார்கள்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:42

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் (வெள்ளிக்கிழமை) தொழுகை நடத்தப்பட்ட ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு (இஸ்லாத்தில்) முதன் முதலாக நடத்தப்பட்ட ஜுமுஆத் தொழுகை, 'ஜுவாஸா' எனுமிடத்தில் - அதாவது பஹ்ரைனில் இருந்த ஒரு கிராமத்தில் - அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாசலில் நடைபெற்ற தொழுகையே ஆகும்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:43

தாரிக் இப்னு யுஹாப்(ரஹ்) அறிவித்தார்

யூதர்கள் உமர்(ரலி) அவர்களிடம், 'நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓதுகிறீர்கள், அந்த வசனம் மட்டும எங்களிடையே இறங்கியிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம்' என்று கூறினர். உமர்(ரலி), 'அது எப்போது இறங்கியது? எங்கே இறங்கியது? அது இறங்கிய வேளையில் அரஃபா (ஃதுல்ஹஜ் -9ஆம்) நாளில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்.

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ(ரஹ்) கூறுகிறார்கள்;

'இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்' எனும் (திருக்குர்ஆன் 05:3 வது) வசனம் அருளப்பட்ட நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக்கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகிறேன்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:44

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிருந்த மக்கள்) கலைந்து சென்றார்கள். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் 'அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்' எனும் (திருக்குர்ஆன் 62:11 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

கதீஸ்களில் இருந்து கோர்த்தெடுத்த எனது முயற்சி திருத்தங்கள் இருப்பின் கருத்திடுங்கள் (கதீஸ் யாவும் புஹாரியில் இருந்து எடுக்கப்பட்டது)
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:45

அபுல் காசிம்(முஹம்மத்- ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமையன்று ஒரு நேரம் இருக்கிறது; அந்த நேரத்தை ஒரு முஸ்லிம் அடியார் (சரியாக) அடைந்து, அதில் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எந்த நன்மையைக் கோரினாலும், அவருக்கு அதை அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.

இதைக் கூறும்போது நபி(ஸல்) அவர்கள் தம் விரல் நுனியை நடுவிரல் மற்றும் மோதிர விரலின் அடிப்பாகத்தின் மீது வைத்துத் தம் கையால் சைகை செய்தார்கள். 'இதன்மூலம் அது குறைந்த நேரம் என்பதை நபியவர்கள் உணர்த்துகிறார்கள்' என நாங்கள் பேசிக்கொண்டோம்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:45

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார்

வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துவந்தோம். எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் தண்டுக் கீரையின் தண்டுகளை எடுத்து தன்னுடைய பாத்திரமொன்றில் அவற்றையிட்டு அதில் வாற்கோதுமை தானியங்கள் சிறிதைப் போட்டு(க் கடைந்து) வைப்பார். நாங்கள் (வெள்ளிக்கிழமைத் தொழுகை) தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர் அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம் மகிழ்ச்சியடைந்து வந்தோம். நாங்கள் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்புதான் காலைச் சிற்றுண்டி அருந்துவோம்; மதிய ஓய்வெடுப்போம். அல்லாஹ்வின் மீதாணையாக! (அவர் பரிமாறிய) அந்த உணவில் கெட்டியான கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை.28
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:46

அபூ உபைத்(ரஹ்) (தொடர்ந்து) கூறினார்

பின்னர் நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் குத்பா - உரை நிகழ்த்தும் முன்பே தொழுதுவிட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, 'மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரண்டு பெருநாள்கள் ஒன்றுசேர்ந்து (ம்டைத்து) உள்ளன. எனவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் ஜுமுஆவை (வெள்ளிக் கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) தம் இல்லத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்துவிட்டேன்' என்று கூறினார்கள்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:47

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) உமர்(ரலி) அவர்கள் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டார்கள். உடனே, 'இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கிக் கொண்டால், தங்களிடம் தூதுக் குழுக்கள் வரும்போதும் வெள்ளிக்கிழமையின் போதும் அணிந்து கொள்ளலாமே' என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அதன் பிறகு உமர்(ரலி) அவர்களுக்கு, அவர்கள் அணிந்து கொள்வதற்கு ஏற்றாற் போன்று கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். எனவே உமர்(ரலி) அவர்கள், '(இறைத்தூதர் அவர்களே!) இது பற்றித் தாங்கள் சொன்னதை நான் கேட்டிருக்க (இப்போது) இதை எனக்கே அணியக் கொடுத்துள்ளீர்களே!' என்று வினவ, நபி(ஸல்) அவர்கள், 'அதை நான் உங்களுக்கு அனுப்பி வைத்து அதை நீங்கள் விற்றுக் கொள்ளவோ (பெண்களுக்கு) அணியத் தரவோதான்' என்று பதிலளித்தார்கள்.58
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:47

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

(என் தந்தை) உமர்(ரலி) கோடுபோட்ட பட்டு அங்கி ஒன்று விற்கப்படுவதைக் கண்டு, 'இறைத்தூதர் அவர்களே! இதைத் தாங்கள் வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும் போதும் அணிந்துகொள்ளுங்கள்' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'எ(ந்த ஆட)வருக்கு (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லையோ அவர்தாம் இதை (இம்மையில்) அணிவார்' என்று கூறினார்கள். பிறகு அதே பட்டு அங்கிகளில் சில நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டன. (அவற்றிலிருந்து) ஓர் அங்கியை நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். உமர்(ரலி), 'நான் இதை எப்படி அணிய முடியும்? இந்தப் பட்டாடை தொடர்பாகத் தாங்கள் முன்பு வேறு விதமாகச் சொன்னீர்களே?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'இதை நீங்கள் அணிந்துகொள்ள நான் உங்களுக்குத் தரவில்லை. மாறாக, இதை நீங்கள் விற்றுவிடலாம்; (பெண்களுக்கோ, மற்ற மதத்தாருக்கோ) அணிவிக்கலாம் என்பதற்காகவே வழங்கினேன்' என்று கூறினார்கள்.

எனவே, உமர்(ரலி) அதை மக்காவாசியான தம் சகோதரர் ஒருவருக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர் முஸ்லிமாயிருக்கவில்லை.13
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:47

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாளில்) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது (கிராமவாசி) ஒருவர் வந்து, '(இறைத்தூதர் அவர்களே! மழை பொய்ந்துவிட்டது. (எங்களுக்கு) மழை வேண்டிய உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தனை புரியுங்கள்' என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வானத்தை (அண்ணாந்து) பார்த்தார்கள். (அதில் மழை) மேகம் ஏதும் இருக்கவில்லை. அப்போது நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டிப் பிரார்த்தித்தார்கள். உடனே மேகம் ஒன்றொடொன்று திரள ஆரம்பித்தது. பிறகு மழை பொழிந்தது. இதையடுத்து மதீனாவின் நீர்வழிகள் (எல்லாம் நிரம்பி) வழிந்தோடின. இடையறாமல் அடுத்த ஜுமுஆ வரை அம்மழை நீடித்தது.

பிறகு 'அந்த மனிதர்' அல்லது 'வேறொரு மனிதர்' எழுந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (ஜுமுஆ) உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அவர், '(தொடர்) மழையினால் நாங்கள் மூழ்கிக் கொண்டிருக்கிறோம். எங்களைவிட்டு மழையை நிறுத்துமாறு உங்களுடைய இறைவனிடம் பிரார்த்தியுங்கள்' என்றார். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள் சிரித்தார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வே! எங்கள் சுற்றுப்புறங்களில் ழூழூ(உள்ள மானாவாரி நிலங்கள், நீர்நிலைக்கு ஆகியவற்றுக்கு இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே! என்று இரண்டு அல்லது மூன்று முறைப் பிரார்த்தித்தார்கள். அந்த(த் திரண்ட) மேகம் மதீனாவிலிருந்து (விலம்) வலப் பக்கமாகவும் இடப்பக்கமாகவும் பிரிந்து சென்றது. மதீனாவைச் சுற்றி மழை பொழிகிறது. ஆனால் மதீனாவுக்குள் சிறிதும் பெய்யவில்லை. தன்னுடன் தூதரின் மதிப்பையும் அவர்களின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் இறைவன் மக்களுக்கு (நேரடியாகக்) காட்டினான்.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by பாயிஸ் Fri 4 Nov 2011 - 9:48

அபூ ஹாஸிம் ஸலமா இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் கூறினார்:

'நாங்கள் வெள்ளிக்கிழமை அன்று (மிகவும்) மகிழ்ச்சியாக இருப்போம்' என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) கூறினார். நான், 'ஏன்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் 'எங்களுக்கு ஒரு மூதாட்டி இருந்தார். அவர் மதீனாவிலுள்ள 'புளாஆ' எனும் பேரீச்சந்தோட்டத்திற்கு ஆளனுப்பி, (அங்கு பயிராகும்) தண்டுக் கிரையின் தண்டுகளைக் கொண்டுவரச் செய்து, அதை ஒரு பாத்திரத்தில் இடுவார். அத்துடன் சிறிது வாற்கோதுமையை அரைத்து அதில் இடுவார். நாங்கள் ஜுமுஆத் தொழுதுவிட்டுத் திரும்பிவந்து அந்த மூதாட்டிக்கு சலாம் சொல்வோம். அப்போது அவர் அந்த உணவை எங்கள் முன் வைப்பார். அதன் காரணத்தினால் தான் நாங்கள் (வெள்ளிக் கிழமை) மகிழ்ச்சியோடு இருப்போம். ஜுமுஆவிற்குப் பின்னர் நாங்கள் மதிய ஓய்வு எடுப்போம்; காலை உணவையும் உட்கொள்வோம்.23
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள Empty Re: வெள்ளிக்கிழமை இஸ்லாத்தில் இடம்பெற்ற சில சிறப்பான விடையங்கள

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum