சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

சொந்தக் கதை பாகம்7  Khan11

சொந்தக் கதை பாகம்7

5 posters

Go down

சொந்தக் கதை பாகம்7  Empty சொந்தக் கதை பாகம்7

Post by jasmin Mon 28 Nov 2011 - 10:46

பாகம் 01

பாகம் 02

பாகம் 03

பாகம் 04

பாகம் 05


பாகம் 06


பாகம் 07

பாகம் 08



பாகம் 09



பாகம் 10



பாகம் 11



பாகம் 12



பாகம் 13

இப்போது நான் என் கதையின் மத்திய பகுதிக்கு வந்து இருக்கிறேன் .என் கதையை மேலோட்டமாக படித்த சகோதரர் நண்பன் அவர்கள் இப்போதுதான் விழித்து இருக்கிறார் .அதாவது ”அடிமைகள்” பற்றி கேட்டு இருக்கிறார்.ஏனென்றால் பாவம் அவர் இப்போது பாதி அடிமையாக கத்தார் நாட்டிலே வசிக்கிறார் அதுதான் .

இலங்கையில் சுதந்திரமாக சுற்றித்திரிந்த இவர் நினைத்த மாத்திரத்தில் கத்தார் நாட்டிற்கு வந்து விடவில்லை.இவர் இங்கு வருவதற்கு இவருக்கு கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவர் பொருப்பு[ கபாலத் ] கொடுக்கவேண்டும் அப்போதுதான் விசா [அனுமதி] கொடுப்பார்கள் .ஆகா விசா கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டே அவர் இங்குவந்து வேலை செய்துவிடமுடியாது.

இவர் இங்கு வந்தவுடன் இவரை அழைத்து சென்று இவர் மட்டும் வந்து இருக்கிறாரா அல்லது இவரோடு ஏதாவது பெரிய நோயையும் அழைத்து வந்து இருக்கிறாரா என்று சோதிப்பார்கள்[மெடிகல் டெஷ்ட்]. இவர்தான் தீராத விளையாட்டுப் பிள்ளையாச்சே அத்னால் புள்ளிராஜாவாக இருக்ககூடாதே என்ற பயம்தான் .இல்லை இல்லை இவர் நல்ல பிள்ளை நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்று டாக்டர் சொல்லுவார்கள்.

அப்பாடா என்று இவர் மன நிம்மதியோடு இப்போதும் இவர் சென்று இவர் வேலையை செய்துவிட முடியாது .இவரை மீண்டும் அழைத்து சென்று இவர் ஏற்கனவே ஏதாவது சில்மிஷம் செய்தவரா என்று இவரது பத்து விரல்களின் ரேகையை வைத்து சோதனை செய்வார்கள்.இல்லை இல்லை இவர் நல்லபிள்ளை என்று தெரிந்த பிறகு அந்த ரேகைகளை பதிவு செய்துகொள்வார்கள். இனியும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளகூடாது அல்லவா?

என்னடா இது வாழ்க்கை இலங்கை எவ்வளவு ரம்மியமான தேசம் ...எங்கு பார்த்தாலும் இயற்கை சோலைகள் ,இன்பமான மழைபொழியும் காலங்கள் சுற்றிலும் நண்பர்கள் வட்டாரம் உற்றார் உறவினர்களோடு அரட்டை அடித்து பொழுதுகழியும் நாட்கள் அனைத்தும் இவரை அவ்வப்போது சபலப்படுத்தும்.அதற்கு கத்தார் நாட்டின் கடுமையான வெயிலும் குளிரும்கூட தூபம்போடும்.

சரி ஆனது ஆகட்டும் நம்ம நாட்டுக்கே போய்விடலாம் என்று முடிவு செய்து இவர் போக நினைத்தால் இவரால் போகமுடியாது .அதற்கும் இவரது கஃபீலின் அனுமதி வேண்டும் ..இல்லை இல்லை ஓடிவிடலாம் என்று முயன்றால் இவரது கடவுசீட்டை வாங்கி பாதுகாப்பாக வைத்து இருப்பார்கள்.கடவுசீட்டை திருட்டுத்தனமாக எடுத்துகொண்டும் ஓடிவிடமுடியாது அதற்கும் எக்சிட் பெர்மிட் என்ற வெளியேற்ற அனுமதி பெற வேண்டும்.இந்த காலத்தில் ஒரு சுதந்திர மனிதனுக்கு இருக்கும் கட்டுப்பாடுகள் இவை.

புரிகிறது நண்பன் கேட்டது இதுவல்ல ..அவர் நர நர என்று பல்லைக்கடிப்பது தெரிகிறது .மனிதன் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பட்ட காலத்தில் இருந்து உலகம் அழியும் காலம்வரை மனிதனை மனிதன் அடிமையாக்கும் முறை இருந்துகொண்டேதான் இருக்கும் .அதை எந்த மனித உரிமை காவலர்களாலும் அழித்துவிட முடியாது.

இன்றுகூட உலகின் பல பாகங்களிலும் மனிதர்கள் அடிமைகளாக விற்கப் படுகிறார்கள் என்பது எதார்ததமான உண்மை .எத்தியாபியா ,சோமாலியா போன்ற நாடுகளில் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது.அது ஏன் சுதந்திரமும் ஜனனாயகமும் பேசும் இந்திய தேசத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3 கோடி கூலி கொத்தடிமை தொழிலாளிகள் இருக்கிறார்கள் என்று ஒரு குறிப்பு கூறுகிறது.

இவர்கள் கொத்தடிமைகளாக வேலை மட்டும் வாங்கப்படுவது இல்லை .இவர்களும் இவர்கள் குடும்பமும் சுதந்திரமாக செயல்பட முடியாது. நினைத்த இடத்திற்கு போக முடியாது ...ஏன் வாங்கிய பணத்திற்கு பலமடங்குகள் வட்டிபோட்டு வரும் தொகையை செலுத்தாமல் அவர்கள் சொந்த ஊருக்குகூட போக முடியாது.இவர்களின் பெண்கள் சர்வ சாதாரணமாக முதலாளிகளால் பாலியல் உபயோகம் செய்யப்படுவார்கள்.யாரும் கேட்கமுடியாது.

இன்றுகூட ம்துரைக்கு பக்கத்தில் உள்ள சில கிராமங்களில் மனைவியை அடகுவைக்கும் முறை இருந்து வருகிறது.அதாவது ஒருவர்க்கு பணம் வேண்டுமென்றால் ஒரு பணக்காரரிடம் வாங்கிக்கொண்டு சூரிடிக்காக அவர் மனைவியை அந்த பணக்காரர்வீட்டில் விட்டுவிடுவார்.வாங்கிய தொகையை வட்டியோடு திருப்பி செலுத்தும்வரை அவரின் மனைவியை கடன்கொடுத்த்வர் உபயோக படுத்திக்கொள்வார் [எல்லாத்துக்கும்தான்]

இதைகேட்டதும் நண்பர் அந்த கிராமங்களில் சென்று தங்கிவிடலாமா என்று சபலத்தில் துடிப்பது தெரிகிறது ஆனால் அவர்கள் இதை அவர்கள் சமூகத்தில் உள்ளவர்களோடு மட்டும்தான் செய்துகொள்வார்கள்.அதனால் நண்பன் அடங்கி உட்காரும்.

இந்த நவீன 21ஆம் நூற்றாண்டிலேயே இப்படி நடக்கிறது என்றால் அய்யாமுல் ஜாகிலி என்ற அறியாமைக் காலத்தைப் பற்றி சொல்லவேண்டுமா என்ன?...............

மனிதர்கள் ஆடு மாடுகளைப்போல் சந்தைகளில் விற்கப்பட்டார்கள்.ஆட்டுக்கு எடையும் மாட்டுக்குபல்லைப் பிடித்து விலைபேசுவதுபோல் .மனிதர்களுக்கும் அவர்களின் தேக அமைப்பு .பலம் வேலை திறன் அடிப்படையில் விலை பேசப்பட்டது.இவர்களை விலைக்கு வாங்கிய முதலாளிகள் இவர்களை ஆடு மாடுகளைப் போல்தான் நடத்தினார்கள்.

இந்த அடிமைகளுக்கு சரியான் உணவு கொடுப்பதில்லை ,அவர்களுக்கு கிழிந்த அழுக்கான கந்தலை ஆடையாக கொடுத்தார்கள்.மிருகங்களை அடைக்கும் கொட்டில்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள்.மிகவும் கடின்மான வேலைகளை அவர்கள் மீது சுமத்தினார்கள்.அந்த வேலைகளை செய்ய அடிமைகள் தடுமாறும்போது கடும்சொல்லால் ஏசியும் கேலி செய்தும் அடித்தார்கள்.சில நேரம் வேடிக்கைக்காககூட அடிப்பார்கள்.

இதுதான் அன்றைய அடிமை மனிதர்களின் அவலமாக இருந்தது .இன்றாவது வாங்கிய பணத்தை வட்டியோடு செலுத்திவிட்டு தப்பித்துவிடலாம் ஆனால் அன்று அப்படி தப்பித்து விட முடியாது .விலைக்கு வாங்கிய முதலாளி என்ன விலை நிர்ணயம் செய்கிறாரோ அந்த விலையைக்கொடுத்தால்தான் விடுதலை கிடைக்கும் .வெரும் 100 ரியாலுக்கு வாங்கிய ஒருவரை விற்கும்போது முதலாளி ஒரு லட்சம் ரியால் கேட்டாலும் கொடுத்துத்தான் ஆகவேண்டும் .இது அனியாயம் அக்கிரமம் என்றெலலாம் பேசிக்கொண்டு இருக்க முடியாது.இதுதான் அன்றைய அடிமைகளின் நிலை.இதற்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

அடிமைத்தனத்தை இஸ்லாம் கடுமையாக கண்டித்து வெறுத்தாலும் அதை உடனே அடியோடு நிறுத்தவேண்டும் என்று கட்டளை இடவில்லை.ஏனென்றால் நோன்புகாலங்களில் இரவுகளில்கூட மனைவியரோடு கூடாதீர்கள் என்ற சட்டம் இருந்தபோது தாங்களை தாங்களே வஞ்சித்துகொண்டு இருந்த மக்கள் அவர்கள்.அத்னால் ஏதாவ்து செய்து அடிமைதனத்தை தக்கவைத்துக்கொள்வார்களென்பது படைத்த இறைவனுக்கு தெரியாதாஎன்ன?

அத்னால் ஒவ்வொரு கணமும் தவறுசெய்யும் குணம் படைத்த இந்த மனிதனை அவன் செய்யும் சில தவறுகளுக்கு பகரமான ஒரு அடிமையை விடுதலை செய்யவேண்டும் என்று திருமறை [குரான்] கட்டளையிடுகீறது.இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அடிமைத்தலையில் இருந்து மனித்னை விடுதலை செய்யும் முயற்சியை இஸ்லாம் செய்கிறது.

இதற்கு நபிகள்[சல்] அவர்கள் என்ன தீர்வு சொன்னார்கள்.தனக்கு சேவை [வேலை] செய்ய அடிமையாக கிடைத்த வேலைக் காரரை, வாங்கிய நாளிலேயே விடுதலை செய்த நபி அவர்கள் .அந்த அடிமையை தாங்கள் விரும்பினால் அவர் அவரது பெற்றோருடையனே சென்றுவிடலாம் என்று சொன்னார்கள்.ஆனால் அந்த மனிதர் கருணை நபி அவர்களின் கண்ணியதையும் பண்பையும் கண்டு அவரது பெற்றோரோடு செல்லமறுத்து நபிகளோடே தங்கிக்கொண்டார் .

இதோடு நில்லாமல் நபி அவர்கள் முஸ்லிம்களில் சிலர் தங்களின் அடிமைகளை பழையமாதிரியே பயன்படுத்துவதைக் கண்டார்கள் அத்னால் அவர்கள் மக்களை அழைத்து ஒரு உபதேசம் செய்தார்கள் அது என்ன?

”உங்களின் அடிமைகள் [வேலைக்காரர்கள்] உங்களின் சகோதரர்கள்.இறைவன் நாடினால் உங்களை அவர்கள் கையில் கொடுத்து இருப்பான்[ அதாவது அவர்கள் முதலாளீயாகவும் நீங்கள் அடிமைகளாகவும் இருப்பீர்கள்] அத்னால் நீங்கள் எதை உண்கிறீர்களோ அதை அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள் .எதை உடுத்துகிறீர்களோ அதையே அவர்களுக்கு உடுத்தக் கொடுங்கள் . நீங்கள் வசிக்கும் இடங்களில் அவர்களும் வசிக்க வையுங்கள்.அவர்கள்மீது கடினமான வேலைச்சுமையை சுமத்தாதீர்கள் அவ்வாறு சுமத்த நேரிட்டால் அவர்களுக்கு உதவியாக நீங்களும் இருங்கள் ....என்று உபதேசம் செய்தார்கள் .இதை நான் முதலில் படித்தபோது என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து என் நெஞ்சை நனைத்தது .

இதெற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இன்னும் ஒன்றும் சொன்னார்கள் .உங்களிடம் வேலை செய்யும் சமையல்காரர்கள் அடுப்பில் வெந்து உங்களுக்காக அறுசுவை உணவை சமைத்து எடுத்து வரும்போது அந்த உணவின் சுவையான பகுதியின் ஒரு கவளத்தை எடுத்து அந்த சமையல்காரருக்கு ஊட்டி விடுங்கள்......போதுமா ...போதுமா...இஸ்லாத்திலே இணைந்து வாழ்வதற்காக நான் ஏன் பெருமைப் பட கூடாது........தொடரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சொந்தக் கதை பாகம்7  Empty Re: சொந்தக் கதை பாகம்7

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Nov 2011 - 12:35

நண்பனை முதல்பகுதியில் பகடைக்காயாய் பாவித்து சில உண்மைகளை விபரித்தீர்கள் சுவையுடன் வியந்து நோக்கினேன் உண்மை அப்பட்டமான உண்மைகள் இஸ்லாத்தைப்பொறுத்தவரை அனைவரும் சமமே அடிமைத்தனத்தினை அடியோடு அழித்திட இஸ்லாம் மாத்திரமே நடவெடிக்கை எடுத்திருந்து இன்றும் இந்த நிலை இருக்கிறது என்று உங்கள் சம்பவத்தின் வாயிலாக அறிந்து அதிர்ச்சியுற்றேன் மனிதனை மனிதன் ஆழலாம் தவறில்லை மனிதன் மீதமர்ந்து ஆளநினைக்க கூடாத அதுதான் அடிமைத்தனம் கண்ணுக்குத்தெரி்ந்தாலும் தெரியாவிட்டாலும் சில இடங்களில் இந்த அடிமைத்தனம் இருந்துகொண்டுதான் இருக்கிறது இஸ்லாத்தை முழுதாக ஏற்று உணர்ந்தவர்கள் இவற்றை செய்வதில்லை இறைவனுக்கு அஞ்சி நடப்பார்கள் மிக்க நன்றி தொடருங்கள்


சொந்தக் கதை பாகம்7  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தக் கதை பாகம்7  Empty Re: சொந்தக் கதை பாகம்7

Post by நேசமுடன் ஹாசிம் Mon 28 Nov 2011 - 15:14

இதெற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இன்னும் ஒன்றும் சொன்னார்கள் .உங்களிடம் வேலை செய்யும் சமையல்காரர்கள் அடுப்பில் வெந்து உங்களுக்காக அறுசுவை உணவை சமைத்து எடுத்து வரும்போது அந்த உணவின் சுவையான பகுதியின் ஒரு கவளத்தை எடுத்து அந்த சமையல்காரருக்கு ஊட்டி விடுங்கள்......போதுமா ...போதுமா...இஸ்லாத்திலே இணைந்து வாழ்வதற்காக நான் ஏன் பெருமைப் பட கூடாது..

@. @.


சொந்தக் கதை பாகம்7  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தக் கதை பாகம்7  Empty Re: சொந்தக் கதை பாகம்7

Post by அப்புகுட்டி Mon 28 Nov 2011 - 15:35

”உங்களின் அடிமைகள் [வேலைக்காரர்கள்] உங்களின் சகோதரர்கள்.இறைவன் நாடினால் உங்களை அவர்கள் கையில் கொடுத்து இருப்பான்[ அதாவது அவர்கள் முதலாளீயாகவும் நீங்கள் அடிமைகளாகவும் இருப்பீர்கள்] அத்னால் நீங்கள் எதை உண்கிறீர்களோ அதை அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள் .எதை உடுத்துகிறீர்களோ அதையே அவர்களுக்கு உடுத்தக் கொடுங்கள் . நீங்கள் வசிக்கும் இடங்களில் அவர்களும் வசிக்க வையுங்கள்.அவர்கள்மீது கடினமான வேலைச்சுமையை சுமத்தாதீர்கள் அவ்வாறு சுமத்த நேரிட்டால் அவர்களுக்கு உதவியாக நீங்களும் இருங்கள் ....என்று உபதேசம் செய்தார்கள் .இதை நான் முதலில் படித்தபோது என் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து என் நெஞ்சை நனைத்தது .

இதெற்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல் இன்னும் ஒன்றும் சொன்னார்கள் .உங்களிடம் வேலை செய்யும் சமையல்காரர்கள் அடுப்பில் வெந்து உங்களுக்காக அறுசுவை உணவை சமைத்து எடுத்து வரும்போது அந்த உணவின் சுவையான பகுதியின் ஒரு கவளத்தை எடுத்து அந்த சமையல்காரருக்கு ஊட்டி விடுங்கள்......போதுமா ...போதுமா...இஸ்லாத்திலே இணைந்து வாழ்வதற்காக நான் ஏன் பெருமைப் பட கூடாது........தொடரும்

மிகவும் அருமை எவ்வளவு சிறப்பாக சொல்லியுள்ளார்கள் நபி ஸல் அவர்கள் இன்றய சில அரபிகள் வீட்டில் நான் பார்த்திருக்கிறேன் பெருநாளைக்கு அவர்கள் போடும் ஆடையை வேலைக்காரர்களுக்கும் கொடுத்து உடுக்க சொல்லுவார்கள் என் கண்ணால் கண்டுள்ளேன் உண்மை நல் ஸல் அவர்களின் கருணையே தனி இறைவனின் கபீப்தானே அவர்கள் அவர்களின் வாழ்க்கையை நாமம் பின் பற்றுவோம் நன்றி ஜாஸ்மின்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சொந்தக் கதை பாகம்7  Empty Re: சொந்தக் கதை பாகம்7

Post by ஹம்னா Tue 29 Nov 2011 - 20:21

அருமை ஜாஸ்மின் உங்கள் முயற்ச்சி வரவேற்க்கதக்கது.
பாராட்டுக்கள்.
அன்புடன்
ஹம்னா.


சொந்தக் கதை பாகம்7  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொந்தக் கதை பாகம்7  Empty Re: சொந்தக் கதை பாகம்7

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 8:57

லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே அது நீதானா? ஜாஸ்மின்
நான் உங்கள் கதையை மிகவும் அவதானத்துடன் படித்து வருகிறேன் அது யார் மனதும் புண் படும் படி இருக்கக்கூடாது என்று உடனே படித்துப்பார்த்து விடுவேன் அவதானத்துடன் இது வரை படித்தேன்.
மேலோட்டமாக படித்ததாக பழி சுமத்தி விட்டீர் நீர் பாவி சொந்தக் கதை பாகம்7  688909

நான் கேட்டதற்கிணங்க நான் எதிர் பார்த்ததையும் விட நான் ஹதீஸ் தொகுப்புகழில் எப்படி படித்தேனோ அதை அப்படியே நிறைந்த ஞாபக சக்தியுடன் திறமையாக சான்சே இல்லை ஜாஸ்மின் ஹேட்ஸ் ஆப் யு அருமையாக கொண்டு செல்கிறீர்கள் தமிழ் உச்சரிப்புக்கள் வரிகள் கோர்க்கும் விதம் மிகவும்.

இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் நல் வழி காட்டுவதற்கு போதுமானவன் தோழி அடுத்த கட்டத்தை தொடருங்கள் அன்போடு காத்திருக்கிறோம்
நன்றியுடன்
நண்பன்.
சொந்தக் கதை பாகம்7  741156


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்தக் கதை பாகம்7  Empty Re: சொந்தக் கதை பாகம்7

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum