Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
+2
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
தனது அனுமதியில்லாமல் தனது மனைவி உயர்கல்வியை தொடர்ந்தார் என்ற காரணத்தால் மனைவியின் வலது கரத்தை கணவர் துண்டித்துள்ளார். இச்சம்பவம் பங்களாதேஷ் நாட்டில் இடம் பெற்றுள்ளது. கல்லூரிக்கு படிக்க சென்ற மனைவியின் வலது கைவிரல்களை வெட்டிய கணவனை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 30வயதுடைய ரபிகுல் இஸ்லாம் என்பவர் 21வயதுடைய ஹவா அக்தர் ஜூய் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு நாட்டுக்கு வேலைக்கு சென்றார். கணவன் தன்னோடு இல்லாத நிலையில், ஹவா அக்தர் ஜூய் கல்லூரியில் சேர்ந்து படித்து உள்ளார்.
இது குறித்து ஹவா, கணவரிடம் தொலைபேசியில் பேசும் போது தெரிவித்து உள்ளார். மனைவி கல்லூரியில் படிப்பதை அறிந்த இஸ்லாம், கல்லூரி படிப்பை நிறுத்துமாறு எச்சரித்து உள்ளார். ஆனால் ஹவா இதனை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென நாடு திரும்பினார் ரபிகுல் இஸ்லாம். தனது மனைவி ஹவாவிடம் ஒரு ஆச்சரியமான பரிசு கொடுப்பதாக கூறி, கண்களை ஒரு துணியால் கட்டினார். பின்னர் ஹவாவின் கை, கால்களை ஒரு கயிற்றால் கட்டி, வாயில் துணியை திணித்தார். அதன் பிறகு ஹவாவின் வலது கையில் இருந்த 5 விரல்களையும் கொடூரமான முறையில் வெட்டினார் இஸ்லாம்.
வலியால் துடித்த ஹவாவிடம் கல்லூரிக்கு சென்று படித்த குற்றத்திற்காக இப்படி செய்ததாக கூறியுள்ளார் அவர். ஹவாவிற்கு இந்த தண்டனை அளிப்பதற்கு இஸ்லாமின் சில உறவினர்களும் ஆதரவாக செயல்பட்டு உள்ளனர்.
கையில் ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் மயக்கமடைந்த ஹவா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், காலதாமதமாக கொண்டு வரப்பட்டதால் விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று கூறிவிட்டனர்.
கல்லூரிக்கு சென்று படிக்க வேண்டாம் என்ற கணவர் கூறினார். ஆனால் அவர் நாடு திரும்பிய மகிழ்ச்சியில் இருந்த போது, எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. பரிசளிப்பதாக கூறி எனது விரல்களை வெட்டிவிட்டார். கல்லூரி படிப்பிற்காக இவ்வளவு கொடூரமாக எனது கைவிரல்கள் வெட்டப்படும் என்று எனது கனவில் கூட நினைக்கவில்லை என ஹவா தெரிவித்தார்.
வெட்டப்பட்ட விரல்களை இஸ்லாமின் உறவினர் ஒருவர் குப்பை தொட்டியில் போட்டுவிட்டார். அந்த விரல்களை தேடி எடுத்து டாக்டர்களிடம் கொண்டு வருவதற்குள் காலதாமதம் ஏற்பட்டதால், எனது விரல்களை மீண்டும் இணைக்க முடியாது என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். தற்போது எனது தந்தையின் வீட்டில் உள்ள நான், மீண்டும் எனது கணவரோடு சேர்ந்து வாழ விரும்பவில்லை. எனது இடது கையால் எழுதி பழகி எனது கல்லூரி படிப்பை முடிப்பேன், என அவர் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் இஸ்லாமை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இஸ்லாமையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்களாதேஷ் மனித உரிமைகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சமீப மாதங்களில் படித்த பெண்கள் மீது இலக்கு வைத்து வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் அவற்றில் ஒன்றே இச்சம்பவம் என மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
அவனுக்கும் துண்டித்து விட வேண்டியது தான்... காட்டு விலங்கின் பண்பில் மனித மிருகம்...
Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
படுபாவி இப்படியா செய்வது பாவம் அந்தப்பெண் {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
முதலில் அந்த பெண் செய்தது தவறு கணவனின் அனுமதி இல்லாமல் கல்லூரியில் சேர்ந்து இருக்க கூடாது ....கணவனின் அனுமதி நிச்சயம் வேண்டும் அதை உதாசீணம் செய்து இருப்பது தவறு .ஆனால்
அந்த தவறுக்கு கணவன் கொடுத்த தண்டனை கொடியது மிருகத்தனமானது மிருகத்தனமுள்ள மனிதர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
பாவி அனுடைய கையையும் துண்டிக்க வேண்டும் அப்பதான் அவனுக்கும் அதன் வேதனை புரியும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: உயர்கல்வியை தொடர்ந்த இளம் மனைவியின் வலது கரத்தை துண்டித்தார் கணவர்
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் ஜாஸ்மின் @.jasmin wrote:முதலில் அந்த பெண் செய்தது தவறு கணவனின் அனுமதி இல்லாமல் கல்லூரியில் சேர்ந்து இருக்க கூடாது ....கணவனின் அனுமதி நிச்சயம் வேண்டும் அதை உதாசீணம் செய்து இருப்பது தவறு .ஆனால்
அந்த தவறுக்கு கணவன் கொடுத்த தண்டனை கொடியது மிருகத்தனமானது மிருகத்தனமுள்ள மனிதர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum