Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்...!!!!
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்...!!!!
நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை!
கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்
கேரள கடல் பகுதியில் மீனவர்கள்
துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து கப்பல் கேப்டனிடம் விசாரணை
நடந்து வருகிறது. விசாரணையின் போது, கடற்கொள்ளையர் என நினைத்து
சுட்டுவிட்டதாக கேப்டன் தெரிவித்துள்ளார். குமரி மாவட்டம் நித்திரவிளை
அருகே பூத்துறை பகுதியை சேர்ந்தவர் பிரடி. இவருக்கு
சொந்தமான விசைப்படகில் அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள், கேரளாவில் மீன்
பிடிதொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன் கேரள மாநிலம் சக்திக்குளங்கரை என்ற இடத்தில்
இருந்து, இந்த விசைப்படகில் பூத்துறையை சேர்ந்த பிரடி, மார்ட்டின், ஆன்டனி,
இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி, கிளைமான்ஸ், பிரான்சிஸ்,
அலெக்சாண்டர், கில்சிறியான், முத்தப்பன், ஜான்சன், கில்லாரி மற்றும் கேரள
மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த செலஸ்டின் என 12 பேர் ஆழ்கடலில்
மீன்பிடிக்க சென்றனர்.
நேற்று முன்தினம் மாலை கொல்லம் அடுத்த நீண்டகரை பகுதியில் இருந்து 35
கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே
இத்தாலி நாட்டை சேர்ந்த என்ரிகா லக்சி என்ற சரக்கு கப்பல் வந்துள்ளது.
கப்பலில் இருந்தவர்கள் திடீரென விசைப்படகில் மீன்பிடித்து கொண்டு இருந்த
மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் படகை ஓட்டி சென்ற கொல்லத்தை சேர்ந்த செலஸ்டின் (45), அருகில்
இருந்த இரையுமன்துறையை சேர்ந்த அஜீஸ்பிங்கி ஆகியோர் பலியாகினர். குமரி
மாவட்டத்தை சேர்ந்த செலஸ்டின் நீண்டகாலமாக கொல்லத்தில் குடும்பத்துடன்
தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தவர். இதன்பின், இந்திய கடற்படை
மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்திய இத்தாலி கப்பலை
மடக்கினர். அந்த கப்பல் கொச்சி கொண்டு செல்லப்பட்டது. அங்கு கப்பல்
கேப்டனிடம் எர்ணாகுளம் போலீசாரும், கடலோர காவல் படையினரும் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
கப்பல் கேப்டனிடம் நடத்திய விசாரணையில், ‘‘எங்கள் கப்பலுக்கு குறுக்கே
திடீரென வந்த விசைப்படகை நாங்கள் கொள்ளை கும்பல் என நினைத்து
துப்பாக்கியால் சுட்டோம்’ என்று கூறியுள்ளார். துப்பாக்கிச் சூட்டில்
பலியான அஜீஸ்பிங்கியின் பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். 2 தங்கைகள்
மட்டுமே உள்ளனர். அஜீஸ்பிங்கியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர்,
பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மாலை உடல் இரையுமன்துறைக்கு கொண்டு
வரப்பட்டது.
விமானம் மூலம் தேடுதல்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, இத்தாலி கப்பல் ஊழியர்களே,
‘கடல் கொள்ளையர்களுக்கு எதிராக நாங்கள் துப்பாக்கிசூடு நடத்தினோம்’ என்று
கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், மீன்பிடி
தொழிலாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து கடலோர காவல் படையினர் விமானம் மூலம்
நடத்திய தேடுதலை தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய கப்பல்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசு நிவாரணம்
பலியான 2 மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி
வழங்குவதாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி நேற்று அறிவித்தார்.

முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்...!!!!
எங்கு பார்த்தாலும் கொள்ளை அதனால்தான் அவர்கள் பாதுகாப்பிற்காக சுட்டார்கள் என்று நினைக்கிறேன்
எதுவாக இருந்தாலும் இறந்த குடும்பத்திற்கு சேர வேண்டிய நஷ்டஈட்டை கொடுத்தால் நல்லாருக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நடுக்கடலில் மீனவர்கள் சுட்டுக்கொலை! கடற்கொள்ளையர் என நினைத்து சுட்டுவிட்டோம்...!!!!
ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்க வேண்டும் அதற்கான பதிலாக இருகலாம்
அனுதாபங்கள்
அனுதாபங்கள்
Similar topics
» நடுக்கடலில் தத்தளித்த புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் மீட்பு
» மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு
» சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை
» நடுக்கடலில் பறவைகள் இளைப்பாறுமிடம்!!!
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
» மணமேல்குடி அருகே நடுக்கடலில் தவித்த 3 மீனவர்கள் மீட்பு
» சோமாலிய கடற்கொள்ளையர் மீண்டும் கை வரிசை
» நடுக்கடலில் பறவைகள் இளைப்பாறுமிடம்!!!
» நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர் கடலுக்குள் பலி: மூவர் இலங்கை மீனவர்களால் மீட்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum