சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Today at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Khan11

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

4 posters

Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by ஹனி Tue 25 Jan 2011 - 12:58

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  E_1295118416

சின்னஞ்சிறிய பறவையான சிட்டுக்குருவி, உருண்ட தலையும், குட்டையான வாலையும், சிறிய அலகையும் கொண்டது. ஆண் குருவியின் கழுத்துப் பகுதி கறுப்பாகவும், தலையின் மேல் பகுதி இளம் கறுப்பாகவும், தாடைப் பகுதி வெள்ளையாகவும் இருக்கும். பெண் குருவியின் கழுத்து பழுப்பாக காணப்படும். அலகு, மஞ்சள் கலந்த காவி நிறத்தில் காணப்படும். தானியங்களை உண்ணும். தானியங்கள் கிடைக்காத காலங்களில், பழங் களை உண்டு வாழும். இரை தட்டுப்பாடு ஏற்படும் நேரங்களில், குப்பைகளில் உள்ள புழுக்களையும், வண்டுகளையும் உண்ண தயங்காது. இந்தியா முழுவதும் காணப்படும் சிட்டுக்குருவியினம், கிராமப்புறங்களில் அதிகம் வசிக்கும். தானியங்கள் தாராளமாக அங்கு கிடைப்பதே இதற்கு காரணம். பெரும்பாலான பறவையினங்கள் மனிதர்களிடம் இருந்து விலகியே வாழும் தன்மை கொண்டவை. ஆனால், சிட்டுக்குருவிகள் மனிதர்களுடன் இணைந்த வாழ்க்கை முறையை கொண்டவை. மரங்கள், பாறை இடுக்குகளில் கூடுகளை கட்டாமல், மனிதர்கள் வாழும் வீடுகளில் தான் அவை கூடு கட்டி வாழ்கின்றன. இதனாலேயே, இவை களுக்கு, “ஹவுஸ் ஸ்பாரோ’ என்று பெயரிடப் பட்டுள்ளது. மனிதர்களுக்கு எவ்விதத்திலும் தீங்கு விளைவிக்காத காரணத்தால், இவை பெரிதும் விரும்பப் படுகின்றன. வீடுகளில் குருவிகள் கூடு கட்டினால் அது செல்வத்தையும், சந்ததி விருத்தியையும் அளிக்கும் என்றும், எனவே, குருவி கூட்டை கலைக்கக் கூடாது என்றும் ஒரு நம்பிக்கை இன்றைக்கும் கிராமப்புறங்களில் நிலவுகிறது. இப்பறவைகள், கூடுகளை முழுக்க முழுக்க, மெத்தென்று இருக்கும் வைக்கோலை கொண்டே கட்டுகின்றன. சிட்டுக் குருவிகளுக்கு பூனையும், பாம்பும் தான் பெரிய எதிரிகள். இவற்றின் இறைச்சியை உண்டால் இளமை திரும்பும், வீரியம் கிடைக்கும் என்று சிலர் கருதுவதால், மனிதர்களும் பல நேரங்களில் சிட்டுக் குருவிகளுக்கு எதிரியாகி விடுகின்றனர். ஒரு காலத்தில், “கீச் கீச்’ என்ற சத்தத்துடன் இங்கும் அங்குமாக ஏராளமான சிட்டுக் குருவிகள் அலைந்து கொண்டிருந்தன. விவசாய நிலங்களில் ஆயிரக்கணக்கான சிட்டுக் குருவிகள் இரை தேடுவதை காண முடிந்தது. சமீப காலமாக சிட்டுக் குருவிகளை காண்பது அரிதாக உள்ளது. நகரங்களில் அவற்றின் நடமாட்டமே முற்றிலுமாக ஒழிந்து போய் விட்டது. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியாகும் மின்காந்த அலைகளே சிட்டுக்குருவிகள் இனம் அழிவதற்கு காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், சிட்டுக் குருவிகள் அழிய மொபைல்போன் டவர்கள் ஒரு சதவீதம் என்ற அளவில் தான் காரணமாக இருக் கின்றன என்று சமீபத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. சிட்டுக் குருவிகளின் வாழ்விடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றமே அவற்றின் இனப் பெருக்கம் குறைவதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இன்றைய காலக் கட்டத்தில் கிராமங் களில் கூட குடிசை மற்றும் ஓட்டு வீடுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அனைத்து வீடுகளும் கான்கிரீட் தளங்களாக மாறி விட்டன. சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்கு ஏற்ற வகையில் இன்றைய கான்கிரீட் வீடுகள் இல்லாததால், அவை இருப்பிடம் இல்லாமல் அலைபாய்கின்றன. மனிதர்களோடு, மனிதர்களாக வாழும் இயல்பு கொண்ட சிட்டுக்குருவிகள், கூடு கட்ட முடியாமல் தவிப்பதால், இனப்பெருக்கம் செய்ய முடியாமல் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty Re: சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by நண்பன் Tue 25 Jan 2011 - 13:12

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty Re: சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by *சம்ஸ் Tue 25 Jan 2011 - 13:23

சிறந்த பதிவுக்கு நன்றி உமா :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty Re: சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by mini Tue 25 Jan 2011 - 14:57

://:-:
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty Re: சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by ஹனி Tue 25 Jan 2011 - 17:48

நண்பன் wrote: :”@: :”@:

:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty Re: சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by ஹனி Tue 25 Jan 2011 - 17:54

*ரசிகன் wrote:சிறந்த பதிவுக்கு நன்றி உமா :”@:

:];: :];:
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?  Empty Re: சிட்டுக்குருவியின் சேதி தெரியுமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum