சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள் Khan11

2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Go down

Sticky 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by rammalar on Thu 24 Jan 2013 - 17:33

அஸ்வினி:
-
உங்கள் நட்சத்திர நாயகன் கேது.
இவர் ஞான காரகர். புத்தாண்டு பிறப்பு உங்கள் நட்சத்திரத்துக்குப்
பரம மைத்ர நட்சத்திரத்தில் உதயமாவதால், இந்த ஆண்டு உங்கள்
இல்லத்தில் சுப காரியங்கள் நடக்கும்.

புதிய தொழில் முனைவு வெற்றி தரும். கடன் கணிசமாகக் குறையும்.
மாமன்-மைத்துனர் உறவில் சந்தோஷம் நிலவும். சிலர் தாயகத்தை
விட்டு வெளியூரில் (அ) வெளிநாட்டில் சென்று வேலை பார்க்க நேரும்.
பிரிந்து வாழும் தம்பதிகள் இணைந்து வாழ இடமுண்டு.

பங்கு வர்த்தகம் லாபம் தரும். படித்தவர்களின் நட்புக் கிட்டும்.

அதிஷ்ட எண்கள்: 5,6,9
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு
வணங்கவேண்டிய தெய்வம்: விநாயகர், சரஸ்வதி
அதிஷ்ட நிறம்: மல்டி கலர்ஸ்.
-
------------------------------------------------

பரணி:
-
உங்கள் நட்சத்திர நாயகன் சுக்ரன்.
இவர் போக காரகர். ஆம்! நீங்கள் அனுபவிக்கும் எல்லா சுகபோக சுக
சௌகர்யங்களுக்கு அதிபதி ஆவார். அவரே உமது ராசிக்கு 2ம் இடம் தனம்,
7ம் இடம் வாழ்க்கைத் துணை, தொழில் ஆகியவற்றுக்கும் உரியவர் ஆகிறார்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் மைத்ர தாரையில் உதயமாவதால்
இந்த ஆண்டு சுபங்கள் நிகழும் என்பது விதி. இது தாராபலன் ஆகும். வாக்கினால்
ஜீவனம் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். குடும்பத்தில் சௌபாக்கியங்கள் பெருகும்.
விருந்து விசேஷம் என குதூகலமாகத் திகழும். சிலர் காதல் திருமணம் புரிவர்.
அதிர்ஷ்ட எண்கள்: 4,5,6/அதிர்ஷ்ட திசை: கிழக்கு/அதிஷ்ட தெய்வம்: மகாலட்சுமி/
அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் அனைத்து வெளிர் நிறங்களும்.
-
---------------------------------------------------

கார்த்திகை பாதம் 1:


உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன். இவர் ஆத்ம காரகர். சூரியன்தான்
உலக அறிவு அனைத்துக்கும் அதிபதி. உமது ராசிப்படி பூர்வபுண்ணிய ஸ்தானத்துக்கு
அதிபதி ஆவார். உமது ராசியில் உச்ச பலம் பெறுபவர். புத்தாண்டு பிறப்பன்று
வதைதாரை உதயமாகிறது.

இது உகந்தது அன்று. இதனால் அரசு அலுவல்களில் சுணக்கம் உண்டாகும்.
எனினும் வருமுன் அறிந்து கவனமாக இருப்பதே நன்று. அரசு பணியிலிருப்போர்
அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வருவது நலம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,9/
அதிஷ்ட திசை:கிழக்கு/
அதிஷ்ட தெய்வம்: சூரிய பகவான் மற்றும் சுப்ரமண்யர்/அதிஷ்ட நிறம்: சிவப்பு.

----------------------------------------------------

-
கார்த்திகை 2,3,4 பாதங்கள்:


உமது நட்சத்திர நாதன் சூரியன், இவர் பிதுர்காரகர், ஆத்ம காரகர். உமது
ராசிக்கு 4ம் இடமான சுகஸ்தான அதிபதி ஆவார். புத்தாண்டு பிறப்பின்போது
ஆயில்ய நட்சத்திரத்தில் ப்ரத்யக்கு தாரையில் உதயம். இதனால் உடல் நலனில்
கவனம் செலுத்துவது அவசியம்.

குறிப்பாக இதய நோயாளிகள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவும்.
தாய் தந்தை உடல் நலனில் கவனம் தேவை. இஷ்ட தெய்வ, குல தெய்வ
நேர்த்திக் கடன்களை மறவாமல் நினைவேற்றுவீர்கள். பிரதோஷ தினத்தில்
சிவாலய தரிசனம் செய்க. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க.

“ஓம் ஆதித்யாய நம’ என் தினசரி காலையும் மாலையும் 16 முறை ஜெபிக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்:1,3,5,9/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன்/அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
-
=======================================================
நன்றி: மங்கையர் மலர்
-
பதிவு தொடரும்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by *சம்ஸ் on Thu 24 Jan 2013 - 18:21

நன்றி தொடரட்டும் உங்களின் சேவை :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by rammalar on Fri 25 Jan 2013 - 2:36

ரோகிணி:

உங்கள் நட்சத்திர அதிபதி சந்திரன், உங்கள் ராசியில் உச்ச பலம்
பெறுபவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில்
சாதகத்தாரையில் வருவதால் இந்த ஆண்டு தெய்வபலம் நிறைந்த
ஆண்டாகத் திகழும்.

நீங்கள் செய்யும் பிரார்த்தனைகள்
உடனுக்குடன் நிறைவேறும். இளைய சகோதர வழியில் ஏற்றம் கிட்டும்.
பெயரும் புகழும் சேரும். பெண்களின் ஆதரவு கிட்டும்.

சிலர் ஊர் விட்டுப் போய் வெளியூரில் ஜீவனம் புரியும் வாய்ப்புண்டு.
சரளமாக பணப்புழக்கம் கிட்டும். திரவிய லாபம் பெருகும்.
லலிதா சகஸ்ரநாமம் படிக்கவும்.
-
அதிர்ஷ்ட எண்கள்:2,3,6/
அதிர்ஷ்ட திசை: தென்கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: அம்பிகை/
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்சை
-
-------------------------------------------------
-

மிருகசீரிடம் 1,2 பாதங்கள்:

உங்கள் நட்சத்திர நாதன் செவ்வாய். இவர் ரத்தகாரகர், சகோதர காரகர்.
உமது ராசிக்கு களத்திர ஸ்தானம் எனும் 7ம் வீட்டுக்கும் அயன சயன
போக ஸ்தானம் என்னும் 12ம் வீட்டுக்கும் உடையவர் ஆவார்.

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். சகோதர வழியில் ஏற்றம்
கிட்டும். நிலபுலன்களின் சேர்க்கை உண்டு. பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து
வாழ இடமுண்டு.

அதிர்ஷ்ட எண்கள்:3,6,9/ \
அதிர்ஷ்ட திசை: தெற்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: ஸ்ரீதேவி கருமாரியம்மன்/
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
-
----------------------------------------------

மிருகசீரிடம் 3,4ம் பாதங்கள்:

உமது நட்சத்திர நாதன் செவ்வாய். அவர் உமது ராசிக்கு 6 என்னும் சத்ரு
ஸ்தானத்துக்கும் 11 என்னும் லாப ஸ்தானத்துக்கும் உரியவர்.

அவர் சகோதர காரகர், நில, புலன் என்னும் பூமி காரகர். புத்தாண்டு பிறப்பு
ஆயில்ய நட்சத்திரத்தில் பரத்யக்கு தாரையில் உதயமாவதால் எடுக்கும்
முயற்சிகள் எதுவாயினும் அதில் முன்னெச்சரிக்கையுடன் ஈடுபடவும்.

சகோதர வழியில் சங்கடம் உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிட்டும்.
“சத்ரு சம்ஹார வேல் பதிகம்’ படிக்க நன்று. இயலாதவர்கள், “வெற்றி
வேல் உற்ற துணை’ என்று மனதுக்குள் ஜெபித்து வர வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:1,5,9/
அதிர்ஷ்ட திசை: தெற்கு, தென்கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: யோக நரசிம்மர் மற்றும் தேவி கருமாரியம்மன்/
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
-
------------------------------------------------

திருவாதிரை:

உங்கள் நட்சத்திர நாயகன் ராகு. இவர் யோக காரகர்.
திடீர் பதவி உயர்வு, திடீர் தனவரவு, எதிர்பாராத வெற்றி, வேறு மொழி
பேசுவோரால் அனுகூலம் என தருபவர் ராகுவே ஆவார். புத்தாண்டு பிறப்பு
ஆயில்ய நட்சத்திரத்தில் ÷க்ஷமத் தாரையில் வருவதால் சுக சௌக்கியங்கள்
பெருகும்.

மாமன் மைத்துனர் மூலம் நன்மை கிட்டும். சிலருக்குத் திடீர் திருமணம்
ஆக இடமுண்டு. புதிய வண்டி வாகனச் சேர்க்கை உண்டாகும்.
துர்க்கையம்மனைத் துதித்தால் துன்பம் பறந்தோடும், “துக்க நிவாரண அஷ்டகம்’
படிக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்:1,5,9/
அதிர்ஷ்ட திசை: வடமேற்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: அய்யனார் (அ) ஐயப்பன்/
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம்.
-
---------------------------------------
நன்றி: மங்கையர் மலர்
--
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by rammalar on Fri 25 Jan 2013 - 7:18

புனர்பூசம் 1,2,3ம் பாதங்கள்:

உமது நட்சத்திர நாதன் குரு பகவான்.
அவர் தனம் மற்றும் புத்திர காரகர். அவர் உமது ராசிக்கு 7 எனும்
களத்திர ஸ்தானம் 10 எனும் உத்யோகம் மற்றும் கர்ம ஸ்தானம்
எனும் இரு வீட்டுக்கும் அதிபதி ஆவார்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் விபத்து தாரையில்
வருவதால் கூட்டுத்தொழிலில் கவனம் தேவை. திருமண வாழ்வில்
எதிர்பாராத இன்னல் உண்டாகும். காதல் கை கூடுவதில் காலதாமதம்
ஆகும்.

இன்னலிலிருந்து மீள்வதற்கு வியாழன்தோறும் மௌன விரதம்
இருப்பது நலம். இயலாதவர்கள் குரு பகவானை நினைத்து
ஏதாவது ஒருநாள் ஒரு மணி நேரமாவது மௌன விரதம் இருக்கவும்.

“தட்சிணாமூர்த்தி அஷ்டகம்’ பாராயணம் செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:1,4,9/
அதிர்ஷ்ட திசை: வடக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: மேதா தட்சிணாமூர்த்தி (அ) செந்தில் முருகன்/
அதிர்ஷ்ட நிறம்: பொன்நிறம் (அ) மஞ்சள்
-
-------------------------------------------------

புனர்பூசம் 4ம் பாதம்:


உமது நட்சத்திர அதிபதி குரு பகவான். அவர் தன புத்திர காரகர்
ஆவார். அவர் உமது ராசிக்கு 6ஆம் இடமான ப்ராப்த ஸ்தானம்
மற்றும் 9ம் இடமான பாக்ய ஸ்தானத்துக்கும் உடையர். புத்தாண்டுப்
பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில் வருவதால்
நன்மையும் தீமையும் கலந்தே நிகழும்.

பூர்விக சொத்தில் வில்லங்கம் தீர இடமுண்டு. மாமன் - மைத்துனர்
உறவில் சிறு சிறுப் பிரச்னைகள் வந்து அகலும். கொடுக்கல் வாங்கலில்
கவனம் தேவை.

புதிய ஒப்பந்தம், ஏஜென்ஸி என வரும்போது அதில் உள்ள சட்ட
திட்டங்களைக் கவனமுடன் படித்துப் பார்த்து கையெழுத்துப் போடுவது
நன்று.

“கந்தசஷ்டி கவசம்’, “சண்முகக் கவசம்’, “சத்துரு சம்ஹார
வேற்பதிகம்’, “கந்த குரு கவசம்’, “கந்தர் சரண பத்து’
போன்ற நூல்களில் ஏதேனும் ஒன்றினை தினசரி பாராயணம் செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:1,3,9/
அதிர்ஷ்ட திசை: வடக்கு, வடகிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர்/
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
-
---------------------------------------------

பூசம்:

உமது நட்சத்திர நாயகன் சனி பகவான்.
அவர் உமது ராசிக்கு 7 என்னும் களத்திர ஸ்தானத்துக்கும், 8 என்னும்
ஆயுள் ஸ்தானத்துக்கும் உடையவர். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய
நட்சத்திரத்தில் சம்பத் தாரையில் வருவதால் சரளமான பணப்புழக்கம்
உண்டு.

கூட்டுத் தொழிலில் லாபம் மிகும். சீட்டு நடத்துவோர் மிகவும் கவனமுடன்
கையாளவும். தேர்வுகள் சாதகமாகவே அமையும். வங்கிகளில் பணிபுரிவோர்
பெயரும் புகழும் பெறுவர்.

தினசரி வெங்கடேச சுப்ரபாதம் படிக்கவும். (அ) கேட்கவும். “சுதர்ஸன காயத்ரி
மந்திரம்’ தக்க குரு முகமாக உபதேசம் பெற்று ஜெபிப்பது நன்று.
இயலாதவர்கள் “ஓம் நமோ நாராயணாய நம’ என்று காலையும்,
மாலையும் 16 முறை ஜெபிக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்:3,4,6/
அதிர்ஷ்ட திசை: மேற்கு மற்றும் வடமேற்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாஜலபதி/
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
-
---------------------------------------------
-

ஆயில்யம்:


உமது நட்சத்திர நாதன் புதன். இவர் வித்யா காரகர் மற்றும்
தொழில் காரகர் ஆவார். உமது ராசிக்கு 3ம் இடமான வீரிய விக்ரம்
பாராக்ரமான ஸ்தானம், 12ம் இடம் எனும் அயன சயன போக ஸ்தானம்
ஆகியவற்றுக்கு அதிபதி ஆவார்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்த்திரத்தில் ஜென்ம தாரையில் வருவதால்
உடல் நலனில் கவனம் தேவை. புதிய முயற்சியிலும் பிரயாணத்தின்
போதும் பண பரிவர்த்தனையிலும் எச்சரிக்கை தேவை. பஜகோவிந்தம்,
சுதர்ஸனாஷ்டகம் போன்ற ஏதேனும் ஒன்றை பாராயணம் செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:5,3,4/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு மற்றும் தென்கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: மகாவிஷ்ணு/அ
திர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம்பச்சை
-
-----------------------------------------------------

மகம்:

உமது நட்சத்திர நாயகன் கேது. இவர் ஞான காரகர். புத்தாண்டு பிறப்பு
ஆயில்ய நட்சத்திரத்தில் பரம மைத்ர தாரையில் உதயமாவதால் சகல
சௌபாக்யம் உண்டாகும். மகான்களின் அருளாசிகள் கிட்டும்.

திருத்தல யாத்திரை செல்வீர்கள். நீண்ட கால நோய்க்கு செய்து வந்த
மருத்துவம் பலன் தரும்.

இந்த ஆண்டு முழுவதும் உமது நட்சத்திர அதிபதி கேது பகவான்
உமது ராசிக்கு 10ல் நட்புடன் சஞ்சரிப்பதால் செய் தொழிலில் சற்று கூடுதல்
கவனம் செலுத்துங்கள்.

ஒருமுறை கீழ்ப்பெரும்பள்ளம், காஞ்சிபுரம் சித்திர குப்த சுவாமி கோயில்
சென்று வாருங்கள்.

விநாயகரை மன ஒருமையுடன் வழிபடுவது நன்று.

அதிர்ஷ்ட எண்கள்:3,6,9/
அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர், சித்ரகுப்தர்/
அதிர்ஷ்ட நிறம்: மல்ட்டி கலர்ஸ்
-
---------------------------------------------------
நன்றி: மங்கையர் மலர்

பதிவு தொடரும்...
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by rammalar on Sat 26 Jan 2013 - 1:11

பூரம்:

உமது நட்சத்திர நாயகன் சுக்ரன். இவரை அசுரகுரு என்பர்.
இவருக்கு போக காரகர் என்ற அடைமொழியும் உண்டு.
உமது ராசிக்கு 3ம் இடமான வீரிய விக்ரம் பராக்ரம ஸ்தானம்
10ம் இடமான காரிய (அ) தர்ம ஸ்தானம் ஆகியவற்றுக்கு சுக்ரனே
அதிபதி ஆவார்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் மைத்ர தாரையில்
உதயமாவதால் சுப்ஙகள் உண்டாகும். கடன் கணிசமாகக் குறையும்.
உதயயோக வழியில் செய்துகொண்ட மேல்முறையிடுகளில்
சாதகமானத் தீர்ப்பு கிட்டும்.

சிலர் வெளிநாடு செல்வர். வீடு, மனை, வாங்க இடமுண்டு.
இளைய சகோதர வழியில் ஏற்றம் கிட்டும்.

ஒருமுறை கஞ்சனூர் சுக்ர ஸ்தலம். ஸ்ரீரங்கம், அறுபடை வீடுகளில்
ஒன்றான திருத்தணி சென்று வரவும்.
வீட்டில் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் ஒரு தட்டில் பச்சரிசி
பரப்பி அதில் “மகா லட்சுமி ஆவாஹயாமி’ என்று உச்சரித்தபடி
“ஓம்’ - என்ற பிரணவத்தை எழுதி அதன்மீது மஞ்சள் இட்டு
அதன் மீது குத்துவிளக்கு அலங்கரித்து வைத்து ஐந்து திரி போட்டு
மகாலட்சுமி பூஜை செய்க. சந்தோஷமும் சாந்தியும் நிலவும்.

அதிர்ஷ்ட எண்கள் :3,5,9/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு/அ
அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
-
-------------------------------------------------

உத்திரம் 1ம் பாத
ம்:

உமது நட்சத்திரநாதன் சூரியன். அவர் ஆத்ம காரகர்.
அவர் உமது ராசிநாதனும் ஆவார். புத்தாண்டு பிறப்பில் ஆயில்ய
நட்சத்திரத்தில் வகை தாரையில் உதயமாவதால் உடல் நலனில்
கவனம் தேவை. சிலருக்கு இதயம் தொடர்பான அறுவை சிகிச்சைக்கு
இடமுண்டு.
அரசுப் பணியிலிருப்போர், உயர் அதிகாரிகளிடம் சற்று பக்குவமாக
நடநது கொள்ளவும். பணம் கையாளும் பொறுப்பில் இருப்பவர்கள்
எச்சரிக்கையுடனிருப்பது நலம்.

ஆடுதுறைக்கு அருகில் உள்ள சூரியனார் கோயில் சென்று வரவும்.
“ஆதித்ய ஹிருதயம்’ பாராயணம் செய்யவும். பிரதோஷ வழிபாடு
செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:1,3,5,9/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன்/
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
-
---------------------------------------------------

உத்திரம் 2,3,4 பாதங்கள்:

உங்கள் நட்சத்திர நாயகன் சூரியன். அவர் உமது ராசிக்கு
விரையாதிபதி ஆவார். அவர் ஆத்ம காரகரும் ஆவார். புத்தாண்டு
பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் வதை தாரையில் வருவதால்
உடல் நலனில் கவனம் தேவை.

அரசு வழியில் அல்லலுக்கு இடமுண்டு என்பதால் எச்சரிக்கையாக
இருக்கவும். ஒருமுறை சூரியனார் கோயில் சென்று வழிபட்டு வரவும்.
அதித்ய ஹிருதயம் (அ) சிவபுராணம் பாராயணம் செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:1,5,9/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: பரமசிவன்/
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
-
---------------------------------------

ஹஸ்தம்:

உமது நட்சத்திர நாதன் சந்திரன். இவர் மனம் காரகர்,
மாத்ரு காரகர் ஆவார். உமது ராசிக்கு 11 எனும் லாப
ஸ்தானத்துக்கு உரியவர்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சாதகத் தாரையில்
உதயமாகிறது. மேலும் 11ம் ராசியில் உதயம். எல்லாம் நலமாக
நடக்கும். இறையருள் கூடும். உமது மகன் (அ) மகள் திருமணம்
இனிதே நிகழும்.

லலிதா ஸகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி,
சக்திக் கவசம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நித்ய
பாராயணம் செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:2,3,9/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு மற்றும் தென்கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: அம்பாள்/
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை

--------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by rammalar on Sat 26 Jan 2013 - 1:24

சித்திரை 1,2ம் பாதங்கள்:

உங்கள் நட்சத்திர நாயகன் செவ்வாய். அவர் ரத்த காரகர் மற்றும்
சகோதர காரகர். உமது ராசிக்கு 3,8ம் வீட்டுக்கு உடையவர் ஆவார்.
புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில்
உதயமாவதால் புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் தேவை.

பிரயாணங்களின்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது நலம்.
பெண்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். சகோதர உறவுகளிடம்
எச்சரிக்கையுடன் இருக்கவும்.

அரசியலில் ஈடுபட்டோர் தமது தோழமைக் கட்சியினருடன் உரசல்
போக்கைத் தவிர்க்கவும். மேல் மட்டத்தினருடன், சுமுக உறவை க
டைபிடிக்கவும்.

நரசிம்மரை வழிபட துன்பம் எதுவானாலும் தலைக்கு வந்தது
தலைப்பாகையுடன் போயிற்று என்று ஆகும்.
“ஹரி ஹரி நரசிம்மா ஸ்ரீஹரி நரசிம்மா’ - என்று தினசரி
காலை மாலை இயன்ற அளவு ஜெபிக்கவும்.

அதிர்ஷ்ட எண்கள்:5,6,9/
அதிர்ஷ்ட திசை: வடக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: யோகநரசிம்மர் மற்றும் மகாவிஷ்ணு/
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
-
----------------------------------------------

சித்திரை 3, 4 பாதங்கள்:

உமது நட்சத்திர நாயகன் செவ்வாய். அவர் இரத்த காரகர்,
சகோதர காரகர், தைரிய காரகர் ஆவார். உமது ராசிக்கு குடும்ப
ஸ்தானம் என்னும் 2ம் வீட்டுக்கும் களத்திர ஸ்தானம் என்னும்
7ம் வீட்டுக்கு உடையவர் செவ்வாய். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய
நட்சத்திரத்தில் பிரத்யக்கு தாரையில் வருவதால் குடும்பத்தில்
வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்.

பண பரிவர்த்தனைகளின்போது கூடுதல் கவனம் தேவை. கூட்டுத்
தொழில் புரிவோர் கூட்டாளிகளிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும்.

தம்பதியர் கருத்தொற்றுமையுடன் நடந்து கொண்டால் பிரச்னைகளில்
இருந்து தப்பிக்கலாம். சகோதர உறவுகளிடம் விரும்பத் தகாத
சச்சரவுகள் வர வாய்ப்பு உள்ளது.

\சக்தி கவசம்’, “கந்த சஷ்டி கவசம்’, “சத்ரு சம்ஹார வேற்பதிகம்’,
“தேவி கருமாரியம்மன் கவசம்’ போன்றவற்றில் ஏதேனும ஒன்றை
நித்ய பாராயணம் செய்யவும் இன்னல் தீரும். சாந்தி நிலவும்.

அதிர்ஷ்ட எண்கள்:5,6,9/
அதிர்ஷ்ட திசை: கிழக்கு/
அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி, தேவி கருமாரியம்மன்/
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, ரோஸ், ஆரஞ்சு

-
--------------------------------------------------------

சுவாதி:

உமது நட்சத்திர நாயகன் ராகு. இவர் யோக காரகர். எதிர்பாராத தன
வரவு, எதிர்பாராத சந்திப்பு, அட்வான்ஸ் டெக்னாலஜி சாதனங்கள்
போன்றவற்றுக்குக் காரணமாவது ராகு. புத்தாண்டு பிறப்பு ஆயில்யம்
நட்சத்திரத்தில் ÷க்ஷமத் தாரையில் உதயமாவதால் எதிர்பாராத
தனவரவுக்கு இடமுண்டு

எனினும் பணம் கையாளும்போது கவனம் தேவை. வங்கிகளில் பணம்
பரிவர்த்தனை பொறுப்பில் பணி புரிவோர் மிக்க எச்சரிக்கையுடன்
பணிபுரிதல் அவசியம்.

துர்க்கைச் சித்தர் அருளிய துர்க்காஷ்டகம், துக்க நிவாரண அஷ்டகம்
மற்றும் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி ஆகியவற்றில் ஏதேனும்
ஒன்றை நித்ய பாராயணம் செய்க. இயலாதவர்கள், “ஜெய ஜெய துர்க்கா’
என்றோ, “ஓம் சக்தி’ என்றோ தினமும் 108 முறை எழுதவும். துர்க்கை
வழிபாடு துன்பத்தை விரட்டும். மகிழ்ச்சியை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:3,4,6/
திர்ஷ்ட திசை: வடமேற்கு/அதிர்ஷ்ட தெய்வம்: துர்கை/
அதிர்ஷ்ட நிறம்: புகை வண்ணம் மற்றும் சாம்பல் நிறம்

--------------------------------------------

விசாகம் 1,2,3ம் பாதங்கள்:

உமது நட்சத்திர நாயகன் குரு பகவான். இவர் தன காரகர் மற்றும்
புத்திர காரகர் ஆவார். உமது ராசிக்கு 3ம் இடமான தைரிய ஸ்தானம்
மற்றும் 6ம் இடமான ரோக ருண ப்ராப்த ஸ்தானம் ஆகியவற்றுக்கு
உடையவர்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்யம் நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில்
வருவதால் போக்குவரத்தின்போது மிகவும் எச்சரிக்கை தேவை.
பணம் கையாளும் பொறுப்பில் இருக்கும் அனைத்துப் பிரிவினரும்
மிகவும் கவனமுடன் கடமையைச் செய்யவும். விவகாரத்து வழக்கில்
இழுபறி நிலவும். அறுவை சிகிச்சைக்கு முனைவோர் அதனை ஒத்திப்
போடுவது நன்று.

ஒருமுறை ஆலங்குடி, திருச்செந்தூர், திருவலிதாயம் போன்ற
ஸ்தலங்களுக்கு சென்று வரவும். “ஓம் குருப் பரம்மனே நம’ -
என்று தினசரி 108 முறை ஜபிக்க நன்று. “கந்த சஷ்டி கவசம்’,
“ஸ்கந்த குரு கவசம்’, “சண்முகக் கவசம்’, “தட்சிணாமூர்த்தி
அஷ்டகம்’ இவற்றில் ஏதாவது ஒன்றினை தினசரி பாராயணம் செய்க.

அதிர்ஷ்ட எண்கள்:3,4,6,9/
அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன், ஆலங்குடி குரு பகவான்/
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

-
------------------------------------------
-
விசாகம் 4ம் பாதம்:

உமது நட்சத்திர நாதன் குரு பகவான். அவர் தன, புத்திர காரகர் ஆவார்.
அவர் உமது ராசி 2ம் இடம் என்னும் தனம் வாக்கு நேர்கிற ஸ்தானம்
மற்றும் புத்திர ஸ்தானம் என்னும் 5ம் இடத்துக்கும் உடையவர் ஆவார்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் விபத்துத் தாரையில்
உதயமாவதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
குடும்ப உறுப்பினர்களிடம் சுமுக உறவைப் பராமரிக்கவும். கண் ச
ம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. எனினும் குரு பலம் மற்றும் குரு
பார்வை 2ம் வீட்டுக்கு இருப்பதால் அச்சமடையத் தேவை இல்லை.

பாகப் பிரிவினையை தற்சமயம் வற்புறுத்த வேண்டாம். குரு யந்திரம்
பூஜிக்கவும். குருவின் ஆசியைப் பெறுவது நன்று. “குரு கவசம்’
படிக்கவும். “கந்த சஷ்டி கவசம்’ பாராயணம் நன்று.

அதிர்ஷ்ட எண்கள்:3,6,9/
அதிர்ஷ்ட திசை: வடக்கு/அதிர்ஷ்ட தெய்வம்: திருச்செந்தூர் முருகன்,
ஆலங்குடி குரு பகவான்/
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு
-
-----------------------------------------------
நன்றி: மங்கையர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by ansar hayath on Sat 26 Jan 2013 - 19:15

:+:-:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by rammalar on Mon 28 Jan 2013 - 12:07

அனுஷம்:

உமது நட்சத்திரநாதன் சனி பகவான். அவர் ஆயுள் காரகர்.
உமது ராசிப்படி 3ம் இடமான வீரிய விக்ரம பராக்ரம ஸ்தானம் 4ம்
இடமான சுக, வாகன, கல்வி மற்றும் மாத்ரு ஸ்தானம் ஆகியவற்றுக்கு
உடையவர்.

புத்தாண்டு பிறப்பு சம்பத் தாரையில் வருவதால் சரளமான பணப்புழக்கம்
உண்டாகும். வாக்கினால் ஜீவனம் புரிபவர்கள் ஏற்றும் அடைவர். பிரயாணங்கள்
நல்ல பலன் தரும். பழைய வீட்டைப் புதுப்பிக்கலாம். புதிய வீடு, மனை, பூமி,
வண்டி, வாகனம் வாங்கலாம். பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம்.

தினசரி “வெங்கடேச சுப்ரபாதம்’ கேட்கவும். பிரதி சனிக்கிழமை
வெங்கடாஜலபதியை வழிபடவும். நவக்கிரகத்துக்கு தீபம் ஏற்றவும்.
“சுதர்ஸன அஷ்டகம்’ பாராயணம் செய்க. ஒருமுறை திருப்பதி மற்றும்
மதுரை அருகே உள்ள திருமோகூர் சென்று வரவும்.

அதிர்ஷ்ட எண்கள்:3,4,6,9/
அதிர்ஷ்ட திசை: மேற்கு/அதிர்ஷ்ட தெய்வம்: வெங்கடாசலபதி/
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

-
----------------------------------------------
-

கேட்டை:

உமது நட்சத்திர நாயகன் புதன். அவர் உமது லாப ஸ்தானம் என்னும் 11ம்
வீட்டுக்கும் உடையவர் ஆவார். வித்யா புத்தி, தொழில் ஆகியவற்றுக்கு
புதன் காரகத்துவம் வகிக்கிறார். புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில்
ஜென்ம தாரையில் வருவதால் உடல் நலனில் கவனம் தேவை. கண்
சம்பந்தமான உபாதைக்கு இடமுண்டு. கவனம் தேவை.
-
ஒருமுறை திருவெண்காடு புதன்ஸ்தலம், குருவாயூர் சென்று வருக.
கிருஷ்ணாஷ்டகம், சுதர்ஸன அஷ்டகம், பஜகோவிந்தம் பாராயணம் செய்ய
நன்று. இயன்றவர்கள் சுதர்ஸன ஹோமம் செய்க.
-
அதிர்ஷ்ட எண்கள்:1,3,5,6,9/
அதிர்ஷ்ட திசை: வடக்கு/அதிர்ஷ்ட தெய்வம்: சக்கரத்தாழ்வார் மற்றும் குருவாயூரப்பன்/
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
-
------------------------------------------------------

மூலம்:

உமது நட்சத்திர நாயகன் கேது பகவான். இவர் ஞான காரகர். ஞான மார்க்கம்,
இறை வழிபாடு, ஆராய்ச்சி, முனைவர் பட்டம் பெறுவது போன்றவற்றுக்கு
இவரே காரகத்துவம்.

புத்தாண்டு பிறப்பு ஆயில்ய நட்சத்திரத்தில் சம்பத் தாரையில் வருவதால்
தெய்வ பலம் மிகும். பிரார்த்தனைகள் நடந்தேறும். நேர்த்திக் கடனை
நிறைவேற்றுவீர்கள். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை.

கேது ஸ்தலமான கீழ்பெரும்பள்ளம், விருத்தாசலம் என்ற திருத்தலத்தில்
உள்ள ஆழத்துப் பிள்ளையார், காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்த சுவாமி,
குடைவரைக் கோயிலில் உள்ள பிள்ளையார்பட்டி போன்ற ஸ்தலங்களுக்குச்
சென்று வழிபட நன்று.

விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய ஸித்திமாலை, கணேச புஜங்கம்,
ருணஹர கணபதி ஸ்தோத்திரம் படிக்க நன்று.

அதிர்ஷ்ட எண்கள்:3,6,7/
அதிர்ஷ்ட திசை: கன்னிமூலை என்னும் நிருதி திசை (தென்மேற்கு)
அதிர்ஷ்ட தெய்வம்: விநாயகர் மற்றும் சித்திரகுப்த சுவாமி/
அதிர்ஷ்ட நிறம்: சித்திர வண்ணம்.
-
----------------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: 2013 எப்படி? 27 நட்சத்திரத்துக்கான கனகச்சித வருட பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum