Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காசா சுரங்கப்பாதைகளை மூடுவதால் ஹமாஸ், எகிப்து இராணுவம் தீவிரம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

காசாவுக்கும் எகிப்துக்கும் இடையிலான நூற்றுக்கணக்கான சுரங்கப்பாதைகளை காசாவை ஆளும் ஹமாஸ் மற்றும் எகிப்து இராணுவம் மூடி வருகிறது. சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் சுரங்கப்பாதையூடாக கடத்தப்படுவதாக கூறி ஹமாஸ் அரசு அவைகளை மூடிவிடுவதோடு எகிப்து இராணுவம் உயிர் ஆபத்து விளைவிக்கும் வகையில் சுரங்கப் பாதைகளில் தண்ணீரை நிரப்பி தடங்கலை ஏற்படுத்துவதாக சுரங்கப்பாதைகளின் உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
“கடந்த 2010ம் ஆண்டில் 1,200 க்கும் அதிகமாக இருந்த சுரங்கப் பாதைகள் தற்போது 270 ஆக குறைவடைந்திருக்கிறது” என காசா அதிகாரி ஒருவர் ஏ. எப்.பி. செய்திச் சேவைக்கு கூறினார்.
“பொதுமக்களுக்கு கேடு விளைவிக்கக்கூடிய தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துவதால் பெரும்பாலான சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன” என்றும் அவர் குறிப்பிட்டார். இதில் ஹமாஸ் 900 க்கும் அதிகமான சுரங்கப்பாதைகளை மூடியிருப்பதாகவும் ஏனையவைகளில் எகிப்து இராணுவம் தண்ணீரை நிரப்பி பயன்படுத்த முடியாமல் செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
“எகிப்து இராணுவம் சுரங்கப் பாதைக்குள் தண்ணீரை நிரப்பி அவைகளை மூடிவிடுகின்றனர்” என்று காசாவின் ரபா எல்லையில் இருக்கும் சுரங்கப்பாதை ஒன்றின் உரிமையாளர் குறிப்பிட்டார். “இங்கு எமக்கு வேறு வேலையில்லை. நாம் வாழ்வதற்கு என்ன செய்வோம். இந்த சுரங்கப் பாதைகள் எமது வாழ்வாதாரங்களாக இருக்கின்றன. அவர்கள் எத்தனை முறை இவைகளை இடித்தாலும் நாம் மீண்டும் கட்டுவோம்” என்று அந்த சுரங்கப்பாதை உரிமையாளர் குறிப்பிட்டார்.
அபூ அல் அஸ்ஸாத் என்ற மற்றொரு சுரங்கப் பாதை உரிமையாளர் கூறும்போது “எகிப்தியர் எனது சுரங்கப்பாதையை இருமுறை மூடினார்கள். ஆனால் ஒரு மாதத்திற்குள் மீண்டும் சுரங்கப்பாதை அமைத்தேன். ஏனென்றால் இது எனது வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டமாகும்” என்றார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் ஹமாஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் இஸ்ரேல் காசா பகுதியை முடக்கியதையடுத்தே எகிப்துக்கான சுரங்கப் பாதைகளை அமைக்க ஹமாஸ் அரசே அனுமதி அளித்தது. அந்தக் காலப் பகுதியில் 2,500 முதல் 3000 வரை சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டன. எனினும் 2010 இல் இஸ்ரேல் தனது தடையில் தளர்வை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இவைகளில் வீழ்ச்சி கண்டது.
எனினும் காசாவுக்கான வாகனங்கள் தொடக்கம் கட்டுமானப் பொருட்கள் வரை இந்த சுரங்கப்பாதையூடாகவே கொண்டு வரப்படுகின்றன. இதில் எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஆட்சிக்கு வந்த பின் அதே சிந்தனை கொண்ட ஹமாஸ் அமைப்பு புரிந்துணர்வு அடிப்படையில் இந்த சுரங்கப் பாதைகளை மூடி வருகிறது. குறிப்பாக கடந்த ஆகஸ்டில் காசா எல்லைக்கு அருகில் எகிப்தின் 16 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த சுரங்கப்பாதைகளை மூடும் நடவடிக்கை எகிப்து இராணுவத்தால் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த காலப்பகுதியில் 150, முதல் 200 சுரங்கப் பாதைகள் எகிப்து இராணுவத்தால் மூடப்பட்டதாக சுரங்கப் பாதை ஒன்றின் உரிமையாளர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரியில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்துகளில் ஆறு பலஸ்தீனர் கொல்லப்பட்டனர். கடந்த 2007 தொடக்கம் இதுவரை சுரங்கப்பாதை விபத்துகளில் 233 பணியாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாக காசாவில் இயங்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் பல்வேறு வான் தாக்குதலில் 20 சுரங்கப்பாதை பணியாளர்கள் பலியாகியுள்ளனர்.
தினகரன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கலவன் பாடசாலைகளுக்கு ஹமாஸ் அமைப்பு தடை
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» இஸ்ரேல் - காசா வன்முறையில் 30 பேர் பலி
» காசா செல்ல அஹமதினஜாத் ஆர்வம்
» பதா - ஹமாஸ் கெய்ரோவில் பேச்சுவார்த்தை
» ஹமாஸ் வெற்றிப் பிரகடனம்
» இஸ்ரேல் - காசா வன்முறையில் 30 பேர் பலி
» காசா செல்ல அஹமதினஜாத் ஆர்வம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum