சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு Khan11

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு

Go down

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு Empty கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு

Post by நண்பன் Tue 7 May 2013 - 10:14

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல்: 70 வீதம் வாக்குப் பதிவு
கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் சுமார் 70.23 சதவீத வாக்குகள் பதிவாகின.

மொத்தம் உள்ள 224 சட்டப் பேரவைத் தொகுதிகளில் பிரியாபட்டணா தொகுதி நீங்கலாக, மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு சில சிறிய சம்பவங்கள் தவிர, மாநிலத்தில் பொதுவாக அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

வாக்கு எண்ணிக்கை வரும் புதன்கிழமை (மே 8) நடைபெறும்.

கர்நாடகத்தின் 14 வது சட்டப் பேரவைக்கான தேர்தல் வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கடுமையான வெயிலை கருத்தில் கொண்டு வாக்குப் பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டிருந்தது.

223 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பா. ஜ. க., காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக ஜனதா கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 2940 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 1.35 இலட்சம் பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 2.5 இலட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் சுமார் 65 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப் பதிவு :

காலை 7 மணி முதலே வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது. முதல் முறையாக வாக்குரிமை பெற்றிருக்கும் 18 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்குச் சாவடிகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் வாக்களிக்க திரண்டனர்.

பெண்கள், முதியோர், ஊனமுற்றோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும், ஆர்வமுடன் வாக்களித்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. மொத்தம் 70.23 சதவீத வாக்aகுகள் பதிவாயின. பெங்களூர் ஊரக தொகுதியில் அதிகபட்சமாக 77.95 சதவீதமும், பெங்களூர் நகர்ப்புற தொகுதியில் குறைந்தபட்சமாக 52.83 சதவீதமும் பதிவாகின.

வாக்காளர் பட்டியலில் குளறுபடி:

பெங்களூர் மகாலட்சுமி லே அவுட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றமடைந்த நூற்றுக் கணக்கானோர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மைசூரில் பல்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாததால் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மங்களூர், கோலார், பெல்லரி, தாவணகெரே, பீதர் போன்ற இடங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் குளறுபடி இருந்ததாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு இயந்திரங்களில் கோளாறு :

ராமநகரம் மாவட்டம், கனகபுரா தவிர, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200 க்கும் அதிகமான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. பழுது நீக்கப்பட்டு காலை 9 மணிக்குப் பிறகு வாக்குப் பதிவு தொடங்கியது.

தேர்தல் புறக்கணிப்பு :

குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தராததைக் கண்டித்து, ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசுகுர் வட்டத்தில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்தனர்.

ஒரு வாக்குச் வாடியில் திடீரென நுழைந்த சோமலிங்கப்பா என்ற வாக்காளர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை உடைத்து நொறுக்கினார். அவரைக் கைது செய்த பொலிஸார் வழக்குப் பதிந்தனர்.

வாக்காளர்களை அழைத்து வருவதில் சிட்லகட்டா நகரில் காங்கிரஸ், மஜத தொண்டர்களிடையே ஏற்பட்ட போட்டி தகராறாக மாறியது. இதில் காங்கிரஸ் தொண்டர் பாபுஜான் தலையில் காயமடைந்தார்.

காங்கிரஸுக்கு 110 இடங்கள் :

வாக்குக் கணிப்பு புதுடில்லி, மே 6 : ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 110 முதல் 116 இடங்களில் வெற்றிபெறும் என்று ஆங்கில செய்தி தொலைக்காட்சியான சி. என் என் ஐ. பி. என் நடத்திய வாக்குக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி 43 முதல் 53 இடங்களில் வெற்றிபெறும் என்று அந்த வாக்குக் கணிப்பு தெரிவிக்கிறது. மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் 43 முதல் 53 இடங்களைப் பெறும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் 16 முதல் 24 இடங்களில் வெற்றி &@Z&தி}Z அந்த வாக்குக் கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.

தினகரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum