சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Khan11

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

4 posters

Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by Muthumohamed Thu 3 Oct 2013 - 22:07

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள்
செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள்
உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக்
காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை),
வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி)
இல்லை.

4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக
விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம்
ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன்
அதை அறியாமைக்கால
வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக
கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண்
குழந்தைகளுக்கு முன்
உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன்
சுவனத்தில் புகுத்துவான்.

9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும்
இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய
கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச்
சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள்
இறைவனை நினைவு கூரும் நாவு,
இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம்,
இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும்
இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா?
அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க
வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம்
திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும்
நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான்
மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க
முடியாது.



அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் 25925_737983246228044_1873239848_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty Re: அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by Muthumohamed Thu 3 Oct 2013 - 22:09

21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ
உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன்அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழையமாட்டான்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார்.
எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில்
சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.

25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள்.
அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக
நடந்து கொள்ளுங்கள்.

29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள்.
விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம்
கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள்
மிக்கதாக இருக்கும்.

32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல.
மாறாக, கோபம் வரும்
போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான
பாவமாகும்.

35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல்
பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர்
பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம்
கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty Re: அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by Muthumohamed Thu 3 Oct 2013 - 22:10

41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால
இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ
சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும்.
தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள்,
நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க
வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக
சிறந்தவன்.

48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல்
வலது கையால் கொடுப்பது தான்.

49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின்
கோபத்தை தடுக்கும்.

50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய்
தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.

54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்

55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான்
உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும்,
மங்களமான நற்குணமும்தான்.

56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து,
ஆரோக்கியத்தை குறைக்கும்.

57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல.
போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.

58. இறைவன்
யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில்
விளக்கத்தை அளிப்பான்.

59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும்,
பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும்
நம்மை சார்ந்தவனல்ல.

60. உன் சகோதரனின்
துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன்
அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில்
ஆழ்த்திடுவான் —
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty Re: அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by ahmad78 Fri 4 Oct 2013 - 10:29

நல்ல பதிவு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty Re: அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by *சம்ஸ் Sat 5 Oct 2013 - 11:36

பகிர்விற்கு நன்றி )(


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty Re: அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by பானுஷபானா Sat 5 Oct 2013 - 11:46

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் Empty Re: அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum