சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

சபல ஆண்களை சமாளிப்பது எப்படி? Khan11

சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Go down

Sticky சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by Nisha on Tue 29 Apr 2014 - 1:28

சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?


பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் அதிக சங்கடம். என்றாலும்கூட சில உத்திகளைக் கடைப்பிடித்தால், இதுபோன்ற தொல்லைகளைத் தவிர்த்துவிடலாம்.

சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால்கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது.

உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் உங்கள் மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள். 'நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை இவளுக்கு மிக முக்கியம் என்பதால் ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள்)' என்கிற எண்ணத்தை அவர் மனதில் பதிய வைப்பானேன்?

சொந்த சோகங்களை அதிகமாக வெளிப்படுத்தினால் 'நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே' என்கிற போர்வையில் மேலதிகாரி எல்லைமீறப் பார்க்கலாம்.

உடை விஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் தவறில்லை. என்றாலும் பொதுவாக ஆடை குறித்த ஆண்களின் எண்ணம் கொஞ்சம் பிற்போக்குத்தனமானதுதான். அதனால் ஆடை விஷயத்தில் கவனம் தேவை. அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி லாங்குவேஜ் எனப்படும் உடல் மொழி. துணிச்சலான பெண்களிடம் வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது சபலக்காரர்களுக்கு எளிது.

பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து விடுவார்கள். ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் பேசிக் கொள்வார்கள். இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு நடக்கலாம். தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு என்பதை மறக்க வேண்டாம்.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல் மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை எதையாவது அளித்தால், அதை உறுதியுடன் மறுத்து விடுங்கள். “எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீட் பாக்ஸை நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது என்கிறீர்களா? வா ங்கிக் கொள்ளுங்கள். உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

சக ஆண் ஊழியர்கள் 'அடல்ட்ஸ் ஒன்லி' ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் எதிர்ப்பை பதிவுசெய்துவிடுங்கள். அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற ஜோக்குகளைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது. 'இவ்வளவு தாராளமாக இருப்பவள், பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்' என்ற எண்ணம் எழலாம்.

சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது உதவும். உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர். தனித்தீவாக இருக்காதீர்கள்.

உங்கள் வேலையில் நீங்கள் மிகச் சிறப்பானவராக இருந்துவிட்டால், எந்த மேலதிகாரியும் உங்களை அலட்சியப்படுத்திவிடவோ, தவறான கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க மாட்டார்கள். 'ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம்' என்ற எண்ணமேகூட சில தவறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.

 நன்றி முத்தமிழ் மன்றம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by rammalar on Tue 29 Apr 2014 - 8:08

பொதுவா பெண்புத்தி பின்புத்தி என்பதை
நிரூபிக்காம இருக்கணும்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Apr 2014 - 9:22

இத்திரிக்கு கருத்தெழுத காலை 7.00க்கு திறந்தேன் இப்பொழுது 9.11 அதுவரை நேரம் இடம் தரவில்லை காரியாலய வேலை அதிகமாகிவிட்டது 

முக்கியமான விடயத்தினை பெண்களுக்கான புத்திமதியாக எழுதியிருக்கின்ற இந்த விடயம் மிகச் சிறந்தது 
தலைப்போடு ஒத்து விளக்கம் அமைந்திருப்பதும் சிறப்பே

பெருவாரியாக நோக்கும் போது ஆண்கள் சபலப்புத்தி உடையவர்கள் என்று பெண்களால் குற்றம் சாட்டப்பட்டு வருவதை பார்க்கிறோம் 
ஆண் பெண் பிண்ணிப்பிணைந்த வாழ்க்கையினுள் ஆண்களற்று பெண்களும் பெண்களற்று ஆண்களும் எங்கும் தனித்த வாழ்வு கசப்பானதே வெகுவாக உணர்ந்தவர்கள் நாங்கள் 

எமது நாட்டுகளைப்பொறுத்த வரையில் இந்த கலப்பு காரியாலய நடைமுறை இல்லாமல் இல்லை என்றே சொல்லலாம் 

மேலே குறிப்பிட்டது போல் பெண்கள் தங்களைச் சுற்றி ஒரு வேலியை அமைத்துக்கொண்டார்களானால் அவர்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் அதே நேரம் தவறுகள் இடம்பெறுவதற்கு பெண்களும் காரணமாக அமைந்து விடுகின்றார்கள் ஆண்களை விட அதிகமாக பெண்களே இடம் கொடுப்பததை காணக்கிடைக்கிறது 
உடைவிடயத்தில் அவர்கள் காட்டும் அனாகரிகமான முறை மேலும் ஆண்களை சபலப்படச்செய்கிறது 
மனிதனாக படைக்கப்பட்ட ஆண் ஆசைக்கும் அடிமைப்பட்டவனாகவே இருக்கிறான் சபலத்தினை தூண்டாத இடங்களில் சச்சரவுகள் இடம்பெற வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம் 

இந்த விடயத்தில் மிக முக்கியமாக பெண்களே கவனமாக இருக்க வேண்டும்


சபல ஆண்களை சமாளிப்பது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by Nisha on Tue 29 Apr 2014 - 9:35

நிஜம் தான்  ஹாசிம்!

பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என  அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால்  போதும்!

கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.

ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by Nisha on Tue 29 Apr 2014 - 9:39

ஆண்கள் சபல புத்தி உடையவர்கள்  என்பது குற்றச்சாட்டு என்பதை விட அது தான் மனித இயல்பு என கொண்டால் ஆண் பெண் நட்புக்களுக்குள் பாதிப்பு வராது !

எது எப்படி இருந்தாலும் பெண்களாய் நாங்கள் நடந்து கொள்ளும் முறைமை, எடுத்து வைக்கும் அடிகள் தான் அவர்களின் மனதில் சலனங்களை தோற்றுவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Apr 2014 - 9:44

Nisha wrote:ஆண்கள் சபல புத்தி உடையவர்கள்  என்பது குற்றச்சாட்டு என்பதை விட அது தான் மனித இயல்பு என கொண்டால் ஆண் பெண் நட்புக்களுக்குள் பாதிப்பு வராது !

எது எப்படி இருந்தாலும் பெண்களாய் நாங்கள் நடந்து கொள்ளும் முறைமை, எடுத்து வைக்கும் அடிகள் தான் அவர்களின் மனதில் சலனங்களை தோற்றுவிக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.
அது சத்தியமான உண்மை இதை விபரிப்பதற்கு பல்லாயிரம் பந்திகள் எழுதிடலாம் அத்தனை உதாரணங்கள் எம்மததியில் இடம்பெறுகிறது  எழுதுவதற்கு சூழல் இடம்தரவில்லை


சபல ஆண்களை சமாளிப்பது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by பானுஷபானா on Tue 29 Apr 2014 - 12:08

Nisha wrote:நிஜம் தான்  ஹாசிம்!

பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என  அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால்  போதும்!

கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.

ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.

உண்மை தான் நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by ராகவா on Tue 29 Apr 2014 - 12:10

பானுஷபானா wrote:
Nisha wrote:நிஜம் தான்  ஹாசிம்!

பெண்களின் பேச்சு,செய்கை, நடை, உடை, பாவனை என  அனைத்துமே முன்கூட்டிய விழிப்போடு இருந்து விட்டால்  போதும்!

கேலியாய் கிண்டலாய் சில வார்த்தைகளை கேட்டு சிரித்து அல்லது மௌனமாய் சொல்வதும் கூட பெண்மை மீதான ஆண்கள் தவறான புரிதலுக்கு வழி வகுக்கிறது.

ஆரம்பத்திலேயே பெண்கள் தமக்கான் மதிப்பை தகக வைத்து கொண்டால் பின் வரும் நாட்களில் பிரச்சனைகள் வராது. அவரவர் மதிப்பும்,மரியாதையும் அவர்கள் நடந்து கொள்ளும் முறைமையில் தான்.

உண்மை தான் நிஷா.
சபல ஆண்களை சமாளிப்பது எப்படி? 1620852_492826040818437_7700315333393868783_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: சபல ஆண்களை சமாளிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum