சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செம்ம மாஸ்… ஆக்சன் கிங், மக்கள் செல்வன் எல்லாம் சின்னத்திரைக்கு படை எடுக்குறாங்க!
by rammalar Today at 14:33

» தொலைக்காட்சிகளில் இன்றைய சினிமா - ஆகஸ்ட் 2
by rammalar Today at 10:52

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:49

» தேர் - சிறுவர் பாடல்
by rammalar Today at 10:48

» எழிற்கொடைகள் – சிறுவர் பாடல்
by rammalar Today at 10:47

» சீரடி சாய்பாபா சிந்தனை வரிகள்
by rammalar Today at 8:47

» அறிவு ஆறு அல்ல, பத்து (திருமூலர் அற்புத பாடல்)
by rammalar Yesterday at 5:01

» அழிவின் விளிம்பில் உள்ள தேவாங்கு விலங்கை காப்பாற்ற வேண்டும்
by rammalar Yesterday at 4:55

» 'நடப்பது எல்லாம் வேடிக்கைதான் நமக்கு நிகழும் வரை!'
by rammalar Yesterday at 4:47

» வீட்டுத்தோட்டத்திற்கு ஆடி பெருக்கில் 'ஆடிப்பட்டம்'
by rammalar Yesterday at 4:39

» அமெரிக்கா செல்ல இந்தியர்களுக்கு நீடிக்கும் தடை உத்தரவு..!
by rammalar Yesterday at 4:35

» சட்டசபையில் 'மைக்'கை உடைத்தால் கிரிமினல் வழக்கு
by rammalar Yesterday at 4:32

» 1200 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த 'ரவுடி பேபி'..!
by rammalar Sat 31 Jul 2021 - 19:54

» எதில் வெளியாகிறது சூர்யாவின் "ஜெய்பீம்" திரைப்படம்?
by rammalar Sat 31 Jul 2021 - 19:50

» டப்பிங் பணியில் மகன்: அருண் விஜய்யில் வைரல் போஸ்ட்
by rammalar Sat 31 Jul 2021 - 19:45

» நேரடியாக டிவியில் வெளியாகும் பூமிகா.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:42

» 18 இன்ச் இடுப்பை பராமரிக்க ஒருவேளை மட்டும் சாப்பிடும் பெண்.!
by rammalar Sat 31 Jul 2021 - 19:37

» மிஸ்டர் மியாவ் (சினிமா செய்திகள்)
by rammalar Sat 31 Jul 2021 - 18:22

» நயன்தாராவின் டீ கடை பாசம்..
by rammalar Sat 31 Jul 2021 - 9:52

» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Fri 30 Jul 2021 - 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Fri 30 Jul 2021 - 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Fri 30 Jul 2021 - 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Fri 30 Jul 2021 - 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Fri 30 Jul 2021 - 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Fri 30 Jul 2021 - 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Fri 30 Jul 2021 - 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Fri 30 Jul 2021 - 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Fri 30 Jul 2021 - 18:03

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! Khan11

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

3 posters

Go down

Sticky பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:12

உலகின் பெரிய டிரக் பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684181-dump-truck
சுரங்கங்களில் பயன்படுத்தும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய டிரக்கை பெலாரஸ் நாட்டை சேர்ந்த டிரக் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. BelAZ 75710 என்று பெயரிடப்பட்ட இந்த பிரம்மாண்ட டிரக்கில் ஒரு பெரிய வீட்டையே வைத்து கொண்டு செல்ல முடியும். கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த டிரக் தற்போது சைபீரிய பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் வைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2015ம் ஆண்டு முதல் வணிக ரீதியில் உற்பத்தி செய்யப்பட உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:13

உலகின் பெரிய அகழ்வு எந்திரம்

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684188-excavator

சுரங்கங்களில் அகழ்வு பணிகளில் பயன்படுத்துவதற்காக ஜெர்மனியை சேர்ந்த கிரப் நிறுவனம் உருவாக்கிய உலகின் மிகப்பெரிய அகழ்வு எந்திரம்தான் Bagger 288. ரெயின்பிரான் என்ற நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்காக தயாரித்துக் கொடுக்கப்பட்ட இந்த நகரும் அமைப்புடைய அகழ்வு எந்திரம் ஒரு கால்பந்து மைதானத்தின் வடிவத்திலானது. இது 98 அடி ஆழம் வரை அகழ்ந்தெடுக்கும் திறன் கொண்டது. இது ஒரு நிமிடத்துக்கு 10 மீட்டர் வரை நகரும். இது திரும்புவதற்கு குறைந்தது 100 மீட்டர் சுற்றளவு வேண்டும். இந்த அகழ்வு எந்திரம் 2012ல் வெளிவந்த கோஸ்ட் ரைடர் படத்தில் காட்டப்பட்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:14

உலகின் பெரிய கிராவ்லர்

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684175-crawler

செயற்கைகோள்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்காக நாசா உருவாக்கிய இந்த மிகப்பெரிய கிராவ்லர்கள் உலகின் மிகப்பெரிய வாகனங்களில் ஒன்றாக இருக்கிறது. 131 அடி நீளமும், 114 அடி அகலம் கொண்டது. இதன் தரை இடைவெளியையும் கூட்டிக் குறைக்க முடியும். இந்த கிராவ்லரை 30 எஞ்சினியர்கள் மற்றும் டிரைவர்கள் கொண்ட குழு இயக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:14

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684212-passenger-ship

உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல் ராயல் கரீபியன் நிறுவனத்திற்கு சொந்தமான ஓசிஸ் ஆஃப் த சீஸ் என்ற சொகுசு சுற்றுலா கப்பல். உலகிலேயே முதல்முறையாக 6,000க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் இதுதான். 2009ம் ஆண்டு சேவைக்கு வந்தது. மணிக்கு 41.9 கிமீ வேகத்தில் செல்லும். இது 1.4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது. கரீபியன் கடல் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:15

உலகின் பெரிய சூப்பர் டேங்கர் கப்பல்
பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684205-long-ship

உலகின் மிகப்பெரிய சூப்பர் டேங்கர் கப்பலாக சீவைஸ் ஜெயன்ட் குறிப்பிடப்படுகிறது. இது தற்போது மான்ட் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது 1979ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கப்பல் 81 அடி நீளம் கொண்டது. 2009ம் ஆண்டு டிசம்பரில் இந்த கப்பல் கடைசி பயணத்தை மேற்கொண்டது. கடந்த 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த கப்பல் உடைப்பு நிறுவனம் ஒன்று இந்த கப்பலை வாங்கியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:16

உலகின் பெரிய விமானம்

பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684194-fixed-wing-aircraft

உலகின் மிகப்பெரிய ஆகாய விமானமாக அன்டோனோவ் ஏஎன் 225 மிரியா குறிப்பிடப்படுகிறது. கடந்த 1980களில் சோவியத் யூனியனின் அன்டோனோவ் டிசைன் பீரோ இந்த விமானத்தை தயாரித்தது. 1988ல் சேவைக்கு வந்தது. மிரியா என்றால் உக்ரைன் மொழியில் கனவு என்று அர்த்தமாம். உக்ரைனை சேர்ந்த நிறுவனம் ஒரே ஒரு விமானத்தை இயக்கியது. இரண்டாவது விமானம் போதிய நிதி இல்லாதல் பாதியிலேயே கைவிடப்பட்டது. விண்வெளி ஓடங்களை கொண்டு செல்வதற்காக இது உருவாக்கப்பட்டது. இன்றைக்கும் கனரக பொருட்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்தில் பயன்படுத்தப்படுகிறது. பின்புறத்திலான மெயின் லேண்டிங் கியர் 32 சக்கரங்களை கொண்டது. இதில் சில சக்கரங்கள் திருப்பும் வசதி கொண்டது. எனவே, இதனை 200 அடி அகலம் கொண்ட ஓடுதளத்தில் கூட எளிதாக திருப்ப முடியும். மணிக்கு 800 கிமீ வேகத்தில் பறக்கும். . உலகின் நீளமான இறக்கை கொண்ட விமானம். 290 அடி நீளம் கொண்ட இறக்கை நீளம் கொண்ட இந்த விமானத்தில் 640 டன் கனரக பொருட்களை கொண்டு செல்ல முடியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:17

உலகின் பெரிய பயணிகள் விமானம்
பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684168-airbus

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமாக ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ380 இருந்து வருகிறது. டபுள்டெக்கர் விமானமான இதில், மூன்றாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் 555 பயணிகள் பயணிக்கலாம். இந்த விமானம் 15,700 கிமீ தூரம் இடைநில்லாமல் பறக்கும் வல்லமை கொண்டது. இது 650 டன் எடையை தூக்கிக் கொண்டு பறக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:17

உலகின் பெரிய நீர்மூழ்கி கப்பல்
பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684224-submarine

தி புரொஜெக்ட் 941 அல்லது அகுலா என்ற நீர்மூழ்கி கப்பல்தான் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கி கப்பலாக குறிப்பிடப்படுகிறது. இது ரஷ்ய மொழியில் சுறா என்று பொருள்படுகிறது. இது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பலாகும். ஒரு மாதம் கூட நீரில் மூழ்கி இருப்பதற்கான வசதிகளை கொண்டது. 1980ல் செயல்பாட்டு வந்த இந்த நீர்மூழ்கி கப்பலை புனரமைக்க திட்டமிட்டபோதிலும், இதனை புனரமைக்கும் செலவில் ஒரு புதிய நீர்மூழ்கி கப்பலை உருவாக்கிவிடலாம் என கருதி, அந்த திட்டம் கைவிடப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:18

உலகின் பெரிய விமானம்தாங்கி போர்கப்பல்
பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684230-warship

அமெரிக்க கடற்படையில் 10 நிமிட்ஸ் கிளாஸ் விமானதாங்கி போர்கப்பல்கள் உள்ளன. இந்த 10 விமானம் தாங்கி கப்பல்களுக்கு தலைமை வகிக்கும் கப்பலுக்கு நிமிட்ஸ் என்ற ராணுவ உயரதிகாரியின் பெயரில் இயங்குகிறது. அணுசக்தி மூலம் இயங்கும் இந்த சூப்பர் கேரியர் விமானம் தாங்கி கப்பல்கள் 1,092 அடி நீளம் கொண்டது. மணிக்கு 56 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை கொண்டவை. 20 ஆண்டுகளுக்கு எரிபொருள் நிரப்பும் தேவையில்லை. 50 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டதாக இந்த கப்பல்கள் குறிப்பிடப்படுகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:19

உலகின் பெரிய ஹெலிகாப்டர்
பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684200-helicopter

ஹோமர் என்றழைக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் உலகின் பிரம்மாண்டமான ஹெலிகாப்டர் மாடலாக குறிப்பிடப்படுகிறது. 1969ம் ஆண்டு முதல் புரோட்டோடைப் மாடல் 31,030 கிலோ எடையை தூக்கி வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்தது. மேலும், இதன் வி12 மாடல் அதி உயரத்தில் பறந்து சாதனை படைத்தது. இந்த ஹெலிகாப்டரின் சாதனைகளை இதுவரை முறியடிக்கப்படவில்லை. இந்த ஹெலிகாப்டரை டிசைன் செய்த எஞ்சினியர்களுக்கும் ஏராளமான விருதுகள் கிடைத்தன. இதன் தயாரிப்பு 1974ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. மாஸ்கோ அருகிலுள்ள லூபர்ட்ஸ்கை மாவட்டத்திலுள்ள ஆலையில் இந்த ஹெலிகாப்டரின் புரோட்டோடைப் மாடல் இன்றைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ahmad78 Tue 29 Apr 2014 - 16:20

உலகின் பெரிய ராக்கெட்
பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! 28-1398684218-rocket

சாட்டர்ன்5 என்ற அமெரிக்காவின் ராக்கெட்தான் உலகின் இதுவரை தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளில் சாட்டர்ன் 5தான் பெரியதாக குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து 13 முறை சாட்டர்ன்- 5 ராக்கெட்டுகள் உயிர்ச்சேதம், பொருட்சேதம் இல்லாமல் ஏவப்பட்டுள்ளன. இந்த சாட்டர்ன் ராக்கெட்டில் 1968 - 1972ம் ஆண்டுகளுக்கு இடையில் 24 விண்வெளி வீரர்கள் நிலவுக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக எடையை சுமந்து கொண்டு விண்வெளிக்கு பறந்து செல்வதும் இதன் பெருமை. 363 அடி நீளமும், 33 அடி அகலமும் கொண்டது.


thatstamil


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 29 Apr 2014 - 16:36

அத்தனையும் பிரமிப்பாக இருக்கிறது அருமையான பகிர்வு நன்றிகள்


பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by ராகவா Tue 29 Apr 2014 - 16:53

அத்தனையும் மிக அருமை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பிரமிப்பில் ஆழ்த்தும் உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum