சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோதனை - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 13:27

» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Tue 29 Sep 2020 - 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 29 Sep 2020 - 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Khan11

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by ரமேஸ் குமார் on Sun 4 May 2014 - 6:12

கூறுங்கள் நண்பர்களே!!!!!!!

ரமேஸ் குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Sun 4 May 2014 - 13:26

பட்டி மன்ற விவாதத்துக்குரிய தலைப்பு எனினும்  உங்கள் கருத்து புரிதல் அல்லது எங்காவது படித்தது என எதையும் பகிராமல்  தலைப்பில் மட்டும்  இட்டால் போதாது ரமேஷ்குமார்.

நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதுங்கள்.  உங்கள் கருத்தை யொட்டியோ எதிராகவோ  வாதங்கள் வரும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 14:40

எனது கருத்து படி இரண்டுமே குற்றம் தான் (வாங்குவது தான் பயங்கர குற்றம்)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 May 2014 - 14:45

ஆரம்பியுங்கள் தொடருமென்று நினைக்கிறேன் 

நல்ல தலைப்பு

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Post by Nisha on Sun 4 May 2014 - 14:55

கொடுப்பதுதான் குற்றம்ங்கறேன் நான்.

யாரு நடுவர்னு சொல்லுங்க.. முத்து முகமது அந்தப்பக்கம், நான் இந்தபக்கம்.. நடுவில் ஹாசிம். ஹாஹா.. ஹாசிம் அந்தப்பக்கம் சாய்ந்திங்க.. அப்புறம் நீங்க லஞ்ச்ம வாங்கிட்டு தீர்ப்பு சொன்னிங்கன்னு வாங்கு வாங்கென வாங்கிருவேன். நோட்டிஸ்லாம் அடிச்சு ஓடிட்ருவோம். பால்முனை முழுக்க  இருக்கும் சுவர் என்ன வேலி கூட விடாம்ல் ஓட்டுருவோம்.

அதெல்லாம் இருக்கட்டும்! இந்த திரியில் பதிவு  போட்டால்  என்ன லஞ்சம் தருவிங்க எனக்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 15:16

என்ன லஞ்சம் வேணும் உங்களுக்கு எனக்கு தெரியாம அவரிடம் சொல்லுங்க இல்லாட்டி நடக்கறதே வேற ஆமா ?  i* i* i* i* i* 
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 May 2014 - 15:17

சரி நான் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குகிறேன் ஆரம்பியுங்கள் உங்கள் விவாதத்தினை 

இன்றய உலகில் எங்கெல்லாம் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் லஞ்சமும் சேர்ந்திருக்கிறது ஒரு காரியத்தினை செய்வதென்றால் லஞ்சம் வழங்கித்தான் அதனை செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுகிறோம் இது அதிகமாக அரச கருமங்களில் காணப்படுவதை அவதானிக்கலாம் 

லஞ்சம் மிகப்பெரிய சமுகத்தின் கொடிய நோய்களில் ஒன்று அதனை ஒளிப்பது என்பது மிகக் கடினம் அது ஒரு புறமிருக்க 

லஞ்சம் வாங்குவது கொடுப்பது என்பதுடன் இரு சாரார் உடன் படுவதைக் காண்கிறோம் இதில் எது குற்றம் என்பதுதான் இன்றய தலைப்பு 

இங்கு நிஷா அவர்கள் கொடுப்பது தவறு என்னும் தலைப்பில் வாதிட இருக்கிறார் 
முத்து முகம்மது இல்லை வாங்குவதுதான் தவறு என்று வாதிட இருக்கிறார்.. 

எங்கே ஆரம்பியுங்கள் உங்கள் கருத்துகளை தருகிறேன் நல்லதொரு தீர்வு

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Sun 4 May 2014 - 15:25

Muthumohamed wrote:என்ன லஞ்சம் வேணும் உங்களுக்கு எனக்கு தெரியாம அவரிடம் சொல்லுங்க இல்லாட்டி நடக்கறதே வேற ஆமா ?  i* i* i* i* i* 

அப்படி என்ன நடக்குமாம்.

நீங்கள் ரெண்டு நாள் சேனைப்பக்கம் வரமல் எஸ்கேப் ஆகுவிங்க.. அம்புட்டுத்தானேங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Sun 4 May 2014 - 15:39

லஞ்சம் லஞ்சம் என்கிறாங்களே.. அது எங்கே இருந்து எப்போதிருந்து ஆரம்பிக்கிறது என தெரியுமா..

நாம பிறந்ததும் அழாமல் இருக்க  பால் பாட்டிலை தூக்கி வாயில் வைத்தால் அழாமல் இருப்பதிலிருந்து இந்த லஞ்ச்ம கொடுக்கும் பணியை  ஆரம்பிக்கிறோம். 

கல்லில் தடுக்கி விழ்ந்து எழுந்து வலியில் அழுதால் தானாய் போய் விழுந்த குழந்தையை விட்டு  க்ல்லில் மேல் தவறை போட்டு கல்லுக்கு  ரெண்டு செல்ல அடி போட்டு  குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து அழகையை அட்க்கி  அப்பவே இந்த லஞ்ச்ம கொடுத்து காரியம் சாதிக்கும்  காரியம் ஆரம்பமாகி விடுகின்றது .

அப்புறம் படிக்கும்காலத்தில் நீ நல்ல மாக்ஸ் எடுத்தால்  உனக்கு சைக்கிள் பரிசு.  நீ நல்லா விளையாடி  முதலில் வந்தால்  அது தருவேன் இது தருவெனெனு சொல்லி வளர்த்து ஏதாவ்து காரியம் ஆகணும்னால் ஒன்றை கொடுத்துதான் பெறனும் எனும் நிர்ப்பந்தந்தத்த்தினை தருபவர்கள் யார் என சொல்லுங்கள்.

கொடுப்பவர்கள் தானே..ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல்  ஐந்து வயதில் சாக்லேட்  பத்து வயதில் சைக்கிள், இருபது வயது மோட்டார் சைக்கிள்  30 வயதில் கார் 40 வயதில் வீடு  என வாங்க ஆசைப்பட்டு  யாராவது ஏதாவ்து கொடுத்தால் நம் பணியை செய்வோம்.  நாம் பணி செய்வது நமக்காக அல்ல, நமக்கான கடமை அல்ல என ஆழமனதில் ஐந்தில் விதைத்தபின் ஐமபது வயதில்  திருந்த வில்லை எப்படி சொல்ல முடியுமா..

நாம கொடுப்பதால் தானே அவங்க வாங்கலாம்.. கொடுத்தால் செய்யலாம் எனும் மெத்தனத்துக்கு ஆட்படுறாங்க.  ..

 நமக்கு காரியம் ஆகணும். அது சிறியவயது குழந்தையானாலும் சரி, வாலிப பையனானாலும் சரி, பெரியவர் ஆனாலும் சரி நாம நினைச்சது நடக்கணும், நம்ம இஷ்டம் எல்லாம் உடனே நிறைவாகணுமென கொடுத்து பழக்குவது யாராம்..

நீ படித்தால் அது உனக்கான எதிர்காலம். நீ போய் விழுந்தது உன் தப்பு என யாராவது சொல்லி கொடுக்கிறோமா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 4 May 2014 - 16:09

லஞ்சம் தாயின் கருவறை முதலே ஆரம்பிக்கிறது லஞ்சம் கொடுத்தே குழந்தைகளை கெடுத்து வளர்க்கிறோம் நாம் கொடுப்பதால்தானே அவர்கள் வாங்க முடியும் என்று தனது வாதத்தினை சிறப்பாக எத்தி வைத்துவிட்டார் கலை மாமணி நிஷா அவர்கள் அவர்களின் வாதத்திறமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 

வாருங்கள் முத்து ஆரம்பியுங்கள் உங்கள் முழக்கத்தை 
(பார்க்கலாம் முத்துவின் வாதத்தினை)

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 17:02

Nisha wrote:
Muthumohamed wrote:என்ன லஞ்சம் வேணும் உங்களுக்கு எனக்கு தெரியாம அவரிடம் சொல்லுங்க இல்லாட்டி நடக்கறதே வேற ஆமா ?  i* i* i* i* i* 

அப்படி என்ன நடக்குமாம்.

நீங்கள் ரெண்டு நாள் சேனைப்பக்கம் வரமல் எஸ்கேப் ஆகுவிங்க.. அம்புட்டுத்தானேங்க!

அந்த மாதிரி கோழை தனமான வேலை எல்லாம் நான் செய்யமாட்டேன்

உங்க பதிவுக்கு பதிலுக்கு பதில் கொடுப்பதில் கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்ளோதான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Muthumohamed on Sun 4 May 2014 - 17:13

லஞ்சம் கேட்பதினால் தான் நாங்கள் கொடுக்கிறோம் ஆகவே லஞ்சம் வாங்கு வது தான் மிக பெரிய தவறாகும்

நீங்க சொல்றது எல்லாம் பணக்காரர்கள் வீட்டில் நடக்கும் நடைமுறை சாதாரண ஒரு குடும்பத்தில் நீங்க சொல்வது போல் லஞ்சம் கொடுத்து குழந்தையை வளர்க்க மாட்டார்கள்.

அனைத்து விஷயங்களிலும் ஒரு ஊக்குவிப்பு வேணுமே என்ற ஒரு காரணத்தினால் அவ்வாறு வாக்குறுதிகள் கொடுக்கிறார்களே தவிர அது லஞ்சம் அல்ல (கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறுகிறதா என்று கூட நாம் பார்க்கவேண்டும் காரணம் சூழ்நிலைகள் தான்).

நீங்க சொல்வதை பார்த்தால் வேலைக்கு செல்வது கூட லஞ்சம் தான் காரணம் பணத்திற்கு தானே நாம் வேலை செய்கிறோம்

ஒரு சில அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது இருக்கிறது பல துறைகளில் லஞ்சம் வாங்குவது இல்லையே அதையும் நாம் சிந்திக்க வேண்டும்

வாங்குபவரும் கொடுப்பவரும் திருந்தினாலே ஒழிய லஞ்சம் ஒழிய வாய்ப்புகள் இல்லை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by ரமேஸ் குமார் on Mon 5 May 2014 - 4:23

எரிவதை பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கிவிடும் என்பது போல
கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவது குறையும்.

ரமேஸ் குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 11
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Mon 5 May 2014 - 9:19

Muthumohamed wrote:லஞ்சம் கேட்பதினால் தான் நாங்கள் கொடுக்கிறோம் ஆகவே லஞ்சம் வாங்கு வது தான் மிக பெரிய தவறாகும்

நீங்க சொல்றது எல்லாம் பணக்காரர்கள் வீட்டில் நடக்கும் நடைமுறை சாதாரண ஒரு குடும்பத்தில் நீங்க சொல்வது போல் லஞ்சம் கொடுத்து குழந்தையை வளர்க்க மாட்டார்கள்.

ஹாஹா ஏழைக்கு ஏத்த எள்ளுருண்டையாய் எல்லா வீட்டிலும் இந்த லஞ்சம் எனும் கொடுக்கல்வாங்கல் உண்டுப்பா!  சாக்லேட்டுக்கு பதில் மிட்டாயும்.  மாங்கோபார் மில்க் ஐஸ்கிரிமுக்கு பதில் வண்டியில் வரும் சாக்ரின் ஐஸ்கிருமும்,  சைக்கிளுக்கு பதில் கோலிகுண்டுகளுமாய் மாறுபடுமே தவிர  இந்த  ஊக்கு விப்பு எனும் பெயரில்  கொடுப்பனவுகள் எல்லா இடமும் உண்டுதான்பா..  

அனைத்து விஷயங்களிலும் ஒரு ஊக்குவிப்பு வேணுமே என்ற ஒரு காரணத்தினால் அவ்வாறு வாக்குறுதிகள் கொடுக்கிறார்களே தவிர அது லஞ்சம் அல்ல (கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேறுகிறதா என்று கூட நாம் பார்க்கவேண்டும்  காரணம் சூழ்நிலைகள் தான்).

அட! ஊக்குவிக்கிறேன் என கொடுப்பது தப்பில்லையா! ஊக்குவிப்புக்கு கொடுப்பது லஞ்சம் இல்லையா.. ஏன் பொருளாய் கொடுத்தால் தான் ஊக்குவிக்கணுமா.. நீ படித்தால் உனக்கும் உன் எதிர்காலத்துக்கும் தான் நல்லது. நீ முதலாய் வந்தால்  இலகுவாய் மேலே சென்று வாழ்க்கையின் பிற்காலத்தில்  சுகமே வாழ்வாய் என  குழந்தை அடிமனசில் பதிய சொல்லிகொடுத்தால் போதாதா...

அதை இதை தருகின்றேன் என சொல்லி ஊக்குவிப்பதை விட அடிப்படை உரிமை, இது உனக்காக பணி, கடமை என சொல்லி அந்த இலக்கை அடைந்ததும்  நாம் மகிழ்ந்து நம் மகிழ்ச்சியின் வெளிப்பாடாய் சொல்லாமல் பரிசு வாங்கி கொடுத்தால் அது ஊக்குவிப்பாய் இருக்காதா..

என் வீட்டிலும்  இரண்டு வாலுகள் இருக்கின்றார்கள். போன வாரமும் பிரெஞ்சில் 100 க்கு 100 மார்க்ஸ் எடுத்துட்டு வந்து அம்மா நான் நல்லா படிக்கிறேன்ல என்ன வாங்கித்தருவிங்க என்றா..

நான் சொன்னேன் அடிபோடி--- நீ படிச்சால் உனக்குத்தான்  பிற்காலத்தில் நல்லது. நல்ல வேலை , அதிக வருமானம் கிடைக்கும். எனக்கேவா நீ படித்தாய்.. என.. சொல்லி ஒரு முத்தம் கொடுத்தேன்.  அதே நேரம் அவர்கள் தேவைகள்  இப்படியான சூழ்ல இல்லாமலே நிறைவு செய்யபடுகின்றது.  நான் இதை தருவேன்.. நீ அதை செய் எனும் அடிப்படை  வளர்ந்த பின்னும் ஒரு காரியம் செய்ய எதையாவது எதிர்பார்க்க வைக்கிறது.

அவரவர் கடமை, பணி உண்ர்ந்து செய்தால் செய்தபின் அவர்களை ஊக்குவிக்க பணி உயர்வும். வருமான உயர்வும் கிடைக்கும் எனும் அடிப்படை போதிக்கப்படாமல்.. நமக்கு அவசரமாக காரியம் ஆகணும். .. சட்டதிட்டப்டி போனால் ஒவ்வொரு அலுவலகரின கரமாக போய் காரியம் முடிய காலம் எடுக்கும் என அவசரப்ட்டு..ஒரு மாதத்தில் முடிய கூடிய காரியம் ஒரே நாளில் முடியணும் என ஆசைப்பட்டு காசை கொடுத்து இருந்த இடத்திலிருந்து காரியம் சாதிக்க முனைவது தப்புன்னு நான் உணர்ந்தால் போதும்.

எங்கெல்லாம் பணி மீறல் நடக்கி்றதோ யாருக்கோ தானே. பாதிக்கப்பட்டது எவரோ தானோ என்றில்லாமல்  நாளை நமக்கும் இதே நிலை வரும் என உணர்ந்து நபமக்கு சட்டம் தரும் உரிமையை பயன் படுத்தாமல் இருக்கும் இடத்திலிருந்து காசைக் கொடுத்து  காரிய்ம சாதிக்க நினைத்தால் எப்படி..

என்னை பொறுத்த வரை நேற்று எப்படி நடந்தது  நாளை எப்படி நடக்கும் என்பது எனக்கு தேவை இல்லை.  இன்று நானெப்படி இருக்கிறேன். எனக்கான்  உரிமையை நான பயன் படுத்துகின்றேனா என்பதுதான் முக்கியம்.

நீங்க சொல்வதை பார்த்தால் வேலைக்கு செல்வது கூட லஞ்சம் தான் காரணம் பணத்திற்கு தானே நாம் வேலை செய்கிறோம்.
 
வேலைக்கு செல்வதும் அதற்கான கொடுப்பனவுகளும் நம் பணியை நம சரியாக் செய்யும் போது கிடைககும் உயர்வுகளும் நம் கடமை. நமக்கான்  பணி சட்டதிட்டங்களுக்குட்பட்டு  செய்ல் படுவதும் அதற்கான் வருமானமும், கண்கானிப்பும் ஆளும்  அரசு நமக்கு செய்ய வேண்டிய கடமை. அவரவர் அவர் கடமை உணர்ந்து செயல்படணும்.  

ஒரு சில அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது இருக்கிறது பல துறைகளில் லஞ்சம் வாங்குவது இல்லையே அதையும் நாம் சிந்திக்க வேண்டும்

நீங்களே சொல்கின்றீர்கள் எல்லாரும் வாங்குவதில்லைன்னு அப்புறம் என்ன..

அரச ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அதற்கான் அடிப்படை என்ன . எங்கே அவை ஆரம்பித்தது .. ஏன் ஆரம்பிக்கிறது. இதற்கெல்லாம்  சூத்திரம் என்ன என கண்டு அதை இனிவரும்காலங்களில்  களைய முற்படணுமே தவிர  அடுத்தவர்கள் மேல் பழி போட்டு தப்பிக்கும்  பாங்கை விடணும்.

அரச ஊழியர்கள் ஏன் லஞ்சம் வாங்குகின்ரார்கள். நீங்கள் ஏன் கொடுக்கணும் என இன்னும் பேசலாம். வை்த்தியசாலைகளில்  லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் எப்படி வந்தது எனவும் பேசலாம்.

எல்லாவற்றிக்கும் அடிப்படை நம்காரிய்ம சீக்கிரம் ஆகணும். காத்திருக்க பொறுமை இல்லை அல்லது மனமில்லை. நம்மிடமிருக்கும் பணத்தின் பெருமையை கட்டி காரிய்ம சாதிக்க முற்படாதிருத்தல் தான் முக்கியம்.- 

வாங்குபவரும் கொடுப்பவரும் திருந்தினாலே ஒழிய லஞ்சம் ஒழிய வாய்ப்புகள் இல்லை
எல்லாவற்றிக்கும் அடிப்படை நம்காரிய்ம சீக்கிரம் ஆகணும். காத்திருக்க பொறுமை இல்லை அல்லது மனமில்லை. நம்மிடமிருக்கும் பணத்தின் பெருமையை கட்டி காரிய்ம சாதிக்க முற்படாதிருத்தல் தான் முக்கியம்.-

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Mon 5 May 2014 - 9:26

Muthumohamed wrote:
Nisha wrote:
Muthumohamed wrote:என்ன லஞ்சம் வேணும் உங்களுக்கு எனக்கு தெரியாம அவரிடம் சொல்லுங்க இல்லாட்டி நடக்கறதே வேற ஆமா ?  i* i* i* i* i* 

அப்படி என்ன நடக்குமாம்.

நீங்கள் ரெண்டு நாள் சேனைப்பக்கம் வரமல் எஸ்கேப் ஆகுவிங்க.. அம்புட்டுத்தானேங்க!

அந்த மாதிரி கோழை தனமான வேலை எல்லாம் நான் செய்யமாட்டேன்

உங்க பதிவுக்கு பதிலுக்கு பதில் கொடுப்பதில் கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்ளோதான்

கூல் கூல்! நாங்கள் உங்களை கோழை எனவெல்லாம் சொல்ல மாட்டோம். அதெல்லாம்  ரெம்ப பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய வார்த்தை . சின்ன விஷயத்துகெல்லாம்  இந்த மாதிரி பெரிய வார்த்தை பாவிக்க கூடாது தைரியசாமி!  (_ 

நான் சொன்னதுக்கு சீறும் சிங்கமாய்  தினம் வந்து ஜஸ்ட் பத்து பதிவாவது போட்டு  போவேன்னு சொல்லி இருக்கணும் சாரே! :dance:  :dance:  :dance:

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 9:58

விவாதத்தின்கான முடிவு எழுதிடலாம் என்று நினைக்கிறேன் 
முத்துவின் வாதமும் பாராட்டத்தக்கது லஞ்சம் வாங்குபவர்கள் இல்லை என்றால் நாங்கள் ஏன் கொடுக்கப்போகிறோம் என்று கருத்திட்டார் அவரின் வாதத்தில் அதிகமான விடயங்கள் குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம் பறவாயில்லை பாராட்டுகள் 

நிஷா அவர்களின் கருத்தாடல் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் இருந்தது அருமை அருமை 

முடிவுரைக்கு வருகிறேன் 

லஞ்சம் எனும் பதமே எங்கும் தவறானது மார்க்கங்களாக இருந்தாலும் அரச சட்டங்களாக இருந்தாலும் அனைத்து இந்த லஞ்சம் எனும் விடயத்தினை எதிர்த்து நிற்கிறது 
எமது விவாதத்துக்குள்ளாகும் லஞ்சமானது சட்டத்திற்குப் புறம்பான குற்றம் என்று ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு காரியத்தினை முடித்துக்கொள்ள மேலதிகமாக நாம் மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களைக் குறிக்கிறது இதில் பணமாகவும் இருக்கலாம் பொருளாகவும் இருக்கலாம் இப்போதெல்லாம் பெண்களையே கூட்டிக்கொடுத்து காரியங்களை சாதிக்கிறார்கள் அந்த அளவு லஞ்சம் எம் சமுகத்தில் தலைவிரித்தாடுகிறது 
இங்கு மேலே நாம் பேசிய குழந்தைக்கான ஊக்குவிப்பு மற்றும் மகிழ்வின் நிமித்தம் நாம் கொடுப்பது எல்லாம் லஞ்சமாக கொள்ள முடியாது அவர்களிடம் நாம் எதையும் எதிர்பார்ப்பதில்லை அதனால் நமக்கு மகிழ்வே இழப்பேதும் இருப்பதில்லை 
இருந்தாலும் அவர்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும் எதிர்பார்க்கும் வண்ணம் நாம் வழிநடத்திடலாகாது அதுவே அவர்களின் எதிர்காலத்தினை பாதித்துவிடும். 
ஆக இந்த லஞ்சமானது கொடுப்பது குற்றமா வாங்குவது குற்றமா என்று நாம் எடுத்துக்கொண்டால் வாங்குபவர்கள் உள்ள போதுதான் கொடுக்க முடிகிறது என்று வாதம் வெளிபடையாக எத்திவைத்திடலாம் இருந்தாலும் எமது ஒரு தேவை நிறைவேற்றுவதற்காகவே லஞ்சம் கொடுக்க முனைகிறோம் நாம் எமக்கான தேவையினை நேரிய வழியில் நிறைவேற்றிக்கொண்டோமானால் லஞ்சத்திற்கான தேவை அற்றதாக காணப்படும் அது மாத்திரமல்ல வாங்குபவர்கள் கொடுப்பவர்களில்தான் தங்கியிருக்கிறார்கள் கொடுக்கின்ற போதுதான் வாங்க நினைக்கிறார்யக்கள் அதில் அவர்கள் ஆசை கொள்கிறார்கள் நாம் நினைத்தால் அவர்களை இல்லாமல் ஒழித்துவிடலாம் இது இரண்டும் தவறுதான் குற்றம்தான் அதிகளவாக பார்க்கின்ற போது கொடுப்பவர்களால்தான் இந்த லஞ்சமே உருவாகிறது கொடுப்பதுதான் மிகப் பெரிய குற்றம் கொடுப்பவர்கள் இல்லை என்றால் வாங்குபவர்கள் உருவாகும் வாய்ப்பே இல்லை ஆக கொடுப்பதுதான் மிகப்பெரிய குற்றம் 

பொதுவாக இதை ஒழிப்பதற்கு இறுக்கமான சட்டங்கள் வரவேண்டும் அனைவரும் நேரிய வழியினை கடைப்பிடிக்க வேண்டும் நன்றி வணக்கம்

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Mon 5 May 2014 - 10:05

ஹய்ய்ய்ய்யா!

இந்த மாதிரி தீர்ப்பு சொல்ல எவ்வளவு லஞ்சம் கொடுத்தேன் என்றும்  சொல்லிருங்க ஹாசிம்!

குழந்தைகள் விடயத்தில் பரிசில்கள் கொடுத்து ஊக்குவித்தல் தப்பில்லை எனினும்..

பிற்காலத்தில் அவர்களே பெரியவர்களாகும் போது  அதுவே பழக்கமாகாதிருக்க பார்க்கனும்.  எதையாவது கொடுத்து  தான் அவர்களை ஊக்கபடுத்தினோம் எனில சூழ்னிலக்காரணங்களால் அது கிடைக்காத போது அவர்கள் வீம்பு காட்டி அடம்பிடிப்பவர்களாக மாறூம் அபாயம் இருக்கிறது. நாம் விதைப்பதை தானே அறுப்போம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 10:13

Nisha wrote:ஹய்ய்ய்ய்யா!

இந்த மாதிரி தீர்ப்பு சொல்ல எவ்வளவு லஞ்சம் கொடுத்தேன் என்றும்  சொல்லிருங்க ஹாசிம்!

குழந்தைகள் விடயத்தில் பரிசில்கள் கொடுத்து ஊக்குவித்தல் தப்பில்லை எனினும்..

பிற்காலத்தில் அவர்களே பெரியவர்களாகும் போது  அதுவே பழக்கமாகாதிருக்க பார்க்கனும்.  எதையாவது கொடுத்து  தான் அவர்களை ஊக்கபடுத்தினோம் எனில சூழ்னிலக்காரணங்களால் அது கிடைக்காத போது அவர்கள் வீம்பு காட்டி அடம்பிடிப்பவர்களாக மாறூம் அபாயம் இருக்கிறது. நாம் விதைப்பதை தானே அறுப்போம்!

அப்போ உங்களுக்குத்தான் தண்டனை தந்தாக வேண்டும் நீங்கள்தான் கொடுக்கறவர்களா........

லஞ்சம் சூழலை மையமாக வைத்தே உருவாகிறது அடிமனதில் இருந்தாலும் சூழல்தான் அதில் அதிகம் தாக்கம் செலுத்துகிறது

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Mon 5 May 2014 - 10:18

எனக்கே தண்டனையா!

சுவிஸிலிருந்து கொண்டு நான் என்ன வேணும்னானாலும் எழுதுவேன்பா.. அந்தந்த சூழலில் வாழ்பவர்களுக்குத்தன அதன் கஷ்ட நஷ்டம் புரியும்.

எனக்கும் புரியத்தான் செய்கிறது. இலங்கை இந்தியாவென  மூன்றுவாரம் விடுமுறைக்கு வரும் போதே  நிரம்ப விடயம் ஜிரணிக்க முடிவதில்லை.

நம் சமுகம் , நம் சூழல் தான் நம் வாழ்க்கையை தீர்மனனிக்கிறது.  எதையும்  மேலோட்டமாக் பேசி செல்லுதல் இலகு என நான்  நன்கு  அறிவேன்.

நீங்களே கூட அரபுநாட்டில்  ரெம்ப வருடம் வேலை பார்த்து விட்டு இனி ஊர் போய் வாழும் சூழல் வரின்  ரெம்ப சிரம்படத்தான் செய்வீர்கள். என்ன செய்வது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by பானுஷபானா on Mon 5 May 2014 - 10:26

இந்தப் பஞ்சாயதுக்கு நான் வரல பானு சேனைக்கு பஞ்சாயத்து முடியும் வரை லீவு....லீவு...லீவு... *# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 10:46

Nisha wrote:எனக்கே தண்டனையா!

சுவிஸிலிருந்து கொண்டு நான் என்ன வேணும்னானாலும் எழுதுவேன்பா.. அந்தந்த சூழலில் வாழ்பவர்களுக்குத்தன அதன் கஷ்ட நஷ்டம் புரியும்.

எனக்கும் புரியத்தான் செய்கிறது. இலங்கை இந்தியாவென  மூன்றுவாரம் விடுமுறைக்கு வரும் போதே  நிரம்ப விடயம் ஜிரணிக்க முடிவதில்லை.

நம் சமுகம் , நம் சூழல் தான் நம் வாழ்க்கையை தீர்மனனிக்கிறது.  எதையும்  மேலோட்டமாக் பேசி செல்லுதல் இலகு என நான்  நன்கு  அறிவேன்.

நீங்களே கூட அரபுநாட்டில்  ரெம்ப வருடம் வேலை பார்த்து விட்டு இனி ஊர் போய் வாழும் சூழல் வரின்  ரெம்ப சிரம்படத்தான் செய்வீர்கள். என்ன செய்வது.
எங்கு இருந்தாலும் நேரிய ஒரு பாதையில் நாம் இருந்தால் அனைத்து சூழலையும் வென்றிடலாம்

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Mon 5 May 2014 - 11:03

பானுஷபானா wrote:இந்தப் பஞ்சாயதுக்கு நான் வரல பானு சேனைக்கு பஞ்சாயத்து முடியும் வரை லீவு....லீவு...லீவு... *# *# 

மொத்தத்தில்  நிஷா வந்த பிறகு பஞ்சாயத்துக்கள் ஜாஸ்தியாகி போச்சின்னு  சொல்கின்றீர்களா பானு.

லீவுல்லாம் விட வேண்டாம். நாங்க  பேசி தீர்த்துக்கலாம்பா..

நாட்டாமை சார்..  கொடுக்கிற காசுக்கும் குடிக்கிற இளனீருக்கும்  நியாயமா நடத்துக்குவாருன்னு சொல்லிட்டாருப்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 5 May 2014 - 11:08

தலைப்பிட்டு தூண்டிவிட் ரமேஷ் அவர்களைத்தான் காணோம்

லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Nisha on Mon 5 May 2014 - 11:23

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:எனக்கே தண்டனையா!

சுவிஸிலிருந்து கொண்டு நான் என்ன வேணும்னானாலும் எழுதுவேன்பா.. அந்தந்த சூழலில் வாழ்பவர்களுக்குத்தன அதன் கஷ்ட நஷ்டம் புரியும்.

எனக்கும் புரியத்தான் செய்கிறது. இலங்கை இந்தியாவென  மூன்றுவாரம் விடுமுறைக்கு வரும் போதே  நிரம்ப விடயம் ஜிரணிக்க முடிவதில்லை.

நம் சமுகம் , நம் சூழல் தான் நம் வாழ்க்கையை தீர்மனனிக்கிறது.  எதையும்  மேலோட்டமாக் பேசி செல்லுதல் இலகு என நான்  நன்கு  அறிவேன்.

நீங்களே கூட அரபுநாட்டில்  ரெம்ப வருடம் வேலை பார்த்து விட்டு இனி ஊர் போய் வாழும் சூழல் வரின்  ரெம்ப சிரம்படத்தான் செய்வீர்கள். என்ன செய்வது.
எங்கு இருந்தாலும் நேரிய ஒரு பாதையில் நாம் இருந்தால் அனைத்து சூழலையும் வென்றிடலாம்

ம்ம்ம்ம்ம்! இந்த நேரிய பாதை, நேரிய சிந்தனை, வெளிபடையான பேச்சு, கடமை கண்ணியம கட்டுப்பாடு, கடவுள் பயம், நியாய அனியாயம்,  அன்பு, இரகக்ம் என வாழ்ந்து அடி மேல் அடி வாங்கி, மனரிதியாக் நொந்து நூலானது  தான் இவ்வுல வாழ்வில் நாம் கண்டது.

ஆனாலும் என்ன இறைவன் கட்டளையை நிறைவாககினோம், அதனால் அவன் எல்லாம் பார்த்துப்பார் எனும் அசாத்திய நம்பிக்கை இன்னும் இந்த வாழ்க்கையை ரசிக்க வைக்கிறது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: லஞ்சம் வாங்குவது குற்றமா இல்லை கொடுப்பது குற்றமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum