சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதையை பத்து வரியில சொல்லிடறேன்...!!
by rammalar Today at 17:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Today at 16:49

» ரசித்தவை...
by rammalar Sun 27 Sep 2020 - 15:11

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Thu 24 Sep 2020 - 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Thu 24 Sep 2020 - 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Thu 24 Sep 2020 - 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Khan11

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Go down

Sticky பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar on Sat 17 May 2014 - 12:13

பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் Images?q=tbn:ANd9GcTzDol0gChA2LNLlcWH4t4gL_UNllK-6S_hGC8MdIp2yInw63fe


காக்கைகா காகூகை, 


கூகைக்கா  காகாக்கை

கோக்குக்கூ  காக்கைக்குக் 

கொக்கொக்க -- கைக்கைக்குக்

காக்கைக்குக் கைக்கைக்கா  கா 

-
-----------------------------------------------
கவி காளமேகம் பாடிய பாடலாம்..
-
அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16008
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar on Sat 17 May 2014 - 12:24

வரதன் என்பவர் கவி காளமேகம் ஆன கதை
----------------------------------------

வைஷ்ணவரான வரதன் என்பவர் ஸ்ரீரங்கம்
மடப்பள்ளியில் சமையல் காரராக இருந்தார்
திருவானைக்கா என்கிற  பக்கத்து ஊரில் 
இருந்த  மோகனாங்கி என்கிற சைவப்பெண் 
மேல் காதலாகி சைவரானார்..
-
ஒரு  நாள் அந்தப் பெண்ணுக்காக  திருவானைக்கா
கோவிலில் காத்திருந்து, அப்படியே  களைத்து  
தூங்கிப்போனதில் அதிருஷ்டம்  அடித்தது வரதனுக்கு

அன்றிரவு  ஒரு   அந்தணன் செய்த  தவத்தை மெச்சி 
சரஸ்வதி தேவி   பிரத்யட்சமாகி கோவிலில் 
படுத்திருந்த  அந்த  அந்தணனைப் பரிசோதிக்க  தனது 
வாய்   தாம்பூலத்தை  அவனுக்கு அளிக்க  முன்வந்த
போது,  அந்த  அந்தணன்  அவளை யார்  என்று 
அறியாமல், உன்  எச்சில்  எனக்கு  வேண்டாம் என்று  
மறுக்க,
அருகே  படுத்துறங்கிய  வரதனுக்கு  அந்த தாம்பூலத்தை  
வாயில்  அளித்தாள்  கலைமகள்.  
வரதனும்  தூக்கத்தில்  அது தனது   காதலி மோகனாங்கி
என்று அரைத்தூக்கத்தில்  சந்தோஷத்தோடு  வாங்கி
மென்று  உண்டான்.

அந்தக் கணம்  முதல்   கல்விக்கடவுள் சரஸ்வதியருளால்  
கவி இயற்றும் சக்தி வந்தது.  சகல  சாஸ்திரங்களும்
அவனுள் அடக்கம். கருமேகம் அடித்து நொறுக்கி மழை
பொழிவது போல் தமிழ்  கடல் மடையாக  அவனிடமிருந்து
வெளிப்பட்டது. 

அதனால் வரதனின் பெயர் '' காள -மேகம்''  ஆயிற்று. 
ஆசு கவியானான்

--

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16008
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar on Sat 17 May 2014 - 12:53

திருமலைராயன் பட்டினம்  என்று  காரைக்கால் 
பக்கம்  ஒரு  ஊர்.   அதில்  காளமேகம் போய்க்
கொண்டிருக்கும்போது சில புலவர்கள் அவரை 
மடக்கி ஒரு  சிலேடை  சொல்ல வைத்தனர்.  

அவரோ கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்புக்கும்  
வாழைப்பழத்துக்கும் உள்ள ஒற்றுமையை வைத்து 
அருமையான ஒரு சிலேடைப்பாட்டு இயற்றினார். 
-


        நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்
        வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
        தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
        பாம்பாகும் வாழைப்பழம்

-
விளக்கம்:
 
வாழை சில நன்றாக பழுத்து கனிந்து போய் இருக்கும் 
(பாம்பு நஞ்சை (விஷத்தை) உடையது)  வாழையைத்
தோல் உரித்து உள்ளே  தள்ளுகிறோம். (பாம்பு  சட்டை
உரிக்கும் (தோல்).
நாதர் முடி மேல் இருக்கும்  நல்ல பாம்பு..
(வாழை  உச்சியிலிருக்கும்)
பல் பட்டால் வாழைப்பழம் துண்டாகி  வயிற்றில்
இறங்கும். 
(பாம்பின் விஷப்பல் பட்டால் ஆள்  மீள மாட்டான்). 
எனவே  ரெண்டும்  ஒன்றே.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16008
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by rammalar on Sat 17 May 2014 - 12:58

முதலில் சொன்ன பாட்டுக்கு அர்த்தம்:
-


காக்கைக்கு    --  காக்காவிற்கு  

ஆகா  கூகை --  ஆந்தையைப்  பிடிக்காது.  ஒத்துப்போகாது. 

கோக்கு     -    கோ  ​ என்றால்  அரசன்.

கூ       =      பூமி,  அவன்  நாடு, 

காக்கை    -     காப்பது   அரசாள்வது 

கொக்கொக்க --   கொக்கைப்  போன்று 

கைக் கை    -    விரோதிகளை வென்று 
கா               காப்பது.கோர்வையாகச் சொன்னால் காக்கைக்கு இரவில் 
கண்  தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண்
தெரியாது  ரெண்டுக்கும் நட்பு கிடையாது 
காக்கையை விட  ஆந்தை பலம் கொண்டது. 
எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் 
ஆந்தையை விரட்டும்.
-
ஒரு ராஜாவுக்கு தனது நாட்டைக்காப்பது 
இன்றியமையாதது. எதிரிகளை எப்படி கொக்கு 
நிதானமாக காத்திருந்து  உறுமீன்  வந்தவுடன் 
சட்டென்று  அதைக் கவ்வுமோ  அது போல்
எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல்
படை எடுத்து வென்று நாட்டைக் காப்பது அவசியம் 
என்று  பொருள். ,
---

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16008
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Nisha on Sun 18 May 2014 - 16:52

திரி இலக்கியங்கள் பகுதிக்கு நகர்த்தி இருக்கின்றேன் ஐயா.

இம்மாதிரி விளக்கம் தரும் போது இயன்றவரை தலைப்பில் அப்பாடல் வரி அல்லது யாரால் இயற்றப்பட்டது என எழுதினால் நல்லது.

காளமேகபுலவரில் பாட வரிகளுக்கான விளக்கம் என்பது போல் தலைப்பில் இருந்தால் தேடும் போது இலகுவாக கிடைப்பதோடு ஒரே பதிவு மீண்டும் மீண்டும் வருதலையும் தவிர்க்கலாம் அல்லவா..


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பாடலுக்கு அர்த்தம் தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum