Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சலுகை : ரூ. 284 கோடி வட்டி மொத்தமாக தள்ளுபடி
Page 1 of 1
வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சலுகை : ரூ. 284 கோடி வட்டி மொத்தமாக தள்ளுபடி
தேர்தலை முன்னிட்டு, அடுத்த சலுகையாக, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் வீடு வாங்கியவர்களுக்கான வட்டித்தொகை 284 கோடி ரூபாயை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்திலுள்ள பெரும்பான்மையான நகரங்களில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் புதிய குடியிருப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக நிறைவேற்றப்படும் திட்டங்களில், உடனுக்குடன் கிரயப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பாக, வாரியத்திடம் வீடு வாங்கியவர்களின் நிலைமை படு திண்டாட்டமாகவுள்ளது.வீட்டுக்கான முழுத் தொகையையும் செலுத்திய பின்னும், கிரயப்பத்திரம் கிடைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை, லட்சத்துக்கும் அதிகம். அரசாணையை வைத்து நிலங்களை கையகப்படுத்தி, வீடுகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்திய பின்பும், நில உரிமையாளர்கள் பலரும் நிலத்துக்குக் கூடுதல் விலை கேட்டு, கோர்ட்டை அணுகியதே இந்த பிரச்னைக்கு அடிப்படைக் காரணம்.
சந்தை மதிப்புக்கேற்ப நிலத்துக்கு விலை வழங்கவில்லை என்பது நில உரிமையாளர்களின் குற்றச்சாட்டு; வீட்டு வசதித் திட்டம் நிறைவேற்றிய பின்பே, அப்பகுதியின் நிலத்தின் மதிப்பு கூடியது என்பது வாரியத்தின் பதில். இவ்விரு தரப்புக்கும் இடையே சிக்கி, சின்னாபின்னமாகி வருவது, ஒதுக்கீடுதாரர்கள்தான். கிரயப்பத்திரத்துக்கான போராட்டத்துக்கு ஒவ்வொரு ஆட்சியிலும் தீர்வு வருமென்று எதிர்பார்ப்பது இவர்களின் வாடிக்கை.நில விலையை இறுதி செய்யாமல், வீட்டு வசதித் திட்டத்தை செயல்படுத்தியதால், வீடு வாங்கியவர்களின் தலையில் பல விதமான வட்டித் தொகையும் சுமத்தப்பட்டது; இவற்றை மொத்தமாக ரத்து செய்ய வேண்டுமென்பது இவர்களின் முக்கியக் கோரிக்கை. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஒதுக்கீடுதாரர்களின் பிரச்னையை ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு சலுகை : ரூ. 284 கோடி வட்டி மொத்தமாக தள்ளுபடி
அந்த குழு, மாநிலம் முழுவதும் ஒதுக்கீடுதாரர்களைச் சந்தித்து, கருத்துக் கேட்டு அறிக்கை அளித்தது. அதில், பல விதமான வட்டிகளை தள்ளுபடி செய்யுமாறு வாரியத்துக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசுக்கு சில பரிந்துரைகளை வாரியம் அளித்தது. அதனைப் பரிசீலித்த தமிழக அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புறத் துறை, பிப்.14ல் இது தொடர்பான அரசாணையை (எண்:37) வழங்கியுள்ளது.இதன்படி, மாதத் தவணைக்கான தண்ட வட்டி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி மற்றும் நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத்தில் 5 மாத வட்டி முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனங்களுக்கான ஒதுக்கீடுகளுக்கு, விலையில் தற்போது நடைமுறையிலுள்ள 10 சதவீத முன் வைப்புத் தொகைக்கு மட்டும் வட்டி வசூலிக்க வேண்டுமென்றும் அரசாணை அறிவுறுத்தியுள்ளது.
ஒதுக்கீடுதாரர்கள் முழுத் தொகையையும் செலுத்தி, விற்பனைப் பத்திரம் பெற்றிருந்தாலும், பெறாமலிருந்தாலும் அந்தத் தொகைத் திருப்பித் தரப்படாது என்றும், பாக்கித்தொகையை இந்த அரசாணை வெளியிட்ட 4 மாதத்துக்குள் (2011 ஜூன் 13) ஒரே தவணையாகச் செலுத்துவோர்க்கு மட்டுமே இந்த வட்டி தள்ளுபடி சலுøயைப்பெற முடியும் என்றும் அந்த அரசாணையில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஒதுக்கீடுதாரர்கள், நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகைக்கான முழு வட்டியையும் தள்ளுபடி செய்யுமாறு கோரியிருந்தனர். அவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டால், வாரியத்துக்கு 800 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும்; இப்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள தொகை 284 கோடி ரூபாய் மட்டுமே.
கடந்த 5 ஆண்டுகளாக இழுத்தடித்து, தேர்தலுக்கு முன்பாக ஆறுதல் பரிசாக வழங்கப்பட்டுள்ள இந்த அரசாணை, ஒதுக்கீடுதாரர்களிடம் வரவேற்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வட்டித்தொகை முழுவதும், வாரியத்தின் நிர்வாகக் குளறுபடியால் ஏற்பட்டதுதான்; காகிதத்தில் மட்டுமே இருக்கும் இதனை தள்ளுபடி செய்வதால் வாரியத்துக்கு இழப்பு இல்லை என்கிறது ஒரு தரப்பு.ஆனால், பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை இந்த அரசு ஏற்படுத்தி இருப்பதாக மற்றொரு தரப்பு கூறுகிறது. உண்மையில், இந்த அரசாணையால் பலன் பெறும் ஒரு லட்சம் குடும்பங்களின் ஆதரவு, ஆளும்கட்சிக்குக் கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
நல்ல பரிந்துரை!இந்த அரசாணையில், "எதிர்வரும் காலங்களில் வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் பயனாளிகள் பயன் பெறும் வகையில் திட்டம் முடிக்கப்படும் நாளும், குடிபுக தயாராகும் நாளும் ஒரே நாளாக இருக்க வேண்டும்; முதலாக்கத்தின் மீதான வட்டி, நிலுவைத் தொகை போன்ற விபரங்களை முன் கூட்டியே தெரிவிக்க வேண்டும்;அதைக் கட்ட தவறும்பட்சத்தில் செலுத்தப்படாத தொகைக்கான வட்டியினை வாரியம் விதிக்கலாம்,' என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது; இது வாரியத்திடம் வீடு வாங்குவோர்க்கு மகிழ்ச்சியான செய்திதான்.
- ஏ.எக்ஸ்.எக்ஸ்.செல்வக்குமார் -
நன்றி தினமலர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum