சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Khan11

காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு

Go down

காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு Empty காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு

Post by rammalar Sun 29 Jun 2014 - 10:42

கொத்தமங்கலம் சுப்புவின் நூற்றாண்டு விழா 2010-ஆம் ஆண்டில் பல இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது .
காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு C3766-invitation_1
.அவர் நினைவில் சில மடல்கள். இது விகடனில் வந்த ஒரு கட்டுரை ]
காந்தி மகான் கதை
–இரா.நக்கீரன்

முப்பக்கம் சூழ்ந்த கடல்
முத்திருக்கும் ஆழ்ந்த கடல்
இப்பக்கம் வந்தாலும்
இமயம் வடக்கினிலே
கட்டாத கோட்டையுண்டு
கடலும் மலைகாவல்
எட்டாது அசலானுக்
கிடங்கொடுக்கா திந்நாடு’

- என்று தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையிலிருந்து இந்திய விடுதலைக் காவியத்தின் நாயகனான காந்தி மகானின் கதை ஆரம்பமாகிறது. காந்தி மகான் பாரிஸ்டர் படிப்புக்காக இங்கிலாந்து போக வேண்டுமென்றபோது அவரது அன்னை, சீமைக்குப் போவதனால் உண்டாகும் கெடுதிகளைக் கூறி, தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாக நேரிடும் என்று மறுப்புத் தெரி வித்தபோது, காந்திஜி கீழ்க்கண்ட வாறு தம் அன்னைக்குச் சத்யப் பிரமாணம் செய்து தந்துவிட்டுப் பயணமானார்.

‘அம்மா தாயே பெத்தவளே
நான் அப்படி மகனல்ல
அண்டமிடிஞ்சு விழுந்திட்டாலும்
ஆணைமீறுவேனோ?
கனவில்கூடக் கள்ளுக்குடியைக்
கருதிடவே மாட்டேன்
கஸ்தூரிபாயிதவிர ஒருத்தியைக்
கையால் தொடமாட்டேன்
மாமிசந்தின்னு முட்டை குடிக்க
வாய்திறக்க மாட்டேன்
மாதாவேயிது தவறுவதில்லை
மகாதேவன் சாட்சி’


காந்தி மகான் கதை – கொத்தமங்கலம் சுப்பு 2247a-ks_1
இந்த வரிகளிலே காந்திஜியின் வருங்கால இலட்சியத்தின் சத்ய ஒளி பிரகாசிப்பதைப் பார்க்கி றோம்.
தென்னாப்பிரிக்காவிலே காந்தி மகானுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அநேகம். அவற்றில், நிறவெறி பிடித்த முரட்டு வெள்ளைக்காரன் அண்ணலைத் தனது பூட்ஸ் காலால் உதைத்ததும் ஒன்று. அந்தக் கொடுமையைக் கவிதை யிலே கவிஞர் வடித்துள்ளார்.

‘கருப்புப் பூட்சால்
எட்டி உதைச்சான்
காந்தி மகாத்மாமேல்
கட்டின தலைப்பா
தட்டிவிட்டான்
காந்திமகாத்மா மேல்’

அப்போதும் அந்தக் கொடிய வன் மீது காந்தியண்ணலுக்குச் சினமேற்படவில்லை. மாறாக, பகைவனுக்கு அருளும் மேலான பண்பு தவழ்கிறது அவரது முகத்தில்.

சாந்தம் பொங்கி
வழியுது ஐயா
காந்திமகானுக்கு
சனங்களைக் கண்டு
கருணை பெருகுது
காந்தி மகானுக்கு!’

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக் கும் ஏற்பட்ட வகுப்பு வாதக் கலகத் தைப் பற்றிக் குறிப்பிடுகையில்…

என்னத்துக்காக அடிச்சுக்கறான்
என்பது கூடத் தெரியாமல்
சின்னத்தனமான சண்டையிலே
செத்து விழுந்தது தேசச்சனம்’

- என்று மக்களின் அறியாமையை விளக்கிச் சாடியுள்ள போக்கானது, இன்றைய நிலையில் கூடப் பொருத் தமாகத்தானே இருக்கிறது?
நவகாளிக்குப் பயணமான காந்திஜியைப் பற்றிக் குறிப்பிடும் கவிதை வரிகள் இலக்கிய நயம் உடையவை.

முள்ளும் மொரும்பும்
நிறைந்த வயல்
மொய்க்கும் கொசுக்கள்
நிறை காட்டில்
கல்லும் பயந்து நடுங் கிடவே
கடுமத வெறி
கொண்டவர் நாட்டில்
போதிமரத்து நிழல்வீற்ற
புத்தன் புறப்பட்டுப்
போனது போல்
ஆதியில் ராமச் சந்திரனும்
ஆரணியவாசம் போனது போல்
பாதுகைதன்னையும்
தான்கழட்டி
பரதன்கையில் கொடுத்துவிட்டு
மோதிக்கிழிக்கிற முள்காட்டில்
முன்னர் நடந்த கதை போலே
காந்தி மகானும் தன் செருப்பை
கழட்டித்தூர வைத்துவிட்டு
சாந்திவிளக்கும் திருவடியாம்
தாமரைப்பாதம் தடம்படவே’ ‘

செல்கிறார் என்று படிக்கும்போது நமது மெய் சிலிர்க்கவில்லையா?
எல்லாவற்றுக்கும் சிகரமான தாக அமைந்திருப்பது காந்தி மகானின் துர்மரணம். புற்றிலிருந்து பாம்பானது பதுங்கி வந்து கடிப்ப தைப் போல், பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்துகொண்டிருந்த அண்ணலைக் கும்பிடுங் கரங்க ளால் கொன்று தீர்த்தானே கொடியவன். அவன் துப்பாக்கியி லிருந்து புறப்பட்ட குண்டுகள், அண்ணலை மட்டுமா துளைத்தன? இல்லவேயில்லை. எந்தச் சமுதா யத்தின் விடுதலைக்காகப் பாடு பட்டு, அல்லும் பகலும் தொண் டாற்றினாரோ அந்தத் தொண் டுக்கு நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்ட ஒவ்வொருவரது நெஞ்சையுமே அந்தக் குண்டுகள் 12துளைத்தன.

‘வழியை அமைத்துக்
கொடுத்த மகான்
வந்த கடமை முடிந்ததென்றே
அழியும்உடம்பை அழித்துவிட்டே
ஆதிபரம்பொருள் ஆகிவிட்டார்’

- என்று கூறி காந்தி மகான் சரிதையை முடித்து வைத்துள்ளார் கவிஞர்.
காந்திமகானின் கதையைக் காவியமாக்கிய பெருமை, கவிஞர் சமுதாயத்தின் பெருமையாகும். அந்தப் பெருமைக்கு வித்திட்ட சிறப்பு, கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களுடையது.
வானமும் பூமியும் உள்ள மட்டும், வாரிதியாழிகள் உள்ள மட்டும், ஞானமும் நீதியும் உள்ள மட்டும், ஞாயந் தரையினில் உள்ள மட்டும்… காந்தி மகான் கதையும் சிரஞ்சீவித்துவம் பெற்றிருக்கும்.
-
[நன்றி: ஆனந்த விகடன் ]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum