சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…) Khan11

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)

2 posters

Go down

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…) Empty முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)

Post by rammalar Sun 29 Jun 2014 - 16:31

திருமணம் என்ற வார்த்தையை வைத்தே
ஆண்கள் பெண்களின் வாழ்க்கையில்
விளையாடுவது தற்போது மிகவும் அதிகரித்து
வருகிறது. அதுவும் வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு
எப்போது மவுசு குறைவதில்லை.

முன்பு மிலிட்டரி மாப்பிள்ளை என்றாலே பயந்து
ஓடுவார்கள். இப்போது அரசாங்க பணி என்பதால்
அதற்கும் மவுசு அதிகமாகிவிட்டது. மிலிட்டரி
மாப்பிள்ளை ஒருவரிடம் சிக்கிய பெண்ணின்
கதை இது.

சேலம் அருகேயுள்ள கிராமத்துப் பெண் வைதேகி.
பெற்றோருக்கு ஒரே செல்லப்பெண். பெற்றோர்
விவசாய வேலை செய்தாலும் தன்னுடைய மகளை
பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்க வைத்திருந்தனர்.

வைதேகி வெளி உலகம் எதுவும் அறியாதவள்.
ராணுவத்தில் பணிபுரியும் அதே ஊரைச் சேர்ந்த
மோகனுக்கு மணம் முடிக்க முடிவு செய்தார்கள்.
நிச்சயம் செய்யப்பட்டுத் திருமண தேதியும்
முடிவானது. வருங்கா மனைவியிடம் பேச
செல்போன் ஒன்றை அவளுக்கு பரிசாக வழங்கிவிட்டு
ராணுவப் பணிக்குத் திரும்பினான்.

இருவரும் செல்போனில் பேச ஆரம்பித்தார்கள்.
ஆனால் மோகன் எதிர்பார்த்தது போல் காதல்
ரசம் சொட்டச் சொட்ட வைதேகிக்குப் பேச
தெரியவில்லை. பாவம் பள்ளிக்கூடம் விட்டால்
வீடு, வீடு விட்டால் பள்ளி என கட்டுக்கோப்பாக
வளர்ந்தவள். வருங்கால மனைவி இப்படி உலகம்
தெரியாதவளாக இருக்கிறாளே என்று தன்
மனதிற்குள்ளே ஆதங்கப்பட்டான்.

உடன் பணிபுரியும் சக ராணுவ வீரர்களின்
மனைவிகளை ஒப்பிடும்போது வைதேகி மிகவும்
தாழ்ந்த நிலையில் இருப்பதை உணர்ந்தான்.

மனதளவில் வெறுத்துப் போனான். ஆனால்
நிச்சயித்த திருமணத்தையும் நிறுத்த முடியாது.
பெற்றோர் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். வேறு
வழியில்லாமல் வைதேகியைத் திருமணம்
செய்தான்.

மனைவியை தான் பணிபுரிந்த காஷ்மீர் பகுதிக்கே
அழைத்து வந்தான். பக்கத்து ஊரை கேட்டால்கூட
சொல்லத் தெரியாத வைதேகி, காஷ்மீரைப்
பார்த்து வியந்து போனாள். புதுமணத் தம்பதி
பல இடங்களைச் சுற்றிப் பார்த்து ரசித்தனர்.
ஆனாலும் வைதேகி தன்னை இல்லற
வாழ்க்கைக்காகத் தயார் படுத்தத் தெரியாதவளாக
இருந்தாள்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டான்
மோகன். மனைவியை அடித்துத் துன்புறுத்த
ஆரம்பித்தான். மொழி தெரியாத இடத்தில் தான்
படும் வேதனைகளை யாரிடமும் போய் சொல்வது
என்று தவித்தாள் வைதேகி. பெற்றோரிடம்
சொன்னால் கஷ்டப்படுவார்களே என்று
எல்லாவற்றையும் மறைத்துவிட்டாள். இந்நிலையில்
கர்ப்பமானாள்.

“குழந்தை வேண்டாம். எப்போதும் எனக்கு நீ மட்டும்
தான்’ என கருவைக் கலைக்க சொன்னான் மோகன்.
ஆனால் அதற்குச் செவிசாய்க்கவில்லை வைதேகி.

பக்கத்து வீட்டில் வசிக்கும் மற்றொரு ராணுவ வீரரின்
மனைவியிடம் விஷயத்தைச் சொன்னாள்.
மேலதிகாரிகளைச் சந்தித்து புகார் கொடுத்தால்
தீர்வு கிடைக்கும் என அந்தப் பெண் வழிகாட்டினாள்.
அப்படிச் செய்தால் தன்னை உயிருடனேயே கணவன்
விட்டு வைக்க மாட்டான் என்பது வைதேகிக்கு
நன்றாகவே தெரியும். எனவே பக்கத்து வீட்டாரின்
உதவியை நாடினார்.
-
கணவன் பணிக்குச் சென்ற நேரம் மூட்டை
முடிச்சுக்களை எடுத்துக் கொண்டு ரயிலில்
கிளம்பினாள். மூன்று நாள் பிரயாணம் செய்து
சொந்த ஊர் வந்து சேர்ந்தாள். மகள் திடீரென்று
கிளம்பித் தனியே வந்திருப்பதைப் பார்த்த பெற்றோர்,
ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தார்கள்.
-
ஆரம்பத்தில் இருந்து நடந்த விஷயத்தை ஒன்று
விடாமல் பெற்றோரிடம் சொன்னாள் வைதேகி. ஏன்
இத்தனை நாளும் சொல்லாமல் மறைத்தாய் என்று
ஆதங்கப்பட்டார்கள். இதற்கிடையில் தன்னுடைய
உடைமை, பணத்தை எல்லாம் மனைவி திருடி
கொண்டு போய்விட்டதாக உள்ளூர் போலீசாரிடம்
பொய்ப் புகார் செய்தான் மோகன்.
-
வைதேகியின் பெற்றோர் அதே ஊரில் வசிக்கும்
மோகனின் குடும்பத்தாரிடம் போய் நியாயம்
கேட்டார்கள். “மிலிட்டரிக்காரன் என்றால் கொஞ்சம்
முரட்டுத்தனம் இருக்கத்தான் செய்யும். உன் மகள்
அனுசரித்துப் போக வேண்டியதுதானே?’ என மறு
கேள்வி கேட்டார்கள். இந்நிலையில் ஆண்
குழந்தைக்குத் தாயானாள் வைதேகி.
-
விடுமுறையில் ஊருக்கு வந்த கணவன் “இந்தக்
குழந்தை எனக்குப் பிறக்கவில்லை. என் மனைவி
நடத்தை கெட்டவள்’ என வீண் பழி சுமத்தினான்.
வைதேகி அதிர்ச்சியில் உறைந்தே போனாள். ஊரே
மோகனுக்கு எதிராக ஒன்று திரண்டது. நியாயம்
கேட்க வந்த வைதேகியின் தந்தையை அடித்து
உதைத்தான் மோகன்.

ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி மோகனுக்கு
எதிராக காவல் நிலையத்தில் புகார் செய்தார்கள்.
ராணுவ வீரரைக் கைது செய்து விசாரிக்கும்
அதிகாரம் எங்களுக்கு இல்லை என கைவிரித்தது
காவல்துறை.
-
விஷயம் மகளிர் ஆணையத்திற்கு எடுத்துச்
செல்லப்பட்டது. ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
பஞ்சாயத்தாரும் சாட்சி சொல்லத் தயாராக
இருந்தனர். மோகன் பணியாற்றிய ராணுவத்
தலைமையகத்தில் அவர் மீது விசாரணை நடத்த
அனுமதி கோரப்பட்டது. ராணுவ குடியிருப்பில்
வசித்தவர்களிடம் விசாரணை நடத்தியதில்
மோகன் மேல் குற்றம் இருப்பது உறுதியானது.

அவர் மீது குற்ற விசாரணை நடத்த அனுமதி
வழஙகப்பட்டது. வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மோகன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
-
வழக்கை இழுத்தடிப்பதற்கு உண்டான மறைமுக
வேலைகள் அத்தனையிலும் ஈடுபட்டான் மோகன்.
ஆனால் ஊர்க்காரர்கள் ஆணையத்தில் அளித்த
சாட்சியப்படி மோகன் குற்றவாளி என முடிவானது.

“வைதேகியுடன் இனி நான் வாழத் தயாரில்லை.
காரணம் இது எனக்கு பிறந்த குழந்தையில்லை’
என்பதை உறுதியாகச் சொன்னான் மோகன்.
வைதேகியும் குழந்தையும் மருத்துவப்
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தை
மோகனுடையதுதான் என்பது உறுதியானது.
வைதேகியுடன் சேர்ந்து வாழாவிட்டால்
மனைவிக்கும், குழந்தைக்கும் ஆகும் பராமரிப்புச்
செலவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தீர்ப்பு
தரப்பட்டது.

தீர்ப்பின் விவரம் ராணுவத் தலைமையகத்துக்கு
அனுப்பப்பட்டு பணத் தொகையைப் பெறவும்
ஏற்பாடு செய்யப்பட்டது.

வழக்கின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர்
கீதாவிடம் பேசியபோது…
-
“திருமணம் செய்யும் ஆண், தன் மனைவி இப்படித்
தான் இருக்க வேண்டும் என பல கற்பனைகளை
மனதில் வளர்ப்பதுண்டு. ஆனால், அதில் ஏமாற்றம்
ஏற்படும்போது விரக்தியாகி மனைவியைத்
துன்புறுத்த ஆரம்பித்துவிடுவார்கள். இந்த வழக்கின்
சாரம்சம் இதுவே.
கிராமப்புற மாணவியருக்கு தற்போது பாலியல்
கல்வி கட்டாயம் அவசியம்.
நகரத்துப் பெண்களை பொறுத்துவரை செல்போன்,
இன்டர்நெட் என சிறுவயதிலே அனைத்தையும்
கற்றுத் தேர்ந்து விடுகிறார்கள்.
வைதேகி போன்ற கிராமத்துப் பெண்களைத்
திருமணம் செய்து கொடுக்கும் போது
பெற்றோர்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை.
வெளி நாட்டு மாப்பிள்ளை என்றோ, அரசுப் பணி
செய்கிறார் என்றோ அவசரப்பட்டு மணம் முடித்து
கொடுக்கவேண்டாம். ஆற அமர பல கோணங்களில்
விசாரித்து முடிவு செய்வது நலம்.

மோகனை இந்த
வழக்கின் உள்ளே கொண்டு வருவதற்கு நாங்கள்
அத்தனை போராட்டத்தைச் சந்தித்தோம்.

ஒரு வழியாக எங்கள் நீண்ட போராட்டத்திற்கு வெற்றி
கிடைத்தது. தற்போது கணவர் வழங்கும் பராமரிப்புத்
தொகையை வைத்துக் கொண்டு குழந்தையுடன்
பெற்றோர் வீட்டில் நிம்மதியாக வாழ்கிறார் வைதேகி.’
-
——————————————
- வனராஜன்
நன்றி: மங்கையர் மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…) Empty Re: முள்ளும் மலரும்! (மாப்பிள்ளை தேடும் முன்னர்…)

Post by ராகவா Sun 29 Jun 2014 - 16:55

எப்படி எத்தனை பெண்கள் இன்னும் வெளி வரமால் இருக்கும் இருள் நிறைந்த சோக கதைகள்..
மிலிட்டரிக்காரன் மட்டுமல்ல எத்தனையோ நாட்டில் நம் கண்ணுக்கு எட்டாமல் நடந்தவண்ணம் உள்ளது..
நிச்சயம் இந்த கதையே படிக்கும் எல்லோரும் விழிப்புணர்வு செய்வதே சிறந்த வழி..

நன்றி அண்ணா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum