சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

தெனாலிராமன் வரலாறு Khan11

தெனாலிராமன் வரலாறு

Go down

Sticky தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 19:48தெனாலிராமன் வரலாறுசுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணர் மாவட்டத்தில் கால்படு எனும் சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன்.

தந்தை பெயர் இராமைய்யர் தாயார் லட்சுமிக்கு இராமலிங்கன் எனும் நாமத்துடன் பிறந்தவனே தெனாலிராமனானான்.

இராமனின் தாயாரின் ஊரான தெனாலியில் இருந்த இராமலிங்க சுவாமிகளைன் பெயரையே பெற்றோர் அவனுக்கு இட்டிருந்தனர்இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.

சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் "விகடகவி" என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை "விகடகவி"யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான்.

அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

அரண்மனை விகடகவியானது எவ்வாறு என்பதும் அவனது நகைச்சுவையையும் இங்கு வரும் கதைகள் முலம் அறியலாம்


Last edited by Nisha on Sun 6 Jul 2014 - 20:01; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 19:51


காளி மகாதேவியின் அருள் கிடைத்தல்


அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாமநிரம்பிவிட்டன.

சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான்.

இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.

அதைக்கேட்ட துறவி கோபம் கொள்ளாமல் தெனாலி ராமனின் மதி நுட்பத்தை மெச்சி பாராட்டி நீ புராணக்கதைகள் படித்ததுண்டா எனக்கேட்டார்.

அதற்கு தெனாலிராமன் எனககு அவற்றில் விருப்பம் ஏற்படவில்லை ஆனால் எனககு ஒரு சந்தேகம்

காளி தேவிக்கு ஆயிரம் முகங்கள் இருப்பதாக சொல்கிறார்களே….எனக்கு ஜலதோஷம் பிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க காளிதேவிக்கு ஜலதோஷம் பிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாள் எனக்கேட்டு சிரித்தான்.

இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. உன் பேச்சு சிந்தனையைத்தூண்டுகிறது. அதே சமயத்தில் நகைச்சுவையாகவும் பேசுகிறாய்.அதனால் நீ விகடகவி என அழைக்கப்படுவாய் என ஆசிர்வதிதார். துறவி கூறிய விகடகவி எப்படி சொன்னாலும் விகடகவியாகவே இருக்கும் என்பதை எண்ணி தெனாலி ராமன் சிரித்தான்.


Last edited by Nisha on Sun 6 Jul 2014 - 20:02; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 19:55

பெரிய முட்டாள்


ஒரு முறை விஜயநகர பேரரசர் தன் அமைச்சரவையில் கூடி இருக்கும் போது, அரேபிய வியாபாரி வந்தார், தன்னிடம் விலை உயர்ந்த குதிரை இருப்பதாகவும், அதை அரசருக்கு பரிசாக கொடுக்க இருப்பதாகவும் சொன்னார்.

அரசரும் அதை ஏற்றுக் கொண்டு, குதிரையை பார்வையிட்டு, அதன் மீது ஏறி சவாரி செய்தார், மிகவும் பிடித்து விட்டது, அத்தனை கம்பீரமான வெள்ளைக்குதிரை.

அரசரும் வியாபாரிக்கு தன் பரிசுகளை கொடுத்து, வியாபாரம் செய்ய அனுமதி கொடுத்தார். அமைச்சர் ஒருவர் அரசரிடம் "அரசே! குதிரை நன்றாக இருக்கிறது, இதன் விலை 1000 தங்க நாணயங்கள் தான், இது மாதிரி 100 குதிரைகள் வாங்க, நாம் இப்போவே பணத்தை கொடுத்தால், அடுத்த முறை கொண்டு வந்துவிடுவார்" என்று கூற, அரசரும் உங்கள் விருப்பம் போல் செய்யுங்க என்று சொல்லிவிட்டார்.

சில நாட்களுக்குப் பின்பு அரசர் தெனாலிராமனை அழைத்து, நம் நாட்டிலேயே பெரிய முட்டாள் யார் என்று கண்டுபிடித்து, நாளைக்குள் சொல் என்றார்.

அடுத்த நாள் தெனாலி ராமன் அரசனிடம் போய் தன்னுடைய கண்டுபிடிப்பை சொல்ல, அரசனுக்கு சரியான கோபம். எப்படி நீ அமைச்சரை பெரிய முட்டாள் என்று சொல்கிறாய் என்று கேட்டார்.

தெனாலிராமன்: அரசே! அரேபிய வியாபாரிக்கு குதிரைகள் வாங்கும் முன்பே 1 இலட்சம் பொன் கொடுத்தாரே அமைச்சர், அந்த வியாபாரி குதிரையோடு வருவானா, கண்டிப்பாக வர மாட்டான்" என்றார்.

அரசர் : ஒருவேளை அந்த வியாபார் குதிரைகளை கொண்டு வந்து கொடுத்தால்..

தெனாலி: அரசே! ஒரு சின்ன மாற்றம் தான் செய்ய வேண்டும், மிகப் பெரிய முட்டாள் அந்த வியாபாரி என்று மாற்ற வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


Last edited by Nisha on Sun 6 Jul 2014 - 20:04; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 19:59

தெனாலி ராமன் கதைகள் - 2 பாதி தர்றேன்!

அரசவை விகடகவியான தெனாலிராமனின் கலாட்டாக்களால் பல சமயங்களில் அரசவையில் குழப்பமே உண்டானது. இதுதான் நல்ல சமயம் என உணர்ந்த ராஜ குரு மன்னரிடம், ""அரசே! இவனது செயல்களால் அரசவை நிகழ்ச்சிகள் யாவுமே கோமாளிக் கூத்தாகிப் போகின்றன,'' என்று பல முறை முறையிட்டு வந்தார். மன்னரும் தெனாலிராமனின் இத்தகைய செயல்களால் அவன் மீது உள்ளூரக் கோபம் கொண்டிருந்தார்.

ஒரு சமயம் அரண்மனையில் கிருஷ்ண லீலா கூத்தினை நடத்திட மன்னர் அனுமதியளித்திருந்தார். இந்தச் சமயத்தில் தெனாலிராமன் அரண்மனைக்கு வந்தால் கூத்து நடக்கவிடாமல் செய்து கேலி கூத்தாக்கிவிடுவான் என்று மன்னர் எண்ணினார். அரண்மனை வாயிற்காப்போனை அழைத்த மன்னர் அவனிடம், ""எக்காரணம் கொண்டும் அரண்மனைக்குள் தெனாலிராமன் வர அனுமதிக்காதே!'' என்று உத்தரவிட்டார்.

"தான் அரண்மனைக்குள் நுழைய அரசர் தடை விதித்துவிட்டார்' என்ற செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. அதனால் ஓர் இடையனைப் போல் வேடம் பூண்டு அரண்மனை வாயிலுக்கு தெனாலிராமன் வந்தான். அங்கு இருந்த வாயிற்காப்போன் அவனை அரண்மனைக்குள் விட மறுத்தான்.

உடனே தெனாலிராமன், ""இங்கே பார்! கூத்தாடத்தான் நானும் வந்துள்ளேன். என் கூத்தைப் பார்த்து அரசன் நிறைய பரிசளிப்பார். அவர் கொடுப்பதில் உனக்குப் பாதி தருகிறேன். என்னை அரண்மனைக்குள் போக விடு,'' என்றான்.

தெனாலிராமன் கூறியதைக் கேட்டு மனதுக்குள் மகிழ்ந்த வாயிற்காப்போன் அவனை உள்ளே செல்ல அனுமதித்தான்.

அரண்மனை வாயிலில் இருந்த வாயிற்காப்போனும் தெனாலிராமனைத் தடுத்து நிறுத்தினார். அவனிடமும் மன்னர் தனக்கு அளிக்க இருக்கும் பரிசில் சரிபாதியைக் கொடுப்பதாக தெனாலிராமன் வாக்களித்தான். அவனும் பரிசுக்கு ஆசைப்பட்டு தெனாலிராமனை உள்ளே செல்ல அனுமதித்தான்.

அரண்மனை ரத்தின மண்டபத்தில் வெகு விமரிசையாக கிருஷ்ண லீலா நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த தெனாலிராமன் கூத்தில் கிருஷ்ணராக வேடம் தரித்தவனைப் பிடித்து நன்றாக அடித்தான். அடிதாங்காமல் கிருஷ்ணர் வேடம் தரித்தவன் அலறித் துடித்தான். அப்போதும் விடாமல் தெனாலிராமன் அவனைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தான். வலி பொறுக்க முடியாத கிருஷ்ணன் அழத்துவங்கினான். இடையன் வேஷத்தில் வந்திருந்த தெனாலிராமன், ""டேய், நீ கிருஷ்ணன் தானே! எதற்காக நீ இப்படிக் கத்துகிறாய்? ஆயர் குலத்துப் பெண்கள் பெரிய பெரிய மத்துக்களால் கிருஷ்ணரை அடித்திருக்கிறார்களே! அப்போது அவர் உன்னைப் போன்று அலறித் துடித்துக் கத்தவில்லையே!'' என்று சிரித்தவாறு கூறினான். அதைக் கேட்டதும் அவையோர் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.

இடையன் வேஷத்தில் வந்திருப்பவன் தெனாலிராமன் தான் என்பதை மன்னரும் ராஜ குருவும் உணர்ந்தனர். கோபத்துடன் எழுந்த மன்னர் தன் அருகே இருந்த அதிகாரியை அழைத்து, ""தெனாலிராமனுக்கு இருபத்தி நான்கு சவுக்கடிகளைக் கொடுங்கள்,'' என்று உத்தரவிட்டார். உடனே அந்த அதிகாரியும் விரைந்து சென்று தெனாலிராமனைப் பிடித்தார். அப்போது தெனாலிராமன், ""ஐயா! என் திறமையைப் போற்றி பாராட்டி அரசர் அளித்துள்ள வெகுமதியை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், நான் அரண்மனைக்குள் வரும் போது இரண்டு வாயில்களிலும் உள்ள வாயிற்காப்பாளர்களிடம் எனக்குக் கிடைக்கும் வெகுமதி எதுவாக இருந்தாலும் ஆளுக்கு சரிபாதியாகக் கொடுப்பதாக அவர்களுக்கு வாக்களித்துள்ளேன். அதனால் எனக்குக் கொடுக்க வேண்டிய இருபத்தி நான்கு சவுக்கடிகளை அவர்கள் இருவருக்கும் ஆளுக்குப் பனிரெண்டு சவுக்கடிகளாகத் தந்துவிடுங்கள்,'' என்று கூறினான்.

இதைக் கேட்டதும் தெனாலிராமன் மீதிருந்த கோபம் மன்னருக்கு நீங்கியது. அவனது புத்திசாலித்தனத்தை மனதாரப் பாராட்டி மகிழ்ந்தார். அதைக் கண்ட ராஜ குருவுக்கு அவன் மீது உண்டான பொறாமையால் மேலும் அதிகமாகிப் புழுங்கித் தவித்தார்.
முத்தமிழ் மன்றம்.


Last edited by Nisha on Mon 7 Jul 2014 - 0:46; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:07

தெனாலி ராமன் கதைகள் - 3 பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த துõதுவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன்,
""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:08

தெனாலி ராமன் கதைகள் - 4 - அடங்கா குதிரை

அரசர் கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதிரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.

ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.

அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.

"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.


Last edited by Nisha on Mon 7 Jul 2014 - 0:45; edited 2 times in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:11

தெனாலி ராமன் கதைகள் - 5 - மகிஷ பந்தனம்!

வேத அறிஞர் வித்யாசாகர் என்னும் பெரும் புலவர் ஒரு சமயம் விஜய நகரத்திற்கு வருகை புரிந்தார். தம்மைக் காட்டிலும் புலமை மிகுந்தவர் இவ்வுலகில் எவரும் இல்லை என்று ஆணவம் கொண்டிருந்ததால், வித்யாசாகர் ஒவ்வொரு நகருக்கும் சென்று அங்கிருந்த புலவர்களை வாதுக்கு அழைத்து வாதிட்டு வெற்றி பெற்று வந்தார். அது மாதிரியே விஜயநகரத்துப் புலவர் பெருமக்களைத் தன் வாதத் திறமையால் வென்றிடவே அவர் விஜய நகரத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

மன்னரின் அரசவைக்கு வந்த வித்யாசாகர் தன் வாதத் திறமையை வெளிப்படுத்தித் தன்னுடன் வாதிட வருமாறு அவைப் புலவர் பெருமக்களுக்கு அறைக்கூவல் விடுத்தார். அரசவையில் பெத்தண்ணா, திம்மண்ணா, சூரண்ணா உள்ளிட்ட ஏழு பெரும் புலவர் பெருமக்கள் இருந்தனர். இவர்கள் அனைவருமே தத்தம் துறையில் வல்லுநர்கள் என்றாலும் வித்யாசாகரின் வாதத் திறமையைக் கண்டு அஞ்சி அவருடன் வாதிடத் தயங்கினர். தன்னிடம் வாதிட அரசவைப் புலவர்களோ, மற்றவர்களோ முன் வராததைக் கண்டதும் வித்யாசாகரின் ஆணவப் போக்கு மேலும் அதிகமானது. இதனை உணர்ந்த தெனாலிராமன் சட்டென எழுந்து அவை முன்பாக வந்து நின்றான்.

""பெரும் புலவரே! பண்டிதப் பெருமானே! உம்முடன் வாதுபுரிந்திட நான் தயாராக வந்துள்ளேன். ஆனால், இன்று வேண்டாம். நாளை வைத்துக் கொள்வோம்'' என்று கூறினான் தெனாலிராமன்.

தெனாலிராமன் கூறியதைக் கேட்டதும் மன்னரும் அவைப்புலவர்களும், ஏனையோரும் பெரிதும் மகிழ்ந்து அவனைப் பாராட்டினார். "நாளை இவனால் பெரும் பண்டிதரான வித்யாசாகரை வாதில் வெல்ல முடியுமா?' என்ற சந்தேகம் அனைவருக்குமே இருந்தது. மறு நாள் அரசவை கூடியது. மன்னர் முன்பாகப் போடப்பட்டிருந்த இரு ஆசனங்களில் ஒன்றில் வித்யாசாகர் வந்து அமர்ந்தார். அப்போது தெனாலிராமனை ஆஸ்தான பண்டிதர் போல விலையுயர்ந்த ஆடை அணிகலன்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்து ஆசனத்தில் அமர வைத்தனர்.

தெனாலிராமன் பட்டுத் துணியால் சுற்றப்பட்டிருந்த கட்டையைத் தன்னுடைய கையில் வைத்திருந்தான். ""வாதைத் துவக்கலாம்,'' என்று மன்னர் கூறியதும் வித்யாசாகர், தெனாலிராமனின் கையிலிருந்த கட்டையைப் பார்த்தார். அது எதுவாக இருக்கும் என்று வித்யாசாகரால் ஊகித்து அறிய முடியவில்லை. அதனால் தெனாலிராமனிடம் அவர், ""ஐயா! தாங்கள் கையில் எதையோ வைத்துள்ளீர்களே... அது என்ன?'' என்று வினவினார்.

தெனாலிராமன் வித்யாசாகரை அலட்சியமாகப் பார்த்தான். பின் கம்பீரமாக அவரைப் பார்த்து, ""இதுவா? இதனை திலகாஷ்ட மகிஷ பந்தனம் என்று கூறுவர். இந்த நுõலின் துணை கொண்டு தான் இன்று உம்முடன் வாதில் இறங்க உத்தேசித்துள்ளேன்,'' என்றான்.

தெனாலிராமன் கூறிதைக் கேட்டதும் வித்யாசாகர் மிகவும் குழம்பிப் போனார். "இது நாள் வரையில் நாம் எத்தனையோ நுõல்களைக் கற்றிருக்கிறோம். ஆனால், இவன் கூறுவதைப் போன்றதொரு நுõலைப் பற்றி இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே... இந்த நுõலில் என்ன கூறியிருக்குமோ? இதைக் கொண்டு இவன் வாதிட்டால் நம்மால் பதில் வாதம் புரியமுடியுமா? ஒருவேளை நம்மால் முடியாதோ?' என்ற பயம் வித்யாசாகரின் மனதுள் எழுந்தது. அதனால் சட்டென எழுந்து, ""அரசே! வாதினை நாளை வைத்துக் கொள்ளலாம்,'' என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார்.

அன்றிரவு தான் தங்கியிருந்த மாளிகையில் படுத்திருந்த வித்யாசாகர் பலவாறு சிந்தித்துப் பார்த்தும், தெனாலிராமன் கூறிய நுõல் புரிந்து கொள்ள முடியாத நுõலாகவே இருந்தது. "இதுவரையில் தான் இப்படி ஓர் நுõலினைப் பார்த்ததே இல்லையே!' என்று அவர் கவலை அடைந்தார்.

இதுவரையில் சென்ற இடங்கள் அனைத்திலும் தன்னுடைய வாதத் திறமையால் தோல்வியே கண்டிராத வித்யாசாகர், தெனாலிராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. அதனால் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அந்த இரவுப் பொழுதிலேயே வித்யாசாகர் தன் மூட்டை முடிச்சுகளுடன் விஜயநகரத்தை விட்டு வெளியேறினார்.

மறுநாள் அரசவை கூடியது. தெனாலிராமனும் வந்து சேர்ந்தான். ஆனால், வித்யாசாகர் மட்டும் வரவேயில்லை! காவலர்களை அனுப்பி மன்னர் விசாரித்து வர உத்தரவிட்டார். வித்யாசாகரைத் தேடி சென்ற காவலர்கள் திரும்பி வந்து அவர் ஊரைவிட்டே ஓடி விட்டார் என்ற தகவலைக் கூறினார். வெகு எளிதில் வித்யாசாகரை வென்ற தெனாலிராமனை அவையோர் அனைவரும் பாராட்டினர்.

மன்னர் தெனாலிராமனிடம், ""ராமா! நான் கூட நீ வைத்திருக்கும் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்' என்ற நுõல் பற்றி இது நாள் வரையில் கேள்விப்பட்டதேயில்லை! அந்நுõலை காட்டு பார்க்கலாம்,'' என்றார்.

உடனே தெனாலிராமன் மூடியிருந்த பட்டுத் துணியை விலக்கினான். அதனுள் ஏடுகள் ஏதும் காணப்படவில்லை. மாறாக, எள், விறகு, எருமை கட்டும் கயிறு போன்றவை இருந்தன. அவற்றைக் கண்டதும் மன்னர் உள்ளிட்ட அனைவரும் வியந்தனர்.

அவர்கள் அனைவரின் வியப்பை நீக்கும் விதமாகத் தெனாலிராமன், ""அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு; மகிஷபந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன் உட்பொருளை வைத்துத்தான் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்' என்று கூறினேன். பயந்தோடி விட்டார்,'' எனக் கூறி சிரித்தான். அவன் கூறியதைக் கேட்டு அவையோரும் மன்னரும் சிரித்தனர். நாட்டின் பெருமையை காப்பாற்றிய தெனாலிராமனைப் பாராட்டிய மன்னர், அவனுக்கு பரிசளித்து சிறப்பித்தார்.


Last edited by Nisha on Sun 6 Jul 2014 - 21:13; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:15


தெனாலி ராமன் கதைகள் 6 சூடு பட்ட புரோகிதர்கள்


மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார். மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார். அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.
புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.
பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்.

மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே! அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே!

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.  


Last edited by Nisha on Sun 6 Jul 2014 - 21:14; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 20:45

கலர் கலராக உள்ள கதை கண்களை கூச செய்கிறது..
படித்து விமர்சனம் தருகிறேன்..
நன்றி அக்கா பகிர்வுக்கு..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Nisha on Sun 6 Jul 2014 - 20:58

நானே கேட்க நினைத்தேன்! எழுத்துக்களை சிறியதாக்கியதும் வர்ணமிட்டதும் படிக்க முடிகின்றதா ராகவன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by ராகவா on Sun 6 Jul 2014 - 21:02

Nisha wrote: நானே கேட்க நினைத்தேன்! எழுத்துக்களை சிறியதாக்கியதும் வர்ணமிட்டதும் படிக்க  முடிகின்றதா ராகவன்!
அக்கா..கண்கள் பாவம் ! எதோ நாங்கள் கொஞ்சம் படிக்க கொஞ்சம் கூடுதலாக கண்ணை விரிக்கனும்..
இதுக்குள்ள மினுமினுவென தெரியுது...பீளிஸ் ஒன்று பெரிய எழுத்துக்களால் இடுங்க..ஒரே கலரில் இடுங்க..
இல்லனா கறுப்பு தான் எனக்கு பிடித்த கலர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: தெனாலிராமன் வரலாறு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum