Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
விட்டுக்கொடுத்தல்
Page 1 of 1
விட்டுக்கொடுத்தல்
‘எப்போதும் நானேதான் விட்டுக் கொடுக்கணுமா?’ இந்தக் கேள்வி குழந்தைகள் முதல் வளர்ந்தவர்கள் வரை அனைவருக்கும் உண்டு. இந்த உலகமே நமக்கேற்றபடி, நாம் விரும்பும்படி இயங்க வேண்டும் என்பதுதான் நம் எல்லோரின் எதிர்பார்ப்பும். எல்லோரும் நம் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். நாம் சொல்வதை சரி என ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் நாம் நம் அன்புக்குரியவர்களாக வைத்துக் கொள்ள முனைகிறோம். அதே எதிர்பார்ப்பும் ஆசையும் நம்மைப் போலவே நம்மைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கும் என்பதை எப்போதும் மறந்து விடுகிறோம். குறிப்பாக திருமண வாழ்க்கையில் தம்பதியிடையே இந்த மனப்போக்கு இருந்தால் அது அவர்களது உறவுக்கு நல்லது செய்யாது.
கொடுக்கிற மனோபாவமும், திரும்பப் பெறுகிற மனோபாவமும் தம்பதியிடையே மிக மிக முக்கியம். அன்பு உள்ளிட்ட எதையும் பகிர்வதில் அவர்களுக்கிடையில் 50:50 பங்களிப்பு அவசியம். ஆனால், நாம் என்ன செய்வோம்? ஒருவர் மீது அளவுக்கு அதிக அன்பாக இருப்போம். அந்த அன்பை அப்படியே திரும்ப எதிர்பார்ப்போம். அது கிடைக்காதபட்சத்தில் ஏமாற்றமடைவோம். அதைத் தொடர்ந்து அவர்கள் மீது அன்பு செலுத்துவதை அதிரடியாக நிறுத்துவோம். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த அணுகுமுறை மிகவும் தவறானது... மரியாதையற்ற செயலும்கூட!
அதைத் தவிர்த்து நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ அதை நூறு சதவிகிதம் அப்படியே திரும்ப எடுத்துக்கொள்ள நீங்களே முனையலாம். நாம் நம் துணைக்கு என்ன கொடுக்கிறோம், நமக்கு என்ன எடுத்துக் கொள்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம். விலைமதிப்பில்லாத அன்பில் தொடங்கி, விலை வைக்கக்கூடிய பொருட்கள் வரை எல்லாவற்றுக்கும் இந்த விதி பொருந்தும். சிலர் தன் வாழ்க்கைத்துணையை விழுந்து விழுந்து உயிரையே கொடுத்து கவனிப்பார்கள். ஆனால், தன்னைக் கவனித்துக் கொள்வதில் அலட்சியம் காட்டுவார்கள்.
நீங்கள் இந்த ரகம் என்றால் உடனடியாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் துணைக்கு புது உடை வாங்கித் தருகிறீர்கள் என்றால், உங்களுக்கும் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்கு உடை தேவையில்லை என்றால் வேறு தேவையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் துணைவரின் உடல்நலத்துக்காகப் பார்த்துப் பார்த்து சமைத்துக் கொடுக்கிற நீங்கள், உங்கள் ஆரோக்கியத்திலும் அதே அளவு அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருசிலர், எப்போதும் தன்னைப் பற்றிய சிந்தனையில் தன்னைத்தானே கவனித்துக் கொண்டு, துணையை அலட்சியப்படுத்துவார்கள். ஒருவேளை இந்த ரகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நீங்கள் நிச்சயம் மாற வேண்டும்.
உங்களுக்காக நீங்கள் எடுத்துக்கொள்கிற அக்கறையை துணையிடமும் காட்ட வேண்டும். இதுதான் சரியான அணுகுமுறை. வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வது முதல் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது வரை எல்லாவற்றுக்கும் ஒரே சித்தாந்தம்தான். சரிபாதி பகிர்வு! கணவர் புதிய வாகனம் வாங்குகிறார். உங்களிடம் இருப்பதோ பழைய வாகனம். கணவரின் புது வண்டியை நீங்களும் ஓட்டலாம். அதற்கு அவரிடம் அனுமதி கேட்டுக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வாரத்தில் 3 நாட்கள் அவரும், மீதி 3 நாட்கள் நீங்களும் ஓட்டுவதாக முடிவெடுக்கலாம். பெரும்பாலும் இது போன்ற விஷயங்களில் வாழ்க்கைத்துணை ஆட்சேபம் தெரிவிப்பதில்லை. அதுவே ‘உனக்கு மட்டும் புதுசு... நான் மட்டும் பழசையே வச்சிருக்கணுமா?’ என ஆரம்பிக்கிற போதுதான் பிரச்னை.
விட்டுக் கொடுத்து, பெற்றுக் கொள்கிற இந்த அணுகுமுறைக்கு வெறும் மனது மட்டும் போதாது. நிறைய பக்குவமும் பயிற்சியும் தேவை. எந்த இடத்தில் யார் விட்டுக் கொடுப்பது சரி என்கிற தீர்க்க தரிசனத்துடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகும் மனோபாவம் வேண்டும். உதாரணத்துக்கு உங்கள் கணவருக்கு வேறு ஊருக்கு வேலையில் மாற்றலாகிறது. அங்கே போனால் அவருக்குப் பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் நிச்சயம். உங்களுக்கோ பிறந்தது முதல் அத்தனை வருடங்கள் வாழ்ந்த ஊரை, மனிதர்களை, உறவுகளை விட்டு புதிய இடத்துக்குப் போவதில் தயக்கம். ‘நான் சொல்ற இடத்துக்கு நீ வந்தாகணும்...’ எனக் கணவர் கட்டளையிடுவதோ, ‘உனக்கு வேணும்னா நீ போ.
நான் இங்கேயே இருந்துக்கறேன்’ என மனைவியோ ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என இந்த விஷயத்தில் முடிவெடுக்கக் கூடாது. இருவர் தரப்பிலும் உள்ள நல்லது கெட்டதுகளை ஆராய்ந்து, யார் விட்டுக் கொடுப்பது சரியான முடிவாக இருக்கும் என யோசித்துச் செயல்படுவதே சிறந்தது. உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்றில்லை... அந்த விஷயத்தை சற்றே ஆறப் போடலாம். சண்டையில்லாத மனநிலையில் இருக்கும் போது அதைப் பற்றி இருவரும் பேசி, ஒரு முடிவுக்கு வரலாம். அதுதான் உங்கள் இருவரின் அன்யோன்யத்தையும் அதிகரிக்கும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: விட்டுக்கொடுத்தல்
நீங்கள் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும் என்கிற நிலையில் உங்களுக்கு நீங்களே சில கேள்விகளைக் கேட்டுப் பார்க்கலாம்.
இந்த விஷயத்தில் எனக்கு என் துணைக்கு எதிரான கருத்து இருக்கிறதா?
துணை சொல்கிறவற்றில் எனக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?
நான் இரண்டு மனதோடு இந்த விஷயத்தை அணுகுகிறேனா? என்னுடைய பிடிவாதத்தை வைத்து இதைப் பார்க்கிறேனா? அல்லது நிஜமாகவே நான் நினைப்பது சரிதானா?
ஒருவேளை நானே விட்டுக் கொடுத்தால் அதனால் எனக்கு என்ன பலன்? விட்டுக் கொடுக்க மறுத்தால் என்ன பலன்? (உதாரணத்துக்கு கணவரின் வேலை மாற்றல் காரணமாக புதிய ஊருக்குச் செல்ல சம்மதித்தால், உங்கள் குழந்தையை சிறந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வாய்ப்பு அமையலாம்.)
விட்டுக் கொடுப்பது என முடிவெடுத்துவிட்டால் அதை மனப்பூர்வமாக செய்ய வேண்டுமே தவிர, தியாக உணர்வாக நினைக்கக் கூடாது. தியாகமாக நினைத்துச் செய்யத் தொடங்கினால், காலப்போக்கில் அது உங்களுக்குள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் பெருக்கும்.
எந்தெந்த விஷயங்களில் நீங்கள் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை ஒரு பட்டியலிடுங்கள். அதை வேறு எந்த விஷயங்களில் ஈடுசெய்ய முடியும் என்றும் யோசியுங்கள். உதாரணத்துக்கு எல்லா நாட்களிலும் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போவதாகவும், உங்களுக்கான நேரம் என்பதே அரிதாகிப் போனதாகவும் நினைக்கிறீர்களா? திடீரென ஒரு விடுமுறை நாளில் பிள்ளைகளை உங்கள் கணவரின் பொறுப்பில் விட்டுவிட்டு, உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தபடி உங்களுக்கு நீங்களே கட்டாய ஓய்வு கொடுத்துக் கொள்ளலாம். நச்சரிக்காத தொனியில் சில வேலைகளைக் கணவரிடம் பிரித்துக் கொடுக்கலாம். கணவர் தானாக முன்வந்து உங்கள் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற
எதிர்பார்ப்பே தேவையில்லை. கொடுப்பதில் எப்படி உங்களுக்கு உரிமை உண்டோ, பெற்றுக் கொள்வதிலும் அதே உரிமை உண்டு என்பதை மறக்காதீர்கள்!
(வாழ்வோம்!)
நன்றி குங்குமம் தோழி
இந்த விஷயத்தில் எனக்கு என் துணைக்கு எதிரான கருத்து இருக்கிறதா?
துணை சொல்கிறவற்றில் எனக்கு ஏதேனும் நன்மை இருக்கிறதா?
நான் இரண்டு மனதோடு இந்த விஷயத்தை அணுகுகிறேனா? என்னுடைய பிடிவாதத்தை வைத்து இதைப் பார்க்கிறேனா? அல்லது நிஜமாகவே நான் நினைப்பது சரிதானா?
ஒருவேளை நானே விட்டுக் கொடுத்தால் அதனால் எனக்கு என்ன பலன்? விட்டுக் கொடுக்க மறுத்தால் என்ன பலன்? (உதாரணத்துக்கு கணவரின் வேலை மாற்றல் காரணமாக புதிய ஊருக்குச் செல்ல சம்மதித்தால், உங்கள் குழந்தையை சிறந்த பள்ளிக்கூடத்தில் சேர்க்க வாய்ப்பு அமையலாம்.)
விட்டுக் கொடுப்பது என முடிவெடுத்துவிட்டால் அதை மனப்பூர்வமாக செய்ய வேண்டுமே தவிர, தியாக உணர்வாக நினைக்கக் கூடாது. தியாகமாக நினைத்துச் செய்யத் தொடங்கினால், காலப்போக்கில் அது உங்களுக்குள் கோபத்தையும் ஏமாற்றத்தையும் பெருக்கும்.
எந்தெந்த விஷயங்களில் நீங்கள் அதிகமாக விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை ஒரு பட்டியலிடுங்கள். அதை வேறு எந்த விஷயங்களில் ஈடுசெய்ய முடியும் என்றும் யோசியுங்கள். உதாரணத்துக்கு எல்லா நாட்களிலும் வீட்டு வேலைகளில் மூழ்கிப் போவதாகவும், உங்களுக்கான நேரம் என்பதே அரிதாகிப் போனதாகவும் நினைக்கிறீர்களா? திடீரென ஒரு விடுமுறை நாளில் பிள்ளைகளை உங்கள் கணவரின் பொறுப்பில் விட்டுவிட்டு, உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தபடி உங்களுக்கு நீங்களே கட்டாய ஓய்வு கொடுத்துக் கொள்ளலாம். நச்சரிக்காத தொனியில் சில வேலைகளைக் கணவரிடம் பிரித்துக் கொடுக்கலாம். கணவர் தானாக முன்வந்து உங்கள் வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்ற
எதிர்பார்ப்பே தேவையில்லை. கொடுப்பதில் எப்படி உங்களுக்கு உரிமை உண்டோ, பெற்றுக் கொள்வதிலும் அதே உரிமை உண்டு என்பதை மறக்காதீர்கள்!
(வாழ்வோம்!)
நன்றி குங்குமம் தோழி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|