சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பழங்களின் பயன்கள்
by rammalar Yesterday at 13:43

» பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!
by rammalar Yesterday at 3:59

» காதல் பிசாசே காதல் பிசாசே ...!
by rammalar Yesterday at 3:43

» தமிழக அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு
by rammalar Thu 6 May 2021 - 15:54

» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
by rammalar Mon 3 May 2021 - 8:57

» மீம்ஸ்
by rammalar Sun 2 May 2021 - 16:33

» தவல வடை
by rammalar Sun 2 May 2021 - 16:27

» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
by rammalar Sun 2 May 2021 - 16:03

» தமிழ்நாடு - தேர்தல் - மக்கள் தீர்ப்பு நிலவரம்
by rammalar Sun 2 May 2021 - 10:39

» அறுபடை வீடு கொண்ட திருமுருகா
by rammalar Sun 2 May 2021 - 4:06

» அனுபவ மொழிகள்-தொடர் பதிவு
by rammalar Sat 1 May 2021 - 16:57

» ‘குக்-வித் ஏமாளி!’
by rammalar Sat 1 May 2021 - 15:20

» மே-1 உழைப்பாளர் தின வாழ்த்துகள்
by rammalar Sat 1 May 2021 - 3:23

» திருப்பம் - சிறுகதை
by rammalar Fri 30 Apr 2021 - 15:36

» நடிகர் செல்லத்துரை காலமானார்
by rammalar Fri 30 Apr 2021 - 15:30

» விநாயகன் - பக்தி பாடல்
by rammalar Fri 30 Apr 2021 - 15:26

» பெங்களூரூக்கு சவால் அளிக்குமா பஞ்சாப்?
by rammalar Fri 30 Apr 2021 - 9:37

» கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி
by rammalar Fri 30 Apr 2021 - 9:34

» பல்சுவை கதம்பம்
by rammalar Thu 29 Apr 2021 - 18:17

» நடிகை ரெபா மோனிகா பாடும் விஷ்ணுபுராணம்!
by rammalar Wed 28 Apr 2021 - 16:57

» இலக்கியம் படித்த கௌரி..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:56

» சுனைன்னாவுக்கு நோபல் ப்ரைஸ் ..!
by rammalar Wed 28 Apr 2021 - 16:55

» அது அவன் இல்லை – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:53

» பெண்மனம் – ஒரு நிமிடக் கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:51

» நிழல் நிஜமாகிறது – ஒரு நிமிட கதை
by rammalar Wed 28 Apr 2021 - 16:50

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்
by rammalar Tue 27 Apr 2021 - 15:23

» உணவுதான் மூலத்துக்கு தீர்வு.
by rammalar Mon 26 Apr 2021 - 17:00

» ...காவல் காக்க முன்வர வேண்டும்!
by rammalar Mon 26 Apr 2021 - 15:41

» வாரியாரைக் காக்க வைத்த சாய்பாபா!
by rammalar Mon 26 Apr 2021 - 15:23

» தோஷத்துக்கு பரிகாரம் பண்ணணும்...!
by rammalar Mon 26 Apr 2021 - 15:18

» எங்கெங்கு காணினும் ஜடேஜாவின் விஸ்வரூபம் ஆல்-ரவுண்டரிடம் அடங்கியது ஆர்சிபி
by rammalar Mon 26 Apr 2021 - 6:27

» அனுமன் ஜெயந்தி
by rammalar Mon 26 Apr 2021 - 6:18

» கொஞ்சம் சிரிங்க பாஸ்!
by rammalar Mon 26 Apr 2021 - 5:32

» சீன கடற்படையில் 3 நவீன போர் கப்பல்கள் இணைப்பு
by rammalar Mon 26 Apr 2021 - 4:40

» விளையாட்டு செய்திகள் - சில வரிகளில்...
by rammalar Mon 26 Apr 2021 - 4:37

அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா! Khan11

அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!

Go down

Sticky அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!

Post by Nisha Tue 29 Jul 2014 - 1:39

தமிழ் இலக்கியங்களில் யானைகளை ஆண், பெண், குட்டி, அறுபது வயதிற்கு மேலான யானை, போர் யானைகள் என்ற அடிப்படையில் மட்டும் அல்லாது இன்னும் பல்வேறுப் பிரிவுகளாக அவற்றைப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

இதன் மூலம் பழந்தமிழர்களின் வாழ்வினில் யானைகள் எவ்வளவு பயன் ஆற்றின என்பதையும், தமிழர்கள் அந்த யானைகளை எவ்வளவு ஆழமாக உணர்ந்து அவற்றின் பிரிவுகளை வரையறுத்து வைத்து இருந்தார்கள் என்பதையும் அறியலாம்.

வேறு எந்த மொழிலும் இல்லாத சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு என்பதற்கு இதை விட...
வேறு சான்று தேவை இல்லை.

யானை என்றஒரு விலங்கை தமிழர்கள் எத்தனை விதமாக
அழைத்துள்ளனர்.

வியக்க வைக்கும் தமிழர்களின்அறிவுத் திறன். இத்தனை பெயர்களுக்கு இடம்கொடுக்கும் தமிழ் மொழியின் செம்மைத் திறன்!

யானையின் ஏனைய தமிழ்ப்பெயர்கள் சங்கஇலக்கியங்களிலும், பாடல்களிலும்பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு  வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்)
(1) கயந்தலை - பிறந்த உடனான யானையின் பெயர்
(2) போதகம் - எழுந்து நிற்க தொடங்கும் பருவம்
(3) துடியடி - ஓடி ஆடி விளையாடும் பருவம்
(4) களபம் - உணவு தேடி செல்லும் பயிற்சி பெரும்பருவம்
(5) கயமுனி - மற்ற இளம்யானைகளுக்கு பயற்சி அளிக்கும் பருவம்

பொதுவான பெண் யானையின் பெயர்கள்:
பிடி
அதவை
வடவை
கரிணி
அத்தினி

நிறங்களை கொண்டு யானையின் பெயர்கள்:
(1) கரிய நிறம்: யானை/ஏனை
(2) வெள்ளை நிறம்: வேழம்

யானையின் மற்ற காரண பெயர்கள்:
(1) உம்பல் - உயர்ந்தது
(2) கறையடி - உரல் போன்ற பாதத்தை உடையது
(3) பெருமா - பெரிய விலங்கு
(4) வாரணம் - சங்கு போன்ற தலையை உடையது
(5) புழைக்கை / பூட்கை / தும்பி - துளையுள்ளகையை உடையது
(6) ஓங்கல் - மலை போன்றது
(7) பொங்கடி - பெரிய பாதத்தை உடையது
(8) நால்வாய் - தொங்குகின்ற வாயை உடையது
(9) குஞ்சரம் / உவா - திரண்டது
(10) கள்வன் - கரியது
(11) புகர்முகம் - முகத்தில் புள்ளியுள்ளது
(12) கைம்மலை - மலையை போன்ற கையை உடையது
(13) வழுவை - உருண்டு திரண்டது
(14) யூதநாதன் - யானைக்கூட்டத்துத்தலையானையின் பெயர்
(15) மதோற்கடம் - மதகயத்தின் பெயர்
(16) கடகம் - யானைத்திரளின் / கூட்டத்தின் பெயர்,.

யானையின் ஏனைய பெயர்கள்:
 

  1. யானை/ஏனை (கரியது)
  2. வேழம் (வெள்ளை யானை)
  3. களிறு
  4. களபம்
  5. மாதங்கம்
  6. கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
  7. உம்பர்
  8. உம்பல் (உயர்ந்தது)
  9. அஞ்சனாவதி
  10. அரசுவா
  11. அல்லியன்
  12. அறுபடை
  13. ஆம்பல்
  14. ஆனை
  15. இபம்
  16. இரதி
  17. குஞ்சரம்
  18. இருள்
  19. தும்பு
  20. வல்விலங்கு
  21. தூங்கல்
  22. தோல்
  23. கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
  24. எறும்பி
  25. பெருமா (பெரிய விலங்கு)
  26. வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது)
  27. புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
  28. ஒருத்தல்
  29. ஓங்கல் (மலைபோன்றது)
  30. நாக
  31. பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
  32. கும்பி
  33. தும்பி (துளையுள்ள கையை உடையது)
  34. நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
  35. குஞ்சரம் (திரண்டது)
  36. கரேணு
  37. உவா (திரண்டது)
  38. கரி (கரியது)
  39. கள்வன் (கரியது)
  40. கயம்
  41. சிந்துரம்
  42. வயமா
  43. புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
  44. தந்தி
  45. மதாவளம்
  46. தந்தாவளம்
  47. கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
  48. வழுவை (உருண்டு திரண்டது)
  49. மந்தமா
  50. மருண்மா
  51. மதகயம்
  52. போதகம்
  53. யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
  54. மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
  55. கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!

Post by Nisha Tue 29 Jul 2014 - 2:55

யானை பாலூட்டி  வகையைச் சேர்ந்த தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும்.

இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும்.

மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்).யானையே  அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ஆகும்.

யானைகள் மிகவும் வலிமையானவை. ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர்.

 யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.

யானை எந்த விலங்குகளையும் தாக்காது , வேட்டையாடாது, மனிதர்களை மட்டுமே  தாக்குமாம்.

தகவல் நன்றி விக்கிமீடியா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!

Post by Nisha Tue 29 Jul 2014 - 2:58

யானைக்கு 170 வெவ்வேறு பட்ட பெயர்கள் உண்டாம்.
54 பெயர்   மட்டுமே பட்டியல் இடப்பட்டிருக்கின்றது. மீதியை தேடுவோம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!

Post by Nisha Tue 29 Jul 2014 - 3:00

யானை பழமொழிகள்.

  • யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
  • யானைக்கும் அடி சறுக்கும்.
  • யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும்  ஒரு காலம் வரும்
  • யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
  • யானை கறுத்தாலும் ஆயிரம் பொன்.


சொலவடைகள

  • யானைப்பசிக்கு சோளப்பொரியா?
  • யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளிப் போட்டுக்கொண்டது போல


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum