Latest topics
» என்ன வாடிவாசலா!!.. சூர்யா ரசிகர்களை குழப்பமடையச் செய்த ‘தி லெஜெண்ட்’ பட அறிவிப்பு!by rammalar Wed 18 May 2022 - 20:12
» ஓடிடியில் வெளியாகும் அசோக் செல்வன், பிரியா பவானி நடித்த ‘ஹாஸ்டல்’
by rammalar Wed 18 May 2022 - 20:09
» விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் கார்த்தியின் ‘விருமன்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Wed 18 May 2022 - 20:06
» சினி பிட்ஸ்
by rammalar Wed 18 May 2022 - 14:51
» விஜய் டைட்டிலில் விஜய்
by rammalar Wed 18 May 2022 - 14:21
» நெட்டிசன்களிடம் சிக்கிய மீரா
by rammalar Wed 18 May 2022 - 14:19
» வீரம் ரீமேக்கில் பூஜா
by rammalar Wed 18 May 2022 - 14:18
» அம்மா ஆகிறார் பரிணீதா
by rammalar Wed 18 May 2022 - 14:16
» வாட்ஸ் அப் டிரெண்டிங்
by rammalar Sun 15 May 2022 - 18:40
» சாணக்கியன் சொல்
by rammalar Sun 15 May 2022 - 18:37
» ஆண்டியார் பாடுகிறார்!
by rammalar Sun 15 May 2022 - 15:08
» பல்சுவை
by rammalar Sun 15 May 2022 - 15:02
» புகைப்படங்கள்
by rammalar Sun 15 May 2022 - 14:54
» பொன்மொழிகள்
by rammalar Sun 15 May 2022 - 11:52
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Sun 15 May 2022 - 11:50
» ராகி மோர் களி
by rammalar Sun 15 May 2022 - 11:47
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:39
» கூர்மன்" திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:34
» டான் திரைப்பட விமர்சனம்
by rammalar Sat 14 May 2022 - 14:31
» வெள்ளரி தயிர் சேவை & தயிர்நெல்லி ஊறுகாய்
by rammalar Sat 14 May 2022 - 14:29
» சுரைக்காய் +முள்ளங்கி காம்போ கறி
by rammalar Sat 14 May 2022 - 14:28
» நார்த்தை இலைப் பொடி
by rammalar Sat 14 May 2022 - 14:25
» போர் முரசை அலாரம் ட்யூனா வைத்திருக்கிறார்!
by rammalar Sat 14 May 2022 - 14:24
» மாறுவேடப் போட்டி…! -சிறுவர்மலர்
by rammalar Sat 14 May 2022 - 14:22
» பாரா ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற மதுரை மாணவி!
by rammalar Sat 14 May 2022 - 14:19
» பைலட்’ மயங்கி சரிந்ததால் விமானத்தை இயக்கிய பயணி
by rammalar Sat 14 May 2022 - 14:17
» கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!
by rammalar Sat 14 May 2022 - 14:16
» சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம்
by rammalar Sat 14 May 2022 - 14:15
» ஆவாரை
by rammalar Sat 14 May 2022 - 14:14
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 14 May 2022 - 14:13
» ஆண்களின் வழுக்கையை கேலி செய்வது பாலியல் குற்றம்
by rammalar Sat 14 May 2022 - 14:10
» ஆரஞ்சு தோல் துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:02
» கொண்ட நெல்லி டிரிங்க் & நுங்கு இளநீர் வழுக்கை சாலட்
by rammalar Sat 14 May 2022 - 14:01
» வெண்பூசணி அவல் டிலைட் & சௌசௌ துவையல்
by rammalar Sat 14 May 2022 - 14:00
» படித்ததில் பிடித்தது
by rammalar Thu 12 May 2022 - 16:54
பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
2 posters
பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
++++++++++++++++++++++++++++++++++++++++++

செல்லக் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான வழிகள் கண்டறியப்படுவதில்லை உருவாக்கப்படுகின்றன. அத்தகைய வழிகள் உருவாக்குபவரையே சென்றடையும். எதிர்காலம் குறித்து ஆஸ்திரேலிய ஆணைக்குழுவின் வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் இவை.
இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து அவர்களாகவே ஒரு கற்பனை செய்து எங்கேயோ சென்று கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டிய பருவத்துக்கு முன்பே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். அவர்கள் பெற வேண்டிய மகிழ்ச்சியை சிறிதும் சிந்தித்தும் பார்ப்பதில்லை. முளையிலேயே அவர்கள் மகிழ்ச்சியை கிள்ளி எறிந்து விடுகிறார்கள். நம்முடைய மகிழ்ச்சிக்காக அவர்களுடைய உரிமையை சந்தோஷத்தை தட்டிப் பறித்து விடுகிறோம் என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணருவதே இல்லை..
குழந்தைகளுக்கு தாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் இறுதியில் முழிக்கிறார்கள். அவர்களை கடல் அலைக்குள் தள்ளி தத்தளிக்கச் செய்வது போல ஆக்கி விடுகிறார்கள். இதனால் தான் ஜோன் ஹோல்ட் என்ற அறிஞர் குழந்தைகளை மதில்களால் குழப்பப்பட்ட தோட்டமாக பெற்றோர் கருதுகின்றனர் என்கின்றனர்.
குழந்தைகள் பலவீனவர்களாகவும் தனித்து இயங்க இயலாதவர்களாகவும் இருப்பதாலும் அவர்களை பெற்றோர் தங்கள் விருப்பம் போல ஆட்டிப் படைக்க ஆரம்பிக்கின்றனர். உண்மையில் வெளி உலகின் சவால்களை வெற்றி கொள்ளத் தேவையான ஆற்றல்கள் அரும்புகன்ற பருவத்தில் உள்ள குழந்தைகளை அடக்கி வைப்பது என்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்க முடியாது.
குழந்தைகளை வலுக்கட்டாயமாக பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புதல் கூடாது. கல்வி மீது குழந்தைகளுக்கு ஒரு நாட்டத்தை உருவாக்க வேண்டும். அவர்கள் விருப்பத்திற்கு மாறாக அவர்கள் விரும்பாத இடமாக பள்ளிக்கூடம் அமைந்து விடுமாயின் அது மதில்கள் சூழப்பட்ட சிறைக் கூடமாகவே அமைந்து விடும் என்பதை நாம் உணரத் தவறி விடக்கூடாது.
குழந்தை பருவம் ஒவ்வொருவரின் பிறப்புரிமை அதனை பாதுகாத்து அனுபவிக்க விட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு பெற்றோரின் கைகளிலேயே உள்ளது. குழந்தைகளை நட்புணர்வோடும், கடுமையான கட்டுபாடுகளின்றியும் அன்பும் ஆதரவும் உள்ள சூழலில் அர்ப்பணிப்பு உணர்வுடன் குழந்தையின் உயிரியல், உளவியல், சமூக அபிவிருத்தி முழு நிறைவுடையதாக அமையும். 5 வயது முதல் 10 வயதிற்க்குட்ப்பட்ட சிறுவர் சாதாரண விளையாட்டுகளுக்கு அவசியமான உடல் திறன்களை பயிலுவதற்று வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தன்னைக் குறித்த மனபாங்குகளை வளர்த்தல், பிறருடன் சேர்ந்து வாழப் பழகுதல், வாசிப்பு, பேச்சு எழுத்து கணிதத் திறன்களை அறிதல் மனசாட்சி ஒழுக்கம் ஆகியவற்றை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றியமையானதாகும். அதில் பள்ளிகளுக்கும், பெற்றோருக்கும் சமபங்கு உண்டு.
உடலில் நோய் ஏற்படுவதை எளிதாக அறியலாம். நோய்க்குரிய அடையாளத்தை கூறி மருத்துவரிடம் காட்டி நோயை குணப்படுத்தி கொள்ளலாம். ஆனால் மனதில் ஏற்படும் நோயை கண்டறிவது அவ்வளவு சுலபமானது அல்ல. அதனால் மன ஆரோக்கியம் வாய்ந்த குழந்தைகளை உருவாக்குவது மிகவும் இன்றியமையாதது. நாம் வாழவதற்காகதான் உணவே தவிர உண்பதற்காக வாழவில்லை.. அதனால் தான் சத்தான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை தேடித் தேடி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம்.
அதை போலவே குழந்தைகளுக்கு தேவையான உளவியல் ஊட்டச் சத்துக்களாகிய விளையாட்டுக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவற்றை தேவையான போது வழங்க மறுத்துவிட்டு பிறகு கவலைப்படுவதில் நியாயமில்லை.. ஒருக்குழந்தை ஆக்கத்திறனும், சுறுசுறுப்பு மிக்கதாகவும் இருக்க வேண்டுமானால் விளையாட்டும், அக்குழந்தையின் வாழ்க்கையாகவும் வர வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகள் அப்படி வளர்க்கப் படுகிறார்களா! இல்லையே
குழந்தைகள் காலையில் எழுந்தது முதல் இரவு 10 மணி வரையில் தங்கள் நேரத்தை படிப்புக்காக அர்ப்பணிக்கப்பட வேண்டியவர்களாக உள்ளனர். இதனால் நாம் சாதிக்க முனைவது வெறுப்பும், விரக்தியும் கொண்ட ஒரு மனிதனைத் தானே தவிர சாதனை மனிதனை அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. அதனால் தான் என்னை நானாக வளர விடுங்கள் என்று ஒவ்வொரு குழந்தையும் கூறுவது வெளியில் கேட்காத ஓசையாக அடங்கிவிடுகிறது.
தேர்வு முடிந்து வந்த குழந்தை தன் தாயிடம் அம்மா நான் இனியாவது விளையாடலாமா ? என்று கேட்கிறது. குழந்தைகளை சிரிக்க விடுங்கள் குழந்தைகளை விரும்பும் பாதையில் அவர்களை நடைபோட அனுமதியுங்கள்.. நலமே விளையும் நன்மைகள் தொடரும் குழந்தைகள் அவர்களுக்காக சிரிக்கட்டும், நேரத்தை செலவிடட்டும்....
நன்றி : முகநூல்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பெற்றோர்களே குழந்தைகளை சிரிக்க விடுங்கள் :-
படத்தில் இருக்கும் குழந்தையின் சிரிப்பு மனதை அள்ளுது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16846
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|