சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்? Khan11

மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

Go down

Sticky மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

Post by ahmad78 on Tue 26 Aug 2014 - 9:35

மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்? Ld2652
மாதத்தில் அந்த 3 நாட்கள் மட்டும் வராமலே இருக்காதா என மிரட்சி கொள்கிற பெண்கள் பலர். காரணம், வாழ்க்கையையே  வெறுக்கச் செய்கிற அந்த  நாட்களின் வலி.  மாதவிலக்குக்கு 10-15 நாட்களுக்கு முன்பே ஆரம்பிக்கிற அந்த வலி, மாதவிலக்கின்  போது அதிகமாகி, முடிகிற வரை  தொடர்வதன் பின்னணி, தீர்வுகள் என எல்லாவற்றையும் பற்றிப் பேசுகிறார் பொது மருத்துவர்  ரிபப்ளிகா.

‘‘மாதவிடாய்க்கு முன் கர்ப்பப் பையில் உள்ள ரத்தக் குழாய்கள் திறந்து கொள்ளும். ரத்தப் போக்கு ஆரம்பமாகும். 3 முதல் 5 நாட் களில் மாதவிடாய்  முடிந்ததும், கர்ப்பப் பை தசைகள் சுருங்கி, ரத்தக் குழாய்கள் மூடிக் கொள்ளும். இவை எல்லாவற்றையும் கட்டுப்ப டுத்துவது ஹார்மோன்கள். அந்த  ஹார்மோன்கள் சரியில்லை என்றால் அடி வயிற்று வலி வரும். அடுத்து கர்ப்பப் பையில் கட்டிகள்  இருந்தாலும் வலி வரும். கட்டி என்றதும்  புற்றுநோய் கட்டியோ என்று பயப்பட வேண்டாம். கர்ப்பப் பையின் உள்ளே இருக்கும்  தசையானது இறுகியிருக்கும். கர்ப்பப் பையானது சுருங்க, அந்தத்  தசைகள் மென்மையாக இருக்க வேண்டும். 

அதே போல கட்டி எந்தப் பக்கம் இருக்கிறதோ, அதைப் பொறுத்து வலியின் இடமும் மாறும். கீழே இருந்தால் அடிவயிற்றிலும், கர்ப் பப் பையின்  பின்புறம் இருந்தால் முதுகுவலியும் இருக்கலாம். அடினோமையோசிஸ் என்கிற பிரச்னை இருந்தாலும் வலிக்கும். கர்ப்பப்  பை புண்ணானதன்  விளைவாக, மாதவிலக்கு நாட்களில் உருண்டு, புரண்டு துடிக்கிற அளவுக்கோ, மாதா மாதம் பிரசவ வலியை மிஞ் சும் அளவுக்கோ வலிக்கும். அடிக்கடி  வடி அண்ட் சி செய்கிறவர்களுக்கும், வருடக் கணக்கில் காப்பர் டி உபயோகிப்பவர்களுக்கும்  அடினோமையோசிஸ் வரலாம்.

பூப்பெய்திய புதிதில் முதல் ஒரு வருடத்துக்கு அதிக வலி இருப்பது சகஜம். அதையும் தாண்டித் தொடர்ந்தாலோ, கட்டிக் கட்டியான  ரத்தப் போக்கு  இருந்தாலோ கர்ப்பப் பையில் பிரச்னைகள் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். புதிதாகத் திருமணமானவர்களுக்கு  முதல் சில மாதங்கள் அடி  வயிற்று வலி இருப்பது சகஜம். அவர்களுக்கு ‘டார்ச்’ என்கிற இன்ஃபெக்ஷன் காரணமாக இருக்கலாம்.  வயிற்று வலியுடன், காய்ச்சலும் சேர்ந்து  கொள்ளும். கர்ப்பம் தரிப்பதில் பிரச்னை இருக்கலாம். டார்ச் என்பது 2 - 3 இன்ஃபெக் ஷன்கள் சேர்ந்தது என்பதால் வலி இருப்பவர்கள் மருத்துவரைப்  பார்த்து அதற்கான மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும். 

ஒரு மாதவிடாய்க்கும், இன்னொரு மாதவிடாய்க்கும் இடையிலான 13 முதல் 15வது நாளில் வயிற்று வலி வரும். அது கருத்தரிக்கும்  நேரம்  என்பதற்கான அறிகுறி. அதுவே சினைப்பையில் கட்டி உருவாகி, பொறுக்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் மருத்துவரைப்  பார்க்க வேண்டும்.  மெனோபாஸ் வயதில் இருப்போருக்கு வரும் வலி அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப் பை கட்டியின் விளைவா கவும், அது புற்று நோயாக மாறியதன்  விளைவாகவும் அந்த வலி ஏற்பட்டிருக்கலாம். பாப் ஸ்மியர் சோதனையின் மூலம் அதைக்  கண்டுபிடிக்கலாம்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படுகிற வலிக்கு, உடனே நீங்களாக வலி நிவாரண மாத்திரை வாங்கி உட்கொள்ளக்கூடாது. நிறைய திரவ  உணவுகள்  எடுத்துக் கொள்ள வேண்டும். சுத்தமும், சுகாதாரமும் முக்கியம். ரத்த சோகை இருந்தால் சரிப்படுத்தப்பட வேண்டும்.  நார்ச்சத்துள்ள காய்கறிகள்  மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வதன் மூலம் கர்ப்பப்பை லேசாக இருப்பது போல உணரலாம்...’’ என் கிறார் பொது மருத்துவர் ரிபப்ளிகா.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2654&Cat=501


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

Post by rammalar on Tue 26 Aug 2014 - 18:09

மகளிருக்கு பயனுள்ள பதிவு..
-
*_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15664
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

Post by முனாஸ் சுலைமான் on Tue 26 Aug 2014 - 18:11

நல்ல பதிவு *_
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மாதவிலக்கு நாட்களில் வலி ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum