Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Sat 13 Aug 2022 - 5:49
» கடவுளின் ஆசி - கற்பனைக் கதை
by rammalar Fri 12 Aug 2022 - 9:53
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 12 Aug 2022 - 6:09
» விலங்குகளின் நடை - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:41
» சின்ன மைனா - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» தமிழ் - சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:40
» பச்சைக்கிளி- சிறுவர் பாடல்
by rammalar Mon 8 Aug 2022 - 12:38
» படித்ததில் பிடித்தது - தொடர் பதிவு
by rammalar Sun 7 Aug 2022 - 13:26
» அறி(யா)முகம் – கவிதை
by rammalar Sun 7 Aug 2022 - 13:22
» வாழ்க்கையின்ரகசியம்
by rammalar Sat 6 Aug 2022 - 5:20
» காதல் என்பது தேன் கூடு அதை கட்டுவதென்றால் பெரும்பாடு...!
by rammalar Sat 6 Aug 2022 - 5:16
» சிம்பல்
by rammalar Thu 4 Aug 2022 - 16:58
» பூ மரங்கள் - புகைப்படம்
by rammalar Wed 3 Aug 2022 - 18:22
» ராஜ தந்திரம் வீணாகி விட்டதே...!
by rammalar Wed 3 Aug 2022 - 18:06
» நச்சுனு 10 கடி ஜோக்கு..!
by rammalar Wed 3 Aug 2022 - 10:52
» சாணக்கியன் சொல்
by rammalar Mon 1 Aug 2022 - 5:00
» ஆடை ஒரு போதும் சிறந்த மனிதனை உருவாக்காது!
by rammalar Mon 1 Aug 2022 - 4:57
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 1 Aug 2022 - 2:15
» வாழ்க்கைக்கு நன்று- கவிதை
by rammalar Sun 31 Jul 2022 - 17:29
» இளமையின் ரகசியம் சிரிப்பு தான்!
by rammalar Sun 31 Jul 2022 - 14:22
» இணைய தள கலாட்டா!
by rammalar Sun 31 Jul 2022 - 14:21
» ஆடி மாத தேவி பாட்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:20
» தினம் ஒரு மூலிகை- கீரி பூண்டு
by rammalar Sun 31 Jul 2022 - 14:19
» குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» நீந்துவதால் முன்னேறுகிறேன்
by rammalar Sun 31 Jul 2022 - 14:18
» மூட்டு வலி நீக்கும் மூலிகை தைலம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:16
» மீன் வளர்ப்பிலும் வருமானம் பெறலாம்
by rammalar Sun 31 Jul 2022 - 14:15
» எடையைக் குறைக்க உதவும் புளி
by rammalar Sun 31 Jul 2022 - 14:14
» திறமையைக் கண்டறியுங்கள் - மீனா
by rammalar Sun 31 Jul 2022 - 14:13
» கிளீன் கிச்சனுக்கு எலுமிச்சை, சோடா இப்படி யூஸ் பண்ணுங்க!
by rammalar Sun 31 Jul 2022 - 14:12
» சினி துளிகள்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:08
» 'ஹீ ரோ'வாக நடிக்க பயப்படும், பார்த்திபன்!
by rammalar Sun 31 Jul 2022 - 11:07
» திருமணத்திற்கு பிறகும் எகிறி அடிக்கும், நயன்தாரா!
by rammalar Sun 31 Jul 2022 - 11:06
» ராஜ மவுலியுடன் போட்டி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:05
» விஜய்க்கு கல்லெறியும், கேஜிஎப் பட நாயகி!
by rammalar Sun 31 Jul 2022 - 11:04
பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
3 posters
பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
உலக அளவில் தவறாக புரிய பட்டுள்ள மார்க்கம் ஓன்றுஉண்டு என்றால் அது இஸ்லாத்தை தவிர வேறு எதுவும் இல்லை .
இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாம் அல்லாத செயல்பாடுகளை
இஸ்லாமியர்கள் செய்யும்போது பிறமதத்தவர் இஸ்லாத்தை தவறாக
புரிகிறார்கள்.
ஒரு முஸ்லிம் மது குடிக்கிறான்,வட்டி வாங்குகிறான் என்றால் அது தனிமனிதனின் செயலாக பார்க்க படுவதில்லை இஸ்லாத்தில் இதுவெல்லாம்
கூடும் போல என்று பிறமதத்தவர்கள் எண்ணுபடியே அமைகிறது .
இப்படி தவறாக இஸ்லாத்தை என்ன முழுக்க முழுக்க காரணம் யார்?
சந்தேகமே இல்லை முஸ்லிம்கள் தான் .
இவர்களின் செயல்பாடுகள் இஸ்லாத்தின் மீதான நிழலை தவறாக பதிய வைக்கிறது .
அதன் விளைவால் உலகம் இஸ்லாத்தை தவறாக புரிகிறது.
இஸ்லாத்தின் துவக்கத்தில் இஸ்லாத்தின் நற்பெயருக்காக
எவ்வளவு போராடினார்கள் முஹம்மது (ஸல்) அவர்கள்
“ஹஜருல் அஸ்வத் கல்லை யார் காபாவில் வைப்பது என்ற கோத்திர
சண்டையின்போது நபிகளார் ஒரு துணியை பிடித்து வாருங்கள்
அனைவரும் சேர்ந்து இந்த கல்லை வைப்போம் என்று கூறிய
நிகழ்வு.
மேற்கத்தியர்கள் இஸ்லாத்தின் வரலாற்றை எழுதும் போது
இந்த நிகழ்வு நபியின் 38 வது வயதில் நடந்தது இந்த
நிகழ்வே இஸ்லாத்திற்கு மிக நல்ல பெயரை வாங்கி தந்தது
என்று கூறும் செய்தி வரலாறு பதிவு செய்கிறது .
தன் சமூகத்திக்கு எதிரான செயல்பாடுகளை எல்லாம்ஒப்பந்தம் என்று சொல்லி ஹுதைபியா உடன்படிக்கை என்று கொண்டுவந்தபோது இஸ்லாமியர்கள் ஒப்பந்ததிக்கு உடன் படாதவர்கள் என்ற களங்கம் வந்துவிட கூடாது என்பதற்காகஅந்த ஒப்பந்ததிலும் கையெழுத்து போட்டார்கள் நபிகளார் .
வரலாற்றில் ஒப்பந்தம் என்று ஓன்று போட்டால் அதை மீறியே
செயல்படுவான் என்று வரலாற்றில் கூறப்படும் யூதர்களிடமும்
ஒப்பந்தம் இட்டார்கள் நபிகளார் .இஸ்லாத்திற்கு ஒரு கலங்கமும் வரகூடாது என்று
போராடினார்கள் நபிகளார் .
சில தினங்களுக்கு முன் நடந்த பாகிஸ்தான் பெஷாவர் நிகழ்வு
இதை நாம் நடுநிலையாக எந்தவித நெடுயும் உரசலும் இல்லாமல்
இதை பார்க்கவேண்டும் சர்வதேச அளவில் ஒரு பொது எதிரியை சுட்டிக்காட்டி எல்லாம் அவனாக தான் இருக்கும் என்றுஒற்றை வரியில் கூறிவிட்டு போகும் விடயம் அல்ல .
ஒரு போட்டோவைவைத்து மக்களை திசை திருப்பமுடியும் என்றாலும்
இதை எந்த வித நீட்சியும் இல்லாமல் சரியான கோணத்தில் பார்க்க
தவறினால் இஸ்லாத்தின் பெயர் மிக அபாயகரனாக போகும் .
இஸ்லாம் எந்த இடத்திலாவது குழந்தைகளை கொல்ல சொல்லி இருக்கிறாதா ? ஒரு இஸ்லாமிய போர்வீரனுக்கு கூட வழங்கவில்லை
போர் களத்தில் எந்த வித யுத்த தந்திரங்களும் கூடும் என்கிற இடத்தில்
கூட குழந்தைகளை கொல்ல அனுமதிகிடையாது .
நீங்கள் எந்த இஸ்லாத்தின் பெயரால் குழந்தைகளை கொல்கிறீர்கள் ?
தெளிவான குற்றசாட்டை பதியவேண்டும் .
தாடியும் தலைப்பாகையும் வைத்த எல்லார் செய்யும் செயல்பாடுகளும்
நியாயமாகாது . அப்படி எடுத்துகொள்ளவும் கூடாது .
ஒருவேளை இவர்கள் கூலிபடை என்றால் அந்த கூலிப்படைக்கு இதுபோன்ற
தாடிகளும் தொப்பிகளும் எப்படி ஒத்துபோனார்கள் .
அமெரிக்கா, இஸ்ரேலின் கூலிப்படியாக இருக்கலாம் என்றெல்லாம் கூறுகிறீர்கள் .
மேலும் இவர்கள் இதற்க்கு முன் செய்த செயல்களையெல்லாம்
எப்படி பாராட்டமுடியும் ?
எவ்வளவு கேவலமான களங்கத்தை இஸ்லாத்தின் ஏற்படுத்தியுள்ளார்கள்
தெரியுமா ?
பொது இடங்களில் தாடியையும் தொப்பி அணிந்தவனையும் மிக மோசமாக
பார்க்கும் ஒரு மிகபெரிய விளைவுகள்
நாம் சரியாக புரியவேண்டும் முஅத்தா போர் முஸ்லிம்களின் 3 தளபதிகள்
பல முஸ்லிம்கள் கொல்லபடுவார்கள் என்று நபிக்கு தெரிந்து
எப்போதும் சொல்லும் வார்த்தை
குழந்தைகளை கொன்று விடாதீர்கள் , பெண்களைக் கொன்று விடாதீர்கள்.
முதியோரை கொல்லாதீர்கள் . மரம் செடிகளை வெட்டாதீர்கள் “
போர் உச்சத்தில் கட்டுபாடுகள் மீறப்பட்டு உச்சகட்ட உணர்வில்
என்னவெல்லாம் செய்ய தூண்டுமோ அவை அனைத்தையும்
பட்டியல் போட்டார்கள் நபிகளார் .
யுத்தகளத்தில் கூட குழந்தைகளை தீண்ட அனுமதிக்காத போது
சர்வசாதாரணமாக 140 குழந்தைகளை கொன்று குவித்துள்ளீர்களே
உங்களுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன வித்தியாசம் ?
இன்னும் ஆதார பூர்வமாக ” நாங்கள் கொல்லவில்லை என்று
பாகிஸ்தான் தாலிபான் ஒரு தகவலை கூட அறிவிக்கவில்லை
என்பதை இஸ்லாமிய இளைய சமூகம் கருத்தில் கொள்ளவேண்டும் .
நாம் வேண்டுமானால் முகநூலிலும் , வாட்ஸ்ஆப்களிலும்
வதந்திகளை பரப்பலாம் .
எப்படி இந்த தாடியும் தொப்பியும் கூலிபடையாக விலைபோனது ?
பல நூற்றாண்டுகள் காத்துவரபட்ட இஸ்லாத்தை இப்படி சற்றும்
எண்ணாமல் கலங்க படுத்திவிட்டீர்களே !!
நபிகளார் ஒரு பெண் போரில் கொல்லபட்டு கிடந்த போது
அங்கேயே இறைவனிடம் கையேந்திவிட்டார்கள்
“யா அல்லாஹ் இந்த செயலுக்கும் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை “
பெண்களை கொல்ல சொல்லி நான் கூறவில்லை , குழந்தைகளை கொல்ல
சொல்லி நான்கூறவில்லை .என்று கூறினார்களே
நீங்கள் எந்த இஸ்லாத்தின் பெயரால் குழந்தைகளை கொல்கிறீர்கள்
இஸ்லாத்தை காரி துப்பவா போராட்டம் நடத்துகிறீர்கள் ?????
பின்னாலே யூதன் உள்ளான் , அமேரிக்கா உள்ளான்
என்றெல்லாம் கூறலாம் அவர்களுக்கு இந்த முஸ்லிம் பெயர் தாங்கிகள்
எப்படி துணைபோனார்கள் ???
தனிநபர் செய்தால் கூட காரிதுப்பகூடிய நிகழ்வை இஸ்லாத்தின் பெயர் தாங்கி செய்யலாமா ?
பொதுவாக வன்முறை கண்ணாடியை கொண்டு பார்க்கும் இஸ்லாமிய
இளைய சமூகம் மிகபெரிய தவறு செய்கிறீர்கள் !!!
வரக்கூடிய எல்லா அமைபிர்க்கும் ஆதரவு தருவது மிகபெரிய
தவறு . அவர்களுக்கு பரிந்து பேசுவது மிகபெரிய ஆபத்து .
ஹம்ஜா (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது நபிகளார்
விம்மிவிம்மி அழுதார்கள் .
ரபீயா (ரலி) போன்ற நபிதோழர்கள் அறுதல் சொல்ல
கட்டுபடுத்தமுடியாமல் வருகிறது அழுகை.
தாம் அனாதையாக விடப்பட்டபோது அரணாக காத்து வளர்த்தவர்
ஹம்ஜா (ரலி) அவர்கள் . எந்த அளவிற்கென்றால் நபிகளாரை
கண்டால் கல்லால் அடித்து விரட்டிய மக்காவாசிகள்
ஹம்ஜா (ரலி) வருவத்தை கண்டால் தலைதெறிக்க ஓடுவார்கள் .
அப்படிப்பட்டவர் உடலை சிதைத்து அலங்கோலமாக ஆக்கப்பட்டபோது
ஜனாசா தொழுகை நிறைவேற்ற நினைக்கும் போது கோபத்திலே
வந்த வார்த்தை இந்த ஹம்ஜாவிர்க்காக அவர்களில் 70 பேரை நான் பழிவாங்குவேன் என்றார்கள்" மனிதம் காயபடுத்தப்படும்போது
உணர்வுகளை மீறி வரும் வார்த்தைகள்
உடனே இறைவன் வசனம் இறக்கினான்
“தாக்கியவரை மட்டும் திருப்பி தாக்க அனுமதியுண்டு மேலும் உங்களால்
பொறுமைகாக்க முடிந்தால் அதுவே சிறந்ததது"
என்று இறைவசனம்
இறங்கியது நபிகளார் அழுகையை நிறுத்தி கொண்டு என் இறைவனுக்காக
பொறுமையை மேற்கொள்கிறேன்” என்றார்கள் .
வரலாற்றில் ஹம்ஜா (ரலி) கொல்லபட்டதிற்க்காக பல வாய்ப்பு கிடைத்தும் ஒருவரை கூட கொல்லவில்லை நபிகளார் .
ஆனால் இன்று தாலிபான்கள் நிகழ்த்திய நிகழ்வை எந்த வகையில்
ஒப்பிடுவது சதி இருக்கலாம் பல நிகழ்வுகள் இருந்தன
ஆனால் இந்த தாலிபான் எப்படி கைக்கூலியாக மாறியது .
இந்த இயக்கங்களை ஷரியதொடு ஒப்பிட்டுபார்க்கவேண்டும் .
இந்த நிகழ்வு உலக அளவில் எல்லா அமைப்பின் மீதும் சந்தேகத்தை
தீவிர படுத்தியுள்ளது மட்டும் அல்ல முஸ்லிம்கள் மத்தியில் மிக பெரிய
எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது .
“இராணுவம் தாக்குதலை நிறுத்தாவிட்டால் இதுபோல் பல பள்ளிகளில்
அரகேற்றுவோம் என்று கூறியுள்ளார்களே இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா !!!!
தேர்வு எழுதிகொன்டிருந்த நேரம் 8 மணி நேரம் போராடி போராடி 140 குழந்தைகளை கொன்று நீயும் செத்துமடிந்துல்லாயே !!
இதற்கெல்லாம் ஜிஹாத் என்று சொல்லுவீர்களா !!!
ஜிஹாதின் விளக்கம் என்ன தெரியுமா ?
அல்லாஹுவின் பெயரை உயர்த்தும் தூய செயல்களே ஜிஹாத்
உங்கள் தவறான உணர்வுகளை கட்டுபடுத்துவதே ஜிஹாதுள்
அக்பர் .
இப்படி 140 குழந்தைகளை இஸ்லாத்தின் பெயரால் கொன்று போட்டுள்ளாயே !!
அந்த நிகழ்வில் இருந்த சிறுவன் பேட்டிகொடுக்கிறான்
“வந்தவர்களெல்லாம் தாடி வைத்திருந்தார்கள் , அரபியிலேயே
பேசி கொண்டார்கள் “
காரி துப்புபடிம் இல்லை !! கேவலமாக இல்லை
பிள்ளைகளை பறிகொடுத்த பொற்றோரின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்வீர்கள் .?
எதாவது ஒரு செயலை செய்யும் போது ஒருவரை காயபடுத்தும் போது
அதன் எதிர்விளைவு இஸ்லாத்தை பற்றி தவறாக சித்தரிக்கும் என்று
அறிந்தால் வெகு தூரம் தள்ளி நிற்பான் ஒரு உண்மையான
முஸ்லிம் .
ஹதீஸில் வருகிறது .
அன்றைய ஹிந்தா என்ற பெண் ஹம்ஜா (ரலி) அவர்களின் உடலை இரண்டாக கிழித்து உடல் உறுப்புகளை எல்லாம் கடித்து துப்பி
இருதயத்தை கடிக்க முற்பட்ட போது அது வளிக்கிகொண்டு போனது
என்று அறிவிக்கபடுபோது இது எவ்வளவு பெரிய சித்தரவதை
அதுபோல் தானே நீங்கள் இப்படி செய்துள்ளீர்கள்
ஒரு தாய் தன் குழந்தையின் காலணியை எடுத்து காட்டுகிறாள்
அதில் அந்த குழந்தையின் கால் துண்டாக இருக்கிறது
எவ்வளவு பெரிய சித்திரவை சம்பவம் இது .
உலகமே காரி துப்பும் நிகழ்வை இஸ்லாத்தின் பெயரால்
செய்துவுள்ளீர்களே !!
இன்று பலர் ISIS அமைப்பை நியாய படுத்தி கூறுகிறார்கள்
குவைத்தில் வெளியாகும் முஜ்தமா பத்திக்கை ஒரு நடுநிலையான
ஷரியத் ரீதியான பத்திரிக்கை ISIS அமைபின் தலைவரான
அபூபக்கர் அல்பாக்தாதி சிறையில் இருந்த காலமெல்லாம்
இஸ்ரேலுடன் தொடர்பில் இருந்தவன் .”என்று செய்தி வெளிடுகிறது .
ஒருவனை பிடித்து அவன் தலையை அறுத்து அதை யூ டூப்ளே போட்டு
“நாங்கள் இப்படித்தான் தலையை அறுப்போம் , எங்களை காட்டி கொடுக்கும்
முஸ்லிமையும் இப்படி தான் கொல்லுவோம்” என்று காட்டுகிறான்
என்றால் அவனின் நோக்கம் என்னாவாக இருக்கும் சிந்திக்க வேண்டும்
சர்வதேச மார்க்க அறிஞர்களும் நடுநிலைவாதிகளும்
சமூக அக்கறைகொண்ட அனைவரும் தெள்ள தெளிவாக கூறிவிட்ட பிறகும்
சில இரத்தம் சூடு பிடித்த இளைஞர்கள் உங்கள்
எண்ணங்களை மறு ஆய்வு செய்யுங்கள் ..!!!
140 பேரை கொன்றுவிட்டு இதில் வருத்தம் என்ன தெரியுமா ?
அவர்கள் புகைபடம் வெளிவரும்போதெல்லாம் லா இலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதர் ரசூலுல்லாஹ் “ என்ற கலிமா பொருந்திய பேனர்கள் பக்கத்தில்
அமர்ந்து பேட்டி கொடுக்கிறார்கள்
எந்த ஒரு உயிரும் இந்த பூமியிலே அநியாயமாக கொல்லப்பட கூடாது
என்று போராடிய எங்கள் நபியின் பெயரை பேனரின் பக்கத்தில் அமர உங்களுக்கு என்ன யோகிதை உள்ளது !!
தெருவிலே முள் கிடந்தால் அதை முதலில் அகற்றிவிடுங்கள்
யார் காலிலும் குத்திவிடும் என்று கூறிய நபிகளின் பெயரை பேனரிலே போட உங்களுக்கு என்ன அருகதை உள்ளது !!
நீங்கள் அவசர காரியமாக பொதுமக்கள் மத்தியில் கடந்து போகிற போது உங்கள் கையில் ஆயுதம் இருந்தால் அதன் முனைகளை மறைத்து கொள்ளுங்கள்
வால் கொண்டுபோனால் அதை உரைகளில் வைத்துகொள்ளுங்கள்
என்று மக்களுக்கு பீதியை கூட உருவாக்கிவிட கூடாது
என்று கூறிய நபிகளின் பெயரை பேனரிலே போட உங்களுக்கு என்ன அருகதை உள்ளது !!
இதுபோல் நபியின் பெயரையும் , அவர்களின் சின்னங்களையும்
கேவலபடுத்த வேறு யாராலும் இயலாது .
மேலும் இதற்க்கு பின் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திட்டம்
இருக்கலாம்.
எங்கு குண்டு வெடித்தாலும் புகைவது அமெரிக்காவில் என்பது நமக்கு தெரியும் !! ஆனால் அதற்க்கு உங்களிடம் தகுந்த உண்மையாக
ஆதாரம் இருந்தால் அதை பத்திரிக்கைகளுக்கு தெரிவியுங்கள் . அதை விட்டுவிட்டு பொய் வதந்திகளை இஸ்லாமியர்கள் பரப்புவதுமிகபெரிய தவறு இதற்கு பின்னால் யார் வேண்டுமானாளும் இருக்கலாம் அதற்க்குஇந்த முஸ்லிம்கள் எப்படி பகடையாக போனார்கள் .
உண்மையில் இந்த செயலை செய்தவர் முஸ்லிமாக இருந்தாலும் ,
முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் .
அல்லாஹ் இந்த தீனுல் இஸ்லாத்தின் மீதும் விழும் அவதூறுகளிலிருந்து
பாதுகாப்பானாக
ஆமீன்
- முகமத் ஜுபைர் அல்புஹாரி

Last edited by ஜுபைர் அல்புகாரி on Sat 20 Dec 2014 - 16:00; edited 3 times in total
Re: பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
நடுநிலையான அனைத்து முஸ்லிம்களின் கருத்தாகத்தான் இதை பார்க்க முடியும், உண்மையில் இந்த சப்பவத்தினை பார்த்த கேள்வியுற்ற அத்தனை முஸ்லிம்களும் வெறுக்கின்ற ஒரு விடயமாக மாறியிருந்தது என்பது மறுக்க முடியாத ஒரு விடயம்
இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படுகின்ற இப்படியான பாவங்களை இஸ்லாமே அனுமதித்திராதபோது எந்த முஸ்லிமும் ஆதரிக்க மாட்டார்கள் அவர்கள் குற்றவாளிகளே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இவ்வுலகில் தண்டனை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் இறைவனின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிக்க முடியாது
அவசியமான கருத்துகள் அடங்கிய கட்டுரை பகிர்வுக்கு நன்றி
(மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்)
இஸ்லாத்தின் பெயரால் செய்யப்படுகின்ற இப்படியான பாவங்களை இஸ்லாமே அனுமதித்திராதபோது எந்த முஸ்லிமும் ஆதரிக்க மாட்டார்கள் அவர்கள் குற்றவாளிகளே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இவ்வுலகில் தண்டனை பெற்றுக்கொள்ளாவிட்டாலும் இறைவனின் பிடியிலிருந்து இவர்கள் தப்பிக்க முடியாது
அவசியமான கருத்துகள் அடங்கிய கட்டுரை பகிர்வுக்கு நன்றி
(மன்னிக்கவும் எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்)
Re: பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
கொள், கொல் எழுத்து பிழை திருத்தப்பட்டது!
தயவு செய்து தலைப்பை வர்ணத்தில் இடுவதை தவிருங்கள் அல்புஹாரி!
எனக்குள் எழுந்த கேள்வி இதுவே!
புரிந்தால் சரி!
ஆதங்கமான கட்டுரை! பகிர்ந்தமைக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
எழுத்து பிழைகள் இருப்பது சுட்டிகாட்டியதற்கு நன்றி எனக்கும் தெரிந்தது
வதந்திகள் பரப்பும் முஸ்லிம்களுக்கு அறியபடுத்தவே வேகமாக எழுதியது !
திருத்தி விடுகிறேன்
வதந்திகள் பரப்பும் முஸ்லிம்களுக்கு அறியபடுத்தவே வேகமாக எழுதியது !
திருத்தி விடுகிறேன்
Re: பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
மிக்க நன்றி சகோதரா அவசியமான புரிதல் எம்மை வளப்படுத்திடும் என்பது உண்மைஜுபைர் அல்புகாரி wrote:எழுத்து பிழைகள் இருப்பது சுட்டிகாட்டியதற்கு நன்றி எனக்கும் தெரிந்தது
வதந்திகள் பரப்பும் முஸ்லிம்களுக்கு அறியபடுத்தவே வேகமாக எழுதியது !
திருத்தி விடுகிறேன்
Re: பெஷாவர் சம்பவமும் , இஸ்லாம் மீது விழுந்துள்ள பார்வையும் . (நடுநிலை முஸ்லிமின் பதிவு )
யோசிங்க_ஒரு_நிமிடம்
ஜீரணிக்கவே முடியாத ஒரு காட்சி ... பாகிஸ்தான் டீவீயில் .. தீவிரவாதியால் கொல்லப்பட்ட ஒரு குழந்தையின் பெற்றோர் சொல்கிரார்கள் .. "ஏன் எங்கள் குழந்தையை கொல்லவேண்டும் .. நாங்கள் என்ன பாவம் செய்தோம் . ஏன் இந்தியா போய் ஒரு இந்து குழந்தையை கொல்ல வேண்டியதுதானே !!! ..
அவர்களை சொல்லி குற்றம் இல்லை ...
அப்படிதான் அவர்களுக்கு போதிக்கபடுகிறது . அப்படிதான் அவர்கள் பிறந்தது முதல் கற்பிக்கப்படுகிரர்கள் ... யாரை நோக .. ஒரு நாட்டின் தலைமுறையே .. தலை விதியே இப்படிப்பட்ட மதவாதிகளால், மதவாத சிந்தனைகளால் மாற்றி அமைக்கபடுகிறது ... உணமையான வரலாறு மறைக்கப்பட்டு ஒரு பொய்யான வரலாறு உண்மையென தினிக்கப்படுகிறது .. என்ன கொடுமை இது .. பெரும்பாலான பாகிஸ்தானியர்களுக்கு நிஜமாகவே பாகிஸ்தான் -இந்தியா பிரச்னை என்ன ? என்ற உண்மையே தெரியாது .... ??? அந்த குழந்தைகளை நம் குழந்தைகளாக நினைத்து இப்படி புலம்புவதும், கதறுவதும், கயவர்களை தூற்றுவதும் அவர்களுக்கு தெரியாது ?? வேறு என்ன தெரியும் ?
இந்தியா நமது நாடு .. கயவர்கள் அபகரித்து விட்டார்கள், நம் சொத்தை அபகரித்து நம்மை இப்படி துரத்தி விட்டார்கள் நம் மக்களை தீவிரவாதிகள் என்றே உலகம் முன்பு சித்தரிக்கிறார்கள் என்றெல்லாம் பொய்யான சரித்திரம் அவர்கள் மேல் தினிக்கப்படுகிறது, என்ன ஒரு அதிர்ச்சி இது .. படித்த மக்கள் ஓரளவு உண்மையை தெரிந்திருகிறார்கள் ... ஆனால் படித்த எவனாவது குழந்தைகளை சுடுவானா... ?? யோசிக்காமல் இருப்பானா ? தீவிரவாத இயக்கத்திற்கு தேவை மூளை அலச ஒரு வெற்று மூளை கொண்டவன் .. அவனின் வெற்று மூளையில் எல்லா துர்போதனைகளையும் இறக்கி, அவன் செயலை நியாயமாக மாற்றி தன் மதவாத சிந்தனைகளை சமூக நலனுக்காக செய்வது போல மாற்றி தீவிரவாதம் என்ற சகதிக்குள் அவனை முழ்கடித்து விடுகின்றனர், யாரை சொல்லி நோக ???
இது போன்ற நிகழ்வுகள் நடந்தேறும் ஒவ்வொரு கணமும் முஸ்லிம் நண்பர்களும் , நாமும் சந்திக்கும் பொழுதுகளில் கண்கள் சந்திக்கமுடியாமல் தடுமாறி, குற்ற உணர்வு வழிய தவிக்கும் அந்த கொடுமையை கண்டிப்பாக எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள், நம் கண்கள் காண சக்தியிலாது நம் நண்பனே நம்மை நோக்கி பரிதாபமாக கட்சி அளிக்கும் அந்த கொடுமை வேறு யாருக்கும் வரகூடாது , அவர்கள் நம் நண்பர்கள், அவர்கள் நம் உடன் பிறவா சகோதரர்கள், அவர்கள் நம் உறவுகள் ... அவர்களை எங்கோ இருக்கும் மத தலைவர்கள் மதத்தின் பெயரால் நம் முன்னே குற்றவாளியை ஆக்க முடிகிறது என்றால் இது என்ன நீதி ??? என்ன நியாயம் ???
நம்மால் முடிந்தது நாமாவது பரந்த மனப்பான்மையுடன், எந்த சாதி மத நோக்கங்களும் அற்று முடிந்தவரை சமூகத்தோடு ஒட்டி வாழ்வது .. சாதி என்பது வாழ்வோடு ஒட்டிய ஒன்றாகிவிட்டது , இதை சட்டபூர்வமாக ஒழிக்க இன்னமும் இரண்டு தலை முறை தேவைப்படும், அப்படி ஒழிக்காமல் சாதி ஒழிப்பு என்று வாய் வார்த்தை பேசுபவன் நான் அல்ல, நான் யதார்த்தவாதி , எல்லோரையும் அரவணைத்து போவது ... யாருக்கும் தீங்கு நினைப்பது ... இதை கூட ஒரு சராசரி மனிதன் செய்யாமல் இருக்கமுடியாது ... நான் கோவிலோ, சர்ச்சோ , மசூதியோ எங்கு நின்றாலும் கண் மூடி பத்து நொடி நிற்பேன், அப்போதெல்லாம் என் மனதில் எந்த தெய்வத்தின் உருவமும் தோணுவதில்லை .. தினமும் விளக்கேற்றி நான் முப்பது நொடிகள் கண் மூடி நிற்பதுண்டு , அதுவும் தெய்வதிர்க்காக அல்ல, எந்த தெய்வத்திடமும் நான் எதுவும் வேண்டி தொழுததில்லை ..
பிறகு எதற்கு விளக்கேற்றி கண் மூடி, கை கூப்பி நிற்பது ?? என் மகனுக்கு இந்த வாழ்கை மந்திரத்தை தினமும் நியாபகபடுத்தவேண்டுமே .. அதற்காக !! எப்போதும் நான் வேண்டுவது ஒன்றே .. என் மகனுக்கும் அதையே தான் சொல்லி கொடுத்திருக்கிறேன் .. " யாருக்கும் நான் கெடுதல் செய்யகூடாது , எனக்கும் யாரும் கெடுதல் செய்ய கூடாது , என் மனதின் சுயநலத்தால் யாருக்கும் எந்த பிரச்னையும் வரகூடாது .. இது போதும் ஆண்டவா ....
இதை கூட செய்யமாட்டோமா ????? நாம் போதித்தால் குழந்தைகள் தடம் மாறுவார்களா ? தடம் மாறும்போது நம் போதித்தால் பாடம் புகட்டாதா ... குழந்தைகள் மாறினால் தலைமுறை மாறாதா ?? தலைமுறை மாறினால் இந்த நாட்டின் தலைவிதி மாறாதா ?? மாறும் .. மாறியே தீரும் !!! அது நம் கையில் !!!
https://www.facebook.com/notes/836664563063167/?pnref=story

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவில் நேர்மையான விசாரணை!
» சைப் அல் இஸ்லாம் மீது லிபியாவிலேயே விசாரணை நடத்த ஐ. சி. சி. இணக்கம்
» கென்ய அமைச்சர்கள் மீது ஐ.சி.சி. குற்றச்சாட்டு பதிவு
» சுப்பிரமணியசுவாமி மீது டில்லி பொலிஸ் வழக்குப் பதிவு
» பதிவு செய்யப்படாத தனியார் மருந்தகங்கள் மீது நடவடிக்கை

சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|