சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தமிழ் அகராதி - அ Khan11

தமிழ் அகராதி - அ

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் அகராதி - அ Empty தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:03

வணக்கம் தமிழ் ஆர்வலரே 

தமிழ் அகராதி என்னும் இந்த அற்புத உழைப்பை 
நிலா முற்றம் என்னும் தளம் கடின உழைப்பை பயன் 
படுத்தி உருவாக்கி உள்ளார்கள் .நிர்வாகி நிலா அவர்களும் மற்றும் 
சின்னா...சத்தியா..ரதிதேவி.. 
தனிமதி...ஆகியோரின் கடின உழைப்பை பயன்படுத்தி 
உருவாக்கியுள்ளனர் ..நான் இதனை இங்கு பதிவு செய்ய முன் வந்தேன் .. 
இந்த அகராதியின் அனைத்து 
பெருமையும் நிலா முற்றம் தளத்தையே சாரும் 



நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:08

தமிழ் அகராதி - " " வரிசை


- தமிழ் மொழியின் முதல் எழுத்து : அழகு: சிவன்
அகக்கண் - ஞானம் : உள்ளறிவு
அகங்கரிப்பு - செருக்கு : அகங்கரித்தல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:10

அகிலம் - உலகம்
அகம் -  உள்ளே
அருகே  -  பக்கத்தில்
அடுத்த -  வேற


அரசர் -  மன்னர்
அதிகாரி -  வேலைப் பார்ப்பவர்
அதிகம் -  நிறைய
அறிவிப்பு -  சொல்லுதல்


அசைவு -  நகருதல்
அபிப்ராயம் -  தன் விருப்பத்தை  கூறுதல்
அமருதல் -  உட்காருதல்
அவசரம் - மிக வேகமாக


அடிப்படை  -  அத்தியாவசியமான
அஞ்சுதல் -  பயப்படுதல்
அங்கீகாரம் -  உரிமை
அழைத்தல் -  கூப்பிடுதல்


அதிர்ச்சி -  வியப்பு
அருள்வாக்கு -  தெய்வவாக்கு
அலுவலகம் -  வேலை  பார்க்கும் இடம்
அனுப்புதல் -  கொடுத்தல்


அழகு -  பெண்
அமைப்பு -  நிறுவனம்
அறிஞர் -  திறமையானவர்
அலைகள் -  காற்றால் கடலில் உருவாகும் நீரின் மோதல்கள்

அல்லிப்பூ  -  பூ  வகைகளுள் ஒன்று 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:17

அஆ - வியப்பைக் குறிக்கும் விட்டிகைச் சொல்.
அஃக - சுருங்க : குறைய : நுண்மையாக.
அஃகம் - தானியம் : விலைப் பொருள் : முறைமை : ஊறுநீர் : சுருக்கம்.
அஃகரம் - வெள்ளெருக்கு : கிரியை.
அஃகல் - நுணுகுதல் : குவிதல் : குறைதல் : சுருங்குதல் : வற்றுதல் : வறுமை.
அஃகாமை - குறையாமை : சுருங்காமை.
அஃகான் - அ என்னும் முதல் எழுத்து : நுண்ணிதாகி : சுருங்கி.
அஃகுல்லி - உக்காரி என்னுஞ் சிற்றுண்டி : பிட்டு.
அஃகுள் - அக்குள் : கக்கம்.
அஃகேனம் - மூன்று புள்ளி (ஃ) வடிவாக வரும் ஆயுத எழுத்து.


அஃதான்று - அதுவுமன்றி.
அஃது - அது : ஒரு சுட்டுப் பெயர்.
அஃதை - திக்கற்றவர் : சோழன் மகள் ஒருத்தியின் பெயர்.
அஃபோதம் - நிலாமுகிப்புள் : சகோரம்.
அஃறிணை - பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் : இழிதிணை.


அகக்கடவுள் - ஆன்மா : உயிர்க்குள் இறைவன். 
அகக்கர்ணம் - மனம் : உள்ளம். 
அகக்காழ் - மரத்தின் உள்வயிரம் : ஆண்மரம். 
அகங்காரக்கிரந்தி - ஆணவ மறைப்பு : மும்மலத் தொடக்கு. 
அகங்காரம் - யான் எனல் : இறுமாப்பு : செருக்கு : ஆணவம். 


அகங்காழ் - உள் வைரம். 
அகங்கை - உள்ளங்கை. 
அகசன - கேதுவெனுங் கோள். 
அகசியம் - பகிடிக்கூத்து : ஏளனம். 
அகசு - பகல் : பொழுது : இராப்பகல் கொண்ட நாள். 


அகசை - பார்வதி : மலையிற் பிறந்தவள். 
அகச்சமயம் - சைவ சமயத்தின் உட்சமயம் ஆறு. 
அகச்சுவை - அகநெறிக்குரிய சுவை. 
அகச்சுட்டு - சொல்லில் முதனிலயாயமைந்து நிற்கும் சுட்டு. 
அகடச் சக்கரம் - உதரபந்தனம் என்னும் ஓர் அணி : கொடுங்கோலரசன். 


அகடம் - பொல்லாங்கு : அநீதி : கபடம் 
அகடவிகடம் - குறும்பு : தந்திரம் 
அகடிதம் - பொல்லாங்கு : அநீதி 
அகடு - உள் : நடு : வயிறு : நடுநிலை : பொல்லாங்கு : சீர் : மேடு : 
........66..-. ஆகடியம் : இடை. 


நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:18

அகடூரி - வயிற்றால் நகர்வது : பாம்பு. 
அகட்டுதல் - அகலவைத்தல். 
அகட்டுத்தே - ஆனைமுகன் : கணபதி : இலம்போதரன் : தொப்பையப்பன். 
அகணம் - கணியாதது : இலகு. 
அகணி - பனை : தெங்கு மட்டைகளின் நார் : வயல் : மருத நிலம் : 
...........66... கடுக்காய் : நஞ்சு : உட்பட்டது : நம்பிக்கைக்குரிய நட்பினர். 


அகணிகம் - கணிக்கப்படாதது. 
அகணிப்பாய் - மூங்கிற் பாய். 
அகண் - அண்மை : அருகு. 
அகண்டம் - முள்ளில்லாதது 
அகண்ட பரிபூரணம் - வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல். 


அகண்ட பரிபூரணம் - வேறுபாடற்று எங்கும் நிறைந்திருத்தல். 
அகண்டம் - எல்லாம் : பேரகல் விளக்கு : கண்டிக்கப்படாதது : அருகன் :
-----------66- கடவுள் : கூறுபடாதவன் : சிவன் : நிறைந்தவன் : திருமால். 
அகண்டாகண்டன் - பரம்பொருள் : எதற்கும் அஞ்சாதவன். 
அகண்டாகாரம் - அளவுபடாத வடிவம் : பெருவெளி. 
அகண்டி - இசைக்கருவி வகை. 

நன்றி நிலாமுற்றம் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:18

அவா- பேராசை
அபிஷேகம்- முழுக்கு, நீராட்டு
அலோபதி-ஆங்கில மருத்துவ முறையையே, ஹானிமன்(C.F.S. Hahnemann) இப்பெயரிட்டார். 
அவனி- பூமி
அழுக்காறு - பொறாமை

அலைமருவி - ஒத்திசை, தொடரிசை
அறிவிக்கை - அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அரசிதழ்களில் வெளியிடுவன
அசைவூட்டம் - சலனப்படம்
அகரமுதலி -சொற்களின் பொருள், பயன்பாடு, இலக்கணம், சொல்மூலம், பலுக்கல் முதலிய குறிப்புகளைத்தரும் நூல்: அகராதி.
அகவு - கேள்,வினவு

அஃகுப்பெயர் - நீண்ட பெயர்களின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பெயர்ச் சுருக்கம்.
அகழ்வாராய்ச்சி - புதைபொருள்ஆராய்ச்சி. 
அகவை - உட்பொருள் , வயது (age)
அன்மை - அற்றுப்போதல், இல்லாமற்போதல்
அந்தணன் - சான்றோன், பிராமணன்

அமர் - இரு, உட்கார்
அம்மான் - மாமா( அம்மாவின் தம்பி, அல்லது அண்ணன்) 
அபாயம் - ஆபத்து
அஞ்சல்_ கடிதம்.
அசுணம் � இசையறியும் பறவை.

நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:19

அல் - இரவு.
அளகம் � முன்னுச்சி முடி
அஞ்சதி � காற்று
அற்றம் � அச்சம் : அழிவு : அவமானம் : குற்றம் : கேடு: சோர்வு : துன்பம்
அழகு_ வடிவு, சுந்தரம்.

அமரிக்கை - அமதியாகயிருத்தல்
அம்புலிமாமா - நிலா, சந்திரன், மதி ( வானில் காணப்படும். moon)
அதீதம் _ மிகை
அந்தரங்கம் _ மறைவடக்கம்
அந்தரம் _ பரபரப்பு, மாலை 
அந்நியம் _ வேறுபாடு,வேற்றுமை.
அதிகாலை _ விடியல், வைகறை
அதிசயம் _ வியப்பு
அதிட்டம், அதிஸ்டம் _ நல்வாய்ப்பு, நல்லூழ்

அதிதி _ விருந்தினர்_ முதல்வன், தலைவன்
அதமம் _ அழிப்பு
அதரம் _ இதழ், உதடு
அதிகம் _ மிகுதி, பெருக்கம்

அதிகாரம் _ இயல், ஆட்சி, ஆளுமை,ஆட்சியுரிமை,செயலுரிமை
அதிகாரி _ மேலாளர்
அதம் _ அழிப்பு
அத்திரம் _ கணை , அம்பு
அத்தியாயம் _ நூற்பிரிவு, இயல்


நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:20

அத்தி, அஸ்தி _ என்பு , எலும்பு
அத்தமனம், அஸ்தமனம், அத்தம், அஸ்தம் _ மறைவு
அகில _ அனைத்து, முழுதும்
அகிலம் _ உலகம், வையகம்
அகதி _ ஏதிலி

அகாலம் _ தகாக் காலம், அல்காலம்,இயற்கையல்லாத
அக்கினி _ நெருப்பு, தீ
அகிம்சை _ துன்புறுத்தாமை, இன்னா செய்யாமை
அசூசைபொறாமை
அக்கிரமம் _ முறைகேடு

அசாக்கிரதை _ விழிப்பின்மை
அசாத்தியம் _ நடக்கமுடியாத
அசரீரி _ விண்னொலி
அசுத்தம் _ துப்பரவின்மை
அஞ்சலி _ (அக) வணக்கம்

அட்சரம் _ ஒலிப்பு
அதிசயம் _ விந்தை
அதிதி _ விருந்தினர்
அந்தகாரம் _ இருள் 

நன்றி ;நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:20

அகண்டிதம் - கூறுபடாதது : முழுமை : கண்டிப்பில்லாதது. 
அகதங்காரன் - மருத்துவன். 
அகதம் - குளிகை : சுகம் : அழிவற்றது. 
அகதன் - நோயிலி. 
அகதி - போக்கற்றவர் : கதியிலி : கல்லை மரம் - வேலமரம். 


அகதேசி - உள்ளூர்க்காரன். 
அகத்தடிமை - அணுக்கத் தொண்டு. 
அகத்தடியள் - வீட்டு வேலைக்காரி. 
அகத்தன் - இடத்தினன் : தலைவனல்லாதவன் : எல்லாவற்றையும் மனத்தில் வைத்திருப்பவன். 
அகத்தார் - உள்ளிடத்திலிருப்பவர் : இல்வாழ்வார் : உறவினர் : முற்றப்பட்டார் : நொச்சியார். 

அகத்தி - சாழையகத்தி : சிற்றகத்தி : செவ்வகத்தி என்ற மரவகை.
அகத்திணை - உள்ளத்தே நிகழ்கின்ற இன்பவொழுக்கம்.
அகத்திணைப்புறம் - கைக்கிளையும் : பெருந்திணையும்.
அகத்தியம் - கட்டாயம் : அவசியம் : ஓர் இலக்கண நூல்.
அகத்தியல் - உள்ளத்தியற்கை.

அகத்திருத்துவம் - செயலின்றி நிற்கும் கடவுட்டன்மை. 
அகத்தீடு - கையால் உள்ளணைக்கை : உள்ளீடு : உள்ளிடுதல் : கழுவுதல் : நிறைவு : அன்பு : எண்ணம்.
அகத்து - நடுவண்.
அகத்துழிஞை - கோட்டையிலுள்ளாரைப் புறத்தார் போர் வெல்லும் புறந்துறை.
அகத்தொண்டர் - வீட்டுப் பணியாளர்.

நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:21

அகத்தோர் - உள்ளிருப்போர் : ஊரார் : மனமொத்த நண்பர்.
அகநகர் - கோட்டைக்குள்ளடங்கிய நகரப்பகுதி : அந்தப்புரம்.
அகநகை - இகழ்ச்சி நகை.
அகநாடக உரு - அகக்கூத்தின் வண்ணம் : அவை கந்தமுதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டாகும்.
அகநாடு - மருதம். 


அகநாழிகை - கருப்பக்கிருகம்.
அகநிலை - ஊர் : கடவுள் : உள்நிலை : மனநிலை ஒரு பண் : உட்பட்ட நிலை.
அகநிலைக் குறிஞ்சி, அகநிலைச் செவ்வழி - சாதிப் பெரும்பண்வகை.
அகநிலைப் பசாகம் - சுட்டுவிரல் நுனியில் அகப்பட்ட மற்ற மூன்றும் பொலிந்து நிற்பது.
அகப்படுதல் - உட்படுதல் : பிடிக்கப்படுதல் : சிக்கிக் கொள்ளுதல்.


அகப்படை - அந்தரங்கப் பரிகரம்.
அகப்பட்டி - சுருங்கிய பட்டி : சிறு தீமை புரிபவன்.
அகப்பணி - மனத்தொழில் : வீட்டு வேலை.
அகப்பத்தியம் - மனோவிரதம் : இணை விழைச்சிலாமை.
அகப்பரம் - திண்ணை : வேதிகை.


அகப்பரிவாரம் - வீட்டு வேலைகாரர்கள்.
அகப்பா - அகழி : மதிலுள் மேடை : மதில் : அரண் : அகத்திணைப் பாட்டு.
அகப்பாடு - உண்ணிகழ்ச்சி : அகப்படுதல் : நெருங்கியிருக்கை.
அகப்பாட்டாண்மையன் - மனமொத்த நண்பன் : மிக நெருங்கியவன் : பிடிபடுந் தொலைவில் உள்ளவன்.
அகப்பாட்டு - அகநானூறு.

நன்றி ;நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:22

அகப்பாட்டு வண்ணம் - இறுதியடி ஏகாரத்தான் முடியாது இடையடி போன்று வரும் சந்தம்.
அகப்பு - ஆழம் : தாழ்வு : படுகுழி.
அகப்புறக் கைக்கிளை - காமஞ் சாலா இளமையோள் வயிற் குறுகியொருவன் அவள் குறிப்பு அறியாது மேன்மேலும் கூறுவது.
அகப்புறச்சமயம் - பாசுபதம் : மாவிரதம் : காபாலம் : வாமம் : வைரவம் : அயிக்கியவாத சைவம் - 6.
அகப்புறத்திணை - அகத்திணைக்குப் புறம்பான கைக்கிளை : பெருந்திணை முதலியன. 


அகப்புறமுழவு - எழுவகை முழவுகளுள் ஒன்று : அது தண்ணுமை, தக்கை முதலாகப் பலவகைப்படும்.
அகப்பூ - உள்ளத் தாமரை : மனமகிழ்ச்சி.
அகப்பை - குழிந்த கரண்டி : சட்டுவம் : முகக்குங்கருவி : இஃது அகழ்ப்பை என்னுஞ் சொல்லின் மரூஉ.
அகப்பொருட்கோவை - அகப்பொருளைக் கூறும் கோவைப் பிரபந்தம்.
அகப்பொருள் - அகத்திணையாகிய பொருள்.

நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Nisha Tue 23 Dec 2014 - 15:22

அடேங்கப்பா! மொத்தமாய் முழு அகராதியையும் இடுவீர்களா?  

நன்றி! தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:23

அகமகிழ்ச்சி - உளக்களிப்பு.
அகமணை - அகமணைத் தட்டு : வண்டியினுட் பலகை : படகின் உட் கட்டை.
அகமதி - ஆணவம்.
அகமம் - மரம் : மலை.
அகமருடணம் - வேதமந்திர விசேடம் : நீருக்குள்ளே நின்று செபித்துப் பாவத்தைப் போக்கச் செய்யும் ஒரு மந்திர செபம்.


அகமாட்சி - இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள். 
அகமார்க்கம் - முக்குணம் பற்றிவரும் மெய்க் கூத்து : அருமையிற் பாடல் : மந்திர முறை.
அகமிசைக்கிவர்தல் - புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல்.
அகமுகம் - உண்முகம் : அந்தர்முகம்.
அகமுடையாள் - வீட்டுக்குடையவள் : மனைவி.


அகமுணல் - தெளிதல் : மனதிற் கொள்ளல்.
அகம்படி - அகத்தொண்டு : உள்ளிடம் : மனம் : ஒரு குலம் : அடிவயிறு. 
அகம்பன் - அசைவற்றவன்.
அகம்பாவம் - உண்ணினைவு : செருக்கு : ஆணவம்.
அகம் - உள் : மார்பு : மனம் : ஞானம் : பாவம் : வீடு : நிலம் : மருதம் : மலை : அகக்கூத்து : அகங்காரம் : ஒருநூல் : 
இருப்பிடம் : உடல் : உயிர் : விண் : ஆழம் : ஆன்மா : ஒருமரம் : துக்கம் : நாள் : பள்ளம் : பாம்பு : தீவினை : குணாகுணம்.


நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:23

அகமகிழ்ச்சி - உளக்களிப்பு.
அகமணை - அகமணைத் தட்டு : வண்டியினுட் பலகை : படகின் உட் கட்டை.
அகமதி - ஆணவம்.
அகமம் - மரம் : மலை.
அகமருடணம் - வேதமந்திர விசேடம் : நீருக்குள்ளே நின்று செபித்துப் பாவத்தைப் போக்கச் செய்யும் ஒரு மந்திர செபம்.


அகமாட்சி - இல்லறத்திற்குரிய நற்குண நற்செயல்கள். 
அகமார்க்கம் - முக்குணம் பற்றிவரும் மெய்க் கூத்து : அருமையிற் பாடல் : மந்திர முறை.
அகமிசைக்கிவர்தல் - புரிசைகளின் (மதில்) மேல் ஏறி நின்று போர் புரிதல்.
அகமுகம் - உண்முகம் : அந்தர்முகம்.
அகமுடையாள் - வீட்டுக்குடையவள் : மனைவி.


அகமுணல் - தெளிதல் : மனதிற் கொள்ளல்.
அகம்படி - அகத்தொண்டு : உள்ளிடம் : மனம் : ஒரு குலம் : அடிவயிறு. 
அகம்பன் - அசைவற்றவன்.
அகம்பாவம் - உண்ணினைவு : செருக்கு : ஆணவம்.
அகம் - உள் : மார்பு : மனம் : ஞானம் : பாவம் : வீடு : நிலம் : மருதம் : மலை : அகக்கூத்து : அகங்காரம் : ஒருநூல் : 
இருப்பிடம் : உடல் : உயிர் : விண் : ஆழம் : ஆன்மா : ஒருமரம் : துக்கம் : நாள் : பள்ளம் : பாம்பு : தீவினை : குணாகுணம்.


நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:27

Nisha wrote:அடேங்கப்பா! மொத்தமாய் முழு அகராதியையும் இடுவீர்களா?  

நன்றி! தொடருங்கள்.

ஆம் மிக நீண்ட காலம் எடுக்கும் 
இதற்கு முன்னர் 3 தளங்களில் பதிந்துள்ளேன் 
மிக சிரமமான பதிவு பல மாதங்கள் ஆகும் 
என்னால் முடிந்த பணியை செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:27

அகம்பு - உள்.
அகம்மியம் - அணுகக் கூடாதது : அறியக் கூடாதது : கோடி : கோடாகோடி : பத்திலட்சங்கோடி.
அகராதி - சொற்களை அகரமுதலாக வரிசைப்படுத்திப் பொருள் விளக்கும் நூல்.
அகராதிக்கிரகம் - அகரம் முதலாக வரும் முறை.
அகரம் - முதல் எழுத்து : பாதரசம் : ஊர் : அக்கிரகாரம் : பார்ப்பனச்சேரி :
இறையின்மை : கையின்மை : செயலின்மை : வீடு.


அகரு - அகில்.
அகருதம் - வீற்றிருக்கை.
அகர்க்கணனம் - கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம் வரை கணித்தெடுத்த தினசங்கியை.
அகர்ணம் - செவிடு : பாம்பு.
அகலக்கவி - வித்தாரக்கவி : வித்தாரக்கவியைப் பாடும் புலவன்.


அகலம் - விரிவு : மார்பு : விருத்தியுரை : தரிசுநிலம் : ஆகாயம் : பெருமை : நீளம் : வேப்பலகு : யானைத்திப்பிலி.
அகலம்புகுதல் - மார்பிடத்தே முயங்கல்.
அகலர் - தீண்டாதவர் : கடவுள்.
அகலாங்கண் - அகன்ற ஊரிடம்.
அகலறை - பாசறை : மலைப்பக்கம்


நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:28

அகலன் - ஏழை : கடவுள் : கொடியவனல்லாதவன் : பெருத்தவன் : பெருமையுடையவன்.
அகலிடம் - நிலவுலகம்.
அகலுள் - அகலம் : தெரு : ஊர் : நாடு : பூமி : பெருமை.
அகல் - சட்டி : விளக்குத் தகழி : ஓர் அளவு : பெருமரம் : அங்குல் : வெள்வேல்.
அகல்வு - அகலம்.


அகவடி - உள்ளங்கால் : காலடி : அடிச்சுவடு.
அகவயிரம் - அகக்காழ்.
அகவர் - மங்கலபாடகர் : புகழ்வோர் : நாட்டில் வாழ்வோர் : வீட்டிலிருப்பவர்கள்.
அகவலன் - பாடும் பாணன்.
அகவலைப்படுத்தல் - வலையில் அகப்படுதல்.


அகவல் - கூவுதல் : அழைத்தல் : மயிற்குரல் : ஆடல் : ஆசிரியப்பா : பாடுதல்.
அகவன் மகள் - பாண்மகள்.
அகவா - ஒலித்தலைச் செய்யா.
அகவாட்டி - மனையாள் : இல்லக்கிழத்தி.
அகவாயில் - மனம்.


அகவாய் - உள்ளிடம் : கதவுநிலை.
அகவாளன் - வீட்டுக்காரன் : கணவன் : தலைவன்.
அகவிதழ் - உள்ளிதல் : அல்லி.
அகவிரல் - விரலின் உட்புறம்.
அகவிருள் - மெய்யறிவின்மை. 

நன்றி நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:28

அகவிலை - உள்ளிதழ் : தானியவிலை.
அகவுதல் - ஒலித்தல் : பாடுதல் : அழைத்தல் : ஆடல்.
அகவுநர் - ஆடுவோர் : பாடுவோர்.
அகவுவம் - பாடுவோம்.
அகழான் - ஒருவகைப் பேரெலி : வயலெலி.

அகழி - அகழ் : கோட்டை : மதில் சூழ் கிடங்கு : குழி : தோண்டப்பட்டது.
அகழ் - அகழி : குளம் : கோட்டையைச் சூழ்ந்துள்ள கிடங்கு : அகழென்னேவல்.
அகழ்தல் - தோண்டுதல் : கல்லுதல் : உழுதல்.
அகளங்கம் - குற்றமின்மை : சீதாங்க பாஷாணம்.
அகளம் - களங்கமின்மை : யாழின் பத்தர் : தாழி : நீர்ச்சால்.

அகற்சி - அகலம்.
அகற்பன் - ஒப்பில்லாதவன்.
அகற்ப விபூதி - இயற்கையில் உண்டான விபூதி.
அகற்றம் - அகலம் : பிரிவு : பரப்பு.
அகன்பணை - அகன்ற மருத நிலம்.

அகன்மணி - தெய்வமணி : அகன்ற மணி : உயர்ந்த மணி : உயர்ந்த முத்து.
அகன்றில் - ஆண் அன்றில் : ஆண் கவுஞ்சம்.
அகனைந்திணை - குறிஞ்சி : முல்லை முதலிய ஐந்திணை.
அகன்றிசைப்பு - யாப்பு முறையில் அகன்று காட்டுங் குற்றம்.
அகன்னம் - செவிடு : காதற்றது.


நன்றி ;நிலாமுற்றம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Nisha Tue 23 Dec 2014 - 15:31

முதல் பதிவில்  நிலா முற்றம் என  நன்றி சொல்லி விட்டதால்  ஒவ்வொரு பதிவிலும் சொல்ல தேவை இல்லை. 

தொடர்ந்து பதியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:35

அகாடி - குதிரை முன்னங்காற்கயிறு : முள்.
அகாதம் - பள்ளம் : நீந்துபுனல் : மிகுதி : தேவகணத்தால் வெட்டப்பட்ட குளம் : வஞ்சகம் : தொலைவு : ஆழம்.
அகாரம் - ஓர் எழுத்து : வீடு.
அகாமவினை - அபுத்திபூர்வமான செயல்.
அகாலம் - காலமல்லாத காலம் : பஞ்ச காலம் : தகுதியற்ற சமயம்.



அகிஞ்சனன் - வறிஞன் : உலுத்தன்.
அகிதம் - தீமை : இடையூறு : தகாதது.
அகிதலம் - பாதாளம்.
அகிம்சை - கொல்லாமை.
அகி - பாம்பு : ஆவணி : இரும்பு : ஒரு மரம் : கதிரவன் : பகைவன் : முகில் : இராகு : ஈயம் : ஒரு விண்மீன் : வஞ்சகன் : வச்சிரப்படை : விருத்திராசுரன். 



அகிலம் - எல்லாம் : அனைத்து : பூமி : நிலவுலகம்.
அகில் - ஒரு மரம் : மணப்பொருள் வகை : அகரு.
அகிற்கூட்டு - ஏலம், கருப்பூரம், எரிகாசு, சந்தனம், தேன் என்னும் ஐந்தின் கூட்டு.
அகுசலவேதனை - துக்க உணர்ச்சி.
அகுடம் - கடுகு ரோகினிப்பூண்டு.

அகுட்டம் - மிளகு.
அகுதார் - உரிமையாளி.
அகுதி - கதியிலி : அகதி.
அகுதை - ஓர் ஈகையாளன்.
அகுரு - வெட்டிவேர் : அகில்மரம் : இலகுவானது : ஈனமில்லாதது : குரு வல்லாதவன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:35

அகுவீனன் - தாழ்ந்த குலத்தில் தோன்றியவன்.
அகுவைக்கட்டி - அரையாப்பு.
அகுளுதி - வேப்பமரம்.
அகை - கூறுபாடு : எரிதல் : தளர்ச்சி : தகை : மலர் : கிளை : வருத்து : தடை : சுடு.
அகைதல் - கிளைத்து எரிதல் : வருந்தல் : தாமதித்தல் : தாழ்தல் : ஒடித்தல் : முறித்தல் : தளிர்த்தல் : தளைத்தல்:



அகைத்தல் - எழுதல் : கிளைத்தல் : உயர்த்துதல் : செல்லுதல் : அறுத்தல் : முறித்தல் : வலிய மலர்த்துதல்.
அகைப்பு - எழுச்சி : மதிப்பு : இடை விட்டுச் செல்லுகை : அறுத்தல் : முறித்தல்.
அகைப்புவண்ணம் - இருபது வண்ணங்களில் ஒன்று : அஃது அறுத்தறுத்தொழுகும் நடையை உடையது.
அகோ - வியப்பு : இகழ்ச்சி : துக்கம் : இரக்கம் : ஐயம் : அழைப்பு : புகழ்ச்சி ஆகியவற்றை உணர்த்தும் குறிப்பு மொழி.
அகோசரம் - அறியொணாமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:36

அகோடம் - கமுகமரம்.
அகோபிலம் - 'சிங்கவேள் குன்றம்' என்னும் திருப்பதி.
அகோரம் - அழகின்மை : மிகுகொடுமை : சிவன் ஐம்முகங்களுள் ஒன்று.
அகோரத்திரம் - பகலும் இரவும்.
அகோரை - இரண்டரை நாழிகைக் காலம் : ஒரு மணி நேரம் : வெயில் மிகுந்த நாள் : அஞ்சத்தக்கவன்.


அக்கசாலை - அணிகலஞ் செய்யும் இடம்.
அக்கசாலையர் - கம்மியர் : தட்டார்.
அக்கச்சி - தமக்கை.
அக்கட - அவ்விடம்.
அக்கடி - அலைவு.


அக்கணா - தான்றி மரம்.
அக்கதேவி - சூது விளையாடுவோன் : சோனைப்புல்.
அக்கப்பறை - அலைகை.
அக்கபாடு - மரக்கலச் சேதம்.
அக்கப்பாடு - நிலையழிவு : மோசம் : அல்லோலம் : சச்சரவு : குழப்பம் : பொருட்சேதம்: பொருள் வரவு.


அக்கப்போர் - கலகம் : வம்புப் பேச்சு.
அக்கமாலை - சிவமணிமாலை.
அக்கரகாரம் - மருந்து வேர்.
அக்கரம் - எழுத்து : மாமரம் : வெள்ளெருக்கு : பேதி வகை : அழியாதது :
விண் : வரையப்பட்ட வாசகம் : பிரணவமந்திரம் : நீர்.
அக்கம் - தானியம் : தானியவிலை : பொன் : கண் : உருத்திராக்கம் : 
சூதாடு கருவி : கயிறு : பாம்பு : அறுகு : ஒரு மரம் : கடலுப்பு : அறிவிந்திரியம் : தராசுக் கோல் : 
துரிசு : தேர் : தேர் உறுப்பு : பக்கம் : பண்டியச்சு : ஒரு நிறை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 15:37

அக்கரை - நீர் நிலையின் மறுகரை : கருத்து.
அக்கரைப்பச்சை - பொய்த் தோற்றம்.
அக்கரோட்டு - மரவகை.
அக்கறை - கருத்து : அவசியம் : கட்டாயம் : தொடர்பு.
அக்கன் - குருடன் : கருடன் : நாய்.


அக்காதேவி - மூதேவி.
அக்காத்தான் - தான்றி மரம்.
அக்காரடலை - சக்கரைப் பொங்கல்.
அக்காரம் - சருக்கரை : கற்கண்டு : கரும்பு : மாமரம் : சீலை.
அக்காரவடிசில் - சர்க்கரைப் பொங்கல் வகை.


அக்காரை - சிற்றுண்டி வகைகளில் ஒன்று.
அக்கி - வெப்புக் கொப்புளம் : கண் : தீ.
அக்கிக்கல் - ஒரு ரத்தினம் : ஒரு படிக வகை.
அக்கிச்சூர் - கண்ணோய் : அக்கிப்படலம்.
அக்கியாதம் - மறைவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by நேசமுடன் ஹாசிம் Tue 23 Dec 2014 - 19:04

நன்றி அண்ணா


தமிழ் அகராதி - அ Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Dec 2014 - 5:44

நேசமுடன் ஹாசிம் wrote:நன்றி அண்ணா

ஆம் எனது படைப்பை சொந்த கவிதையையும் 
தமிழ் சம்பந்தமான பதிவுகளையும் 
சேனையில் பதியபோகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - அ Empty Re: தமிழ் அகராதி - அ

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum