Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
+8
சே.குமார்
*சம்ஸ்
பாயிஸ்
ahmad78
Nisha
பானுஷபானா
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
12 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
First topic message reminder :
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
சிலை
வலிப்பாறையை
புன்னகை உளிகொண்டு
முன்னேற்ற சிலையாய் செதுக்க..
வளி வழிவரும் சமாதானம்
செதுக்கப்பட்ட பாறையின் தூசி
கண்களில் பரவச்செய்து
கண்ணீரால் நிரப்பி
செதுக்கும் பணியை சிதறடிக்க..
உடையும் பாறையை எண்ணி
மகிழ நேரமில்லை...
வஞ்சமில்லாது வழங்கப்பட்டிருக்கும்
எண்ணற்ற வலிப்பாறைகளில்
மற்றுமோர் உளிகொண்டு
சிலைவடிக்கத் துவங்குகிறது
துவண்டுவிடாது..!! ;) :)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
காயத்ரி வைத்தியநாதன் wrote:உறவென ஒட்டாது,
பகையென வெட்டாது...
ஒட்டும் நேரத்தில்
வெட்டியும்,
வெட்டும் நேரத்தில்
ஒட்டியும்...
இருந்தும் இல்லாதிருந்து...
உள்ளதையறிந்து...
நல்லதை இல்லாது செய்ய
உறவெனக் கூறியே
உடன் பயணிக்கும்
நல்லவர்களாய்...;)
#சிலநேரங்களில்_சிலமனிதர்கள்
இப்படியும் சிலர் கவிதை அருமை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நன்றியும், மகிழ்ச்சியும் தம்பி...:)சே.குமார் wrote:கவிதை அருமை அக்கா...
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ம்ம்....ஆம்..நானும் வருவேன் ஆட்டத்தை களைப்பேன்னு சிலபல நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களும் உண்டு...:)*சம்ஸ் wrote:காயத்ரி வைத்தியநாதன் wrote:உறவென ஒட்டாது,
பகையென வெட்டாது...
ஒட்டும் நேரத்தில்
வெட்டியும்,
வெட்டும் நேரத்தில்
ஒட்டியும்...
இருந்தும் இல்லாதிருந்து...
உள்ளதையறிந்து...
நல்லதை இல்லாது செய்ய
உறவெனக் கூறியே
உடன் பயணிக்கும்
நல்லவர்களாய்...;)
#சிலநேரங்களில்_சிலமனிதர்கள்
இப்படியும் சிலர் கவிதை அருமை
புதிராட்டம்...!!
புதிராட்டம்...!!
ஊருக்கு நேரணி
உள்ளுக்குள் எதிரணி...
உள்ளுக்குள் நேரணி,
ஊருக்கு எதிரணி..
எதிரணியும்,நேரணியும்
ஓரணியென...
நேரணியும், எதிரணியும்
ஓரணியுமாய்..
அன்றாட ஆட்டத்தை
அற்புதமாய் அறங்கேற்றுகிறது..
தம் தம் இடம் அறியாமலே..!!
நேரணியா, எதிரணியா
இவ்வணி எவ்வணியென
உள்ளம் எழுப்பும் கேள்விக்கு
உள்ளார்ந்து கிட்டாது
புதிராகக் கிட்டிடும் விடையுமே..!!
ஆடும் அணியினரே அறிந்திடாத
புதுமையான ஆட்டமிதில்...
வெற்றியும், தோல்வியும்
ஆட்டத்தையாடும் அணியினருக்கல்ல
ஆட்டுவிக்கும் படைத்தவனுக்கே..!!
இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நேரணி... எதிரணி....
ஆஹா... விசு வந்துட்டாரு போலவே...
அருமையான கவிதை அக்கா...
இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!
உண்மைதான் அக்கா... அருமை.
ஆஹா... விசு வந்துட்டாரு போலவே...
அருமையான கவிதை அக்கா...
இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!
உண்மைதான் அக்கா... அருமை.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஹஹா..தம்பிதான் விசுவ நினைவுப்படுத்திட்ட...:)சே.குமார் wrote:நேரணி... எதிரணி....
ஆஹா... விசு வந்துட்டாரு போலவே...
அருமையான கவிதை அக்கா...
இப்புதிராட்டம்
முடிக்க விரும்பிடினும்
தொடருகிறது
வாழ்க்கை மைதானத்தில் ..!!
உண்மைதான் அக்கா... அருமை.
அவனதிகாரம்....
#அவனதிகாரம்...
என் மனத்தோட்டத்தில்
அவனுக்காக விதைத்த
காதல் விதைகள்
விருட்சமாய் வளர்ந்திருக்க...
கனிகளைப் பரிமாறிடும்
வார்த்தைப் பாத்திரங்கள்
வறண்டு
வழியறியாத
என் தவிப்பை
விரும்பாதவனாய்..
மனத்தோட்டத்தில்
அவனுக்காய்
கனிந்திருக்கும்
காதல் கனிகளை
கண்கள் வழி சுகித்து
எனை
களிப்படைய செய்ய
என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது.
என் மனத்தோட்டத்தில்
அவனுக்காக விதைத்த
காதல் விதைகள்
விருட்சமாய் வளர்ந்திருக்க...
கனிகளைப் பரிமாறிடும்
வார்த்தைப் பாத்திரங்கள்
வறண்டு
வழியறியாத
என் தவிப்பை
விரும்பாதவனாய்..
மனத்தோட்டத்தில்
அவனுக்காய்
கனிந்திருக்கும்
காதல் கனிகளை
கண்கள் வழி சுகித்து
எனை
களிப்படைய செய்ய
என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
ஆடும் அணியினரே அறிந்திடாத
புதுமையான ஆட்டமிதில்...
வெற்றியும், தோல்வியும்
ஆட்டத்தையாடும் அணியினருக்கல்ல
ஆட்டுவிக்கும் படைத்தவனுக்கே..!!
நிஜம் தான் காயத்ரி!
நல்ல சிந்தனை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது
அதுவும் சரிதான்!
மனதை ஆளுவோரால் எல்லாமே சாத்தியமாவது நிஜம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நன்றி நிஷா... இப்பொழுது நான் பகிர்ந்துவருவது சரியா..? ஆனால் முதல் பதிவின் தலைப்புதானே முதன்மை தலைப்பா தெரியுது... புதிய தலைப்பு தெரிய என்ன செய்யவேண்டும் ..:) ?Nisha wrote:என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது
அதுவும் சரிதான்!
மனதை ஆளுவோரால் எல்லாமே சாத்தியமாவது நிஜம் தான்!
மரத்தாய்....!!!
மரத்தாய்..!!
எத்தனையெத்தனை
விதைக்குழந்தைகளை
சுமந்துகொண்டிருக்கிறாள்
இந்த மரத்’தாய்’...?!!
தன் குழந்தைகளனைத்தும்
தரணியில் தழைத்து செழிப்பதை
கண்டுகளிக்கும் வரம் பெற்றாளோ...!
வெட்டி வீழ்த்தப்படும்
பயங்கரம் காணும்
சாபம் கொண்டாளோ...!
யாரரிவார்..??
காலத்தின் முடிவை எண்ணாது
கடமையாற்றுகிறாள்
இவளுமிங்கே...! smile emoticon
எத்தனையெத்தனை
விதைக்குழந்தைகளை
சுமந்துகொண்டிருக்கிறாள்
இந்த மரத்’தாய்’...?!!
தன் குழந்தைகளனைத்தும்
தரணியில் தழைத்து செழிப்பதை
கண்டுகளிக்கும் வரம் பெற்றாளோ...!
வெட்டி வீழ்த்தப்படும்
பயங்கரம் காணும்
சாபம் கொண்டாளோ...!
யாரரிவார்..??
காலத்தின் முடிவை எண்ணாது
கடமையாற்றுகிறாள்
இவளுமிங்கே...! smile emoticon
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மரங்கள் பூவுலகில் மனிதர்களின் இன்னொரு தாய்.
அருமையான வரிகள்
அருமையான வரிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - மரத்தாய்....!!!
காயத்ரி வைத்தியநாதன் wrote:நன்றி நிஷா... இப்பொழுது நான் பகிர்ந்துவருவது சரியா..? ஆனால் முதல் பதிவின் தலைப்புதானே முதன்மை தலைப்பா தெரியுது... புதிய தலைப்பு தெரிய என்ன செய்யவேண்டும் ..:) ?Nisha wrote:என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது
அதுவும் சரிதான்!
மனதை ஆளுவோரால் எல்லாமே சாத்தியமாவது நிஜம் தான்!
நீங்கள் மறுமொழியிடும் பெட்டியை முன்பார்வை பார்ப்பீர்களோ தானே.. அப்படி முன்பார்வையை கிளிக் செய்து வரும் பெட்டிக்கு கீழே Modify topic title என இருக்கின்றதா? அதில் அப்பப்போ வரும் உப தலைப்பை மாற்றுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
பூமித்தாயில் இன்னொரு தாயென்றால் மரங்கள் தான் கவிதை அருமை
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மிக்க நன்றி :)சுறா wrote:மரங்கள் பூவுலகில் மனிதர்களின் இன்னொரு தாய்.
அருமையான வரிகள்
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நான் வெட்டும் ஒவ்வொரு மரமும் நம் எதிர்காலசந்ததிக்கு விட்டு செல்லப்போகும் புதைகுழிகளாம்.
மரத்தாய் மௌனமாய் மனதை கனக்க வைக்கின்றாள்.
நன்று காயத்ரி. தொடருங்கள்.
மரத்தாய் மௌனமாய் மனதை கனக்க வைக்கின்றாள்.
நன்று காயத்ரி. தொடருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
மரத்தாய் மௌனமாக பேசிய வார்தைகள் அத்தனையும் அருமை.நன்றி மேடம் தொடரட்டும் உங்களின் பயணம்..
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:
- Code:
நான் வெட்டும் ஒவ்வொரு மரமும் நம் எதிர்காலசந்ததிக்கு விட்டு செல்லப்போகும் புதைகுழிகளாம்.
சத்தியமான வாக்குமா..:)
- Code:
மரத்தாய் மௌனமாய் மனதை கனக்க வைக்கின்றாள்.
நன்று காயத்ரி. தொடருங்கள்.
நன்றி..:)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
தாங்கள் அளித்துவரும் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சம்ஸ்...:)*சம்ஸ் wrote:மரத்தாய் மௌனமாக பேசிய வார்தைகள் அத்தனையும் அருமை.நன்றி மேடம் தொடரட்டும் உங்களின் பயணம்..
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
நொடியில் ஏற்படும் இரக்க உணர்வு
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும்
நொடியின் நொடியெதுவோ..??!!
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும்
நொடியின் நொடியெதுவோ..??!!
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
விசுவும், நானும் - 2
காயத்ரி : வணக்கம் விசு சார்...
விசு : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..? மறந்திட்டியோ நினைச்சேன்.
காயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..?!!
விசு : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..?
காயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..
விசு : சின்னதா சந்தேகம்...? சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .
காயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..
விசு : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..
காயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையும் சிக்கவைக்கிற உங்கள சிக்கல்ல சிக்க வைக்க முடியுமா.. ?
விசு : ஆரம்பமே சிக்கலாச்சே சொல்லுமா.
காயத்ரி: எழுத்தும், எழுத்தாளனும் ஒன்றுதானா..? எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா..? எழுத்தாளனின் பிரதிபலிப்புதான் எழுத்தா...??
விசு : சின்ன சந்தேகம்னு இத்தன எழுத்த எழுதியிருக்கியேம்மா
காயத்ரி : :)
விசு : எழுத்தாளனோட
எண்ணம் எழுத்தாவதும்
எழுத்தே எண்ணமாவதும்..
எண்ணத்திலிருப்பது அனைத்தும்
எழுத்தாகாமல் போவதும்..
எழுத்தில் வந்ததெல்லாம்
எழுத்தாளனோட எண்ணமா
இல்லாமல் போவதும் உண்டு..
காயத்ரி : இப்படி தெளிவா சொல்வீங்கன்னுதான் உங்கள கேட்டேன் மேல சொல்லுங்க சார்.
விசு :சந்தோசமா எழுதறவன் எல்லாம்
சந்தோசமா இருக்கான்னோ,
சோகமா எழுதறவன் எல்லாம்
சோகமா இருக்கான்னோ,
சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
சமூக ஆர்வலன்னோ
ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்
பகுத்தறிவாளன்னோ
பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
பெண்ணீயம் பேசறவன்
பெண்களைப் போற்றுபவனோ
பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
பெண்களை வெறுப்பவனோ..
இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
மனிதாபிமானம் உடையவன்னோ
யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
கல்மனசுக்காரன்னோ இல்ல..
சந்தோசமா எழுதறவன் சோகத்தை மறைத்தும்
சோகமா எழுதறவன் சந்தோசத்தை அனுபவித்தும்
சமூகம் பற்றி எழுதறவன் அதன்மீது
அக்கறையின்றியும்
ஆன்மீகத்தைப் பேசுபவன் நாத்திகனாகவும்
பகுத்தறிவு பேசறவன் பக்தியாளனாகவும்
பெண்ணீயம் பேசறவன்
பெண்களுக்கெதிரானவனாவும்..
இரக்கமா எழுதறவன் கொலைபாதகனாகவும்
யதார்தமா எழுதறவன் இரக்ககுணமுடையவனாவும்
இருந்ததில்லையா...?
இருக்கக்கூடாதா...
இருக்கமாட்டாங்களா..? என்னம்மா சொல்ற..??
காயத்ரி : சார்...நான் அப்படி சொல்லல...அப்படியும் நினைக்க வாய்ப்பு இருக்கே அதான் உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்..
விசு :குழப்பமா பேசறவங்க எல்லாம்
குழப்பவாதியோ
தெளிவா பேசறவங்க எல்லாம்
தெளிந்த சிந்தனையுடையவங்களாவோ
இருக்கனுமா என்ன..
குழப்பமா பேசி தெளிவா இருப்பதுமுண்டு
தெளிவா பேசி குழம்பினவங்களும் உண்டு..
குழப்பமும், தெளிவும்
கொடுக்கறவங்களவிட
எடுக்கறவங்ககிட்டதான் இருக்கு..
அப்படித்தான் எழுத்தும் எழுத்தாளனும்..
அவன் பொதுவாத்தான் கொடுக்கறான்
எடுக்கறவங்க
எடுக்கறத வச்சிதான்
கொடுக்கிறது கணிக்கப்படுது..
கொடுக்கறதுல
எடுக்கறது தப்பாயிருந்தா
கொடுக்கறதும் தப்பாயிடும்..
என்னமா புரிஞ்சுதா..உன் சந்தேகம் தீர்ந்துச்சா...
காயத்ரி : நீங்க இவ்வளவு தெளிவா குழப்பமா கொடுத்தாலும் குழம்பாம தெளிவா கொடுக்கும்போது குழம்பினமாதிரி இருந்தாலும் தெளிவா புரியுது சார்..
குழப்பித்தெளியவைக்க உங்களவிட்டா யாரு இருக்கா..ரொம்ப நன்றி சார்...என் சந்தேகத்தை தீர்த்துவச்சதுக்கு...:)
விசு : நல்லதும்மா..உன் குழப்பத்த தீர்த்ததுல எனக்கும் மகிழ்ச்சினு குழப்பமில்லாம தெளிவா சொல்லிக்கிறேன்..பிறகு சந்திப்போம்..
காயத்ரி : எண்ண ஓட்டம்.. எல்லாம் தெளிவா ஆச்சு..ஆனா இப்ப எழுத்துன்னா என்னன்னுதான் மறந்துட்டேன்.. தெளிஞ்சிடும்..:)
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
எண்ண ஓட்டம் புரிந்திருச்சா இல்லையா காயத்ரி?
பொய்யாய் முகமூடி அணிந்தவர்களும், போலிகளும் ஜாஸ்தி என்பது புரிந்தும் புரியாத மாதிரி போயிட்டே இருக்கணும் போல.
மொத்தமாய் விசும் காயத்ரியும் சேர்த்து தெளிவா குழப்பினிங்களா? குழப்பத்தை தெளிவாக்கினிங்களா என புரியவே இல்லைப்பா!
சந்தோசமா எழுதறவன் எல்லாம்
சந்தோசமா இருக்கான்னோ,
சோகமா எழுதறவன் எல்லாம்
சோகமா இருக்கான்னோ,
சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
சமூக ஆர்வலன்னோ
ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்
பகுத்தறிவாளன்னோ
பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
பெண்ணீயம் பேசறவன்
பெண்களைப் போற்றுபவனோ
பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
பெண்களை வெறுப்பவனோ..
இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
மனிதாபிமானம் உடையவன்னோ
யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
கல்மனசுக்காரன்னோ இல்ல..
பொய்யாய் முகமூடி அணிந்தவர்களும், போலிகளும் ஜாஸ்தி என்பது புரிந்தும் புரியாத மாதிரி போயிட்டே இருக்கணும் போல.
மொத்தமாய் விசும் காயத்ரியும் சேர்த்து தெளிவா குழப்பினிங்களா? குழப்பத்தை தெளிவாக்கினிங்களா என புரியவே இல்லைப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
Nisha wrote:எண்ண ஓட்டம் புரிந்திருச்சா இல்லையா காயத்ரி?சந்தோசமா எழுதறவன் எல்லாம்
சந்தோசமா இருக்கான்னோ,
சோகமா எழுதறவன் எல்லாம்
சோகமா இருக்கான்னோ,
சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
சமூக ஆர்வலன்னோ
ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்
பகுத்தறிவாளன்னோ
பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
பெண்ணீயம் பேசறவன்
பெண்களைப் போற்றுபவனோ
பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
பெண்களை வெறுப்பவனோ..
இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
மனிதாபிமானம் உடையவன்னோ
யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
கல்மனசுக்காரன்னோ இல்ல..
- Code:
பொய்யாய் முகமூடி அணிந்தவர்களும், போலிகளும் ஜாஸ்தி என்பது புரிந்தும் புரியாத மாதிரி போயிட்டே இருக்கணும் போல.
ம்ம்..பலநேரங்களில் அப்படித்தான்..:)
- Code:
மொத்தமாய் விசும் காயத்ரியும் சேர்த்து தெளிவா குழப்பினிங்களா? குழப்பத்தை தெளிவாக்கினிங்களா என புரியவே இல்லைப்பா!
:) ஏதோ எங்களால முடிஞ்ச சின்ன நல்ல காரியம்...
காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - விசுவும், நானும் உரையாடல்.
காயத்ரி வைத்தியநாதன் wrote:நொடியில் ஏற்படும் இரக்க உணர்வு
கடந்துவந்த வெறுப்பை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் அன்பு
கோபத்தை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் நட்புணர்வு
பகைமையை மறக்கச்செய்கிறது...!
நொடியில் ஏற்படும் மரியாதை
அலட்சியத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் மரணம்
அஞ்ஞானத்தை மறக்கச்செய்கிறது..!!
நொடியில் ஏற்படும் ஞானம்
பொறாமையை மறக்கச் செய்கிறது...!!
நொடியில் ஏற்படும் மாற்றங்களின்
நொடியையறியும்
நொடியின் நொடியெதுவோ..??!!
மிக அருமை. உண்மையான வரிகள்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: காயத்ரியின் தூரிகைச்சிதறல்கள் - அறிந்தும் அறியாமலும்
விசு உரையாடல் அருமை.
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
உண்மையில் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசங்கள் நிறைய இருக்கின்றன.
எழுத்தாளனும் பேச்சாளனும் ஊருக்குத்தான் உபதேசிகளாக இருக்கின்றார்கள். (அனுபவத்தால் சொல்கிறேன்)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» அறிந்தும்
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
» அறிந்தும் அறியாததும்
» அறிந்தும் அறியாததும் சில பல தகவல்கள்.....
» காயத்ரியின் தத்துவங்கள்...
» காயத்ரியின் கைவண்ணம்...
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum